Wednesday, July 24, 2013

டெக்னாலஜி - உருமாறும் வீட்டு பொருட்கள்

 டெக்னாலஜி என்று சொல்லும்போது நமக்கு எல்லோருக்கும் எலேக்ட்ரோனிக் பொருட்கள்தான் நினைவுக்கு வரும், ஆனால் அதையும் தாண்டி சில டிசைன்களும் டெக்னாலஜி வகையை சார்ந்தவையே. இன்றைய கல்ச்சரில் நிறைய பொருட்களை வீடு நிறைய வாங்கி விடுகிறோம், பின்னர் அந்த வீட்டில் இடம் பற்றவில்லை என்று சிரமபடுகிறோம். அன்றைய நாட்களில் பொருட்களின் டிசைன் என்பது ஒரு மனிதனின் மூளை சமந்தப்பட்ட விஷயமாக மட்டுமே இருந்தது, சிலவற்றை செய்ய முடியுமா என்ற சந்தேகம் இருந்தது, இன்று பல சாப்ட்வேர் வந்துவிட்டதால் சில டிசைன்கள் சாத்தியமே என்று வந்துவிட்டது.
 
 
 
 
இந்த வீடியோவை பாருங்கள், அதன் டிசைன் என்பது உங்களது கண்களை விரிய செய்யும். பார்க்க இன்று நாம் பார்க்கும் பொருள் போல இருந்தாலும் அதில் உள்ள நுணுக்கமான விஷயங்களை கவனியுங்கள் . இது எல்லாமே இந்த யுகத்தில் டெக்னாலஜியின் உதவியுடன் செய்யப்பட்டவையே. இன்றைய நாளில் நமது ஐடியாக்களை முடியுமா, முடியாதா என்று சொல்லி ஒவ்வொரு டிசைனையும் மெருகெதுகின்றது. விரைவில் உங்களது வீட்டிற்க்கு பக்கத்திலும் இப்படி ஒரு கடை வரலாம் !

 
 
 Labels : Technology, Suresh, Kadalpayanangal, Changing house items

16 comments:

 1. வீட்டின் அளவு குறையக் குறைய இப்படிப்பட்டவைகளுக்கு தேவை அதிகம்.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஆம், நன்கு சொன்னீர்கள் மேடம் ! அப்புறம் அந்த பாலி யானையை வைத்துதான் எல்லா பொருளையும் எடுக்கணும் போங்க !

   Delete
 2. Replies
  1. மிக்க நன்றி தனபாலன் சார் !

   Delete
 3. வாவ்... நல்ல விசயம்...

  ReplyDelete
  Replies
  1. டெக்னாலஜியில் வாய் அடைத்து போனீர்களா ?! நன்றி சதீஷ் !

   Delete
 4. 1978ம் ஆண்டு நான் சென்னையிலிருந்து மாற்றலாகி மும்பை சென்றபோது எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த குடியிருப்பை (Flat) பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. அதை 1BHK குடியிருப்பு என்றார்கள். சென்னையில் குடியிருந்த வீட்டுடன் ஒப்பிடுகையில் அதன் மொத்த பரப்பளவில் 1/4பாகமே இருந்தது. இதில் கட்டில், மேசை, சோஃபா எல்லாம் எங்கு போடுவது என்று நான் குழம்பியிருந்தபோது என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் அருகிலிருந்து ஒரு ஃபர்னிச்சர் கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு இப்போது டெக்னாலஜி உதவியுடன் செய்யப்பட்டிருந்தவைகளைப் போன்றே சுவருடன் ஒட்டிக்கொள்ளும் கட்டில், சுருக்கி மடித்து ஓரமாய் வைத்துவிட முடிந்த மேசை, நாற்காலிகள் என பல ஃபர்னிச்சர்களை காட்டினார். இன்றும் மும்பையில் இவைதான் மிகவும் பிரபலமானவை. சென்னையிலும் மும்பை பில்டர்களின் பிரவேசத்திற்குப் பிறகு குடியிருப்புகளின் பரப்பளவு சுருங்கி வருவதால் இத்தகைய சுருக்கி மடக்கி வைத்துக்கொள்ளக் கூடிய ஃபர்னிச்சர்கள் சென்னையிலும் கிடைக்கின்றன. வீடியோவில் காட்டப்படும் அளவுக்கு sofistication இல்லையென்றாலும் இந்திய பாணியில் அவை அமைந்துள்ளன.

  ReplyDelete
  Replies
  1. முதல் முறையாக எனது நண்பனின் திருமனதிர்க்காக நான் காரைக்குடி சென்று இருந்தேன், அங்கு பார்த்த பெரிய வீடுகள் இன்னும் எனது கண்ணுக்குலேயே நிற்கின்றன...... நகரத்து நெரிசலில் இந்த சிறிய வீடுகளில் இருந்து கொண்டு, டெக்னாலஜி பொருட்களை அடுக்கினாலும், அந்த பனை மர விசிறி கொண்டு விசிறும் சுகம் வருமா ?! தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ! தகவலுக்கு நன்றி !

   Delete
 5. இந்த யுகத்தில் டெக்னாலஜியின் உதவியுடன் செய்யப்பட்டவை வியப்பளித்தன..

  ReplyDelete
  Replies
  1. நன்றி மணி சார் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் !

   Delete
 6. அடேங்கப்பா மலைத்துப் போனேன்....!

  ReplyDelete
  Replies
  1. மலைத்தது பிடித்தது, நன்றி மனோ !

   Delete
 7. Replies
  1. ஏன் என்ன ஆச்சு ?!

   Delete
  2. என் பதிவை படிச்சு உங்களுக்கு ஏதோ ஆயிடோசோன்னு நான் பயந்திட்டேன் !

   Delete