Friday, July 26, 2013

அறுசுவை - பெங்களுரு நேச்சுரல் ஐஸ் கிரீம்

பெங்களுருவில் நல்ல சாப்பாடு, டிபன் கிடைத்தாலும் சில நேரங்களில் அதையும் தாண்டி ஒரு நல்ல ஐஸ் கிரீம் கிடைத்தால்...... சான்சே இல்லை ! எப்போதும் நாம் சாப்பிட போகும் இடத்திலேயே வெண்ணிலா ஐஸ் கிரீம் ஒரு ஸ்கூப் என்று சொல்லி சோம்பேறித்தனமாக வாங்கி சாப்பிடும் நான், இந்த முறை ஒரு டின்னர் சாபிட்டுவிட்டு குடும்பத்துடன் இரவு சுமார் பத்து மணிக்கு  இந்த நேச்சுரல் ஐஸ் கிரீம் பார்லர் சென்றேன். நல்ல கூட்டம் இருந்ததே இந்த கடை மிகவும் பேமஸ் என்பதற்கு சான்று !

பொதுவாக ஐஸ் கிரீம் என்றாலே வெண்ணிலா, ஸ்ட்ராபெர்ரி, பட்டர் ஸ்காட்ச், சாக்லேட் என்று ஒரு லிஸ்ட் உண்டு. வெகு சில கடைகளில் மட்டும் அவர்களே புதிய பிளேவரில் ஐஸ் கிரீம் செய்வார்கள், ஆனால் எல்லா நேரத்திலும் அந்த சுவை ஒரே போல் இருப்பதில்லை..... வெகு சில கடைகளை தவிர்த்து. இந்த நேச்சுரல் ஐஸ் கிரீம் கடையில் உண்மையான பழங்களைகொண்டு, அதன் சுவையிலேயே ஐஸ் கிரீம் தயார் செய்வதுதான் சிறப்பு !



வெகு சுத்தமான கடை, உட்காருவதற்கு அதிகமாக இடம் இல்லை. நிறைய பேர் ஐஸ் கிரீம் வாங்கிக்கொண்டு நின்று கொண்டே சாபிடுகின்றனர் ! பார்க்கும்போது கலர் கலராக இருக்கும் ஐஸ் கிரீமில் ஒன்றை செலக்ட் செய்து கையில் வாங்கியவுடனேயே நாக்குஊற ஆரம்பிக்கும், ஒரு வாய் வைத்தவுடன் உங்களுக்கு முதலில் தெரிவது அந்த பழத்தின் சுவைதான் ! மற்ற புகழ் பெற்ற ஐஸ் கிரீம் பிராண்டில் எல்லாம் ஸ்ட்ராபெர்ரி சுவை வாங்கினால் அந்த சுவை தெரிந்தாலும், அந்த பழத்தில்இருக்கும் சற்று புளிப்பு தெரியாது, ஆனால்இங்கு ஸ்ட்ராபெர்ரி சிறிய துண்டாக அங்கங்கு சிதறி கிடக்கும், வாயில் வைத்தவுடன் அந்த ஐஸ் கிரீம் சுவையும், அந்த பழம் வாயில் சிக்கும்போது அதன் சுவையும் கிடைக்கும்போது அலாதிதான் !



 1984ம் வருடம், காமத் என்பவரால் இது தொடங்கப்பட்டு இன்று இந்தியா முழுவதும் சக்கை போடு போடுகிறது ! ஆரம்பத்தில் இவர் தனது தந்தையின் பழகடையில் இருந்து பழங்களை பற்றியும், அவரது அண்ணனிடம் இருந்து ஐஸ் கிரீம் பற்றியும் கற்று கொண்டு, இரண்டையும் சரியாக கலந்து இன்று நேச்சுரல் ஐஸ் கிரீம் உருவாக்கினார் ! இந்த ஐஸ் கிரீம் எல்லாம் மார்க்கெட்டில் இருக்கும் ஐஸ் கிரீம் மெசினில் வைத்து செய்யமுடியாது (பழம் எல்லாம் போடுவதால்...) அதனால் இவரே ஒரு மெசின் கண்டுபிடித்து, அது பழங்களைபோடும்போது அதில் இருக்கும் தோல், கொட்டை எல்லாம் எடுக்கும் அளவுக்கு உருவாக்கியுள்ளார் ! நன்றி காமத்...... நல்ல சுவையான ஐஸ் கிரீம் தருவதற்கு !


பஞ்ச் லைன் :

சுவை - அருமையான பழங்களின் சுவை கொண்ட ஐஸ் கிரீம் ! செயற்கை சாயம் எல்லாம் எதுவும் கலக்காமல்..... ஆரோக்கியமானது !

அமைப்பு - சிறிய இடம், மெயின் ரோட்டில் இருப்பதால் பார்கிங் வசதி கம்மி, கூட்டம் அதிகம் !

பணம் - கம்மிதான், ஒரு ஸ்கூப் முப்பது ரூபாயில் இருந்து கிடைக்கிறது ! !

சர்வீஸ் - நல்ல சர்விஸ், கூட்டம் அதிகமாக இருந்தால் இதையே எதிர் பார்க்க முடியாது.

அட்ரஸ் :

இங்கே கிளிக் செய்தால் முழுமையான அட்ரெஸ் கிடைக்குமே...... நேச்சுரல் ஐஸ் கிரீம் !


மெனு கார்டு :

மெனு கார்டு படிக்க இங்கே சொடுக்கவும்........... மெனு கார்டு 



Labels : Bangalore, Bengaluru, Arusuvai, Natural ice cream, best ice cream, Suresh, Kadalpayanangal

20 comments:

  1. ஜில்லென்று இருக்கிறது... கையில் குறைவாக இருக்கிறதே...! ஹிஹி....

    காமத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் ! நீங்கள் பெங்களுரு வரும்போது இங்குதான் செல்ல வேண்டும் என்று ஆசை !

      Delete
  2. தமிழ்மணம் இணைக்க முடியவில்லை... கவனிக்கவும்...

    ReplyDelete
    Replies
    1. இணைத்து விட்டீர்களா... நன்றி...

      Delete
    2. நன்றி தனபாலன் சார் ! இணைத்து விட்டேன் ! உங்களது கைவண்ணத்தில் தமிழ் மனம் ஓட்டு பட்டியில் இருந்து ஓட்டுகள் கிடைத்தாலும், புகழ் எல்லாம் உங்களுக்கே !

      Delete
  3. இம்புட்டு ஐஸ்கிரீம் கையில வச்சிகிட்டு யாருக்கு வெயிட் பண்ணுறீங்க ?

    ReplyDelete
    Replies
    1. அட நீங்க வேற..... குடும்பத்தோட போய் இருந்தேன், கடைசியில அவங்க எல்லாம் சாப்பிட்டது போக எனக்கு கிடைத்தது எல்லாம் கொஞ்சமே கொஞ்சம்தான் ! நன்றி மனோ !

      Delete
  4. வாவ்... ஜில்லுன்னு இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. உங்களது குளிர்ச்சி என்னை தாக்கியது ! நன்றி சதீஷ் !

      Delete
  5. பழங்கள் கலந்து ஐஸ்கிரீமா?! வாய்ப்பு கிடைத்தால் ருசித்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மேடம், கண்டிப்பாக நீங்கள் சுவைக்க வேண்டிய ஒன்று ! நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
    2. முதல்ல இந்த மேடத்தை கட் பண்ணி தூர எறிங்க. ராஜி, தங்கச்சி, அக்கா, இல்லாட்டி பாட்டின்னு கூட கூப்பிடுங்க. ஆனா, மேடம் மட்டும் வேணாம் ப்ளீஸ்

      Delete
    3. சரிங்க........ உங்களது படத்தை திண்டுக்கல் தனபாலன் சார் போன பதிவர் சந்திப்பில் எடுத்ததை காண்பித்தார். நீங்களும் எனது வயதுடனேயே இருப்பதால் பேரை சொல்லியே அழைக்கின்றேனே ! (அப்படா, தங்கச்சின்னு சொன்னால் எனக்கு வயசு ஜாஸ்தி மாதிரி தெரியும்..... அக்கான்னு சொன்னால் உங்களுக்கு வயச கூட சொன்ன மாதிரி ஆயிடும், தப்பிச்சேன் !)

      Delete
  6. Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி கிருஷ்ணா ! நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள், என்ன செய்கிறீர்கள் ?!

      Delete
    2. Current village - Devipattinam (Sivagiri Taluk, Tirunelveli District, Tamilnadu-627757).Rest & Refrshment for Future City :-))

      Thank you very much for updating my knowledge :)

      What I you doing ?? where are you ? Where I can meet you ???

      Delete
    3. மிகவும் நன்றி கிருஷ்ணா ! அடுத்த முறை தேவிபட்டினம் வரும்போது சந்திக்க ஆவல் ! நீங்கள் எனது பதிவை வந்து படித்து கருத்து இடுவதற்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் !

      நான் தற்போது பெங்களுருவில் தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை செய்கிறேன், ஓய்வாக இருப்பின் என்னை 98864 96867 என்ற எண்ணில் தொடர்ப்பு கொள்ளுங்களேன்....நிறைய பேசலாம் ! நன்றி !

      Delete
    4. Definitely... I will call u ... when am free :-))) u too...

      Delete
  7. படிக்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு...சுரேஷ்...இந்தியாவில் பல இடங்களில் இருக்குன்னு சொல்லி இருக்கீங்க எங்க ஊர்ல (கோவை) எங்க இருக்கு?

    ReplyDelete
    Replies
    1. கோவையில் இதை விட நல்ல நல்ல இடங்கள் சாப்பிட இருக்குது, இது மட்டும்தான் எங்களுக்கு இருக்கு ! :-) தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete