Tuesday, July 16, 2013

ஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

தஞ்சாவூர் என்றால் பெரிய கோவிலுக்கு அடுத்து நினைவுக்கு வருவது தலையாட்டி பொம்மை இல்லையா ! சிறு வயதில் என் அப்பா அதை வாங்கி வரும்போது சாப்பாடு தூக்கம் எல்லாம் இல்லாமல் அது எப்படி நேரே தானே நிமிர்ந்து கொள்கிறது என்று யோசித்து யோசித்து மண்டை குழம்ப இருந்திருக்கிறேன், அதை வாங்கி விளையாடிய நாட்கள் இன்றும் பசுமையானவை. இந்த முறை தஞ்சாவூர் சென்றபோது இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக தேடி அலைந்து அதை செய்யும் விதம் கண்டது மிகவும் புதுமையான அனுபவம் !



இந்த பொம்மைகள் இன்று அரிதாகி வருகிறது எனலாம். இன்று அங்கு வரும் மக்கள் எல்லாம் இதன் பெயருக்காக வாங்கி செல்கின்றனர். இதை போலவே பிளாஸ்டிக் பொம்மைகள் எல்லாம் வந்து இதை விரைவில் அழித்து விடுமோ என்று அச்சபடுகிறேன். இதை செய்யும் இடம் காண வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு எங்கு தொடங்கலாம் என்று நினைத்தபோது நமது "வீடு திரும்பல்" மோகன் அவர்கள் எழுதிய ஒரு பதிவு நினைவுக்கு வந்தது (நன்றி மோகன் -ஜி !!). அதில் சொல்லி இருந்த கடைக்கு சென்று அவருடன் பேசி அந்த பொம்மை செய்யும் இடம் தெரிய வந்தது. இன்று இப்படி அந்த பொம்மை செய்யும் இடங்கள் மிகவும் குறைவுதான் என்று சொன்னார் அவர்.




மாரியம்மன் கோவில் - தஞ்சாவூரில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டரில் இருக்கும் இந்த மாரியம்மன் கோவில் மிகவும் பிரபலம். இந்த கோவிலுக்கு பின்புறம் உள்ள வீடுகளில் சில இடங்களில் இதை செய்கின்றனர். இருட்டு அறையில் குண்டூசியை தேடுவது போல அந்த ஊருக்கு சென்று சுமார் பத்து பேரிடம் வழி கேட்டு, சில பேரிடம் எதற்கு என்றெல்லாம் விளக்கம் சொல்லி கடைசியில் அந்த வீட்டை கண்டுபிடித்தோம் ! "யுரேகா..... யுரேகா" என்று ஆர்கிமிடிஸ் ஓடியது போல அந்த இடத்தை அடைந்து என்னை நான் அறிமுகபடுத்த, அவர் ஆர்வமாக எனக்கு விளக்க ஆரம்பித்தார். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என்பது இரண்டு வகைதான், ஒன்று.....எந்த பக்கம் சாய்த்தாலும் நிமிரும் பொம்மைகள், இன்னொன்று செட்டியார் பொம்மைகள் எனப்படும், இதில் தலை மட்டுமே ஆடும் ! பரதம் ஆடுவது போல தலை, இடுப்பு, மார்பு பகுதிகள் ஆடும் பொம்மைகள் எல்லாம் இந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வகைகளில் சேராது, அது எல்லாம் கடலூர், பாண்டிச்சேரியில் உருவாகிறது. அதன் தலையும் ஆடுவதால் இந்த லிஸ்டில் சேர்ந்து விட்டதாம் !



இந்த பொம்மைகளுக்கு களிமண்ணினால் கீழ் பாகமும், மேல் பாகத்தை பிளாஸ்டர் கொண்டும் அமைக்கிறார்கள். முதலில் மேல் பாகத்தின் அச்சுகளில் பேப்பர் போட்டு ஒரு லேயர் அமைக்கிறார். பின்னர் அதை போலவே அடுத்த அச்சுக்கும் செய்கிறார். பின்னர் அதை நன்கு ஒட்டியபின் உள்ளே இந்த பிளாஸ்டரை கொண்டு நிரப்புகிறார். சிறிது நேரத்திலேயே அதை கவிழ்த்து விடுகிறார். இதனால் பிளாஸ்டர் லேயர் மட்டுமே உருவாகும், மீதம் இருப்பது வெளியே எடுத்துவிடுகிறார். இப்போது மேல் பாகம் ரெடி !




இப்போது கீழ் பாகம் செய்வது மிகவும் சுலபம், இது களிமண்ணினால் ஆனது. இதை கொட்டங்குச்சி போன்ற ஒரு அச்சினால் களிமண்ணினை கொண்டு மூடி, அதை வெளியே எடுத்தால் கீழ் பாகம் ரெடி. அதன் பின்னர் மேல் பாகத்தையும், கீழ் பாகத்தையும் இணைக்கிறார்.



இப்போது அதை சிறிது நேரம் காய வைத்த பின், அது பெயிண்டிங் செய்ய ரெடி ! இதில் இரண்டு வகை பொம்மைதான்....... ராஜா, ராணி ! ராஜாவாக இருந்தால் சிகப்பு நிற உடை, ராணியாக இருந்தால் பச்சை நிற உடை, மற்ற பகுதிகளில் எல்லாம் பொதுவாக ஒரே நிறம்தான். சில நேரங்களில் வண்ணங்களை மாற்றி அடிக்கின்றனர் !








 இதுவே செட்டியார் பொம்மையாக இருந்தால், அதுவும் இந்த அச்சு முறைப்படிதான் செய்யபடுகிறது. அச்சு முடிந்தவுடன், அதன் தலை பாகம் நிற்க ஒரு கம்பி சொருகுகின்றனர். ஆனால், இந்த வகை பொம்மைகளுக்கு பெயிண்டிங் வேலை ஜாஸ்தி என்கிறார்.





முடிவில் அப்போதே எனது முன், எனக்காக செய்த ஒரு ராஜா, ராணி பொம்மையை அப்படியே வாங்கியபோது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது ! பக்கத்தில் பார்த்தால் மூட்டை மூடையாக ராஜாவும், ராணியும் விற்ப்பனைக்கு தயாராக இருந்தனர்....... ஆனால் இவரை ராஜா ஆக்கியவர் மட்டும் இன்னும் இந்த குடிசையில் !!


Labels : Oor special, Suresh, kadalpayanangal, Tanjore, Thanjavur, Thalaiatti bommai, dancing doll

19 comments:

  1. இவரை ராஜா ஆக்கியவர் மட்டும் இன்னும் இந்த குடிசையில் !!
    >>
    யோசிக்க வேண்டிய விசயம். எங்க வீட்டுலயும் ஒரு பொம்மை இருக்கு. நான் என் வீட்டுக்காரரை சொல்லலீங்க சகோ!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா..... இப்போ நான் எதை சரி, எதை தவறு என்று நினைப்பது ! எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையோ !! நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  2. பெயிண்டிங் வேலை - நுணுக்கமான வேலை...

    ராஜா - மனதில் என்றும் சந்தோசமாக வாழ்பவர்... வாழ வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார் ! இந்த பதிவு தங்களது மனதை வண்ணமயம் ஆக்கியது கண்டு மகிழ்ச்சி !

      Delete
  3. அன்புடன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Story-Student.html

    ReplyDelete
  4. வாவ்... சுரேஷ் அற்புதமான படங்களுடன்... அழகான விமர்ச்சனம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சதீஷ் ! நீங்கள் இதை ரசித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி !

      Delete
  5. Replies
    1. கண்டிப்பாக இல்லை கிருஷ்ணா ! லைப் இஸ் கலர்புல் என்பதே மிக சரி ! இவர் அந்த பொம்மைக்கு கலர் செய்யும்போது அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி !

      Delete
  6. படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
    நேரடியாகப் பார்ப்பதைப் போல் இருந்தது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார் ! உங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete
  7. "பரதம் ஆடுவது போல தலை, இடுப்பு, மார்பு பகுதிகள் ஆடும் பொம்மைகள் எல்லாம் இந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வகைகளில் சேராது, அது எல்லாம் கடலூர், பாண்டிச்சேரியில் உருவாகிறது."
    அறிந்துகொண்டேன். நடனமாடும் பொம்மையை தஞ்சாவூர் பொம்மைஎன்றே நினைத்திருந்தேன்.

    நல்லபகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி ! நானும் அதைதான் நினைத்திருந்தேன்.......

      Delete
  8. புதிய தகவல்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமா ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  9. தஞ்சைக்கான ஒரு அடையாளம் அல்லவா!
    நன்று

    ReplyDelete
    Replies
    1. சார்..... உங்களை பற்றி நிறைய கேள்விபட்டிருக்கிறேன், உங்களது பதிவுகளை நிறைய படித்திருக்கிறேன். நீங்கள் எனது பதிவை படித்து கண்டு மகிழ்ச்சி அடைகிறேன், நன்றி !

      Delete
  10. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு எனது வாழ்த்துக்கள் சென்று பார்க்கவும்
    http://blogintamil.blogspot.com/2013/09/5.html?showComment=1379718612357#c7139904404420736012
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. நன்றி நண்பரே
    ராசரத்ததினம்

    ReplyDelete