Thursday, June 27, 2013

உயரம் தொடுவோம் - கத்தார் ஆஸ்பயர் டவர்

கத்தார் தலைநகர் தோஹாவில் 15வது ஆசிய விளையாட்டு போட்டி 2006இல் நடந்தபோது அதை நினைவில் கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஆஸ்பயர் டவர் எனப்படும் இன்றைய டார்ச் ஹோட்டல். இதன் வடிவம் என்பது ஒலிம்பிக் டார்ச் போன்று உள்ளதும் இதன் பெயர் காரணத்திற்கு காரணம். இது காலிபா சர்வதேச ஸ்டேடியம் பக்கத்தில் இருக்கிறது. நான் வழக்கம்போல அந்த ஊரின் மிக பெரிய கட்டிடம் என்று தேடியபோது இதை காட்டினார்கள். முதலில் இதை புரிந்து கொள்ள கஷ்டபட்டாலும் முடிவில் உள்ளே சென்று பார்த்தபோது அதிசயமாகவும், ஆனந்தமாகவும் இருந்தது !இந்த டவரின் உள்ளே ஒரு விளையாட்டு முயுசியம், நான்கு தளத்தில் அபார்ட்மெண்ட், மூன்று தளத்தில் சுழலும் ஹோட்டல், இரண்டு தளத்தில் வேடிக்கை பார்க்கும் இடம் என்று உள்ளது, இதில் வேடிக்கை பார்க்கும் இடம் 781 அடி உயரத்தில் இருக்கிறது. இவ்வளவு உயரமான கட்டிடத்தில் இவ்வளவுதான் தளங்களா என்று கேட்பவர்களுக்கு மட்டும் கீழே இருக்கும் காணொளி ! இது கட்டிடம் போல தெரிந்தாலும் ஒரு தூண் போன்ற அமைப்புக்கு நடு நடுவே தளங்கள் அமைத்திருக்கின்றனர், மற்றதெல்லாம் வெற்றிடம்தான். அதை சுற்றி வலை போல அழகுக்கு அமைத்து அதில் லைட் கொடுத்துள்ளனர், இதனால் இரவினில் வானவில்லை போல பல நிறங்களை காணலாம் !


இதன் உச்சியில் டார்ச் போன்ற அமைப்பு உள்ளது, இதனால் இதன் முழு உயரம் 980 அடியாகும். ஆசிய விளையாட்டு போட்டி நடந்தபோது உச்சியில் அந்த ஜோதி எரிவது பல மைல்களுக்கு தெரியுமாம், இன்று உச்சியில் லைட் கொண்டு அது எரிவது போல செட் செய்து உள்ளனர். இதன் உச்சியில் சென்று நீங்கள் பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல் மணல் மணல்தான் !
இந்த படம் பார்த்தால் உங்களுக்கே அதன் உச்சியில் இருந்து பார்த்தால் எப்படி தெரியும் என்பது புரியும்.ஒரு பாலைவன நாட்டில்,  அதுவும் மரங்கள் என்பது அரிதான ஒன்று, வெறும் பெட்ரோல் மட்டுமே கிடைக்கிறது என்கிறபோது அங்கு பார்த்த உயரமான கட்டிடங்கள் எல்லாம் ஏன் எல்லா வளமும் இருக்கும் நமது நாட்டில் இல்லை என்ற கேள்வி மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. எல்லா நாடுகளுக்கும் சென்று இந்த உயரம் தொடுவோம் பதிவு எழுதும்போது, இந்தியாவில் இப்படி சென்று வந்து ஒரு பதிவு எழுத முடியவில்லையே !Labels : Suresh, Kadalpayanangal, Uyaram thoduvom, Tall tower visit, Qatar, Aspire tower

17 comments:

 1. காணொளிகள் அருமை...

  சிந்திக்க வேண்டிய கேள்வி...

  (தமிழ்மணம் ஏன் இணைக்கவில்லை...? நான் முயற்சித்தும் முடியவில்லை... சரி பார்க்கவும்...)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபாலன் சார் ! தமிழ் மணத்தில் இணைக்க முயற்சித்தேன் முடியவில்லை.....தங்களை விரைவில் தொடர்ப்பு கொள்கிறேன்.

   Delete
 2. குடும்பத்துடன் கண்டு ரசித்தோம்
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார் ! உங்களது கவிதைகள் வாசிக்கும்போது கிடைத்த மகிழ்ச்சி, இந்த டவர் பார்த்தபோது கிடைத்தது !

   Delete
 3. தங்கள் அனுமதியை எதிர்பார்த்து
  ஜி+ மற்றும் முக நூலில் இணைத்துள்ளேன்

  ReplyDelete
  Replies
  1. உடனடியாக பார்க்கிறேன்.....உங்களை g+ மற்றும் முகநூலில் இணைத்துக்கொள்வது எனக்குதான் பெருமை சார் !

   Delete
 4. கடுமையான சட்டத்தின் காரணமா எல்லாரும் எல்லா விதத்திலயும் தனி மனித ஒழுக்கத்தோடு வாழறாங்க... ஆனா, இங்க அப்படி இல்ல..., அதான் காரணம்..,

  ReplyDelete
  Replies
  1. நன்கு சொன்னீர்கள் மேடம் ! இங்கு சட்டத்தை மீறுபவர்கள்தான் ஜாஸ்தி !

   Delete
 5. சின்னாளப் பட்டி சுங்குடிச் சேலை, நாமக்கல் கோழிமுட்டை யில் இருந்து தென்னாப்பிரிக்கா தங்கச் சுரங்கம் கத்தார் ஹோட்டல் வரை எல்லா இடங்களுக்கும் நேரடியாக சென்று பார்க்கும் அனுபவம்........ எல்லோருக்கும் கிடைக்காது, நீங்கள் லக்கி சார். எல்லா கட்டுரைகளும் அருமை. தொடருங்கள்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி சார் ! உண்மைதான் ஆண்டவனுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்...... உங்களை போன்ற நண்பர்களை கொடுத்ததையும் சேர்த்து. நான் எழுதும் பதிவுகள் உங்களை கவர்ந்தது கண்டு மகிழ்ச்சி !

   Delete
 6. very nice to read about our qatar :) Raja change aayachu theriyuma boss!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தக்குடு...... அப்படியா தெரியாதே. அடுத்த முறை வரும்போது சொல்கிறேன், கண்டிப்பாக மீட் பண்ணலாம்.

   Delete
 7. உலகம் சுற்றும் வாலிபனய்யா நீர்....

  ReplyDelete
  Replies
  1. வாலிபன் என்று நீங்கள் சொன்ன கோவை குசும்பை மிகவும் ரசித்தேன் சதீஷ் !

   Delete
 8. நன்றி ரமணி சார் !

  ReplyDelete
 9. Nalla padhippu.....................

  ReplyDelete