சிங்கப்பூர்.....எனது இரண்டாம் வீடு எனலாம். இதுவரை நாற்பது முறைகளுக்கு மேலே அங்கு சென்றிருக்கிறேன், ஒரு வருடம் அங்கு தங்கி இருந்திருக்கிறேன். சென்ற வாரம் அங்கு இருந்த போது நண்பர் சந்தோஷ் மாரிமுத்து அவர்களிடம் பேச வாய்ப்பு கிடைத்தது, எனது பதிவுகளை வாசித்து பாராட்டிய அவர், சிங்கப்பூரை பற்றி இதுவரை எந்த பதிவும் இல்லையே என்றபோதுதான் தெரிந்தது இதுவரை நான் மறந்திருந்தது ! சிங்கப்பூரில் வருடத்திற்கு அல்லது சில வருடத்திற்கு ஒரு முறை பெரிய கட்டிடங்கள் எழும், அது முன்னதை விட பெரியதாக இருக்கும், அப்படி இந்த முறை பெரிய கட்டிடம் என்பது இந்த மரினா பே சான்ட்ஸ் எனப்படும் சூதாட்ட விடுதி ! 15 பெப்ரவரி 2011இல் முழுமையாக திறக்கப்பட்ட இந்த கட்டிடத்தின் சிறப்பு என்பது இதன் உச்சியில் அமைந்துள்ள இன்பினிட்டி ஸ்விம்மிங் பூல், இதில் இருந்து பார்ப்பது ஒரு அருமையான அனுபவம்.

120,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் மூன்று கட்டிடங்களின் மாடியில் இருக்கும் கப்பல் போன்ற அமைப்புதான் எல்லோரையும் கவரும். இந்த இடத்திற்கு செல்ல 20 சிங்கப்பூர் வெள்ளி தேவைப்படும். அடித்தளத்தில் சூதாட்ட விடுதி, ஷாப்பிங் மால், மேலே ஹோட்டல் அறைகள் என்று உள்ள இந்த இடத்திற்கு சூதாடுவதற்கு நிறைய பேர் வருவார்கள். நான் சிங்கப்பூரின் அழகை காண வேண்டும் என்று எனது சீன நண்பருடன் சென்றிருந்தேன். அந்த உயரத்தில் இருந்து பார்த்தபோது மலைக்க வைத்தது சிங்கப்பூர் !
இதற்க்கு முன்னே சிங்கப்பூர் பிளையர் என்ற ராட்டினம் இருந்தது (இன்றும் இருக்கு), அதில் ஏற 35 வெள்ளி பணம், ஆனால் இந்த கட்டிடத்தின் உச்சியில் சென்று வர 20 வெள்ளி பணம். அதனால் நிறைய பேர் இங்கு வர ஆரம்பித்து விட்டனர் ! முதலில் பணம் கட்டிவிட்டு லிப்ட் உள்ளே நுழைந்தால் 56வது தளத்தில் உங்களை இறக்கி விடும். நீங்கள் லிப்ட் விட்டு வெளியே வரும்போதே உங்களது முகத்தில் அறையும் காற்று சொல்லிவிடும் நீங்கள் எவ்வளவு உயரத்தில் இருக்கிறீர்கள் என்று ! சுற்றிலும் கண்ணாடியினால் ஆன தடுப்புகள் என்பதால் சில நேரங்களில் அதில் சாய்ந்து நிற்க பயப்படுவீர்கள் !
எனது சீன நண்பருடன் அங்கு சென்று ஒரு மாலை பொழுதில் அங்கு இருக்கும் உணவகத்தில் சாப்பிட்டோம். அந்த நீச்சல் குளத்தில் குதித்து நீச்சல் அடிக்க வேண்டும் என்று எங்களுக்கு ஆசை இருந்தாலும், அது அந்த ஹோடேலில் அறை எடுத்து தங்குபவர்களுக்கு மட்டும் என்பதால் ஏக்கத்துடன் போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டு திரும்பி விட்டோம். கீழே வந்து அந்த கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தபோது மனித மூளையையும், அது உருவாக்கும் இது போன்ற கட்டிடத்தையும் ஆச்சர்யமாக பார்க்க தோன்றியது !

வெளியே தலையை நீட்டி பார்க்க முடியாதபடிக்கு வலை அமைத்து இருக்கிறார்கள், ஆனால் நான் எனது காமெராவை வெளியே நீட்டி படம் எடுத்து பார்த்தபோது கீழே கார் எல்லாம் குட்டி குட்டியாக செல்வது தெரிந்தது. இங்கிருந்து பார்த்தால் சிங்கப்பூர் பிளையர் என்னும் ராட்டினம் தெரியும், இங்கிருந்து கை அசைத்து உங்களது மகிழ்ச்சியை தெரிவிக்கலாம் ! சிங்கப்பூரின் பெரிய கட்டிடங்கள் எல்லாம் இந்த கட்டிடத்தின் உச்சியில் இருந்து பார்த்தபோது மிக சிறியதாக தெரியும்.
எனது சீன நண்பருடன் அங்கு சென்று ஒரு மாலை பொழுதில் அங்கு இருக்கும் உணவகத்தில் சாப்பிட்டோம். அந்த நீச்சல் குளத்தில் குதித்து நீச்சல் அடிக்க வேண்டும் என்று எங்களுக்கு ஆசை இருந்தாலும், அது அந்த ஹோடேலில் அறை எடுத்து தங்குபவர்களுக்கு மட்டும் என்பதால் ஏக்கத்துடன் போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டு திரும்பி விட்டோம். கீழே வந்து அந்த கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தபோது மனித மூளையையும், அது உருவாக்கும் இது போன்ற கட்டிடத்தையும் ஆச்சர்யமாக பார்க்க தோன்றியது !
Labels : Suresh, Kadalpayanangal, Tall buildings, Singapore, Marina bay sands
படங்களே மயக்க வைக்குதே...! நேரில்....!!!
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே...
நன்றி தனபாலன் சார், தங்களது வருகை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போதும் நீங்கள் இடும் முதல் கருத்துக்கள் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.
Deleteஅழகான இடம்.
ReplyDeleteபோனமாசம் இந்நேரம் அங்கேதான் இருந்தேன்.
சாண்ட்ஸ் மாடி பற்றிய பழைய பதிவு ஒன்னு இங்கே.
http://thulasidhalam.blogspot.co.nz/2011/10/blog-post_31.html
அப்போது வெளிப்புறத் தோட்டம் கட்டி முடிக்கவில்லை. போனமாசம் போனபோது எல்லவேலைகளும் முடிஞ்சு அழகா இருந்தது.
என்னுடைய பதிவை விட உங்களது பதிவில் அதிக விவரம் இருக்கிறது மேடம். அடுத்த வாரம் சிங்கப்பூர் செல்கிறேன், உங்களை சந்திக்க இயலுமா ? கோபால் சாரை கேட்டதாக சொல்லுங்கள்.
Deleteஇந்தப்பதிவில் சொல்லி இருப்பது ஃபிப்ரவரி 2011 பயணம். அதுக்குப் பிறகு ஆறு மாசத்தில் நாங்க நியூஸிக்குத் திரும்பிட்டோம். இப்போ வசிப்பது நியூஸியில். அதன்பின் மூணு முறை சிங்கை வழிபோய் வந்தாச்சுன்னு சொல்லணும்.
Deleteஅநேகமா டிசம்பர்/ஜனவரியில் சிங்கை வருவோம். அப்போது முடிந்தால் சந்திக்கலாம். இல்லையென்றால் அதே நாட்களில் சென்னையில் !
அன்பான விசாரிப்புக்கு நன்றி சுரேஷ்
கண்ணைக்கட்டுகிறது கட்டிடத்தின் படங்கள்..
ReplyDeleteமிக்க நன்றி சதீஷ். இந்த வாரம் கோவை வருகிறேன், சந்திக்க இயலுமா ?
Deleteஅப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடி, படங்களை பார்க்கும்போதே கண்ணை கட்டுதே?!
ReplyDeleteதங்களது மனம் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி மேடம் !
Deleteஅழகான படங்கள்..
ReplyDeleteநன்றி நண்பரே !
Delete...! :))))
ReplyDeleteஒரே ஆச்சர்ய குறியில் உங்களது கருத்துக்கள் சொன்ன விதம் கண்டு மகிழ்ச்சி ! நன்றி நண்பரே !
Deleteneengal iruppathu covaiilla
ReplyDeleteஇல்லை சார், இருப்பது பெங்களுருவில்...... நன்றி தங்கள் வருகைக்கு !
DeleteRead your blog. I am envy of how much you traveled. I am interested in travel too but prefer not so famous places. Reading about your Singapore being second home, may be we can meet up sometime. Take a look at my blog (nslaxx.blogspot.com) though my travel is too small comparatively.
ReplyDeleteLakshman
நன்றி லக்ஷ்மணன் ! நான் அவ்வளவாக இன்னும் சுற்றவில்லை என்றுதான் நினைக்கிறேன், இன்னும் பார்பதற்கு ஏராளம் இருக்கிறது !! கண்டிப்பாக நான் சிங்கப்பூர் வரும்போது சொல்கிறேன், சிந்திப்போம் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !
Deleteகண்ணை கட்டுதே?!
ReplyDeleteஎன்ன வடிவேல் மாதிரி சொல்லிடீங்க ?! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஆடம் !
Delete