Tuesday, July 23, 2013

உலக பயணம் - சீனா ராஜாவின் அதிசய கல்லறை

 சீனா - ஒரு வித்யாசமான நாடு ! இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது, முதன் முதலாக அங்கு சென்று இருந்தபோது உணவிற்கு கஷ்டப்பட்டது ! அவர்களின் உணவு பொதுவாக வேக வைக்கபட்டிருக்கும், அவர்கள் எல்லாவற்றையும் சாபிடுவதாலும், அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதாலும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானேன். பல நாட்கள் கொலை பட்டினிதான், பிரட் வாங்கி வந்து சாப்பிட்டு காலத்தை ஓட்டினேன். பின்னர் அங்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்து, பின்னர் எல்லாவற்றையும்....... மீண்டும் சொல்கிறேன், எல்லாவற்றையும் சாப்பிட்டேன், என்ன டேஸ்ட்தெரியுமா ! நான் தங்கி இருந்த இடத்திற்கு பெயர் ஷூஷோ (Xuzhou), இது ஷாங்காய்நகரில் இருந்து தொண்ணூறு நிமிட விமான பயணத்தில் இருந்தது. இந்த ஊர் எல்லா ஊர்களையும் போன்று இருந்தாலும், அங்கு இருந்த மன்னரின் கல்லறை பிரமிக்க வைத்த ஒன்று !
அங்கு இருக்கும் யுன்லாங் ஏரிமிகவும் பிரபலம், இதை அன்று ஆண்ட ஹான் பரம்பரை மன்னர்கள் மிகவும் பிரபலம். சீனாவில் டெர்ரகோட்டா சிலைகளுடன் இருந்த கல்லறை மிகவும் பிரபலம். இது முதலாம் சீனமன்னர் இறந்தபோது, அவருடன் அவர்களது வீரர்களின் சிலை மாதிரிகளையும் சேர்த்து புதைத்தனர். இது உலக புகழ் பெற்ற இடங்களில் ஒன்று, ஆனால்இங்கு செல்ல நேரமும், பணமும் ஜாஸ்தி ஆகும் என்று சொன்னதால், அதை போல ஒன்றை பார்க்க முடியுமா என்று இருந்தபோது பார்த்ததுதான் இந்த குஇஷன் ஹான் அரச பரம்பரையின் கல்லறை. இது கிறிஸ்து
பிறப்பதற்கு 206 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.


இதன் சிறப்பு என்பது இவர்கள் மலையை குடைந்து அதன் நடுவே மன்னரை அடக்கம் செய்ததும், அவர்களின் தொழில் அறிவும், சிறிய டெரகோட்டா வீரர்களும்தான் ! ஒரு பெரிய மலை, அதை வெகு நேர்த்தியாக குடைந்து, அதன் நடு வரை சென்று அங்கு மன்னரையும், அந்த பாதையின் இரு பக்கங்களிலும் அவர்களின் குடும்பத்தையும் புதைத்து இருக்கின்றனர். அந்த மலையை குடைந்து எடுத்த நேர்த்தி உங்களை கண்டிப்பாக வியக்க வைக்கும்.

 

அந்த மலைக்கு பக்கத்தில், அதை சுற்றி என்று எங்கெங்கும் அந்த கல்லறையை காக்க டெரகோட்டா சிலை வீரர்கள். எல்லா வீரர்களும் ஒன்று போன்று இல்லை என்பது இதன் சிறப்பு. ஒவ்வொரு வீர்களும் வித விதமாக, கையில் ஆயுதங்களுடன் இருக்கின்றனர். அகழ் ஆராய்ச்சியில் இதை கண்டு பிடித்து அதன் மேல் கண்ணாடி பேழை வைத்து இன்று அதை பாதுகாக்கின்றனர். இந்த வீரர்கள், மன்னர் மீண்டும் உயிர்த்து எழும்போது அவருக்கு பணிவிடை செய்ய என்று வைத்திருக்கின்றனர் !
இந்த கல்லறையின் நடுவிலே சென்றபோது, அங்கு மன்னரை பாடம் செய்து வைத்திருந்த விதத்தை வைத்திருந்தனர். ஒரு ஓலை பெட்டி போல, அதன் உள்ளே மன்னரை வைத்து, பாடம் செய்திருந்தனர். அவரின் சிலை ஒன்றும் உள்ளே உண்டு ! குகையின் பகுதிகளை லைட் வெளிச்சம் செய்து வைத்திருகின்றனர், இதனால் உள்ளே சிறிது வெளிச்சம் வருகிறது, இல்லையென்றால் கும்மிருட்டுதான்.

முடிவில் அங்கு இருந்த அருங்காட்சியகம் சென்று இருந்தபோது, அந்த மன்னரின் காலத்தில் உபயோகித பொருட்களையும், சில வீரர்களின் சிலைகளையும் வைத்திருந்தனர். பார்க்க பார்க்க புதுமையாக இருந்தது. நீங்கள் இந்த படங்களை பார்த்தாலே தெரியும், அந்த இடம் எவ்வளவு அழகாக பராமரிக்க படுகிறது என்று. நமது நாட்டில் மணிமண்டபம் என்று கட்டி விட்டு விடுகின்றனர், ஆனால் அருங்காட்சியகம் என்று ஒன்று இல்லாமல் அவர்களின் வரலாறு தெரிவதில்லை !

 
 
நம்மிடம் என்ன திறமை இருந்தும், அதை இன்று சரியானபடி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லாமல் இருக்கிறோம். நமது முன்னோர்கள் கட்டிய கல்லணை இன்றும் ஒரு அதிசயம், ஆனால் இந்த தலைமுறை வெளிநாடுகளில்தான் அதிசயம் கொட்டி கிடக்கிறது என்று சொல்வதை பார்த்தால் விரைவில் ஒரு கல்லறையில் நமது அதிசயங்கள் உறங்கி விடும் !

Labels : Suresh, kadalpayanangal, China, Xuzhou, Guishan tomb, Han dynasty

18 comments:

 1. அந்த மன்னரின் காலத்தில் உபயோகித பொருட்களையும், சில வீரர்களின் சிலைகளையும் வைத்திருந்தனர். பார்க்க பார்க்க புதுமையாக இருந்தது.

  புதுமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ! அந்த ராஜா உங்களை கவர்ந்தது கண்டு மகிழ்ச்சி !

   Delete
  2. மிக்க நன்றி ! அந்த ராஜா உங்களை கவர்ந்தது கண்டு மகிழ்ச்சி !

   Delete
 2. மிக்க நன்றி
  நேரடியாகப் பார்ப்பதைப் போன்று
  அருமையான புகைப்படங்கள்
  விளக்கிச் சொன்ன விதம் மிக மிக அருமை
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார், ஒரு முறையாவது உங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது....... பதிவர் திருவிழாவுக்கு வருகிறீர்களா ?!

   Delete
 3. Replies
  1. உங்களது ஓட்டு அளித்து இந்த பதிவை சிறப்பித்ததற்க்கு நன்றி சார் !

   Delete
 4. படங்கள் மூலம் சிறப்புகள் அருமை... நன்றி... முடிவில் வரிகள் உண்மை...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார் ! அந்த கடைசி வரிகள் உங்கள் மனம் கவர்ந்தது கண்டு மகிழ்ச்சி !

   Delete
 5. கடைசி பாரா சத்தியமான வரிகள்....!

  ReplyDelete
  Replies
  1. நன்றி மனோ ! தங்கள் வருகையும், கருத்தும் மகிழ்ச்சி அளித்தது !

   Delete
 6. வாவ் அற்புதமான இடம்... நம் முந்திய தலைமுறையின் தலைவர்களின் அருங்காட்சியத்தை பார்ப்பதே நம் ஊரில் அதிசியம் தான்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சதீஷ் ! ஆம், நமது ராஜாக்களின் கல்லறை எங்கு இருக்கிறது என்று இன்று நமக்கு தெரியுமா ?

   Delete
 7. அருமையான தகவல்கள்.

  நம்ம வீட்டில் கோபால்தான் அடிக்கடி (வருசத்துக்கு மூணு முறைன்னும் சொல்லலாம்) போயிட்டு வர்றார். என்னை ஒரு முறையாவது கூட்டிட்டுப்போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாலும் இதுவரை சான்ஸே கிடைக்கலை:(

  ReplyDelete
  Replies
  1. என்ன மேடம் நீங்க, பாம்பு, பல்லி எல்லாம் அவர்தான் சாப்பிடறார் அப்படின்னா நீங்களுமா சாப்பிட விருப்பம் ?

   Delete
 8. hao hao - ( fine fine in Chinese )

  ReplyDelete
  Replies
  1. சீசே..... சீன மொழியில் நன்றி என்று அர்த்தம் ! :-)

   Delete
 9. சீனாவில் முதலாம் சீன மன்னன் அந்த பூமியில் வாழ்ந்தான் என்பதற்கு நல்ல அடையாளமாக அவரது கல்லறையை அமைத்து வைத்த சீன மக்களின் செயலினை போற்றுகின்றேன். இதைப் பார்த்தாவது வாழும் சந்ததியற்கு கல்லறைக் கட்ட வேண்டும் எனும் புத்தி வரட்டும்.

  ReplyDelete