Monday, July 22, 2013

ஊர் ஸ்பெஷல் - கரூர் கொசுவலை

மற்ற எல்லா ஊர்களும் பெயர் சொன்னவுடன் சட்டென்று அதன் பெருமை நினைவுக்கு வரும், ஆனால் இந்த கரூர் பெயரை சொன்னவுடன் உங்களில் சிலர் தலையை சொறியலாம்..... ஆனால் இந்த ஊரை பற்றி தெரிந்தவர்கள் உடனடியாக சொல்வார்கள்..... கொசுவலை என்று ! (கரூர் திரை சீலைகளுக்கும் புகழ் பெற்றது, அதை அடுத்த பதிவுகளில் பார்ப்போம் !)கொசுவலையில் இதுவரை வெள்ளை நிறம் மட்டுமே இருக்கிறது என்று உங்களில் சிலர் என்னை போலவே நினைத்திருந்தால், உங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். நான் சென்றிருந்தபோது அத்தனை அத்தனை டிசைன்களில் கொசுவலைகளை பார்த்தேன்.



இந்த பகுதியில் நான் அறிந்தவற்றில் சிலவற்றை மட்டுமே சொல்கிறேன், இல்லையென்றால் இது பெரிய சயின்ஸ் பாடம் போல அமைந்துவிடும் ! யார்ன் (Yarn) என்பது இங்கே முக்கியமான பெயர். யார்ன் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இடைவிடாத ஒரு செயின் அமைப்பு என்று சுருக்கமாக சொல்லலாம், மேலும் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் இங்கே சொடுக்கவும்..... யார்ன் ! இது நூல் போன்ற ஒன்று, அதை காட்டனிலும் செய்யலாம் அதை நாச்சுரல் யார்ன் என்பார்கள், அதையே பிளாஸ்டிக் வைத்து செய்தால் சிந்தெடிக் யார்ன் என்பார்கள். கொசுவலைகளை இதில் எதில் வேண்டுமானாலும் செய்யலாம். செயல் முறை என்பது ஒன்றுதான், நூல்தான் வேறு ! சிந்தெடிக் யார்ன் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும் !



சிந்தெடிக் யார்ன் செய்யும் முறையும் மெசின்களும் 



காட்டன் யார்ன் 


இந்த சிந்தெடிக் யார்ன் என்பது பிளாஸ்டிக் போன்ற ஒரு பொருளால் ஆனது. அந்த நூலின் அடர்த்தி / திக் என்பது  காஜ் எனப்படும் ஒரு அளவுகோலினால் அளக்கபடுகிறது. அந்த நூல் கீழே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது போல சுற்றி வரும். அதை சிக்கல் இல்லாமல் மெசினில் கொடுத்தால் உங்களுக்கு கொசு வலை கிடைக்கும். திக் குறைந்த நூல் என்பது நீளம் ஜாஸ்தியாக இருக்கும், திக் அதிகம் உள்ள நூலில் நீளம் குறைவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்களேன் !

நூல் அல்லது பிளாஸ்டிக் இழைகள் இப்படிதான் உங்களுக்கு வரும் ! 



சிறுவயதில் நீங்கள் கிராமத்தில் பாட்டிகள் சிலர் காந்தி தாத்தா போல ராட்டினத்தில் இருந்து ஒரு கோன் போன்ற அமைப்பில் நூலை சுற்றுவார்கள் இல்லையா, அதை இன்று இந்த மெசின் செய்கிறது. கீழே படத்தில் காட்டப்பட்டது போல நூலை மேலே நன்கு அந்த ராட்டினம் போன்ற அமைப்பினுள் வைத்துவிட்டு, கீழே ஒரு உருளையில் அடுத்த முனையில் வைத்து விடுகின்றனர். அது சீராக அறுந்து போகாமல், சிக்கல் இல்லாமல் கீழே இருக்கும் உருளையில் சுற்றி விடுகிறது, இதனால் இந்த கொசுவலையில் எந்த விதத்திலும் நூல் அறுந்து விடாமல் இருக்குமாம் !

மாடர்ன் பாட்டிகள் இப்படிதான் நூலை கோனில் சுற்றுகின்றனர் !




இந்த நூல் இந்த சிறு உருளையில் சுற்றி முடித்தவுடன், கொசு வலையின் நீளத்திற்கு ஏற்ப, டிசைன் எப்படியோ அப்படி அதை சீராக சுற்ற வேண்டும். கீழே இருக்கும் படத்தில் உள்ளது போல இந்த உருளைகள் இப்படி வைக்கப்பட்டு இருக்கும். அடுத்த முனையில் இருக்கும் நீளமான உருளையில் இப்போது இந்த நூல், டிசைனுக்கு ஏற்ப சுற்ற ஆரம்பிக்கும். இப்படி செய்வதால்தான் இது மெசினில் சரியாக நூற்க ஆரம்பிக்கும்.



இப்படி சுற்றப்பட்ட கோன் இங்கு அடுக்கபடுகிறது !
கோனில் இருந்து இப்படி டிசைன் ஏற்ப சுற்றபடுகிறது !
இப்போது நமது நூல் ரெடி ! இதை நாம் இப்போது சேலை நெய்வது போல நெய்ய வேண்டும். சேலையில் எப்படி எல்லாம் டிசைன் செய்கிறோமோ அது போலவே இந்த கொசு வலையிலும் டிசைன் உண்டு, என்ன காசு கொஞ்சம் ஜாஸ்தி ! நம்ம ஊரில் கிடைக்கும் இது போன்ற கொசு வலைகள் பெரும்பாலும் இந்த டிசைன் இல்லாமல் இருக்கும் !  முதலில் அந்த பெரிய உருளைகளை மெசினில் பொருதுகிறார்கள், பின்னர் அதில் இருக்கும் ஒவ்வொரு நூல் இழைகளையும் மெசினில் ஒரு ஹூக் போன்ற அமைப்பினில் இணைக்கின்றனர், சில நேரங்களில் இது நாட்கணக்கில் கூட ஆகிறது.






பின்னர் இந்த இழைகள் எல்லாம் சேர்ந்து கொசுவலை உருவாகும்போது மனிதனின் மூளையை நீங்கள் மெச்சத்தான் செய்வீர்கள். இந்த கொசுவலைகள் விலை மணிக்கு எவ்வளவு மீட்டர் உருவாக்குகின்றனர் என்பதை பொருத்தது. சில இடங்களில் மணிக்கு 100 மீட்டர் வரை செய்கின்றனர். டிசைன், மேலே சொன்ன ஒன்று அதை பொருத்து 10 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை விற்க்கின்றனர். மொத்த விலைக்கு இதை வாங்கி சென்று நமக்கு வேண்டிய டிசைன்னில் நமக்கு வரும்போது பத்து மடங்கு விலை வருகிறது





கொசுவலைகளை நமக்கு வேண்டிய டிசைன்னில்  தைத்து தருவதற்கு நிறைய பேர் இங்கு இருக்கின்றனர். சில நேரங்களில் வீடுகளிலேயே இதை செய்து பீஸ் கணக்கில் கொடுத்து காசு வாங்கி கொள்கின்றனர். கீழே உள்ள படத்தில் இருந்து நீங்கள் கொசு வலைகள் என்னென்ன டிசைன்னில் வருகிறது என்று தெரிந்து கொள்ளலாம் !


 

எல்லாம் பார்த்து விட்டு வெளியே வரும்போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது ! கரூர் கொசுவலை ஒன்று வாங்கி வந்து வீட்டில் மாட்டிவிட்டு பார்த்தபோது பெருமையாகவும் இருந்தது !

Labels : Oor special, Karur, Mosquito net, Kosuvalai, Suresh, kadalpayanangal

12 comments:

  1. அட..! எங்கள் தொழில்... ஆனால் கொசுவலை அல்ல... யார்ன் (Yarn) விளக்கம் அருமை... கல்லூரியில் படித்த ஞாபகம் வந்தது...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் ! உங்கள் தொழிலில் இருக்கும் நுணுக்கங்களை தெரிந்தவரை சொல்லி இருந்தேன், சரியாக இருந்ததா ? விரைவில் சந்திக்க ஆர்வமாய் இருக்கிறேன்.....

      Delete
  2. Interesting, i didnt hear about this, though i lived in karur in my school days. Thanks for reminding school days.... Krishnan, Maldives.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி கிருஷ்ணன் !

      Delete
  3. கரூர் போய் இருக்கீங்க..நான் பிறந்த ஊர்..பஸ்பாடி பில்டிங், டெக்ஸ்டைல், ஃபைனான்ஸ், கொசுவலை, அப்புறம் சாப்பிடுவதில் கரம்...இதெல்லாம் பேமஸ்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீவா, அடுத்த முறை செல்லும்போது பஸ் பாடி பில்டிங் பற்றி பார்க்க வேண்டும் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete
  4. Replies
    1. சின்ன கொசு அளவிற்கு பாரட்டுரீன்களே, இதுக்காக நான் எவ்வளவு சிரமப்பட்டேன் தெரியுமா ?! :-) நன்றி கிருஷ்ணா !

      Delete
  5. Replies
    1. நன்றி நாடோடி பையன் ! தங்கள் பெயர் மிகவும் வித்யாசமாக இருக்கிறது நண்பரே !

      Delete
  6. what material to use this machines, where is the material perches,

    ReplyDelete
  7. Pl callme sir i want of Large qty 7845490999/9500445731

    ReplyDelete