Friday, June 14, 2013

கடல் பயணங்கள் - இரண்டாம் ஆண்டில் !

நன்றி !

இந்த வார்த்தையை எப்படி சொன்னாலும் அது மிக சிறியதாய் தெரிகிறது. கடந்த வருடம் இதே நாளில் மதியம் இரண்டு மணிக்கு பிறந்தது இந்த "கடல் பயணங்கள்". இதோ, இன்று அது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எனக்கு பல நல்ல நண்பர்களையும், உள்ளங்களையும் அடையாளம் காட்டியது.



எனது பதிவுகளை தினமும் எழுத என்னை உற்சாகபடுத்தும் எனது மனைவியை இந்த நேரத்தில் நன்றி கூறுகிறேன். எனது பெற்றோர், நண்பர்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி. நண்பர்கள் பலர் என்பதால் இந்த இடத்தில் அவர்களது பேர் எழுத இடம் போதாது என்பதால் இங்கு எழுதவில்லை. ஆனாலும் எனது நண்பர்களான ஜெகதீசன், சுதாகர், யாமினி அவர்களை இங்கு நினைவுகூர கடமைபட்டுள்ளேன். இந்த ப்ளாக்கில் எழுதும் விஷயங்கள் அனைத்தும் சிலரின் உதவியால் வந்தவையே, அவர்களுக்கும் எனது நன்றிகள்.


எனது பதிவுகளை படித்து தங்களது கருத்துக்களை எழுதிய அனைவரையும், படித்து கருத்துக்களை பதியவில்லை என்றாலும் தொடர்ந்து படிக்கும் அனைவருக்கும் நன்றி. உங்களது உற்சாகமான கருத்துக்கள்தான் என்னை எழுத வைக்கின்றன என்றால் அது மிகை ஆகாது. அவர்களில் சிலரை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.... இவர்களை இந்த கடல்பயணங்கள்தான் நண்பர்களாக எனக்கு பெற்று தந்தது !

 ரமணி சார்
திண்டுக்கல் தனபாலன் சார்
Stay smile கிருஷ்ணா
சங்கவி சதீஷ்
சதீஷ் மாரிமுத்து
ராஜராஜேஸ்வரி
ஆனந்த்
துளசி கோபால்
ஹரி ராஜ்
கோவை நேரம் ஜீவா
தமிழ்வாசி பிரகாஷ்
பாவா ஷரீப்
அமுதா கிருஷ்ணா
கீதா லட்சுமி
பட்டா பட்டி
முபாரக் ஹுசைன்
ஈரோடு சுரேஷ்
புலவர் ராமானுஜம்
அம்பலத்தார்
செல்வகுமார்
ஹஜஸ்ரீன்
ராம் டெல்லி
ஜெயதேவ் தாஸ்
மாற்றுபார்வை
அஜீமும் அற்புதவிளக்கும்
வெற்றிதிருமகன்
பாஸ்கரன்
பெருமாள்
வைஜெயந்த்
தமிழ் இளங்கோ
வடுவூர் குமார்
செம்மலை ஆகாஷ்
சீனு
இக்பால் செல்வன்
அண்ணாமலையான்
குட்டன்
ஸ்கூல் பையன்
கும்மாச்சி
தக்குடு
பந்து
அன்பு
நாகு
பிறை நேசன்
மனோ சுவாமிநாதன்
கோமதி அரசு
நாடிநாராயணன் மணி
என்பாட்டை ராஜா
ரியாஸ் அகமது
ராகவ்
மோகன் குமார்
மாதேவி
பால கணேஷ்
கல்நெஞ்சம்
கிருஷ்
சூரி சிவா
குரங்கு பெடல்
வல்லி சிம்ஹன்
அன்புடன் அருணா
பழனிசாமி
கோபாலகிருஷ்ணன்
மனிகண்டவேல்
காட்டான்
பழனி கந்தசாமி
ஸாதிகா
வருண்
முருகானந்தம்
முனைவர்.இரா .குணசீலன்
கவிதை வீதி சௌந்தர்
தேவா
SP ராஜ்
ராஜேஷ்
அசோக்
விச்சு
காரிகன்
இக்பால் செல்வன்
ரங்குடு
ஜீவன் சிவம்
வடுவூர் குமார்
கோமதி அரசு

நன்றி.....அனைவருக்கும் !

 

26 comments:

  1. நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராஜேஷ், உங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  2. Replies
    1. நன்றி ஹரி ராஜ், மீண்டும் வருக....

      Delete
  3. நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாவா ஷரீப் ! தங்களது வாழ்த்துக்கள் என்னை மிக்க மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.....

      Delete
  4. இன்னும் பல புதுமையான கட்டுரைகள் எழுதி சிறப்பாக வளம் வர வாழ்த்துக்கள்... எனது பெயரையும் குறிப்பிட்டமைக்கு நன்றி சார்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சீனு......எனது கட்டுரைகள் உங்களை மகிழ்ச்சி கொள்ள வைத்ததை இதன் மூலம் அறிகிறேன். அது எப்படி உங்களை குறிப்பிட மறப்பேன் சீனு, உங்களது உற்சாகமான கருத்துக்கள் இல்லையென்றால் கடல் பயணம் போர் அடித்து விடும்....

      Delete
  5. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    எங்களால் செல்ல முடியமா...? என்று தெரியவில்லை... உங்களின் பகிர்வுகள் மூலம் நாங்களும் பயணப்படுகிறோம்... உரிமையான நட்பிற்கும் (கோபத்திற்கும்) நன்றிகள் பல...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார், நீங்கள் இடும் கருத்துக்கள், உற்சாகம் கொள்ள வைக்கும் வார்த்தைகள் இன்றளவும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துபவை.....பதிவு வந்தவுடன் எப்பொழுதும் உங்களது கருத்துக்கள் விரைவாக வரும், எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும், எப்படி உங்களால் இது முடிகிறது என்று. இந்த ஒரு ஆண்டு நிறைவு உங்களை போன்ற மனிதர்களால்தான் முடிந்தது என்பது மட்டும் உண்மை. மீண்டும் எனது பணிவான நன்றிகள்.

      Delete
  6. இரண்டாம் ஆண்டில் அடி எடுத்துவைத்த கடல் பயணங்கள் -
    இனிது தொடரட்டும் ..!
    மனம் நிறைந்த வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம், உங்களது தொடர் உற்சாகம் கொள்ள வைக்கும் கருத்துக்கள்தான் என்னை இந்த இரண்டாம் ஆண்டிற்கு கூட்டி வந்துள்ளது......

      Delete
  7. உங்கள் பதிவால் நாங்கள் பல
    காணாத காணமுடியாத பல புதிய இடங்களைக் கண்டோம்
    அறியாத பல அரிய விஷயங்களை அறிந்தோம்
    நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்
    தங்கள் சீரிய பணி தொடர
    தொடர்ந்து சிறக்க
    குறைவின்றி எல்லாவகையிலும் அருளவேண்டுமாய்
    இத்தருணத்தில் எல்லாம் வல்லவனை
    வேண்டிக்கொள்கிறோம்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார்.......முதன் முதலில் இந்த பதிவுகள் ஆரம்பித்தபோது உங்களது கருத்துக்கள்தான் என்னை உயிர்ப்புடன் வைத்திருந்து, மேலும் எழுத தூண்டியது. இந்த இரண்டாம் ஆண்டை எட்டியதில் உங்களது கருத்துக்களுக்கும் நிறைய பங்குண்டு. எப்போதும் உங்களின் கவிதைகளின் ரசிகன் நான், கருத்திட மறந்தாலும் நான் ரசிக்க மறந்ததில்லை. நீங்கள் இங்கே பாராட்டியது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், எனது பணிவான நன்றிகள்.

      Delete
  8. அண்ணே அவப் அவப் உங்க ரோல் மாடல் யாருன்னு கேட்டா யார் யாரையோ சொல்வாங்க............

    என்கிட்டே கேட்டா நீங்க தான் எண்டு சொல்வேன்......


    ஆமா உங்கள போல உலகம் சுத்தணும், புதுசு புதுசா அனுபவிக்கனும். இந்த ஆசையில தான் நான் இந்த ஏரியா பக்கம் வரதே..........


    நீங்க இன்னும் மிச்சம் மீதி இருக்க நாட்டுக்கெல்லாம் பொய் அந்த ஊர் ஸ்பெசல் எல்லாம் அனுபவிச்சு அத விளக்கமா எழுதி எங்கள போல சின்னவங்களா ஊக்கப்படுத்தணும். வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
    Replies
    1. உங்களது கருத்துக்கள் படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தாலும், என்னை ரோல் மாடல் என்று சொன்னதில் எனக்கு நிறைய பொறுப்பு கொடுத்து விட்டீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த உலகம் சுற்றுவது என்பதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்த ஆண்டவனுக்கு நன்றிகள் பல, அதை இப்படி எழுதி உங்களை போன்ற நண்பர்கள் பெற்றது எனது பாக்கியம்.
      நன்றி ஹாஜா .... கண்கள் பனிக்கின்றன......

      Delete
    2. உங்க பணிவுக்கு என்ரெண்டும் நன்ரிகள், நா ரொம்ப நாளாவே உங்க ப்ளாக் வாசிச்சிட்டு இருக்கன், ஆனா கமெண்ட்ஸ் போட்டது குறைவு, காரணம் என்னண்டா இப்போ ஒரு வருசமா datacard உஸ் பண்ணிதான் use panran, appo data sikkana paduttha ellaruda post ayum screenshot eduthu wacchi, neram kidaikkura gap la read panuwan, appadi seiyum pothu coment panna wirupam irunthalum screen shot la comnt panna mudiyathulla, athanalaye ungala pola niraya perukku comnt pannama irunthirukkan, appadi irunthum unga post read panum pothu kattayam solliye aaganum enda mudiwula ippalaam online laye read panran.

      ulagam sutthura chance enaku innum kidaikkala. aana unga post read panum pothu nangale sutthina maatiri oru feeling, romba thnx anne

      Delete
    3. மீண்டும் நன்றிகள் ஹாஜா, உங்களது படிக்கும் ஆர்வம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. உங்களது கருத்துக்கள் என்னை உயிர்ப்புடன் வைக்கிறது, நீங்கள் அண்ணே என்று கூப்பிடும்போது மகிழ்கிறேன். ஒரு நாள் கண்டிப்பாக சந்திப்போம் !

      Delete
    4. romba santhosam anne, nanga skul days la class cut panitu librery la book padikkura sangatha sernthawanga :D hahaha

      naan irukkurathu srilanka la. inga eppo waruwinga visiting ? sutthi paakka niraya idam irukku

      Delete
    5. நான் சென்ற மாதம் கொழும்பு வந்து இருந்தேன்....அடுத்த முறை வரும்போது உங்களுக்கு சொல்கிறேன் ! கருத்துக்கு நன்றி...... உங்களது சங்கம் வளர வாழ்த்துக்கள் :-)

      Delete
    6. adade theriyama pocche, marupadi wanthaal santhippom

      Delete
  9. இரண்டாம் ஆண்டிற்கு எனது மனமார்ந்த வாழ்துக்கள் அண்ணா ,

    நீங்கள் காணும் காட்சிகளை அப்படியே ஒரு மந்திரவாதி மாதிரி எங்களுக்கு படம் புடிச்சி காட்டுறிங்களே அதுக்கு நாங்க தான் அண்ணா நன்றி சொல்லணும்

    உங்க ப்ளாக்ல என் பெயரை பாக்கும் பொது மிக்க மகிழ்ச்சி அண்ணா

    என்னை நினைவுகூர்ந்தமைக்கு மிக்க நன்றி

    கடல் பயணங்கள் மேலும் பல ஆண்டுகள் தொட எனது வாழ்துகள் அண்ணா

    ReplyDelete
    Replies
    1. ஆனந்த், தங்களது வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி. உங்களது பெயரை நான் எப்படி மறக்க இயலும் ? நீங்கள் கொடுத்த அந்த உற்சாகம்தான் இந்த கடல் பயணத்தை இவ்வளவு தூரம் பயணிக்க வைத்தது. நன்றிகள் பல.....

      Delete
  10. Replies
    1. தங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி கிருஷ்ணா ! உங்களது ஆதரவு இருக்கும்போது இந்த வருடம் சிறப்பானதாகதான் இருக்கும்.....

      Delete