Saturday, July 20, 2013

எப்படி உருவாகிறது ? - பபிள் கம்

சிறு வயதில் பபிள் கம் என்றாலே ஆனந்தம்தான், அதுவும் சில நண்பர்கள் அதில் முட்டை விட்டு காண்பிக்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். அதை மிகவுமே முயற்சி செய்து முதல் முறையாக முட்டை விட்டு காண்பித்தபோது ஏனோ ஆஸ்கார் அவார்ட் வாங்கியது போன்ற ஒரு சந்தோசம். அந்த சந்தோசம் தரும் பபிள் கம் எப்படி உருவாகிறது தெரியுமா ?


இந்த பபிள் கம் எப்படி ஆரம்பித்தது என்று தெரியுமா ? அமெரிக்காவில் ரோட்டில் லாரி ஓட்டும்போது டிரைவர்கள் தூங்காமல் இருக்க கண்டுபிடித்ததுதான் இது. அவர்கள் கரையவும் கூடாது, ஆனால் ருசியாகவும் இருக்க வேண்டும் என்று கண்டுபிடித்த இது இன்று ஸ்டைல் போல ஆகிவிட்டது. இந்த வீடியோ பார்த்தால் அது எப்படி உருவாகிறது என்று ஆச்சர்யமாக பார்க்கலாம் !


Labels : Suresh, Kadalpayanangal, How it is made ?, Bubble gum

8 comments:

  1. ஆச்சர்யமாக தான் இருக்கிறது ஆனால் அற்புதமாகவும் இருக்கிறது மனிதனின் மூளை இயந்திரத்தோடு இணைந்து உருவாக்கும் முயற்சிகள அனைத்தும் அற்புதம்தான்

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பியே....... ஒரு சிறிய பொருள்தான், ஆனால் அது ஒரு விஞ்ஞான அற்புதம் எனும்போது ஆச்சர்யமாக இருக்கிறது, நமது பார்வையும் மாறுகிறது ! நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  2. சூப்பர்...! நன்றி...

    குழந்தைகள் உட்பட அனைவருக்கும் கெடுதி என்று சொல்லப்படுகிறதே...!

    ReplyDelete
    Replies
    1. செயற்கை சாயம், பொருள் கொண்டு செய்யப்படும் எல்லாமே உடம்புக்கு கெடுதல்தான் சார் ! ஆனாலும் இதை குழந்தைகள் விரும்புகிறார்களே ! நன்றி சார், தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  3. ஸ்கூல் ல பபிள்கம்மை ப்ரெண்ட்ஸ் உட்காரும் இடத்திலெல்லாம் ஒட்டி வைத்து ரகளை செஞ்சிருக்கோம் அண்ணா... yaru பெரிய பபிள் விடுராங்கன்னு போட்டிலாம் கூட உண்டு ... ம்ம்ம் .. இப்போ பபிள்கம் சாப்டுரதையே மறந்தாட்சி

    ReplyDelete
    Replies
    1. சிறு வயதில் நாம் சந்தோசமாக செய்ததை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும், அந்த சந்தோசத்திற்கு அளவில்லை...... வாழ்வில் சந்தோஷத்தில் பெரியது, சிறியது என்று இல்லை என்பதை புரிந்துகொண்டால் தெரியும் ! நன்றி ஆனந்த் !

      Delete
  4. Replies
    1. என்ன கிருஷ்ணா..... இப்போவே பபிள் கம் வாயில் போட்டாச்சா.... பேச்சே வரலை !

      Delete