Friday, June 14, 2013

உயரம் தொடுவோம் - டோக்கியோ மெட்ரோபாலிடன் பில்டிங், ஜப்பான்

டோக்கியோ  என்பது ஜப்பானின் தலைநகரம். மிக சிறிய நில பரப்பளவு கொண்ட நாடு ஆதலால் எங்குமே வானை முட்டும் கட்டிடம்தான், ஆனாலும் அங்கு இங்கு என்று தேடி பார்த்து அந்த நகரத்தின் உயரமான கட்டிடத்தில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தேடியபோது எல்லோரும் சொன்னது டோக்கியோ டவர். இந்த டவர் 1093 அடி உயரம் உடையது. இதில் 450 அடி உயரத்தில் ஒரு நகரத்தை பார்க்கும் இடமும், 820 அடி உயரத்தில் இன்னொரு சுற்றி பார்க்கும் இடமும் இருக்கிறது. ஆனால் அப்போது அந்த 820 அடி உயர சுற்றி பார்க்கும் அறையை பராமரிப்பு
காரணமாக மூடி விட்டதால், அதை விட உயரமான கட்டிடம் காண போகும்
போது வழியில் ஒரு நண்பர் ஒருவர் சொன்னதுதான் இந்த டோக்கியோ மெட்ரோபாலிடன் பில்டிங்.

டோக்கியோ மெட்ரோபாலிடன் கட்டிடத்தின் முன்பு 
 
 
இது 48 மாடி கொண்ட கட்டிடம் 1991 இல் கட்டி முடிக்கப்பட்டது. இதில் 663வது அடியில் ஒரு சிறிய சுற்றி பார்க்கும் இடம் இருக்கிறது. மேலிருந்து பார்க்கும்போது டோக்கியோ நகரம் மிகவும் சிறிதாக இருந்தது ! ஒரு முறை நாங்கள் அலுவலகத்தில் இருந்தபோது டம் என்று சத்தம் கேட்டது, எல்லா ஜப்பான் நண்பர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டபோது, மேஜை சிறிது ஆடியது. அதன் பின்னர் எல்லோரும் சகஜமாக நடமாட ஆரம்பித்தனர். நான் என்னவென்று கேட்க அவர்கள் ஒன்றுமில்லை சிறிது நேரத்திற்கு முன் பூகம்பம் ஏற்பட்டது என்றனர், எனக்கு உள்ளுக்குள் நடுங்கியது. அதே போன்ற டம் என்ற சத்தம் நான் இதன் மேலே இருந்தபோது கேட்டபோது அடி வயிறு கலங்கி விட்டது !

 
 

இந்த கட்டிடம் 1991 இல் இருந்து 2006 வரை டோக்கியோவின் உயரமான கட்டிடம் என்ற பெருமையை கொண்டிருந்தது, ஆனால் அதன் பின்னர் அதன் பெயரை மிட்டவுன் டவர் இந்த பட்டத்தை தட்டி சென்று விட்டது. மேலே சென்ற பிறகு அங்கிருந்து டோக்கியோ நகரத்தை பார்க்கும்போது இந்த ஜப்பான் நகரம் இவ்வளவு நெருக்கமானதா என்று உங்களுக்கு தோன்றும். மிக மிக நெருக்கமாக வீடுகளும், சர சரவென்று செல்லும் வாகனங்களும் என்று ஜப்பான் ஒரு அதிசயமான நகரம்தான்.
 



Labels : Kadalpayanangal, Suresh, Tokyo, Tokyo tallets tower, Tokyo metropolitan building

5 comments:

  1. அவர்களுக்கு சகஜம் தான்... ஆனால் திக் என்று தான் இருக்கிறது...

    படங்கள் அருமை... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார், உங்களை எப்போது சந்திப்பது என்று தெரியவில்லை..... கொஞ்சம் டைம் கொடுங்களேன்.

      Delete
  2. தாங்கள் கண்டு ரசிப்பதை எல்லாம்
    மிக அழகாக அருமையாக நாங்களும்
    உடனிருந்து பார்ப்பதைப்போலவே
    பதிவாக்கித் தரும் உங்களுக்கு எப்படி
    நன்றி சொல்வது எனத் தெரியவில்லை
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது கருத்திற்கு நன்றி ரமணி சார், மனம் திறந்த இந்த பாராட்டுக்கள்தான் என்னை உற்சாகம் கொண்டு எழுத வைக்கிறது. உங்களது கவிதையின் சுவை போலவே எனது பதிவுகளும் சுவையாய் இருப்பது கண்டு மகிழ்ச்சி, விரைவில் உங்களை சந்திக்க ஆசை........

      Delete