Wednesday, July 31, 2013

அறுசுவை - கோயம்புத்தூர் "அரிசி மூட்டை" உணவகம்

பெயரை பார்த்தவுடன் இது ஒரு கிண்டல் பதிவு என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள் ! கோயம்புத்தூர் மக்களுக்கு நக்கல் சிறிது அதிகம் என்று கேள்விபட்டிருக்கிறேன், ஆனால் அதை இன்றுதான் நேரில் பார்த்தேன் ! கோவை நேரம் ஜீவாவையும், கோவை ஆவி, உலக சினிமா ரசிகன், எழில் மேடம் அவர்களை எல்லாம் சந்தித்துவிட்டு, என்னுடைய நண்பர்களுடன் ஒரு நல்ல உணவகத்திற்கு சாப்பிட போக வேண்டும் என்று நினைத்தபோது ஒரு நண்பன் அரிசி மூட்டைக்கு போகலாம் என்று சொன்னபோது அது ஒரு உணவகத்தின் பெயர் என்று தெரியாமல் முழித்தோம். பெயரே வித்யாசமாக இருக்கிறது என்று நினைத்தால், உணவகத்தின் உள்புறமும், மெனுவும் கூட வித்தியாசம்தான் !



முதலில் நுழைந்தவுடன் கண்ணில் படுகிறது வெளியே பரோட்டா மாஸ்டர் செப் உடையுடன் ஹாப் பாயில் போடுவது ! அதை கடந்து செல்லும்போது உள்ளே AC போட்டு சுத்தமாக டேபிள் எல்லாம் இருந்தது கண்டு ஆச்சர்யம். பின்னர் அவர்கள் கேள்வி எதுவும் கேட்க்காமல் மெனு கார்டுக்கு முன்பு சூடாக ரசம் கொண்டு வைத்தவுடன் புருவம் உயரத்தான் செய்கிறது. பின்னர் மெனு கார்டு கொடுக்கும்போது என்ன கார்டு பாதிதான் இருக்கு, மீதி எங்கே என்று தேட ஆரம்பிக்கிறோம், முடிவில் மெனுவே அவ்வளவுதான் எனும்போது ஆச்சர்யம்தான் !


நாங்கள் அங்கு சென்று இருந்தபோது நல்ல பசி என்பதால் பரோட்டா, கோழிக்கறி சால்னா ஆர்டர் செய்துவிட்டு அடுத்து என்ன என்று பார்த்தபோது மிக சில ஐட்டமே இருந்தது ஏமாற்றமே (ஆனால் எல்லாமே சுவையாக இருந்தது கண்டு மகிழ்ச்சி !) முடிவாக மனதை தேற்றிக்கொண்டு, கோழி மிளகு வறுவல், கோழிகால் பிரட்டல், தோசை, கலக்கி என்றெல்லாம் ஆர்டர் செய்து நிமிர்வதற்குள் தட்டில் சூடாக பஞ்சு போன்ற பரோட்டா வந்து விழுந்தது, அதன் மேலே சால்னா ஊற்றி ஒரு வாய் எடுத்து வைத்தால் அப்படியே கரைந்தது ! பின்னர் வந்த கோழி மிளகு வறுவலுடன் தோசையை பியித்து வைத்தபோது சும்மா அதிருதில்ல என்று தோன்றியது ! பின்னர் வந்த கொத்துபரோட்டா எல்லாம் நிமிடத்தில் காணமல் போனது ! கோழிகால் பிரட்டலில் நன்கு வேக வைத்தகோழியின் மீது நல்ல காரசாரமான சால்னா ஊற்றி சூடாக வைத்தபோது...... ம்ம்ம்ம்ம் !!


 

 முடிவில் எல்லாவற்றையும் காலி செய்துவிட்டு நிமிர்ந்தபோது ஒரு நல்ல உணவகம் என்று தோன்றுவதை தவிர்க்க முடியாது !




பஞ்ச் லைன் :

சுவை -   பரோட்டாவும் சால்னாவும் பின்னி எடுக்கிறது போங்கள்! வெகு சில ஐட்டங்கள்தான் ஆனால் நல்ல சுவை !

அமைப்பு - சிறிய இடம், மெயின் ரோட்டில் இருப்பதால் பார்கிங் வசதி இருக்கிறது, நல்ல உள் அமைப்பு  !

பணம் - நல்ல சாப்பாடிற்கு கொடுக்கலாம் பாஸ்! !

சர்வீஸ் - நல்ல சர்விஸ், வெகு சில சப்ளையர் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தால் இதையே எதிர் பார்க்க முடியாது.

அட்ரஸ் :

கோவை அவினாசி ரோட்டில் இருக்கிறது.




மெனு கார்டு :




Labels : Arusuvai, Coimbatore, Arisi mootai, Suresh, Kadalpayanangal, different restaurant

14 comments:

  1. சூடாக ரசம் - முதலில் குடிப்பது நன்றாக பசியைத் தூண்டும்... அரிசி மூட்டை பெயரே வித்தியாசமாகத்தான் இருக்கிறது...!

    நேரம் கிடைப்பின் :http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Try-Training-Success.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் ! உங்களது முதல் கருத்து முத்தான கருத்தாக இருந்தது !

      Delete
  2. பரோட்டா, சால்னா, கோழி வறுவல், கொத்து பரோட்டான்னு தனியா சாப்பிட்டதுமில்லாம ஆடிக்கிருத்திகை அதுவுமா எங்களலாம் வெறுப்பேத்துறீங்களா!?

    ReplyDelete
    Replies
    1. என்ன ஆடியா, கிருதிகையா.... அப்படினா என்ன ?!

      Delete
  3. நானும் ஊருக்குச் சென்று திரும்பும்போது கடையின் பேரைப் பார்த்து எப்படியெல்லாம் யோசிக்கறாங்கன்னு நினைச்சேன்...பாக்கலாம் எங்களுக்கு அந்த ஏரியா தூரமென்றாலும் என்றாவது சாப்பிட்டுப் பார்க்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி எழில் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  4. இந்த வாரம் போய்விடவேண்டியது தான்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சதீஷ் ! புத்தகம் எந்த அளவில் வந்திருக்கு..... படிக்க ஆவலாய் இருக்கிறேன் !

      Delete
  5. நான் தினமும் அந்த வழியாகத்தான் போய் கொண்டு இருக்கிறேன்.
    ஆனால் உள்ளே போக ஒரு நாளும் எண்ணியதில்லை.
    உங்களை நம்பித்தான் போகப்போகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. என்ன சார்..... டிவி விளம்பரத்தில் யார் எதை சொன்னாலும் நம்புறீங்க, நான் சொன்னா நம்ப மாடீன்களா ! கண்டிப்பா போக வேண்டிய இடம்தான் இது ! நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  6. நம்ம ஊரு பற்றி கேட்க நன்றாக உள்ளது, உங்கள் சிறந்த வேலை தொடர வாழ்த்துக்களுடன் எதிர்பார்ப்புகளும்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  7. Replies
    1. நன்றி கிருஷ்ணா ! :-)

      Delete