Thursday, June 20, 2013

அறுசுவை - மதுரை கோனார் கடை கறி தோசை

வெகு நாட்களுக்கு பிறகு இந்த அறுசுவை பதிவு ! அலுவல் காரணமாக இதுவரை தள்ளி போட்டு கொண்டே வந்த இதை இன்று ஆரம்பிக்கிறேன், அதுவும் இந்த கறி தோசை பதிவு எழுத உட்காரும்போதே இன்னொரு முறை செல்ல வேண்டும் என்ற ஆசையை தூண்டுகிறது ! மதுரையில் சிம்மக்கல்லில் பெரிய கோனார் கடை உண்டு, பொதுவாக அங்கு AC வசதி இருப்பதாலும், மதுரை வெயில் ஜாஸ்தி என்பதாலும் நிறைய பேர் அங்குதான் செல்வார்கள், ஆனால் பலருக்கும் தெரியாதது இந்த பெரியார் நிலையம் / மதுரை புகை வண்டி நிலையத்திற்கு இடையில் உள்ள இந்த கோனார் கடைதான் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது என்று ! இன்று புது பொலிவுடன் AC எல்லாம் வைத்து நன்கு செய்து உள்ளனர் !முதலில் நாங்கள் சென்றவுடன் கவனித்தது எல்லாரது இலையிலும் கறி தோசை ! ஆகவே முதலில் கறி தோசை என்று ஆர்டர் செய்துவிட்டுதான் அடுத்து மெனு கார்டையே புரட்ட ஆரம்பித்தோம் என்றால் பாருங்களேன். அடுத்து மதுரை சுக்கா வறுவல், பரோட்டா, மட்டன் கோலா, தோசை என்று ஆர்டர் செய்ததை கண்டு எங்களை சற்று மிரட்சியோடுதான் பார்த்தார் ஆர்டர் எடுத்தவர் ! இதை எல்லாம் செய்து விட்டு நிமிர்வதற்குள் எங்களது இலைக்கு கறி தோசை வந்து விட்டது. இதற்க்கு டிமான்ட் அதிகம் என்பதால் முதலிலேயே செய்து வைத்து விடுகின்றனர், ஆகவே நீங்கள் சூடாக வேண்டும் என்று சொல்லவில்லை என்றால் ஆறியதுதான் கிடைக்கும் !

 

இலையில் தோசையை வைத்தவுடன்தான் அது ஊத்தப்பம் போல் இருக்கிறது, அதற்க்கு ஏன் இவர்கள் கறி தோசை என்று வைத்தார்கள் என்ற சந்தேகம் எழுகிறது ?! ஆனாலும் மிதமாக புளித்த மாவில், சிறிது வேக விட்டு அதன் மேல் முட்டையை உடைத்து ஊற்றி, அது பாதி வெந்து இருக்கும்போது அதன் மேலே நன்கு வெந்த ஆடு அல்லது கோழி கறியை பரப்பி, மிளகு உப்பு சேர்த்து முறுகலாக தரும்போது உங்களது நாவில் எச்சில் ஊற ஆரம்பிக்கும். தோசைக்கு என்று சிக்கன் அல்லது ஆட்டு குழம்பு நன்கு திக் ஆக வைத்து இருக்கின்றனர். அதை சிறிது ஓரமாக ஊற்றி தோசையை சிறிது பிய்த்து அதில் தொட்டு தின்றால்.......அடடடா மதுரைகாரர்கள் கொடுத்து வைத்தவர்கள் போங்கள் ! அதை சாபிட்டுவிட்டு அடுத்து என்ன வாங்கலாம் என்று யோசித்தபோது தோசையில் அடுத்த வகை என்று பார்க்கும்போது நிறைய இருந்தது......நான் மிளகு தோசை என்று ஆர்டர் செய்திருந்தேன்.

 

நம்ம வீட்டு தோசையில் நன்கு முறுகலாக விட்டு, அதன் மேல் மிளகு தூவி சாப்பிடும்போது, அட இது கூட நல்லாத்தான் இருக்கு என்று என்ன தோன்றுகிறது. இதற்க்கு மதுரை சுக்கா வறுவல் என்பது நல்ல துணையாக இருந்தது. முடிவில் நீங்கள் எழுந்திருக்கும்போது இன்னைக்கு ஒரு நல்ல சாப்பாடு சாபிட்டோம் என்று கண்டிப்பாக எண்ணுவீர்கள்.பஞ்ச் லைன் :

சுவை -   மிகவும் அருமையான சுவை, கண்டிப்பாக நீங்கள் மிஸ் செய்ய கூடாதது !

அமைப்பு - சிறிய இடம், மெயின் ரோட்டில் இருப்பதால் பார்கிங் வசதி கம்மி, வேண்டுமானால் பக்கத்தில் இருக்கும் ரயில் நிலையத்தின் பார்கிங் உபயோகித்து நடந்து வரவேண்டும். உள்அமைப்பு இப்போது நன்கு உள்ளது.

பணம் - சற்று ஜாஸ்திதான், ஆனால் சுவைக்கு கொடுக்கலாம் !

சர்வீஸ் - நல்ல சர்விஸ், கூட்டம் அதிகமாக இருந்தால் இதையே எதிர் பார்க்க முடியாது.

அட்ரஸ் :

NO 32, West Veli Street, Near Railway Station, West Veli Street  Madurai, Tamil Nadu 625001
மெனு கார்டு :

 
Labels : Kadalpayanangal, Suresh, Arusuvai, Madurai, kari dosai, konar kadai, best dosai 

13 comments:

 1. இருமுறை சென்றதுண்டு... அந்த சுவையே தனி... இப்போதே பசிக்க ஆரம்பித்து விட்டது... ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. உங்களது நாக்கில் நீர் வரவழைத்ததா !! இந்த பதிவு உங்களுக்கு பிடித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி சார் ! உங்களை சந்திக்க ஆவலோடு இருக்கிறேன்....

   Delete
 2. ம்ம்ம் அடுத்த முறை மதுரை வரும்போது கறி தோசை சாப்பிட்டு பார்க்கனும்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜி ! கோனார் கடையிலேதானே ??!!

   Delete
 3. எச்சில் ஊறவைத்து விட்டீர்கள்.... இப்பவே கோனார் கடைக்கு ....

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே.....தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

   Delete
 4. சுரேசுசுசு... எனக்கு பசிக்குதுங்க இதை பார்த்ததும்... அருமையாசுவையுடன் கூடிய பதிவு...

  ReplyDelete
  Replies
  1. என்ன சதீஷ், இது போல ஒன்று கோவையில் இல்லையா என்ன ? சரி, வாங்க மதுரைக்கு.......ஒரு கை பார்த்திடுவோம் !

   Delete
 5. Replies
  1. நன்றி கிருஷ்ணா ! என்ன அடுத்த வாரம் மதுரை போறீங்களா...... கண்டிப்பாக அதை பற்றி கருத்து எழுதுங்கள்.

   Delete
 6. இன்னைக்கு உங்க பக்கத்துக்கு வந்தவுடன் ஈர்த்த பெயர்...உடனே செய்முறையும் இருக்குமோன்னு உள்ளே நுழைந்தேன்...சாப்பிட மதுரைக்குத்தான் போகணும்போல...

  ReplyDelete
  Replies
  1. நன்றி மேடம் ! இதன் செய்முறை எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், அந்த கடையில் சென்று சாப்பிடுவது இன்னும் நல்லது. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

   Delete
 7. back in the memory lane. still can't forget the experience of eating mutton roast thosai at konar restaurant. Just can"t wait to go back.

  ReplyDelete