Monday, June 24, 2013

அறுசுவை - பெங்களுரு "யு குக்"

ஒரு நல்ல ரெஸ்டாரன்ட் தேடி கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது இந்த பெயர் "யு குக் "- You Cook ! பேரை பார்க்கும்போதே அட இது என்ன கான்செப்ட் என்று எண்ண தோன்றியது. பப்பெட் உண்டு, அது மட்டும் இல்லாமல் நீங்களும் உங்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்து கொள்ளலாமா என்று குழப்பாமாக இருந்தது.....அங்கு செல்லும் வரை ! அதை பற்றி இன்டர்நெட்டில் தேடி பார்த்து கொண்டிருந்தபோது எல்லாமும் நன்றாகவே இருந்தது, அது மட்டும் இல்லாமல் அது ஒரு புதிதாக தொடங்கிய உணவகம் என்ற தகவலும் கிடைத்தது, ஒரு சந்தோஷ சன்டேயில் நான் அங்கு செல்ல முடிவு செய்தது, ஒரு நல்ல முடிவுதான் என்று தோன்றியது.
பெங்களுரு இந்திரா நகரில் ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருக்கிறது இந்த ரெஸ்டாரன்ட். சிறிய இடம்தான் என்றாலும் மிகவும் பார்த்து பார்த்து அவர்கள் வடிவமைத்து இருந்தது தெரிந்தது. முதலில் அங்கு சென்றவுடன் அவர்கள் அந்த தீம் பற்றி சொல்ல ஆரம்பித்தபோது அது ஒன்றும் புதிதில்லை என்று தோன்றியது ! நான் இதற்க்கு முன் பார்பிக்யு நேசன் என்று உணவகம் பற்றி சொல்லி இருக்கிறேன், பச்சை மாமிசத்தை உங்கள் முன் உள்ள அடுப்பின் முன் வாட்டி எடுத்து தின்பது என்ற முறைதான் இங்கேயும்.....வித்யாசம் என்னவென்றால் இங்கே பல விதமான சாய்ஸ் உண்டு என்பதுதான்.   அவர்கள் உங்களை கவனிக்கும் முறையும் சிறப்பாக இருப்பதால், இனி பார்பிக்யு நேசன் செல்ல விருப்பம் உள்ளவர்கள் இங்கே செல்லலாம் !இதில் சில சிரமும் இருந்தது ?! எனது மனைவியை அங்கு அழைத்து சென்றுவிட்டு சரி நீ கொஞ்சம் சமை என்று சொன்னவுடன் முறைத்த முறைப்பில் அடுப்பு தானாக பற்றி கொள்ளும் அளவுக்கு சூடு ! அவர்கள் உங்களது முன் வைத்திருக்கும் மேடான பகுதியில் கறியை வைக்க வேண்டும், அதை சுற்றி இருக்கும் பகுதியில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது காய்கறிகள், மஷ்ரூம், கறி எல்லாம் போட்டு சிறிது உப்பு மற்றும் மிளகு தூள் போட வேண்டும், அது கொதித்து முடிந்தவுடன் அதுதான் சூப். யாரவது சமைக்க தெரியாதவர்கள் சென்றால் அவர்கள் பாடு திண்டாட்டம்தான். நான் சூப் செய்கிறேன் என்று சொல்லி அவர்கள் கொடுத்த ஆறு வகை சாஸ் எல்லாம் போட்டு, முடிவில் அதை என்ன பேர் சொல்லி அழைப்பது என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு சென்றது எனது சமையல் திறமை.


பப்பெட் முறையில் அவர்கள் வைத்து இருந்த நல்ல சமைத்த பதார்த்தங்கள் எங்களது பசியை நன்கு ஆற்றின எனலாம். எல்லாமே நல்ல சுவை ! ஜீரா ரைஸ், காய்கறிகள், சிக்கன் வகைகள் எல்லாமே காரத்தை அளவாக போட்டு, கண்ணை கவரும் வகையில் வைத்திருந்தது நன்றாக இருந்தது. புதிதாக ஆரம்பித்து இருந்ததால் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்து இருந்தனர். எங்களுக்கு பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் எல்லாம் வயசு பசங்க, அவர்கள் யாருக்கும் சமையல் தெரியவில்லை, அதனால் ஒரு பக்கம் சந்தோஷ கூச்சல், இன்னொரு பக்கம் பசிக்கும்போது எதையும் சாப்பிட முடியவில்லை என்ற ஆதங்கம் வேறு. முடிவில் அவர்கள் அதை புரிந்து கொண்டு அவர்களது செப் வரவைத்து சூப் செய்து கொடுத்தனர். உங்களது சமையல் திறமையை டெஸ்ட் செய்ய நல்ல வாய்ப்பு !! நாங்கள் சூப் செய்து முடித்தவுடன், அந்த இடத்திலேயே பெப்பர் சிக்கன் கிரேவி செய்ய தொடங்கினோம்.....முடிவில் அந்த சிக்கனே எழுந்து வந்து ஏற்கனவே செத்த என்னை ஏண்டா திரும்பவும் கொல்றே என்று சண்டை பிடித்தது.
பஞ்ச் லைன் :

சுவை -  எல்லா வகைகளும் மிகவும் நன்றாக இருந்தது, அந்த சுவையை விட நீங்கள் அங்கு சமைக்க ட்ரை செய்து அடிக்கும் ஆனந்த கூத்துதான் முக்கியம் !

அமைப்பு - சிறிய இடம், மெயின் ரோட்டில் இருப்பதால் பார்கிங் வசதி கம்மி, வேண்டுமானால் பக்கத்தில் இருக்கும் தெருக்களில் பார்கிங் உபயோகித்து நடந்து வரவேண்டும். உள் அலங்காரம் நன்றாக செய்து இருக்கின்றனர்.

பணம் - சற்று ஜாஸ்திதான், ஆனால் சுவைக்கும், அந்த அனுபவத்திற்கும் கொடுக்கலாம் ! 

சர்வீஸ் - நல்ல சர்விஸ், புதிதாக திறந்து இருப்பதால் நன்கு கவனிக்கின்றனர்.

அட்ரஸ் :மெனு கார்டு :

அவர்களிடம் சில பேக்கேஜ் இருக்கிறது, 599 ரூபாய் கொடுத்தால் அங்கு இருக்கும் பப்பெட் எதையும் நீங்கள் சாப்பிடலாம், 799 ரூபாய்க்கு பப்பெட் மற்றும் அல்கஹோல் இல்லாமல் ட்ரிங்க்ஸ் எவ்வளவு வேண்டும் என்றாலும், 1099 ரூபாய்க்கு பப்பெட் மற்றும் அல்கஹோல் ட்ரிங்க்ஸ் உடன் !
 

Labels : Kadalpayanangal, Suresh, Arusuvai, you cook, different concept restaurant, barbecue 

11 comments:

 1. புதுமை...! அருமை...!! என்னவொரு அழகான இடம்...!!!

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார் ! அன்று உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, மீண்டும் சந்திக்க விருப்பம்.....

   Delete
 2. //* சிக்கனே எழுந்து வந்து ஏற்கனவே செத்த என்னை ஏண்டா திரும்பவும் கொல்றே என்று சண்டை பிடித்தது. *//

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜேஷ், தங்களது வருகையும் கருத்தும் என்னை உற்சாகம் கொள்ள செய்கிறது......

   Delete
 3. இந்திரா நகர்லயா இருக்கு. அடுத்து போகும்போது போய்ட்டு வந்துட வேண்டியதுதான்.., பகிர்வுக்கு நன்றி சகோ!

  ReplyDelete
 4. அந்த ஹோட்டலுக்கு கூட்டி போய் என் ஆத்துக்காரரை சமைக்க சொல்லனும்.., இதை விட்டா அவரை சமைக்க வைக்க வேற சான்ஸ் கிடைக்காது.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா..... குடும்பத்துல நான் ஒன்னும் குழப்பம் உண்டு பண்ணலை அப்படின்னு நினைக்கறேன்..... அப்புறம் லோமொபின் அப்படின்னு ஒரு மாத்திரை இருக்கு, அது வயிற்று பிரச்னையை சரி பண்ணும் (உங்களுக்கு தேவையாய் இருக்குமோ அப்படின்னு டவுட்டு !)

   Delete
 5. ஒருநாள் சமையலறையை மூடலாம்னு நினைச்சா அங்கேயும் போய் சமைக்கணுமா????? :)

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சமைக்க அங்கே செல்ல வேண்டாம் சகோதரி..... உங்களது எதிரியையும், உங்களது சமைக்க தெரியாதா நண்பரையும் அங்கு கூட்டி சென்று வேடிக்கை பாருங்களேன்.

   Delete
 6. வித்தியாசமான ஹோட்டல் ...அதை பதிவிட்டிருக்கும் உங்கள் ரசனை அற்புதம் !இத்தனை எட்டு வருடங்களாக அங்கே இருந்த இந்த ஹோட்டலை நான் அறியேன் அறிமுகப்படுத்தியதர்ற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி நாகராஜ், அப்போ அடுத்த முறை உங்களது சமையல் திறமையை நீங்கள் சோதிக்க போகிறீர்கள் ?!

   Delete