Monday, July 1, 2013

ஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 2)- Final

என்ன  சென்ற வாரம் நாமக்கல் முட்டை பத்தின பதிவு பார்த்தீங்களா ? எப்படி இருந்துச்சு.....நான் சொன்னதெல்லாம் கொஞ்சம்தான், நிறைய விஷயம் நான் தெரிஞ்சுகிட்டேன். அதை இந்த வாரமும் தொடரலாமா ?! போன வாரம் நீங்க லேயர் கோழி வாங்கி வந்து அதை வளர்க்க ஆரம்பிச்சீங்க, அப்புறம் சேவலிடம் இருந்து விந்து எடுத்து அதை கோழிகளிடம் ஊசி மூலம் சேர்த்தீங்க இல்லையா. இப்போ முட்டை வளர ஆரம்பிச்சாச்சு, இந்த முட்டை முழுமையாக கிடைக்க நமக்கு 26 மணி நேரம் ஆகும். ஒரு கோழி தனது ஆயுளான 72 வாரம் வரை சுமார் 300 முட்டைகள் வரை இடும். கோழி பண்ணைகளில் சிலர் இந்த லேயர் கோழிகளை நாம் ஏன் காசு கொடுத்து அடுத்தவரிடம் வாங்க வேண்டும், நாமே இந்த முட்டைகளை வைத்து லேயர் கோழி உருவாக்குவோம் அல்லது ஒரு கலப்பின கோழி ஒன்றை உருவாக்கி அதில் 350 முட்டை வருடத்திற்கு வருமாறு செய்வோம் என்றெல்லாம் யோசிப்பார்கள். இயற்க்கை என்பது சும்மா இல்லை.....இது போல் எல்லாம் செய்து நஷ்டம் அடைந்தவர்கள்தான் அதிகமாம் !அதை விடுங்க.....என்றாவது முட்டையின் உள்ளே எப்படி இருக்கும் என்று பார்த்ததுண்டா ? கீழே உள்ள படத்தை பாருங்க.....


சில நேரத்தில் முட்டையின் கலர் வித்யாசமாக இருக்கும் தெரியுமா ? உதாரணமாக, நாட்டு கோழியின் முட்டை என்பது பிரவுன் கலரில் இருக்கும், பிராய்லர் கோழியின் முட்டை என்பது வெள்ளை கலர் என்று........இது எல்லாம் ஒவ்வொரு கோழியின் ஜீன் அமைப்பினால். உலகில் பல வகை கோழிகள் இருக்கின்றன, இன்று முட்டை என்பது வெள்ளை என்றாகிவிட்டது. இதை பற்றி நான் தெரிந்து கொண்டதை எழுதினால் ஒரு நான்கு பதிவு வரும், இதனால் சுருக்கமாக முட்டையின் கலர் என்பது இயற்க்கை மற்றும் கோழியின் ஜீனினால் என்று புரிந்து கொண்டால் போதுமே.
ஓகே, முட்டை இப்போது ரெடி, இனிமேல் அடை காக்கும் வேலை ஆரம்பம். கோழியை அடை காக்க வைக்கலாம் ஆனால் அதை விட சீக்கிரமான முறை வேண்டுமே. உங்களுக்கு சத்தான கோழி குஞ்சு கிடைகனுமின்னா நாம கோழி எப்படி அடை காக்குமோ, அது போலவே ஒரு சூழலை உருவாக்கணும்.
அதற்குதான் இன்குபேட்டர் என்னும் கருவி. இதன் வேலை என்பது சரியான தட்வெட்ப நிலையை தருவதாகும். அது மட்டும் இல்லாமல் முட்டையை சரியான நேரத்தில், சரியான வேகத்தில், நிதானமாக ஆட்ட வேண்டும், இதனால் அந்த கோழி குஞ்சு அம்மாவின் வயிற்றில் இருப்பது போல பாதுகாப்பாகவும், ஆரோக்கியமுடனும் வளரும். இப்படி 21 நாள், இந்த முட்டையை இந்த இன்குபேட்டரில் வைத்திருந்தால் கோழி குஞ்சுகள் உருவாகும். இதைதான் கமர்சியல் கோழி என்கின்றனர்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்......இது போன்ற ஒரு அமைப்பின் முட்டையை அடுக்கி வைக்கின்றனர். பின்னர், இதை இன்குபேட்டரின் உள்ளே வைத்து கதவை மூடி விட வேண்டும். அது முட்டையை அப்படி இப்படி என்று மெதுவாக சாய்த்து அந்த கோழி குஞ்சு தாயின் வயிற்றில் இருப்பது போன்ற சூழ்நிலையை உருவாக்குகின்றனர். முடிவில் 21ம் நாளில் நிறைய கோழி குஞ்சுகள் வெளியே வர ஆரம்பிக்கும் !


முடிவில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம், இந்த கோழிகள் எல்லாம் 72 வாரம் வரை உயிரோடு இருக்கும் எனும்போது எப்படி கமர்சியல் கோழிகள் / நாம் சாப்பிடும் கோழிகள் எல்லாம் 6 அல்லது 7 வாரத்தில் எல்லாம் இந்த கோழிகளை போலவே பெரிதாக வருகின்றன என்று ?! இந்த முட்டை இடும் கோழிகள் எல்லாம் அது குண்டாகி விடாமல் இருக்க தீவனத்தை கட்டு படுத்துகின்றனர். ஆனால் கமர்சியல் கோழிகள் எல்லாம் சீக்கிரமே நிறைய வளர வேண்டும் என்பதால் தீவனத்தை நன்கு தின்ன வேண்டும் என்று நிறைய போடுகின்றனர்....... யோசித்து பாருங்கள் இந்த கோழிகள் எல்லாம் ஆறே வாரத்தில் இப்படி ஆகிறது. நார்மல் கோழிகளுக்கு முன்பு சொன்னது போல முதல் எட்டு வாரம் என்பது குஞ்சு வாரம், அடுத்த எட்டு வாரம் என்பது வளர் பருவம், பிறகுதான் முட்டை இடும் பருவம்........நாம் சாப்பிடும் கோழிகள் எல்லாம் இந்த குஞ்சு பருவத்தையே தாண்டாத, ஆனால் முழு கோழி போல தெரியும் கோழிகள் !! அப்படி என்ன தீனி தின்கிறது என்று
கேட்பவர்களுக்கு மட்டும்  இந்த அட்டவணை.......

இறைச்சிக் கோழி கலவைப்பொருட்கள்
மூலப்பொருள்
அளவு
1
2
3
4
மக்காச்சோளம்
51
58.5
47.5
53.25
கோதுமை உமி
10
2.5
7.75
-
மணிலா புண்ணாக்கு
25.2
25
29.4
29.4
மீன் துகல்
10.8
11
12.6
12.6
கால்சியம்
பாஸ்பேட்
1
1
1
1
சுண்ணாம்பு
0.5
0.5
0.5
0.25
உப்பு
0.5
0.5
0.5
0.25
முன்கலவை
1
1
1
1
மொத்த எடை
100
100
100
100
பண்படாத புரதம் (சதவிகிதம்)
22.1
22
24
24
1 கிலோவில் கிடைக்கும் சக்தி
2800
3000
2800
3000
முன்கலவை - 100 கிலோ தீவனத்திற்கு
விவரங்கள்
பொருட்கள்
அளவு (கிராம்)
விட்டமின் (கிராம்)
விடா பிளான்ட்
25
ஃபோலிக் அமிலம்
0.1
விட்டமின் இ
4
நையாசின்
10
பைரிடாக்ஸின்
1
கோலைன் ஃகிளோரைட்
30
மினரல் (கிராம்)
ஃபெரஸ் சல்பேட்
20
துத்தநாக சல்பேட்
25
தாமிர சல்பேட்
25
மெக்னீசிய சல்பேட்
25
பொட்டாசியம் சல்பேட்
0.1
அமினோ அமிலம் (கிராம்)
லைசின் எச்சிஎல்
220
மித்தியோனைன்
160

முடிவில் சில விசயங்களை மேலோட்டமாக பார்க்கலாம், இல்லையென்றால் இந்த பதிவு ஒரு புத்தகம் போடும் அளவு வந்துவிடும் ! அப்படி என்ன லாபம் வரும் என்று கேட்பவர்களுக்கு.....ஆனால் லாபம் இவ்வளவுதானா என்று கேட்பவர்கள் கோழி பண்ணையின் அளவை பார்க்க வேண்டும். இங்கு கணக்கு என்பது சுமார் 2000 கோழிகளுக்குத்தான், இதுவே 20,000 கோழிகள் இருந்தால் ?! அது மட்டும் இல்லை, இந்த கோழிகளுக்கு நோய் வந்தால் இந்த லாபம் எல்லாம் நஷ்டமாகும்......ஆகவேதான் ஆரம்பத்தில் சொன்னேன், இது லாபமும், நஷ்டமும் கலந்த தொழில் என்று !

 உற்பத்தி செலவு

குஞ்சு விலை சராசரி ரூ.21 வீதம் 2 ஆயிரம் குஞ்சுகள் ரூ.42 ஆயிரம். தீவனம் ஒரு கோழிக்கு 50 கிலோ தேவை. தீவனம் கிலோ விலை ரூ.15. 2 ஆயிரம் கோழிக்கு ரூ.15 லட்சம். தடுப்பு மருந்து உள்ளிட்ட பராமரிப்பு செலவுகள் ரூ.10 வீதம் ரூ.20 ஆயிரம். ஒரு வேலையாளுக்கு தினசரி ரூ.350 வீதம் ரூ.89 ஆயிரம் சம்பளம். மின் கட்டணம் ரூ.13 ஆயிரம் என உற்பத்தி செலவுக்கு மொத்தம் ரூ.16.64 லட்சம் தேவை.

வருவாய் எவ்வளவு?

ஒவ்வொரு கோழியும் வளர்ந்த 17வது வாரத்தில் இருந்து 72வது வாரம் வரை முட்டை இடும். முட்டையிடும் பருவமான 55 வாரங்களில் (385 நாட்களில்) 320 முட்டைகள் இடும். முட்டை சராசரி விலை ரூ.2.50. 2 ஆயிரம் கோழிகள் மூலம் முட்டை விற்பனை வருவாய் ரூ.16 லட்சம். 72 வார முடிவில் வயதான முட்டை கோழிகள் விற்பனை 2 ஆயிரம் கோழிகள்(3500 கிலோ எடை) கிலோ ரூ.50 வீதம் வருவாய் ரூ.1.75 லட்சம். கோழி எரு தலா 15 கிலோ வீதம் 2 ஆயிரம் கோழிகள் மூலம் 30 டன் கிடைக்கும். இதன் மூலம் ரூ.24 ஆயிரம் வருவாய். மொத்த வருவாய் ரூ.17.99 லட்சம். லாபம் ரூ.1.35 லட்சம். முட்டை, எரு, கோழி விலை கூடினால் லாபமும் அதிகரிக்கும்.என்ன நண்பரே......நாமக்கல் சென்றால் இனி இந்த பதிவுதான் யாபகம் வருமா ?! தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரும் ஒரு ஸ்பெஷல், நாமக்கலுக்கு இந்த முட்டை !

Labels : Suresh, Kadalpayanangal, oor special, Namakkal, Muttai, Egg, Broiler chicken

10 comments:

 1. முட்டையின் விரிவான விளக்கம், அட்டவணை, மற்ற தகவல்கள் அனைத்திற்கும் நன்றி... தங்களின் தேடல்கள் தொடர்க...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார், உங்களது உற்சாகம் வரவழைக்கும் கருத்துக்கள்தான் இந்த தேடலை தொடர செய்கிறது.....

   Delete
 2. முட்டை பற்றி அறியா பல தகவல்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சதீஷ், உங்களது அஞ்சரை பெட்டி போன்றே இந்த பதிவுகளும்.......!! :-)

   Delete
 3. ஆஹா முட்டை ..கோழி என்று அருமையான தகவல்கள்.

  போன மாதம் சிலோனில் ஒரு முட்டை 18 ரூபாய்.ஸ்ரீலங்கன் ரூபாய்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா அமுதா மேடம்.......இதை உரக்க சொல்லாதீங்க, இங்கயும் விலை கூடிட போகுது.

   Delete
 4. Replies
  1. நன்றி கிருஷ்ணா !

   Delete
 5. எங்களிடம் நாட்டு கோழி பண்ணைஇல் உள்ள நாட்டுக்கோழிகள் மொத்தமாக விற்பனை உள்ளது. - Call me 9715738202

  ReplyDelete
 6. மயில் முட்டை கிடைக்குமா

  ReplyDelete