Friday, June 7, 2013

மறக்க முடியா பயணம் - ஆஸ்திரேலியாவின் நோப்பீஸ் சென்டர்

சிலர் என்னை பார்க்கும்போது கேட்க்கும் கேள்வி, நீ போனதிலேயே உனக்கு ரொம்ப பிடிச்ச இடம் எது என்பது, நான் யோசிக்காமல் சொல்லும் இடம் இந்த நோப்பீஸ் சென்டர். இது ஆஸ்திரேலியாவின்  மெல்போர்ன் நகரில் இருந்து ஒன்றரை மணி நேர பயணத்தில் இருக்கிறது. இது பிலிப் தீவு என்னும் இடத்தில் இருக்கும் ஒரு முனை, அதை தாண்டி சென்றால் நீங்கள் அன்டர்டிகாவை அடையலாம் என்று சொல்கிறார்கள், ஆக உலகத்தின் ஒரு முனையில் இருப்பது இந்த நோப்பீஸ் சென்டர். அது என்ன அப்படி ஸ்பெஷல் என்பது கீழே இருக்கும் படத்தினை பார்த்தால் தெரியுமே !





சிறிது மலை பாங்கான இடம், பச்சை பசுமையாய் புல்வெளி, சீற்றத்தோடு கடல் அலைகள், சிலு சிலுவென்ற காற்று என்று அந்த இடம் நிஜமாகவே ஒரு சொர்க்கம். அமைதியாய் அங்கே உட்க்கார்ந்து கடல் அலைகளை பார்ப்பது என்பது ஒரு சுகமான அனுபவம். நான் அங்கு சென்றிருந்தபோது மழை சிறு தூறல்களாக விழுந்து கொண்டிருந்தது, அங்கு குளிர் காலம் ஆரம்பம் வேறு என்பதால் பொழுது அருமையாக இருந்தது. மாலை மயங்கும் வேளையில் அங்கு நின்று கொண்டு அமைதியாக இருந்ததே மனதிற்கு இதம் தந்தது.




 
 இங்கு இருப்பது ஒரே ஒரு கட்டிடம்தான், அதுவும் அரசாங்கம் இங்கு வரும் பயணிகளுக்காக கட்டியது. இங்கு ஏன் சுற்றுலா பயணிகள் வர வேண்டும் என்று கேட்டால் அது அங்கு வரும் கடல் சீல்களுக்காக !! கீழே உள்ள படத்தில் தூரத்தில் தெரியும் ஒரு குன்று போன்ற அமைப்பில் மாலை வேளையில் நூற்றுக்கணக்கான சீல்கள் அமர்ந்து கொண்டு இருப்பதை காண்பது கண்கொள்ளா காட்சி. இதற்காகவே மாலையில் ஒரு படகில் உங்களை அங்கு கொண்டு செல்வார்கள், அப்போது நீங்கள் அதை பார்க்கலாம்.


 
 
 உலகத்தில் இது போல கடலும், பசுமையான மலையும் என்று பல இடங்கள் சென்று இருக்கிறேன், ஆனால் இது போன்ற ஒரு இடம் கண்டதில்லை. கண்ணிற்கு குளிர்ச்சியும், இனிமையான காற்றும், காட்சியும் என்று அந்த இடத்திற்கு சென்று வந்தால் மட்டுமே உங்களுக்கு புரியும், சென்றால் உங்களுக்கும் அந்த இடம் மிகவும் பிடிக்கும்.

 
Labels : Kadalpayanangal, Suresh, Unforgettable journey, Nobbies center, Melbourne, Australia

8 comments:

  1. என்னது ஆஸ்திரேலியாவா....ஆஸ்தி கரைஞ்சிடும் போல இங்கலாம் போனா...?
    நீங்க போயிருக்கீங்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீவா, உங்களது பயண கட்டுரைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும் ! நான் ஆண்டவனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.....

      Delete
  2. உண்மையிலேயே நீங்கள் உலகம் சுற்றும் (ரசிக்கும்) வாலிபர் தான்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாலிபர் என்று சொன்னதற்கு முதல் நன்றி, உங்களது கருத்திற்கு இரண்டாம் நன்றி :-)

      Delete
  3. போகமுடியாவிட்டாலும் உங்கள் பதிவால்
    நாங்களும் பல இடங்களைப் பார்ப்பது போலவே
    உணர்கிறோம்,படங்களும் விவரிப்பும் அத்தனை துல்லியம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி சார் ! உங்களது கவிதைகளும் இதை போலவே பசுமை !

      Delete
  4. Replies
    1. நன்றி ஹரி ! தங்களது வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete