Tuesday, June 18, 2013

டெக்னாலஜி - எதிர்கால விமானங்கள் !

விமானம் என்பதே டெக்னாலஜியின் உச்சகட்டம் என்று இன்றும் நினைப்பவர்கள் இருக்கிறார்கள், பல காலமாய் விமானம் என்பது இரண்டு இறக்கைகள் கொண்ட ஒன்று என்ற எண்ணம்தான் நமக்கு எல்லாம். ஆனால் இந்த விமான கம்பெனிகள் இதை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல முயல்கின்றன தெரியுமா ? இந்த விமானங்களின் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரிய வேண்டுமா......
 

 
 
பொதுவாக நான் ஏர்போர்ட் செல்லும்போது எல்லாம் நமது கோயம்பேடு பஸ் நிலையம் சற்று முன்னேறினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இன்றைய விமான நிலையங்கள் என்பேன். கூட்டம் தள்ளி சாயும் ! விமான பயணம் என்பதே ஒரு அனுபவம், இன்றும் எனது முதல் விமான பயணத்தை நினைத்து பார்க்கிறேன்....அந்த மேகத்தை கடந்து செல்லும்போதும், அந்த வெண்ணிற மேககூட்டங்களை பார்க்கும்போதும் அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். அடுத்த தலைமுறை விமானங்கள், இன்னும் புதிதாக, சிறப்புடன் இருக்கும், அதற்கான முயற்சிகளை தொடங்கி விட்டனர், அதை பார்க்க கீழே உள்ள வீடியோ பார்க்கவும்.
 
 
 
சரி பெரிய விமானங்கள் இப்படி மாற போகிறது, அப்படி என்றால் சிறிய விமானங்கள் என்ன ஆகும் ? இனிமேல் வீடுக்கு வீடு ஒரு விமானம் இருக்கும் ! கீழே உள்ள வீடியோ பாருங்கள், இந்த கண்டுபிடிப்பு ஒரு வருடத்திற்கு முன்பே வந்து விட்டது, விரைவில் சுமார் ஆயிரம் விமானம் தயாராகிவிடும் !
 
 
 
Labels : Technology, Future flight, Suresh, Kadalpayanangal, future of airbus
 

4 comments:

  1. அருமையான காணோளி
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார் !

      Delete
  2. Replies
    1. நன்றி தனபாலன் சார் !

      Delete