Monday, June 10, 2013

த்ரில் ரைட் - ஸ்ட்ராட்டோஸ்பியர், லாஸ் வேகாஸ்

வெளிநாடுகள் செல்லும்போதெல்லாம் பொழுது போகாமல் இருக்கும்போது சில தீம் பார்க்குகள், அல்லது ஸ்பெஷல் ரைட் என்று கூட்டி செல்வார்கள். இதில் சில ரைடுகள் சாதுவாக இருக்கும், சில ரைடுகளில் நமது இதயம் வெளியில் வந்து செல்வதுபோல டெர்ரராக இருக்கும் ! எனக்கு சிறு வயதில் இருந்தே அரசு பொருட்காட்சியில் இருக்கும் ஜையண்ட் வீல் ஏறுவது என்றாலே பயம், அதிலும் நான் பார்த்த சில ரைடுகள் எல்லாம் பார்க்கும்போதே மயக்கம் போட வைத்தவை ! இந்த "த்ரில் ரைட்" பதிவுகளில் உலகத்தில் இருக்கும் வித விதமான ரைடு வகைகளை அறிமுகபடுத்த போகிறேன், ஆனால் இதை எல்லாம் நான் முயன்று பார்த்தது கிடையாது, உங்களுக்காக இதை பகிர்கிறேன். இதை எல்லாம் பார்த்து விட்டு "மரண பயத்தை காட்டிடானுங்க பரமா......" என்று புலம்ப கூடாது !! :-)



லாஸ் வேகாஸ் என்னும் அமெரிக்க நகரத்தில் இருக்கும் ஒரு சில த்ரில் ரைடுகள் உங்கள் பார்வைக்கு !! இங்கு இருக்கும் ஒரு பில்டிங்கில் ஒரு சில த்ரில் ரைடுகள் செட் அப் செய்து வைத்து இருக்கிறார்கள், அந்த பில்டிங்கின் உயரம் எபில் டவரை விட உயரம், அதன் உச்சியில் இப்படி ரைட் போக உங்களுக்கு தைரியம் உண்டா என்று பாருங்கள் !
 
 
 
 

 
ரைடு - 1 :
 
நம்ம ஊரு ரங்கராடினம்தான், ஆனால் 1100 அடி உயரத்தில் அதை செய்யும்போது ??!!
 


ரைடு - 2 :

 இது நம்ம ஊரில் சில தீம் பார்க்குகளில் இருப்பது போல டவரில் சல்லென்று மேலே போய் வருவது போல்தான், ஆனால், இதில் 1100 அடி டவரில் இருந்துதான் இந்த பயணமே ஆரம்பிக்கிறது என்றால் குலை நடுங்கதானே வேண்டும் !?


ரைடு - 3 :

இதில் எல்லாம் பயணம் செய்தால் அவ்வளவுதான் மோட்சம் உங்கள் கண்ணுக்கு தெரியும் என்னும் அளவுக்கு உள்ள ஒரு த்ரில் ரைட் !!

 
என்ன பார்த்து முடித்து விட்டீர்களா ? நம்ம ஊர் த்ரில் ரைட் என்பது எல்லாம் சும்மா விளையாட்டுதானே ? அடுத்த முறை நம்ம ஊர் தீம் பார்க் செல்லும்போது எல்லாம், யாரவது ஐயோ இதில் எல்லாம் ஏற மாட்டேன் என்று சொன்னால், இந்த பதிவை காண்பியுங்கள், மனம் மாறிவிடுவார்கள் !!
 
Labels : Thrill ride, Suresh, Kadalpayanangal, Las vegas, joy rides

2 comments:

  1. நான் இந்த விளையாட்டிற்கு வரலே சாமீ...! ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா....... வயிற்றில் புளியை கரைத்து விட்டதா இந்த பதிவு !! நன்றி சார், தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.

      Delete