Monday, June 17, 2013

சாகச பயணம் - தனி தீவில் ஒரு நாள் !!

ஒரு முறையேனும் ஆள் இல்லாத அல்லது ஆட்கள் வெகு குறைவாக இருக்கும் தீவில் தங்க வேண்டும் என்று ஆசை. அதுவும் ஒரு நிலவு தெரியும் இரவில், இளையராஜாவின் பாடலை கேட்டுக்கொண்டு கரையில் அமர்ந்துக்கொண்டு மனதுக்கு பிடித்தவருடன் எந்த பயமும் இல்லாமல், சில நேரம் சத்தமாக சிரித்துக்கொண்டு, அந்த இரவில் சத்தமாக கத்த வேண்டும் என்று தோன்றும். அதை இந்த முறை நிறைவேற்றி பார்க்க வேண்டும் என்று தேடி தேடி கண்டுபிடித்ததுதான் இந்த எம்புடு வில்லேஜ் என்னும் மாலைதீவு கூட்டங்களில் ஒன்று.

எம்புடு வில்லேஜ் தீவு - ஒரு சிறிய தீவு கடலின் நடுவே !


நடுவில் தெரியும் பச்சைதான் தீவு, சுற்றிலும் பவள பாறைகளின் பரப்பளவு 
அந்த தீவு மாலைதீவின் தலைநகரத்தில் இருந்து முப்பது நிமிட தூரத்தில் இருக்கிறது. தீவு நெருங்க நெருங்க மனது "கொலம்பஸ், கொலம்பஸ் கொண்டா ஒரு தீவு..... கொண்டாட கண்டுபிடிக்க கொண்டா ஒரு தீவு" என்று குதிக்க ஆரம்பித்தது. தீவு எவ்வளவு சிறியது என்றால் நீங்கள் இந்த கரையில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தால் அடுத்த மூன்றாவது நிமிடத்தில் அந்த கரையை நெருங்கி இருப்பீர்கள். நாங்கள் சென்ற சமயம் அவ்வளவு கும்பல் இல்லை, அதுவும் நிறைய பேர் அன்று கிளம்ப ஆரம்பித்தனர். அன்று எங்களது மதிய சாப்பாடிற்கு பின் சிறிது ஓய்வு எடுத்தோம். பின்னர் மாலையில் கடல் மணலில் குவித்து குவித்து எனது மகனுடன் விளையாடினேன்.

தீவில் ரிலாக்ஸ் செய்ய ஊஞ்சல் !

பவள பாறைகள் தெரியும் துல்லிய தண்ணீர் !


அன்று இரவு சில்லென்று காற்று வீசும்போது, இளையராஜாவின் தாலாட்டுடன், மணலில் உறங்கி கொண்டு, நிலவு வெளிச்சமும், அலைகளின் ஓசையுடன் அந்த தருணத்தை உங்களது வாழ்கையில் அனுபவித்து பார்க்கும்போது சொர்க்கம் இங்கேதான் இருக்கிறது என்று தோன்றும். இரவு மூன்று மணி வரை அந்த இடத்தில் நடந்து கொண்டும், படுத்துக்கொண்டும் மனதில் எந்த பயமும் இல்லாமல் எங்கும் கடல் பார்த்து நடந்தால் உங்களுக்கு திரும்ப வரவே தோன்றாது !

மாலை மயங்கும் அந்த மாலத்தீவு கூட்டம்.....

Labels : Saagasa payanam, maldives, embudu, suresh, kadalpayanangal, one day at a lonely island

15 comments:

  1. ஆகா... அனுபவம் புதுமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் ! திண்டுக்கல் அருகில் இருக்கும் சிறுமலையில் கூட இது போல் ரிலாக்ஸ் செய்ய இடம் இருக்கிறதா ?

      Delete
  2. ஆஹா... அருமையா இருக்கே!!!! இவ்ளோ சின்னத்தீவா!!!!

    நான் ஒரு சமயம் பீச் கோம்பர் தீவு போயிருந்தேன். கரை ஓரமாகவே வலம் வந்தால் அரை மணியில் முழுத்தீவையும் சுற்றி வந்துறலாம். வந்தேன்:-))))

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம் ! அந்த பதிவின் லிங்க் கொடுங்களேன், படிக்க ஆர்வமாய் இருக்கிறது.

      Delete
  3. ஆகா ! சூப்பர். அடுத்த முறை என் காதலியோடு போக நல்ல இடம். போய் வரும் வழிமுறை, செலவு, இன்ன பிற விடயங்களை எழுதினால் பயன்படும். :) நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.....பெங்களுருவில் இருந்து சென்று வர ஒரு ஆளுக்கு 20000 ரூபாயும், தங்குவதற்கு 100 USD யில் இருந்து இடமும் கிடைக்கிறது. சுற்றி பார்ப்பதற்கு அங்கு ஒரு ஆளுக்கு 200 USD ஆகும். நீங்கள் டூர் புக் செய்து சென்றால் இன்னும் சீப். மேலும் விவரம் வேண்டும் என்றால் கேளுங்களேன்.....

      Delete
  4. அண்ணே. தீவுல சாப்பாடு பத்தி ஒண்ணுமே சொல்லலையே......... இரவு படங்கள் ஒண்டும் இல்லையா , குப்பி விளக்கு வெளிச்சத்துல ரிலாக்ஸ் பண்ணும் பொது அது தனி சுகம் அண்ணே.

    ReplyDelete
    Replies
    1. சாப்பாடு கவலை இல்லை, அங்கு நிறைய இந்தியன் உணவு வகைகள் கிடைக்கும். நான் தங்கிய இந்த தீவில் கடல் உணவுகள் நிறைய கிடைத்தன, அது தங்கும் பணத்திலேயே வந்து விடும். இரவினில் எடுத்த போட்டோ எல்லாம் கருப்பாக இருந்ததால் ஷேர் செய்யவில்லை.ஆனால் அந்த அனுபவத்தை வார்த்தையால் விவரிப்பது கடினம்.......

      Delete
  5. சாகச பயணம் - தனி தீவில் ஒரு நாள் !!ரசிக்கவைத்தது.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம், உங்களது வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  6. chaaa.. rasichu rasichu valareenga ponga.. !! :)

    ReplyDelete
    Replies
    1. பிறப்பது ஒரு முறை, அதை நன்கு அனுபவிப்போமே ! நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  7. looks similar to Andaman...........

    ReplyDelete
    Replies
    1. ஆம்......அந்தமான் போலவே இதுவும், ஆனால் ரிலாக்ஸ் செய்ய நல்ல இடம் ! நன்றி நண்பரே, தங்கள் வருகை மற்றும் கருத்திற்கு.

      Delete