Sunday, July 7, 2013

சாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....!! (பாகம் - 3)

என்ன சென்ற வாரம் தங்க சுரங்கத்தில் எப்படி ஆட்கள் வேலை செய்கிறார்கள், எப்படி சுரங்கம் தோண்டபடுகிறது என்றெல்லாம் பார்த்தீர்களா ? இப்போது நாம் சுரங்கத்திற்கு மேலே வருவதற்கு தயாராகிறோம். அப்படி மேலே வரும் வழியில் ட்ரைன் போன்ற கற்களை மேலே கொண்டு செல்லும் யந்திரத்தை பார்த்தோம். சென்ற வாரம் நீங்கள் பார்த்த ட்ராலி போன்றதை ஒவ்வொன்றாகத்தான் மேலே கொண்டு செல்ல முடியும், ஆனால் இது போன்ற ட்ரைன் போன்ற ஒன்றில் சுமார் பத்து ட்ராலிகளை இணைக்க முடியும் என்பதால் சில நேரங்களில் இதை பயன்படுத்துகின்றனர். இந்த சுரங்கத்தின் சில தகவல்கள் கீழே நீங்கள் பார்க்கலாம் !

ட்ராலியை இழுத்து செல்லும் ட்ரைன் 


அந்த சுரங்கத்தை பற்றிய சில தகவல்கள்

கீழே நீங்கள் பார்க்கும் படத்தில் தெரியும் சில மஞ்சள் நிறங்கள்தான் தங்கம். இந்த பகுதியில் மட்டும் இதை விட்டு வைத்திருக்கின்றனர். இதை தடவி நமது காதின் பின்னே தடவினால் அதிர்ஷ்டம் என்கின்றனர் ! முடிவில் சுரங்கத்தில் இருந்து வெளியே வரும் நேரம் ஆனது, அப்போதுதான் ஒன்றை கவனித்தேன், லிப்ட் ஆபரேட் செய்யும் முறையை !

மஞ்சளாக தெரிவது தங்கம் !

சுரங்க பயணம் முடிந்து வெளியே செல்ல தயார் !

பொதுவாக இந்த லிப்ட் எல்லாம் பழைய காலத்தில் உருவாக்கப்பட்டது. மிகவும் மெதுவாக செல்லும் இதில், ஆபத்து காலத்தில் சில தகவல்களை பரிமாறிக்கொள்ள சில சங்கேத முறைகளை கையாளுகின்றனர். இந்த சுரங்கத்தின் உள்ளே லிப்ட் ஆபரேட் செய்ய ஒருவர் இருக்கிறார். அவர் இரண்டு முறை மணி அடித்து விட்டு, அடுத்து மூன்று முறை மணியை அடித்தார். இதன் அர்த்தத்தை கேட்டபோது சுவரில் இருந்த படத்தை காட்டினார், அதில் விளக்கமாக சுரங்கத்தில் இருக்கும் சங்கேத முறையை குறித்து இருந்தனர். கீழே செல்ல செல்ல எந்த சிக்னலும் கிடைக்காது என்பதால் இந்த முறையாம் ! சில நேரங்களில் அதிகம் மழை பெய்யும்போது சுரங்கத்தில் தண்ணீர் புகந்து விடும், அது மட்டும் இல்லாமல் லிப்ட் வேலை செய்யாது, அப்போதெல்லாம் இந்த தொழிலாளர்கள் குளிரிலும், தண்ணீரிலும் கஷ்டப்பட வேண்டும் என்ற போது வருத்தமாக இருந்தது, நல்ல வேளை தங்கம் எல்லாம் மழை அதிகம் பெய்யும் இடங்களில் வெட்டி எடுக்கபடுவதில்லை என்ற சந்தோசமும் ஏற்பட்டது.

லிப்ட் ஆபரேட் செய்யும் கருவிகள் 



சுரங்கத்தில் மணி கொண்டு தகவல் தெரிவிக்கும் முறைகள் 

லிப்ட் மேலே கீழே செல்ல தரையில் நிர்மாணிக்கப்பட்ட கோபுரம் 

ஒரு வழியாக வெளியே வந்து அந்த காற்றை சுவாசித்தபோதுதான் நிம்மதியாக இருந்தது. நினைத்து பார்த்தேன், சுமார் இரண்டு மணி நேரம் மட்டுமே உள்ளே இருந்தேன், அதற்கே எனக்கு மலைப்பாக இருந்தது, அந்த சுரங்க தொழிலாளர்கள் எல்லாம் சுமார் பத்து மணி நேரம் வரை அங்கு இருந்து உழைக்கும்போது எப்படி இருக்கும் அவர்களுக்கு. கீழே நான் சென்று வந்த சுரங்கத்தின் வரைபடம் இருக்கிறது, அதில் இருந்து அந்த சுரங்கத்தின் அமைப்பை புரிந்து கொள்ளலாம். அடுத்த முறை சுரங்க தொழிலாளர்களை பார்க்கும்போது என்ன செய்வீர்கள் ?!

இதுதான் நான் சென்று வந்த சுரங்கத்தின் வரைபடம் 

மேலே கொண்டு வரும் கற்களை, இந்த கிரஷர் கொண்டுதான் பொடி பொடியக்குவார்கள். இந்த கற்களுக்கு இடையில் இடையில் இருக்கும் அந்த மஞ்சள் துகள்தான் தங்கம். இதை காட்டும்போது அந்த காலத்தில் இதை செய்யும்போது இறந்தவர்கள் பற்றி சொன்னார்கள், மனதுக்கு கஷ்டமாக இருந்தது. இந்த கற்களை பொடியக்கும்பொது கற்கள் வேகமாக வெளியே தெரிக்குமாம், அப்போது அருகில் இருப்பவர்கள் மண்டையில் பட்டு இறந்து இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல், இந்த மெசின் வேலை செய்யாமல் இருக்கும்போது அவ்வளவு கற்களையும் அது சரியாகும் வரை அந்த மக்கள்தான் உடைக்க வேண்டுமாம் !
கற்களை உடைக்கும் யந்திரம் !

இப்படி உடைபடும் கற்களில் இருக்கும் தங்கம்தான் தண்ணீரில் சுத்தம் செய்யப்பட்டு அதில் மஞ்சளாக தெரியும்போது எடுக்கப்பட்டு சேகரிக்கபடுகிறது. அந்த தங்கம் எப்படி இருக்கும் தெரியுமா ? இந்தியாவில் தங்கம் எங்கு கிடைக்கிறது என்று தெரியுமா ? 

தங்கம் சலிக்கும்போது இப்படிதான் இருக்கும்

இந்தியாவில் தங்கம் கிடைக்கும் இடங்கள்


இப்படி சிறியதும் பெரியதுமாக கிடைக்கும் தங்கம்தான், பின்னர் கட்டிகளாக மாற்றபடுகிறது. அதை தான் அடுத்து பார்க்க போகிறோம். இதுவரை தங்கம் வெட்டி எடுக்கபடுவதையும், அதை எப்படி பிரித்து எடுக்கிறார்கள் எனவும் பார்த்தோம். எப்படி இருந்தது ? நாம் ஒரு கிராம் தங்கம் வாங்கும் போது "இந்த தங்கம் வாங்க என்ன கஷ்ட பட வேண்டி இருக்கிறது" என்று சலித்து கொள்கிறோம், ஆனால் நினைத்து பாருங்கள் அதை எடுக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கிறது என்று !!

என்ன தங்கத்தை உருக்க ஆரம்பிக்கலாமா ?


சரி, வாருங்கள் நாம் தங்கத்தை உருக்க ஆரம்பிக்கலாமா ? என்ன அது எப்படி என்பது தெரியும் என்கிறீர்களா.... ஆனால் நான் சொல்லபோகும் தகவல்கள் எல்லாம் உங்களை ஆச்சர்யபடுத்த போகிறது தெரியுமா ? இதுவரை நீங்கள் தெரிந்து கொண்டிராத தகவல்களை எல்லாம் அடுத்த பகுதியில் பார்க்கலாம் வாருங்கள்.....!!

Labels : Suresh, Kadalpayanangal, Gold mine tour, Gold, How gold is made, sagasa payanam

14 comments:

  1. இரண்டு மணி நேரமே உள்ளே இருந்தமைக்கு இப்படி என்றால்... நீங்கள் சொல்வது புரிகிறது... கற்களை உடைக்கும் போதும் சிலர் இறக்கிறார்கள் என்பதும் வருந்தத்தக்கது...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன் சார் !

      Delete
  2. காதுல, மூக்குல, கழுத்துல மின்னுறதெல்லாம் தங்கம் மட்டுமில்ல பலரோட உயிர்ன்னு இப்போதான் தெரியுது. தங்கத்தை உருக்க காத்திருக்கேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜி மேடம் ! ஆனாலும் இந்தியாவில் தங்க மோகம் இன்னும் அதிகரித்து கொண்டுதானே செல்கிறது !

      Delete
  3. wav... செம்ம இன்ட்ரஸ்டிங்... நாங்களும் கூட வந்தது போன்ற ஓர் உணர்வு..

    ReplyDelete
    Replies
    1. நன்றி சதீஷ் ! உங்களது தங்கமான கருத்திற்கு !!

      Delete
  4. தங்கம்னாலே கஷ்டம்தான் போல

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ஆனந்த் !

      Delete
  5. மீகுந்த சிரமமான வேலைதான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மாதேவி, உலகத்தில் இதுதான் மிகவும் கஷ்டமான வேலை என்று சில சமயம் தோன்றுகிறது !

      Delete
  6. wow Intersting... Please... Very quick :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிருஷ்ணா..... இதோ தொடர்கிறேன் அடுத்த பாகம் !

      Delete
  7. தங்கம் எப்படி எடுக்கபடுகிறது என்பதும் அதைவிட அங்கு பின்பற்றப்படும் நடைமுறைகளையும் படத்துடன் பதிவு சான்சே இல்லை !அருமை மிக்க நன்றி சுரேஷ்குமார் அவர்களே!

    ReplyDelete
    Replies
    1. இது போன்ற மனம் திறந்த பாராட்டுக்கள்தான் எனது மனதை குளிர்விக்கிறது, இது போல எழுத தூண்டுகிறது..... நன்றி நாகராஜ் !

      Delete