Friday, July 19, 2013

உயரம் தொடுவோம் - தாய்லாந்து பட்டாயா

தாய்லாந்து - என்னுடைய முதல் வெளிநாட்டு பயணத்தில் சென்ற நாடு ! எல்லோருக்கும் இருப்பது போல இந்த பயணத்தில் எனது மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு. 2003ம் ஆண்டு எனது கம்பெனியில் சீனாவும், தாய்லாந்தும் சென்று வர சொன்னபோது, இப்போது இருப்பது போல இன்டர்நெட் வசதிகளோ அல்லது அதை பற்றி சொல்வதற்கோ ஆள் எல்லாம் இல்லை. அதன் பின்னர் பல தடவை அந்த நாட்டிற்கு சென்று இருந்தாலும், இன்றளவிலும் எனது மனதில் இருக்கும் நாடு. பட்டாயா என்பது தாய்லாந்தில் இருந்து சுமார் 90 நிமிட பயண தூரத்தில் இருக்கிறது. கடலுக்கு பக்கத்தில் இருக்கும் இந்த ஊரில் நாங்கள் தங்கியது "வாக்கிங் ஸ்ட்ரீட்" என்னும் புகழ் பெற்ற இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் ஹோட்டல் !


முதலில் அங்கு சென்று சேர்ந்த பின்பு, நான் முதலில் குளித்து விட்டு வந்தேன். எனது நண்பர் அடுத்து குளிக்க சென்ற பின் நான் ரூமிற்கு வெளியே வந்து பார்த்து கொண்டிருந்தபோது அது ஆட்டோமாடிக் கதவு என்பதால் தானாக பூட்டிக்கொண்டது. எவ்வளவு நேரம்தான் வெளியே இருப்பது, சற்று வெளியே சென்று வரலாம் என்று எண்ணி அந்த ஹோட்டல் வெளியே வந்து நடக்க ஆரம்பித்தேன்...... அதுதான் வாக்கிங் ஸ்ட்ரீட் !!! இதை பற்றி சொல்ல வேண்டும் என்றால், நம்ம தி.நகர் ரெங்கநாதன் தெருவில் பிளாட்பாரம் கடையில் பொருள் வாங்குவது போல இங்கு நீங்கள் பெண்களை வாடகைக்கு எடுக்கலாம். கால், அரை, முக்கால் நிர்வானங்களில் பெண்கள் உங்களை அழைப்பார்கள் ! வெளி உலகம் என்று அறிந்திராத எனக்கு அந்த தெருவுக்குள் நுழைந்தவுடன் ஒரு அதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி அப்பட்டமாக இருக்கும் என்று நீங்கள் அறியும்போது அதிர்ச்சியாகத்தானே இருக்கும் !பதறி அடித்துக்கொண்டு ரூமிற்கு வந்தபோது எனது நண்பர் குளித்து முடித்து வந்திருந்தார். அவரிடம் சென்று சொன்னவுடன், அவசர அவசரமாக என்னுடன் வந்தார், கண்டார், ரசித்தார், பெருமூச்சு விட்டார்  (நானும்தான் !!) ! முக்கியமாக இன்னொன்று சொல்ல வேண்டும்....... நாங்கள் சென்று கொண்டிருந்தபோது ஒரு பேரிளம் பெண் ஒருவர் விசிலடித்து கூப்பிட்டார். நாங்களும் ஹாய் என்று பக்கத்தில் சென்றவுடன், பீர் என்று ஒரு பீர் பாட்டில் கொண்டு கேட்டார், நாங்கள் குடிக்க மாட்டோம் என்றவுடன், அவரோ கட்டையான குரலில் "அப்புறம் வேற என்ன செய்வீங்க ...?!" என கேட்க அப்போதுதான் தெரிந்தது அங்கு இருந்த பலர் ஆண்களாக இருந்து பெண்ணாக மாறியவர்கள் என்று..... ஆக முதலில் பேசி பாருங்க பாஸ் ! அட..... பாதை மாறி போகிறேனோ ?!
இந்த பட்டாயா நகரத்தில் ஒரு நல்ல பழக்கம் என்பது (தாய்லாந்தில் எல்லா இடத்திலும்தான் !) நீங்கள் ஹோடேலில் தங்கி இருக்கும்போது அந்த அரசாங்கமே சுற்றுலா பயணிகளுக்கு சிறிய டூர் ஏற்பாடு செய்யும். முதலில் உங்களை அங்கு இருக்கும் அரசாங்க முத்து, தங்கம், மரகத கற்கள் செய்யும் இடத்திற்கு அழைத்து சென்று உங்களை வாங்க சொல்லி காட்டுவார்கள், ஆனால் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. பின்னர் உங்களை இந்த வியூ பாயிண்ட்டிற்கு கூட்டி செல்வார்கள். கீழே இருக்கும் போட்டோ பிலிம் போட்டு எடுக்கும் காமெராவில் எடுத்தது. அப்போது எல்லாம் ஏது டிஜிட்டல் காமெரா ! அங்கு இருந்து பார்க்கும்போது பட்டாயா நகரின் மொத்த அழகும் தெரியும். காலை, மதியம், இரவு என்று பல நேரங்களில், பல வண்ணங்களில் அந்த இடம் தெரியும்போது நீங்கள் கண்டிப்பாக மயங்கித்தான் போவீர்கள் !தாய்லாந்து என்று சொல்லும்போது இன்று பலர் என்ன நினைப்பார்கள் என்று தெரியும் அல்லவா, ஆனால் அதையும் தாண்டி இயற்கையான பீச், நல்ல இடங்கள் என்று பல உண்டு. அவர்களின் உணவுகள் இன்றும் பல நாடுகளில் பிரபலம். ஊரின் ஒரு ஓரத்தில் இருக்கும் இந்த பார், உல்லாச விடுதியை தவிர்த்து தாய்லாந்தில் பார்க்க ஆயிரம் ஆயிரம் இடங்கள் உண்டு, விரைவில் அதை பற்றி விரிவாக எழுதுகிறேன்.


Labels : Suresh, Kadalpayanangal, Top of the building, Pattaya, Thailand, View point

8 comments:

 1. பாதை மாறி போக மாட்டீர்கள் என்பது தெரியும்...! வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. சரியான பாதையில்தான் சென்றேன் தனபாலன் சார்..... ஒவ்வொரு நாளும் அந்த பாதையை தவற விட்டதில்லை :-)

   Delete
 2. கடல் பயணங்கள் என்ற பெயரை மாத்தீட்டு உலகம் சுற்றும் வாலிபன் என்று வையுங்க சுரேஷ்... நீர் போகாத நாடு உண்டுங்களா...

  தாய்லாந்து தகவலும், இடமும் அருமைங்க...

  ReplyDelete
  Replies
  1. இன்னும் நாடுகள் நிறைய இருக்கின்றன சதீஷ்..... எழுதுவதற்கே இன்னும் நிறைய உண்டு ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

   Delete
 3. அண்ணா.. பத்து வருசத்துக்கு முன்னாடி எடுத்த உங்க போட்டோ சூப்பர் .. ஹீரோ மாதிரி இருக்கீங்க

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆனந்த், அப்போ இப்போ வேற மாதிரி இருக்கேன் அப்படின்னு சொல்றீங்க, ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதே......... நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

   Delete
 4. Replies
  1. ஆஹா, எதுக்கு வெயிட்டிங் ?! ஆரம்பிக்க வேண்டியதுதானே....... நான் படிக்கிறதை சொன்னேன் !

   Delete