Thursday, July 25, 2013

உலக பயணம் - ஜப்பானின் எரிமலை மீது....!!

கடந்த முறை ஜப்பானின் மவுண்ட் பியூஜி மலை சென்று வந்ததை பற்றி எழுதி இருந்தேன், அது இறந்து போன எரிமலை. நான் அங்கு இருந்தபோது நிறைய முறை நில நடுக்கம் வந்து போனது, அப்போது எல்லாம் எரிமலை வெடித்து சிதறியது என்ற செய்தியும் வரும். ஒரு முறையாவது எரிமலையை பார்த்து ஆகவேண்டும் என்று ஆசை அதிகமானது, அப்படி தேடியபோது எனது ஜப்பானிய நண்பர் சொன்னதுதான் இந்த ஹகோனே ! இன்றும் அந்த எரிமலை கனன்று கொண்டுதான் இருக்கிறது என்றும், அங்கு சென்றால் எரிமலை குழம்பு பார்க்க முடியாவிட்டாலும், அதில் இருந்து வரும் அனலை பார்க்கலாம் என்றவுடன் எங்களது பயணம் தொடங்க ஆரம்பித்தது.

எரிமலைடா நான்...... (பஞ்ச் டயலாக் சார் !)

எரிமலை ஆசிட்ஊற்று !


இங்கு செல்வதற்கு நாங்கள் ஒரு புல்லட் ட்ரைன் எடுத்தோம், பின்னர் அங்கிருந்து ஒரு கேபிள் கார் கொண்டு நாங்கள் அந்த மலை மீது ஏற ஆரம்பித்தபோது எங்களது கால்களுக்கு கீழே மலையில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. அது ஏதோ தண்ணீர் புகை என்று நினைத்தபோது, அதுதான் எரிமலை என்றும், பாறையின் இடுக்குகளில் இருந்து அதன் அனல் வெளி வருகிறது எனும்போதுதான், நாங்கள் அந்த எரிமலையின் மீது செல்கிறோம் என்ற பயம் வந்தது ! அந்த இடத்தில இருந்து வரும் நெடியில் அமிலத்தின் தன்மை அதிகம் இருப்பதால், உங்களது தொண்டையில் கிச்-கிச் ஆரம்பிக்கும். சிறிது நேரத்தில் கண்கள் எரிய ஆரம்பிக்கும் !

கேபிள் கார் பயணம் !

வெட்டி எடுத்து ஆராய்ச்சி செய்கிறார்கள்....

நாங்கள் அந்த மலையின் மீது இறங்கியவுடன் பல பகுதிகளில் இருந்தும் புகை வந்து கொண்டு இருந்தது. அது எல்லாமே கீழே எரிமலை குழம்பு கொதித்து கொண்டிருக்கும் இடங்கள், அங்கு நாங்கள் போட்டோ பிடித்து கொண்டிருந்தபோது நிறைய பேர் கையில் ஒரு கருப்பு உருண்டையுடன், அதை பியித்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். எனது நண்பர் அதே போன்ற ஒன்றை கொண்டு வந்தபோதுதான் அது முட்டை என்று தெரிந்தது. முட்டைகளை ஒரு பெரிய கூண்டில் அடைத்து, அதை இந்த எரிமலை அமில தன்மை உடைய தண்ணீரில் முக்கி எடுக்கின்றனர். அது அந்த சூட்டில் கருப்பாக ஆகிறது, அதில் மருத்துவ குணம் இருப்பதால் எல்லோரும் விரும்பி சாபிடுகின்றனர் என்றார், நானும் சூடாக இரண்டு முட்டை சாப்பிட்டேன் ! :-)

எரிமலையில் வேக வைக்கப்பட்ட முட்டை !

அத்தனையும் ஆசிட்தண்ணீர் ! நெடி ரொம்பவே ஜாஸ்தி.....
அங்கு சிறிது தூரத்தில் இப்போதும் தண்ணீர் கொதித்து கொண்டிருக்கும் ஒரு இடத்தை அடைந்தபோது, மூச்சு அடைத்தது. கந்தக நாற்றம் அங்கிருந்த ஒரு குளத்தில் இருந்து வந்தது. அதுதான் எரிமலையின் வெப்பத்தில் இருந்து உருவாகும் நீர் ஊற்று. அங்கு இருந்த பாறையில் எல்லாம் அந்த அமிலத்தன்மை இருந்தது ! அங்கு இருந்து நாங்கள் இயற்க்கை ஏரியான அஷீஏரிக்கு சென்றோம். மலைகள் சூழ்ந்த பகுதியில் இயற்கையிலேயே அமைந்த ஏறி அது, அருமையான காட்சிகள். கீழே இருக்கும் படத்தை பாருங்கள், உங்களுக்கே புரியும்.

அழகான ஏரி.....
முடிவில் அங்கு இருந்து மவுண்ட் பியுஜியை பார்த்து இன்புற்று திரும்பினோம். ஜப்பான் மக்களின் அன்பும், அங்கு பார்த்த இயற்க்கை காட்சியும்மனதை நிறைத்தது. மீண்டும் செல்ல தூண்டும் இடம்.....

டாடா..... பை பை 

Labels : Suresh, Kadalpayanangal, Japan, Hakone, Lava, Lake Ashii

15 comments:

 1. உண்மையிலேயே உலகம் சுற்றும் வாலிபர் என்றால்
  நீங்களாகத்தான் இருப்பீர்கள் போல இருக்கிறது
  உங்களுக்கு ஆண்டவன் நல்ல ஆரோக்கியமும்
  கூடுதலான செல்வ வளமும் தரட்டும்
  உங்கள் தயவில் நாங்களும் இப்படி உலகம்
  அனைத்தையும் நேரடியாகப் பார்ப்பதுபோல்
  பார்த்து அனுபவித்துக் கொள்கிறோம்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது ஆசிகளுக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார் ! இது போன்ற மனதை நிறைக்கும் கருத்துக்கள்தான் என்னை எழுதவும், இது போன்ற இடங்களுக்கு செல்லவும் தூண்டுகிறது ! மிக்க நன்றி !

   Delete
 2. Replies
  1. தாங்கள் தமிழ் மணத்தில் ஓட்டு அளித்தது கண்டு மகிழ்ச்சி !

   Delete
 3. ரமணி ஐயா கருத்து போல்... தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார் ! எனது இந்த பதிவுலக நண்பர்களில் நீங்கள் முக்கியமானவர். உங்களது கருத்துக்கள் எல்லாமே என்னை உற்சாகம் கொண்டு எழுத வைக்கிறது.

   Delete
 4. அழகான இடம்... படத்தை பார்த்த உடன் போகவேண்டும் என்று ஆசை....

  ReplyDelete
  Replies
  1. நன்றி சதீஷ்.... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

   Delete
 5. ஜப்பானை நேரில் பார்த்தது போன்ற அனுபவம் சூப்பர்....!

  ReplyDelete
  Replies
  1. நன்றி மனோ ! மனதில் உள்ளவற்றை சொல்லி என்னை உற்சாகம் கொள்ள செய்து விட்டீர்கள் !

   Delete
 6. சார், நீங்க விரைவில் சந்திரனுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் போய் நின்னு படமெடுத்து பதிவு போடுவீங்கன்னு எதிர் பார்க்கிறேன்!! அருமை, தொடருங்கள். !!!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. ஐயோ, இது வரமா இல்லை சாபமா ?! ஜெயதேவ் சார், இன்னும் இந்த உலகத்திலேயே நிறைய பார்க்க இருக்கும்போது சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் போய் என்ன பார்க்க போகிறேன் ?!

   Delete
 7. Replies
  1. அரிகதொ கோஸை மஸ்தா....... அப்படின்னா ஜப்பானிய மொழியில் ரொம்ப தேங்க்ஸ் அப்படின்னு அர்த்தம் !

   Delete