Thursday, July 18, 2013

சாகச பயணம் - தி கிரேட் ஓசன் ரோடு, ஆஸ்திரேலியா

சென்னை ECR  சாலையில் பயணம் செய்யும்போதெல்லாம் சிலு சிலுவென்ற காற்று உங்களை தழுவ காரில் செல்வது என்பது எவ்வளவு சுகமான அனுபவம். ஆனால் அதில் ஒரு சிறு குறை, இந்த சாலை கடலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் வரை இருக்கும்,அதனால் கடலை தொலைவில் இருந்து பார்ப்பது மட்டுமே சாத்தியம். அந்த ECR ரோடு சுமார் 120 கிலோமீட்டர் வரை செல்லும் பாதை, அதுவே ஒரு மழை நாளில் 243 கிலோமீட்டர் கொண்ட கடற்கரையை ஒட்டிய சாலையில் என்றால், கடலுக்கு அடுத்தே என்றால் எப்படி இருக்கும் !!

தி கிரேட் ஓசன் ரோட்டின் ஆரம்பத்தில்.....

இது "தி கிரேட் ஓசன் ரோடு" எனப்படும் ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரின் அருகில் இருக்கும் ஒரு இடம். மலையும், கடலும் சேரும் இடத்தில் ரோடு போட்டு அங்கு சில்லென்று காற்று வாங்கி கொண்டு அவ்வப்போது கடல் அலையின் நீர் உங்களின் மீது தெறிக்கும் படியாக செய்யும் பயணம் என்பது சொர்க்கம் என்று இல்லாமல் வேறென்ன ?! இதில் பயணம் செய்வது என்பது ஒரு பேரானந்தமான அனுபவம் எனலாம்.






நான் சென்று இருந்த சமயம் குளிர் காலம் தொடங்கிய நேரம், மழை சிறு தூறல்களாக வேறு தூறிக்கொண்டிருந்தது. இந்த பயணம் மறக்க முடியாததாக இருக்க போகிறது என்பது அப்போது தெரியவில்லை. மெல்போர்ன் நகரில் இருந்து கிளம்பி அந்த ஆர்ச் வரை செல்லவே எனக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியது, பின்னர் கடல் எனது இடது புறம் இருக்க பயணம் தொடங்கியது. ஒவ்வொரு முறையும் மேகம் சூரியனை மறைத்து விளையாடிக்கொண்டிருக்க, சில்லென்று சிறு தூறலும் சேர அந்த பயணத்தில் ஒவ்வொரு முறை நிறுத்தும்போதும் அந்த கடல் பயணம் அருமையாக இருந்தது. இதை போல ஏன் ஒரு கடற்கரை சாலையை இந்தியாவில் அமைக்க கூடாது என்று ஏக்கமாக இருந்தது.





இதில் பயணிக்கும்போது வழியில் தெரியும் மலைகள், கிராமங்கள் எல்லாம் மிகவும் அழகு எனலாம். அதுவும் மழை விழும் நேரத்தில் மேகம் சூரியனை மறைத்து விளையாடும்போது வழியில் அந்த பசுமையான மலை மீது வெயில் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் காட்சி அருமையாக இருக்கும். அந்த புல்வெளிகளில் மாடுகள், குதிரைகளை மேய விட்டு இருப்பார்கள், அதுவும் கண் கொள்ளா காட்சி ! இங்கு வழியில் இருக்கும் பீச்களில் சர்பிங் விளையாட்டு அங்கங்கு விளையாடி கொண்டிருப்பார்கள், சில இடங்களில் மீன் பிடித்து கொண்டு, சில இடங்களில் டென்ட் அடித்து, சில இடங்களில் காரை நிறுத்தி என்று பல பல விதங்களில் இந்த கடலின் அழகை ரசித்து கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். இங்கு சில கிராமங்களில் வீடு வாடகைக்கு எடுத்து நீங்கள் தங்கியும் இந்த அழகை ரசிக்கலாம்.




இந்த ரோட்டில் பயணம் செய்தால்தான் 12 அபோஸ்டில் எனப்படும் ஒரு அருமையான டூரிஸ்ட் இடத்திற்கு செல்ல முடியும். புரிவது போல சொல்வதென்றால் காதலர் தினம் படத்தில் வரும் என்ன விலை அழகே பாடல் இங்கு எடுக்கப்பட்டதுதான். அதை பற்றிய பதிவை விரைவில் தருகிறேன். ஒரு இடத்தில் ஒரு அழகிய நகரம் ஒன்று வழியில் வந்தது, கடலை பார்த்த அந்த நகரத்தில் ஒரு இரவு தங்கி இருந்து சென்றேன். கடல் பார்த்த இந்த பயணம் ECR  ரோட்டில் செல்லும் பயணத்தை விட நூறு மடங்கு சுகம் தரும் என்பது நிச்சயம்.




Labels : Kadalpayanangal, Suresh, The great ocean road, Victoria, Saagasa payanam, journey

18 comments:

  1. அழகான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம் ! இந்த சாலை உங்கள் எல்லோரையும் என்னுடன் இணைத்தது கண்டு மகிழ்ச்சி !

      Delete
  2. ஆஸ்திரேலியா பார்க்க வேண்டும் என்ற என் ஆவலை அதிகப்படுத்தி விட்டீர்கள்.
    இடம் அழகு...அதை விவரிக்கும் நடை... அதை விட அழகு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் ! உங்களது படத்தில் ஒரு பாடலை கண்டிப்பாக இங்கே எடுக்க வேண்டும்...... காண ஆவலாய் இருக்கிறேன் !

      Delete
  3. என்ன விலை அழகே...!
    சொன்ன விலைக்கு வாங்க வருவேன்...
    விலை உயிர் என்றாலும் தருவேன்...
    இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்... ஓ...
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்...!

    அடுத்த முறை என்னையும் கூட்டிட்டு போறீங்க...! ஹிஹி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சார் ! அது சரி, எப்போ பெங்களுரு வருகிறீர்கள் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  4. Replies
    1. நன்றி கிருஷ்ணா !

      Delete
  5. எனக்கும் ஈசிஆர் ரோடில் போகும்போது இந்த நினைப்புதான். அதெப்படி கடலே தெரியாதபடி ரெண்டு பக்கமும் நசநசன்னு கடைகள் கட்டிடங்கள்ன்னு வச்சுக் கெடுத்து வச்சுருக்காங்கன்னு..........:(

    க்ரேட் ஓஷன் ரோடு அருமை! கோல்ட் கோஸ்ட்டில் கூட கடல் பார்த்துக்கிட்டே காரில் பயணிக்கலாம்.

    அஸ்ட்ராலியா வரை வந்த நீங்கள் நியூஸிக்கு வரலையா? இங்கேயும் கடலை ஒட்டியே போகும் சாலைகள் அருமையா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை நியூஜீ வர நினைத்துள்ளேன், எனது பயணம் முடிவானவுடன் சொல்கிறேன் ! உங்களது தளங்களில் நீங்கள் போட்டோ போட்டு உங்கள் பயணத்தை விவரிக்கும்போது எல்லாம் எனக்கு அந்த ஆவல் வரும் !

      Delete
  6. இந்தக் கடற்கரை சாலையை காணவாவது காதலி சகிதம் ஆஸ்திரேலியா போக வேண்டும் போல, பகிர்வுகளுக்கு நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. இப்போ சொன்னீங்களே அதுதான் சரி...... கண்டிப்பாக காதலியுடன் போக வேண்டிய இடம்தான் ! நன்றி நிரஞ்சன், தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  7. இடம் நல்லா இருக்கு. உங்க விளக்கமும் அருமை. பார்க்க ஆவலை தூண்டுது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம் ! உங்களை இந்த பதிவு கவர்ந்தது கண்டு மகிழ்ச்சி !

      Delete
  8. அழகான படங்களுடன், அழகான வர்ணணைங்க...

    ReplyDelete
  9. உங்க எழுத்து எங்களையும் உங்களோட பயணிக்க வச்சிருச்சிங்க. அவ்வளவு அழகா இருக்கு உங்க நடை. தொடர்ந்து எழுதுங்கள். படங்களும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜோசப் ! தங்கள் வருகையும், கருத்தும் மகிழ்ச்சி அளித்தது !

      Delete