Wednesday, July 17, 2013

அறுசுவை - பெங்களுரு சூப்பர் சாண்ட்விச்

பெரும்பாலும் நாம் உணவகம்  தேடி மட்டுமே செல்கிறோம், சில நேரங்களில் கொறிக்க ஏதாவது வேண்டும் எனும்போது அதே உணவகத்தை தேடி செல்வது என்பது மீண்டும் சலிப்பை தருகிறது, ஆனால் இந்த உணவகம் வெறும் சாண்ட்விச் மற்றும் சாட் வகைகளை மட்டுமே தருகிறது. மீண்டும் மீண்டும் செல்ல தூண்டும் சுவை ! கடந்த ஒரு வருடமாக இந்த கடை பற்றி தெரிந்திருந்தும், தூரம் காரணமாக செல்லாமல் இருந்தேன். ஆனால் இந்த முறை அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க போய், இதை இவ்வளவு நாள் மிஸ் செய்துவிட்டோமே என்று ஏங்க வைத்து விட்டது எனலாம் !
 
 
 
 
 
சில உணவகங்களில் என்னதான் அலங்காரம் செய்திருந்தாலும், நிறைய மசாலா போட்டு செய்தாலும் வாயில் வைக்கும்போது என்ன உணவு இது என்று வெறுக்க ஆரம்பித்து விடுவோம். ஆனால் இங்கு சென்றபோது 
உணவு மெனு என்பது இரண்டே பக்கம்தான், அதில் ஒன்றான குல்கந்து டோஸ்ட் என்று ஆர்டர் செய்துவிட்டு அவர்கள் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லா பிரட் வகைகளையும் பரப்பி வைத்து பர பரவென்று அதற்க்கு மேல் வெள்ளரி, மசாலா என்று வகையாக செய்வதை பார்க்கும்போதே உங்களது வாயில் எச்சில் ஊரும் !
 
 
 
ஒரு தோசை கல், சில பிரட், அதற்க்கு வகை வகையான மிக்ஸ் என்று இந்த சிறிய கடையில் இருந்து அவ்வளவு அருமையான, சுவையான சாண்ட்விச் கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் ! எனக்கு வந்த குல்கந்து சாண்ட்விச் சாப்பிட்டு விட்டு வீட்டிற்க்கும் வாங்கி கொண்டேன். அதை போல அடுத்து ஆர்டர் செய்த மசாலா சாட் வகைகளும் அருமையோ அருமை. இதுவரை சென்ற உணவகங்களில் இது நம்பர் 1 எனலாம்..... நீங்கள் கண்டிப்பாக மிஸ் செய்ய கூடாத இடம் !
 
 
 
பஞ்ச் லைன் :

சுவை - அருமையான சாண்ட்விச் மற்றும் சாட் வகைகள், மிஸ் செய்ய கூடாத சுவை !

அமைப்பு - சிறிய இடம், மெயின் ரோட்டில் இருப்பதால் பார்கிங் வசதி கம்மி, கூட்டம் அதிகம் !

பணம் - ரொம்பவே கம்மிதான் !

சர்வீஸ் - நல்ல சர்விஸ், கூட்டம் அதிகமாக இருந்தால் இதையே எதிர் பார்க்க முடியாது.

அட்ரஸ் :

முழுமையான அட்ரஸ் கூகிள் மேப்பில் பார்க்க இங்கே சொடுக்கவும்..... ஹரி சூப்பர் சாண்ட்விச் 

No 121/A, 8th Main Road, Opposite-RBS ATM, Jayanagar 3rd Block Bangalore, KA 560011


மெனு கார்டு :
 
 



Labels : Arusuvai, Super sandwich, best sandwich, bengaluru, bangalore, Suresh, Kadalpayanangal

12 comments:

  1. ஸ்ஸ்ஸ்... திண்டுக்கல்லுக்கு ஒரு பார்சல்...! ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல்லுக்கு பார்சல் அனுப்புவதை விட, நீங்கள் ஒருமுறை இங்கே வாங்களேன் ! நன்றி தனபாலன் சார் !

      Delete
  2. அடுத்த பெங்களூர் விசிட்டின் போது
    அவசியம் ருசிபார்த்துவிடுவேன்
    பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தனியாக ருசி பார்த்தால், வயிறு வலிக்கும் சார் ! நீங்கள் என்னை அழைத்தால் ஓடோடி வருவேனே ! காத்திருக்கிறேன் !!

      Delete
  3. Replies
    1. தமிழ் மணத்தில் ஒட்டு அளித்ததற்கு மகிழ்ச்சி சார் !

      Delete
  4. என் மகள் தங்கி படிக்கும் இடத்தின் அருகிலதான் இருக்கு இந்த ஹோட்டல் அவசியம் ஒரு முறை சென்று பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஒரு முறை சென்றால், திரும்பவும் செல்ல தூண்டும் இடம் ! இதை பதிவு இடுகிறேன் என்று சொல்லவில்லை, நிஜமாகவேதான் மேடம் !

      Delete
  5. வாவ்.. அறுமையான அறிமுகம்... எனக்கு ஒரு குல்கந்து பார்சல்...

    ReplyDelete
    Replies
    1. பார்சல் எல்லாம் இங்கு இல்லை சதீஷ், நேரில் வாருங்கள் ஒருமுறை நாம் இருவரும் செல்வோம் !

      Delete
  6. wow this place near my sister area :))) can go...

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிருஷ்ணா ! நீங்கள் எனது தளத்திற்கு தொடர்ந்து வந்து உங்கள் கருத்துக்களை இடுவதில் மகிழ்ச்சி !

      Delete