கொழும்பு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தவுடன் எனக்கு மனதில் தோன்றியது இங்கு நடப்பது போல அங்கு தமிழர்களுக்கு நடக்குமோ என்பதுதான். நான் அங்கு தங்குவதற்கு முன்பு ஆயிரம் முறை யோசித்தேன் எனலாம். இங்கு புத்த பிக்குகள் தாக்கப்பட்ட பிறகு சிறிது பதட்டம் இருந்தது, இதனால் நாங்கள் அங்கு செல்லும்போது ஏதாவது நிகழ்ந்தால் என்ன செய்வது என்று பயம் வேறு, ஆனால் இந்த பதிவில் நான் அங்கு கண்ட உண்மை நிலையை சொல்ல வேண்டும் என்று ஆசைபடுகிறேன். மற்ற பதிவுகளில் சுற்றி பார்க்கும் இடங்களை பற்றி நன்கு விவரமாய் சொல்கிறேன் ! முதலில் கொழும்புவில் இறங்கியவுடன் அன்றைய இரவில் கல்லி பேஸ் என்னும் இடத்திற்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. கொழும்பு என்பது ஏர்போர்ட்டில் இருந்து பல மைல் தூரத்தில், ஏர்போர்ட் இருக்கும் இடம் நீர் சூழ்ந்து இருப்பதால் அது நீர் கொழும்பு என்று சொல்லபடுகிறது. மெயின் கொழும்பு நகரம் தூரம் அதிகம்.

ராஜபக்ஷே அங்கு ஒரு ஹீரோவாக கொண்டாடபடுகிறார் என்பது கண்ணால் கண்ட உண்மை. சீனாவில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் அவர் கொண்டு வரும் திட்டங்கள் கொழும்புவில் நன்கு தெரிகிறது, அது மட்டும் இல்லாமல் மக்கள் நல திட்டங்களும் தினமும் ஒன்றாக செயல்படுத்தபடுகிறது. அங்கு தினகரன் பேப்பரில் ராஜபக்ஷேவின் பொன் முத்துக்கள் என்று தினமும் ஒன்று வரும், சிந்துபாத் கதை போல ! அங்கு தமிழ் என்பது எங்கும் காணலாம். தெரு பலகைகள், கடைகள், தமிழ் படங்கள், அரசாங்க கட்டிடங்கள் என்று எங்கும் சிங்களம் முதலிலும், தமிழ் இரண்டாம் இடத்திலும், ஆங்கிலம் மூன்றாம் இடத்திலும் எங்கும் காணும்படியாக இருக்கிறது.

நாங்கள் முதன் முதலில் சென்ற இடம் ஸ்ரீ பொன்னம்பலேஸ்வரர் ஆலயம். இங்கு தமிழ் மக்கள் சாமி கும்பிட கும்பல் கும்பலாக வந்தாலும் அவர்கள் முகத்தில் ஒரு பயத்தை காண முடிகிறது என்பது எனது கண்களில் கோளாறா அல்லது உண்மையா என்பது தெரியவில்லை. ஆனால் அந்த ஆலயத்தில் நமது தமிழ்நாட்டில் இருப்பது போல மாவிலக்குகள் ஏற்றபடுகிறது, தேர் வெளியே நிற்கிறது ! தமிழர்கள் அங்கு பாதுகாப்பாகதான் இருப்பதாக தோன்றுகிறது, ஆனால் வடக்கில் அப்படியா என்றால் எனக்கு தெரியவில்லை. அடுத்து நாங்கள் சில புத்த ஆலயங்களுக்கு சென்றோம், சிங்கள மக்கள் புத்த மதத்திற்கு மிகுந்த மரியாதை தருகிறார்கள் என்பது கண்கூடாக காண முடிந்தது.

கொழும்புவில் சுற்றி பார்க்க அதிகமான இடம் இல்லை எனலாம். புத்த கோவில்கள், ஒரு ஜூ, பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியம், பார்க் மற்றும் பீச் மட்டுமே உள்ளது. இரண்டு நாட்கள் தங்கி இருந்தால் நீங்கள் எல்லாவற்றையும் சுற்றி பார்க்கலாம், நீங்கள் கண்டி சென்றால் இன்னும் இரண்டு நாட்கள் சுற்றி பார்க்கலாம். இப்போது சுற்றுலாவிற்கு இலங்கை அரசு அதிகம் செலவு செய்வதை நீங்கள் அங்கு பார்க்கலாம். அங்கு இருக்கும் கார்பரேஷன் கட்டிடம், பார்க், ரோடு என்று எல்லாமே புதுபிக்கபடுகிறது, இதை பற்றி மக்கள் மகிழ்ச்சியாக பேசி கொள்வதை பார்க்க முடிகிறது. இந்தியா இலங்கைக்கு உதவுவதை மக்கள் ஏற்றுக்கொண்டாலும், சீனாவில் இருந்தும் உதவிகள் வருவதை மக்கள் எத்ரிபர்க்கின்றனர். ராஜபக்ஷே ஒவ்வொரு திட்டத்திலும் அவரது பெயரும், படமும் இருக்குமாறு பார்த்துக்கொள்வதை நீங்கள் பார்க்கலாம். நிறைய இடங்களில் ப்ளெக்ஸ் பேனரில் சிரிப்பதை தமிழகத்தில் இருந்துதான் கற்று கொண்டிருக்கிறார் போல இருக்கிறது !
அங்கு சுற்றி பார்ப்பதற்கு நம்ம ஊர் ஆட்டோ மீட்டர் போட்டு இருக்கிறது, நீங்கள் பயப்படாமல் ஏறி இடம் சொன்னால் அழைத்து போகிறார்கள். கீழே இருக்கும் படத்தில் ஆட்டோ டிரைவரின் தலைக்கு மேலே மீட்டர் பார்க்கலாம். சுற்றும்போது மறக்காமல் பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியம் சென்று வாருங்கள், மேட்ச் நடக்காதபோதும் அங்கு சென்று அந்த கரகோஷத்தை மனதில் அனுபவிக்கலாம் ! அதை தவிர புத்த கோவில்களை மற்றும் சுதந்திர தின சதுக்கத்தை மறக்கமால் பார்க்கவும். இதை தவிர நீங்கள் நீர் கொழும்பு சென்றால் நிறைய கடைகள், பப் இருக்கிறது. எதுவும் வாங்க வேண்டுமென்றால் நீங்கள் அங்கு துணி வாங்கலாம், அது எல்லாமே சீப். அதை தவிர ஓவியங்களும் மிகவும் குறைவான விலை !
முடிவில் நாங்கள் அங்கு இருந்து கிளம்பும்போது, மற்ற எல்லா நகரத்தை போல அந்த நகரமும் இருந்தது எனலாம். ஈழம் என்ற வார்த்தையை எடுத்தாலே அந்த மக்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தது உண்மை ! வடக்கில் ஒரு மாற்றம் நிகழ்கிறது என்பது அவர்கள் சொல்லும் ஒரு செய்தி, மக்கள் கொல்லப்பட்டது குறித்தும், அங்கு தமிழர்களின் கதி குறித்தும் ஒரு பெருத்த மௌனம் நிகழ்கிறதை காண முடிந்தது.......ஒன்று மட்டும் நிச்சயமாக புரிந்த உண்மை......ராஜபக்ஷே அங்கு ஒரு ஹீரோ.
Labels : Suresh, Kadalpayanangal, Colombo, srilanka, ulaga payanam, payanam, world tour
ராஜபக்ஷே அங்கு ஒரு ஹீரோவாக கொண்டாடபடுகிறார் என்பது கண்ணால் கண்ட உண்மை. சீனாவில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் அவர் கொண்டு வரும் திட்டங்கள் கொழும்புவில் நன்கு தெரிகிறது, அது மட்டும் இல்லாமல் மக்கள் நல திட்டங்களும் தினமும் ஒன்றாக செயல்படுத்தபடுகிறது. அங்கு தினகரன் பேப்பரில் ராஜபக்ஷேவின் பொன் முத்துக்கள் என்று தினமும் ஒன்று வரும், சிந்துபாத் கதை போல ! அங்கு தமிழ் என்பது எங்கும் காணலாம். தெரு பலகைகள், கடைகள், தமிழ் படங்கள், அரசாங்க கட்டிடங்கள் என்று எங்கும் சிங்களம் முதலிலும், தமிழ் இரண்டாம் இடத்திலும், ஆங்கிலம் மூன்றாம் இடத்திலும் எங்கும் காணும்படியாக இருக்கிறது.
நாங்கள் முதன் முதலில் சென்ற இடம் ஸ்ரீ பொன்னம்பலேஸ்வரர் ஆலயம். இங்கு தமிழ் மக்கள் சாமி கும்பிட கும்பல் கும்பலாக வந்தாலும் அவர்கள் முகத்தில் ஒரு பயத்தை காண முடிகிறது என்பது எனது கண்களில் கோளாறா அல்லது உண்மையா என்பது தெரியவில்லை. ஆனால் அந்த ஆலயத்தில் நமது தமிழ்நாட்டில் இருப்பது போல மாவிலக்குகள் ஏற்றபடுகிறது, தேர் வெளியே நிற்கிறது ! தமிழர்கள் அங்கு பாதுகாப்பாகதான் இருப்பதாக தோன்றுகிறது, ஆனால் வடக்கில் அப்படியா என்றால் எனக்கு தெரியவில்லை. அடுத்து நாங்கள் சில புத்த ஆலயங்களுக்கு சென்றோம், சிங்கள மக்கள் புத்த மதத்திற்கு மிகுந்த மரியாதை தருகிறார்கள் என்பது கண்கூடாக காண முடிந்தது.
அங்கு சுற்றி பார்ப்பதற்கு நம்ம ஊர் ஆட்டோ மீட்டர் போட்டு இருக்கிறது, நீங்கள் பயப்படாமல் ஏறி இடம் சொன்னால் அழைத்து போகிறார்கள். கீழே இருக்கும் படத்தில் ஆட்டோ டிரைவரின் தலைக்கு மேலே மீட்டர் பார்க்கலாம். சுற்றும்போது மறக்காமல் பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியம் சென்று வாருங்கள், மேட்ச் நடக்காதபோதும் அங்கு சென்று அந்த கரகோஷத்தை மனதில் அனுபவிக்கலாம் ! அதை தவிர புத்த கோவில்களை மற்றும் சுதந்திர தின சதுக்கத்தை மறக்கமால் பார்க்கவும். இதை தவிர நீங்கள் நீர் கொழும்பு சென்றால் நிறைய கடைகள், பப் இருக்கிறது. எதுவும் வாங்க வேண்டுமென்றால் நீங்கள் அங்கு துணி வாங்கலாம், அது எல்லாமே சீப். அதை தவிர ஓவியங்களும் மிகவும் குறைவான விலை !
Labels : Suresh, Kadalpayanangal, Colombo, srilanka, ulaga payanam, payanam, world tour
அழகான படங்கள்... இனிய பயணம் (சிறிது பயத்துடன்)
ReplyDeleteநன்றி தனபாலன் சார் ! ஆம், சிறிது பயத்துடன்தான் இருந்தேன் என்பது நிஜம்.
Deleteபயணக்குறிப்புகள்
ReplyDeleteபயன் மிக்கவை ..
படங்கள் அருமை ..
பாராட்டுக்கள்..
நன்றி நண்பரே ......மணிராஜ் / ராஜராஜேஸ்வரி என்று இருப்பதால் உங்களை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை ! என்ன இருந்தாலும் உங்களது சுவையான கருத்திற்கு நன்றிகள்.
Deleteஅப்போ ஒரு எட்டு (பயத்துடன்) போய்'ட்டு வரலாம் என சொல்றீங்கள்!
ReplyDeleteநன்றி நண்பரே.....ஆம் சிறிது பயத்துடன் சென்று வரலாம், ஆனால் பயமில்லாமல் திரும்பி வரலாம் !
Deleteஆஹா நானும் ஜூன் 3-14 அங்கு தான் சுற்றி கொண்டு இருந்தேன்.
ReplyDeleteஆஹா அமுதா மேடம்.....உங்களை சிங்கையிலும், கொழும்புவிலும் பார்க்க முடியாமல் போய்விட்டதே. அடுத்த முறை எங்கு செல்கிறேன் என்று சொல்கிறேன்.....கண்டிப்பாக பார்க்கலாம்.
Deleteநல்ல பயணம்தான். படங்களும் அருமை.
ReplyDeleteஆட்டோ அதிசயம்: நன்று.
தொடராக எழுதுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்..... தொடர்கின்றேன்.
கண்டிப்பாக தொடராக எழுத ஆசை, உங்களது கருத்துக்கு மிக்க நன்றி மேடம் !
Deleteநல்ல பயண குறிப்பு... கண்டி, யாழ்ப்பாணம் போனீங்களா...
ReplyDeleteஇல்லை சதீஷ், இந்த முறை செல்ல முடியவில்லை. தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !
Deletekurudan yanai paartha kathi polatthan ungal pathivum irukkirathu.
ReplyDeleteM.Baraneetharan.
ஆம் நண்பரே, எனது தமிழ் சொந்தங்கள் கொல்லப்பட்டபோது கண்ணிருந்தும் குருடனாய் தானே நான் இருந்தேன். இந்த பதிவு அங்கு இருக்கும் நிலைமையை அப்படியே சொல்வதுதானே அன்றி நான் யாருக்கும் சார்ப்பாய் பேசவில்லை......நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன தமிழனின் வாரிசுகள்தானே நாம் எல்லாம். தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.
DeleteFact fact fact :)))
ReplyDeleteநன்றி கிருஷ்ணா, உண்மையை சொன்னேன் !
Deleteநல்லதொரு பயண கட்டுரை.
ReplyDelete//இங்கு புத்த பிக்குகள் தாக்கப்பட்ட பிறகு சிறிது பதட்டம் இருந்தது இதனால் நாங்கள் அங்கு செல்லும்போது ஏதாவது நிகழ்ந்தால் என்ன செய்வது என்று பயம் வேறு//
புத்த பிக்குகள் தமிழகத்தில் தாக்கப்பட்ட பிறகு இலங்கை சென்றால் என்ன நடக்குமோ என்ற இதே மாதிரி பயம் எனக்கும் இருந்தது :)
//அங்கு தமிழ் என்பது எங்கும் காணலாம். தெரு பலகைகள்,கடைகள், தமிழ் படங்கள், அரசாங்க கட்டிடங்கள் என்று எங்கும் சிங்களம் முதலிலும், தமிழ் இரண்டாம் இடத்திலும், ஆங்கிலம் மூன்றாம் இடத்திலும் எங்கும் காணும்படியாக இருக்கிறது//
நானும் கண்டு வியந்த உண்மை தான். இங்கே தமிழகத்திற்கு வெளியே தமிழ் எழுத்தையே காண முடியாது. ஆனா இங்கிருந்து கொண்டு இலங்கையில் தனி சிங்களம் மட்டும் தான் என்பாங்க:)
உண்மைதான் வேகநரி (நல்ல பெயர் நண்பரே !), உங்களது கருத்தும், அதில் தெரிந்த நக்கலும் நன்றாக இருந்தது நண்பரே ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் !
Delete