Thursday, June 6, 2013

டெக்னாலஜி - கூகிள் மேப்

வெளிநாடுகளுக்கு சென்றால் டாக்ஸி என்பது மிக மிக காஸ்ட்லி, இதனால் மக்கள் வாடகை கார்களை எடுத்துக்கொண்டு அவர்களே டிரைவ் செய்வார்கள். நான் இப்படிதான் எங்கு சென்றாலும் கார் எடுத்துக்கொள்வேன், ஒரு வகையில் இது பெரும் சௌகரியம் ! ஆனால் ஒரு தெரியாத நாட்டில் இறங்கும்போது எப்படி நான் தேடி வந்த இடத்திற்கு செல்வது, அதற்க்கான தொழில் நுட்பம்தான் மேப், நேவிகேஷன் டெக்னாலஜி.



பொதுவாக எந்த நாட்டிலும் ஒரு நேவிகேஷன் கருவி ஒன்று கொடுத்து விடுவார்கள், அதை வாங்கியவுடன் அட்ரஸ் டைப் செய்தால் அது எப்படி செல்ல வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லி கொடுக்கும், இதனால் இலக்கை அடைந்து விடலாம். இதில் கூகிள் மேப் என்பது இப்போது எல்லோரும் நம்பும் ஒன்றாகிவிட்டது. நான் பெங்களுருவில் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் அதைதான் நாடுகிறேன். அதன் அடுத்த கட்டம் என்ன என்று சொல்வதே இந்த பதிவின் நோக்கம். நிறைய வீடியோ உள்ளது, ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு டெக்னாலஜி !

ஒரு இடத்திற்கு செல்வதற்குத்தான் இந்த கூகிள் மேப் வழி காட்டும் என்பது பழைய கதை, இன்று பெரிய பெரிய ஷாப்பிங் மால் எல்லாம் வந்து விட்ட பிறகு, அதனுள்ளே தொலைந்து போகாமல் இருக்கவும் இந்த கூகிள் மேப் வழி சொல்கிறது !! ஏர்போர்ட், மால், பெரிய கட்டிடங்கள் என்று எங்கு சென்றாலும் அது உங்களுக்கு வழி சொல்லும் !! கீழே உள்ள வீடியோ பாருங்கள் உங்களுக்கே புரியும்.


ஆப்பிள் கருவிகள் வந்த பிறகு டெக்னாலஜி அடுத்த தளத்திற்கு சென்று விட்டது என்பது ஒரு சத்தியமான உண்மை. இதில் குழந்தைகள் கூட இன்று அதை உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். கீழே உள்ள வீடியோ பாருங்கள், இந்த மேப் அப்ளிகேஷன் உலகத்தில் உள்ளவற்றை எப்படி குழந்தைகளுக்கு கற்று கொடுக்கிறது என்று !


கூகிள் இப்போது 3டி மேப் மற்றும் ஸ்ட்ரீட் வ்யூ ஆகியவற்றில் அதிகம் கவனம் செலுத்துகிறது. ஒரு தெருவில் இருக்கும் மரம் கூட எங்கு உள்ளது என்று காட்டும் தொழில்நுட்பம் ! தெருவில் நின்று கொண்டு நீங்கள் திரும்பி பார்த்தால் அங்கு எப்படி இருக்கும் என்று காட்டுவதுதான் இந்த ஸ்ட்ரீட் வ்யூ !! இந்தியாவில் இது அதிகம் இல்லை, ஆனால் மற்ற நாடுகளில் இது அதிகம் இருக்கிறது. கீழே உள்ள வீடியோ பார்த்தால் நீங்கள் இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.


இப்படி நிறைய செய்யும் கூகுளின் முயற்சி எதை நோக்கி செல்கிறது என்பதற்கு விடைதான்.....கூகிள் டிரைவர் இல்லாமல் ஓடும் கார். இந்த தொழில்நுட்பம் இன்று சோதிக்கப்பட்டு நன்கு ஓடுகிறது. இதை விரிவுபடுத்த ஆரம்பித்தால் இனிமேல் டிரைவர் இல்லாமல்தான் கார் ஓடும். கீழே உள்ள வீடியோ பாருங்கள் உங்களுக்கே புரியும் !!


Labels : Suresh, Kadalpayanangal, Technology, google maps

6 comments:

  1. ஸ்ட்ரீட் வ்யூ அற்புதம்...

    இங்கும் சில வாகனங்கள் டிரைவர் இல்லாமல் தான் "ஓடு"கிறது...

    ReplyDelete
    Replies
    1. இந்த தொழில்நுட்பம் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது கண்டு மகிழ்ச்சி.......ஆம் நீங்கள் சொன்னது போல சிலர் ஓட்டுவது டிரைவர் இல்லாமல் ஓடுவது போல்தான் உள்ளது :-)

      Delete
  2. அறியாதன அறிந்தேன்
    விரிவான பகிர்வுக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி சார் ! உங்களது வீட்டு அட்ரஸ் சொன்னால் இந்த டெக்னாலஜி கொண்டு விரைவில் வருவேன் !

      Delete