வெகு நாட்களாக உணவகத்தை பற்றியே எழுதி வருகிறேன், அட ஒரு மாறுதலுக்காக இந்த வாரம் ஒரு (சிறிது) ஆடம்பரமான ஒரு டீ கடை பாப்போம் வரீங்களா ?! சில நேரங்களில் நீங்கள் உணவு வேண்டாம் சிறிது லைட்டாக எடுத்து கொள்ளலாம் என்று நினைக்கும்போது ஒரு நல்ல இடம் கிடைத்தால் சந்தோசமாக இருக்கும் இல்லையா......அதுதான் சாயி ஸ்டால் ! பெயரே வித்யாசமாக இருக்கிறதே என்று உள்ளே நுழைந்தால் உணவும், உள்ளமைப்பும் கூட வித்யாசமாக இருந்தது.
பஞ்ச் லைன் :
Labels : Kadalpayanangal, Suresh, Arusuvai, Bengaluru, Bangalore, Chayee stall
அந்த கடை இளைங்கர்களால் நடத்தபடுவது என்பது பார்க்கும்போதே தெரிந்துவிடும், உட்காரும் இடமாக பெட்டிகளும், பால் கேனில் சீட், டீ சாசரில் விளக்கு , டீ கப் கொண்டு கடிகாரம் என்று ஒவ்வொன்றும் ரசனையுடன் செய்யபட்டிரிந்தது ! மெனு கார்டு கொடுக்கும்போதுதான் அதில் காபி டே போன்ற கடைகளில் கிடைக்கும் கப்புச்சினோ, லாட்டே என்று இருந்ததை கவனிக்க முடிந்தது. எனக்கு என்று மசாலா டீ மற்றும் பிரெஞ்சு ப்ரை ஆர்டர் செய்து அந்த இடத்தையும், காற்றோட்டத்தையும் ரசிக்க ஆரம்பித்தேன்.
முடிவில் டீ வந்தபோது சூடாக, இதமாக, சுவையாக இருந்தது. கொறிக்க பிரெஞ்சு ப்ரை வேறு இருந்ததால் நிதானமாக சுவைக்க முடிந்தது. உங்களுக்கு ஏதேனும் மிகவும் லைட்டாக கொறிக்க இது சிறந்த இடம் எனலாம். பொறுமையாக உங்களை கவனித்து குறை இருந்தால் திருத்திக்கொள்ளும் பக்குவம் இருக்கிறது அந்த இளைங்கர்களிடம்.
சுவை - நல்ல சுவை. ரோட்டில் நின்று கொண்டு அவசர அவசரமாக குடிக்காமல், நிதானத்துடன் டீ குடிக்க நல்ல இடம்.
அமைப்பு - சிறிய இடம், பார்த்து பார்த்து செய்த வித்யாசமான உள் அலங்காரங்கள். பார்கிங் வசதி சிறிது கம்மி.
பணம் - சராசரியான விலை!
அமைப்பு - சிறிய இடம், பார்த்து பார்த்து செய்த வித்யாசமான உள் அலங்காரங்கள். பார்கிங் வசதி சிறிது கம்மி.
பணம் - சராசரியான விலை!
சர்வீஸ் - நல்ல சர்விஸ்
அட்ரஸ் :
#17, Raheja Plaza, Commissariat Road, General Thimmaiah Road Ashok Nagar, Bangalore, Karnataka 560025, India
+91 97 40 067940

மெனு கார்டு :
அட்ரஸ் :
#17, Raheja Plaza, Commissariat Road, General Thimmaiah Road Ashok Nagar, Bangalore, Karnataka 560025, India
மெனு கார்டு :
Labels : Kadalpayanangal, Suresh, Arusuvai, Bengaluru, Bangalore, Chayee stall
ஒரு டி குடிக்க இவ்ளோ பெரிய கடையா...நமக்கு நாயர் கடை டீயே போதும்
ReplyDeleteஹா ஹா ஹா.....நாயர் கடை டீ இதை விட நல்லா இருக்கும். உங்க பதிவில் இந்த டீயோட எதை மிக்ஸ் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லுங்களேன் ! நன்றி ஜீவா, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !
Delete