Wednesday, July 10, 2013

அறுசுவை - பெங்களுரு மஸ்த் கலந்தர்

பெங்களுருவில் சைவ வகை ஹோட்டல்கள் கிடைப்பது என்பது குதிரை கொம்பாகி வருகிறது எனலாம். அப்படியே கிடைத்தாலும் அதை தேடி கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமமாகிவிட்டது. அப்படி இருக்கும்போது நல்ல உள்ளமைப்புடன், சுவையாகவும் ஒரு உணவகம் என்பதுதான் இந்த மஸ்த் கலந்தர் ! ஒரு மதிய வேளையில் ஒரு சைவ உணவகம் வேண்டும் என்று தேடியபோது கிடைத்ததுதான் இந்த உணவகம், உள்ளே சென்றபோது இதமான AC காற்று முகத்தில் அறைய, எல்லோரும் வரிசையாக நின்று ஆர்டர் செய்தபோதே, பரவாயில்லையே என்று தோன்றியது !




பொதுவாக இன்று எங்கு சென்றாலும் அசைவத்திற்கு கொடுக்கும் 
முக்கியத்துவம் சைவ சாப்பாடிற்கு இல்லை என்றுதான் கூற வேண்டும். இதனாலேயே சைவ ஹோட்டல் என்பது மிகவும் அரிதாகிறது. நீங்கள் இங்கு உண்டுவிட்டு எழும்போது அதிகம் சாப்பிட்டு விட்டோம் என்ற உணர்வு இருக்காது. கண்ணிற்கு குளிர்ச்சியாக, லைட் உணவுகள் கிடைக்கும் இந்த இடத்திற்கு அதிகம் செல்ல நினைப்பீர்கள். நாங்கள் சென்று இருந்தபோது காம்போ வகைகள் ஆர்டர் செய்தோம். இரண்டு புல்கா, கொஞ்சம் அரிசி, டால், பனீர் பட்டர் மசாலா, தயிர் பச்சடி, கொஞ்சம் சாலட் என்று தட்டு நிறைய இருந்தாலும், சாப்பிட்ட பின்னரும் மிகவும் லைட்டாக பீல் செய்ய வைக்கும் உணவு. 





இந்த புல்காவில் எண்ணையே இல்லாமல் சரியான பதத்தில், சூடாக கொண்டு வரும்போது உங்களுக்கு கண்டிப்பாக நாக்கில் எச்சில் ஊரும். டால் கொஞ்சமாக இருந்தாலும் நல்ல சுவை, தயிர் பச்சடியில் மிகவும் புளிக்காத தயிருடன் வெங்காயத்தையும், வெள்ளரியையும் வெட்டி போட்டும், பனீர் பட்டர் மசாலாவில் மிதமான ஸ்வீட் உடன் அந்த மதிய பசியான நேரத்தில் வைத்தவுடன் மேஜிக் போல நொடியில் காலியானது ! சைவ பிரியர்களுக்கு இந்த இடத்தில் கண்டிப்பாக நல்ல சாப்பாடு கிடைக்கும் என்பதற்கு நான் காரண்டி தருகிறேன்.





பஞ்ச் லைன் :

சுவை -   அருமையான சைவ சாப்பாடு, பொதுவாக நார்த் இந்தியன் வகைகள் 

அமைப்பு - சிறிய இடம், மெயின் ரோட்டில் இருப்பதால் பார்கிங் வசதி கம்மி, உள்அமைப்பு நன்கு உள்ளது.

பணம் - கம்மிதான் !

சர்வீஸ் - நல்ல சர்விஸ், கூட்டம் அதிகமாக இருந்தால் இதையே எதிர் பார்க்க முடியாது.

அட்ரஸ் :

முழுமையான அட்ரஸ் எல்லா ஊரிலும் பார்க்க இங்கே சொடுக்கவும்........மஸ்த் கலந்தர் அட்ரஸ்





மெனு கார்டு :

மெனு கார்டு படிக்க இங்கே சொடுக்கவும்......மெனு கார்டு




Labels : Kadalpayanangal, Suresh, Arusuvai, Bangalore, Bengaluru, Vegetarian food, Mast Kalandhar

4 comments:

  1. சைவத்திலும் புகுந்து விளையாடுவீங்க போல...

    ஹோட்டல் அறிமுகம் அருமை..

    அதென்ன பாஸ் எல்லாத்தையும் சாப்பிட வாங்கி வைத்து விட்டு.. எங்கள சாப்பிட கூப்பிடுவது போலவே இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. நான் கோவை வந்தபோது சென்ற அந்த உணவகம் மிகவும் அருமை..... அதை பற்றி பதிவு எப்போ எழுத போறீங்க சதீஷ் !

      அது எனது எழுத்தின் பலமா, அல்லது உங்களது மூளையின் திருவிளையாடலா என்று தெரியவில்லை ?!

      Delete
  2. Replies
    1. நன்றி தனபாலன் சார் ! இந்த முறை லேட் ஆக வந்தாலும், நீங்கதான் லேட்டஸ்ட் !

      Delete