Wednesday, August 21, 2013

மறக்க முடியா பயணம் - யுனிவெர்சல் ஸ்டுடியோ (பகுதி - 1)

தீம் பார்க்..... சிறு வயதில் எல்லாம் பொருட்காட்சி பார்த்த நமக்கு, முதல் முதலில் இந்தியாவில் சிறியதாக ஆரம்பித்த பார்க்குகளுக்கு மக்கள் பணம் அதிகம் என்று போக மறுத்தார்கள், இன்று எவ்வளவு பணம் கொடுக்கவும் ரெடி என்று சொல்கிறார்கள் ! இந்தியாவில் இருக்கும் தீம் பார்க்குகளில் வெகு சில மட்டும் நன்கு இருக்கிறது. இப்படி எத்தனையோ தீம் பார்க் வந்தாலும் டிஸ்னி, யுனிவெர்சல் தீம் பார்க்குகள் எல்லாம் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலம்..... அப்படி என்னதான் இருக்கிறது இதன் உள்ளே என்று நானும் நினைத்திருக்கிறேன், சிங்கப்பூரில் செண்டோசவில் இருக்கும் யுனிவெர்சல் ஸ்டுடியோ சென்று வரும் வரை....!!
 
 
முதன் முதலில் டிஸ்னி ஆரம்பித்து வைத்தது, இன்று ஒவ்வொரு ஹாலிவுட் சினிமா கம்பெனியும் தீம் பார்க் ஆரம்பித்து, அவர்களது படத்தில் ஹிட் அடித்த கேரக்டர்களை கொண்டு தீம் பார்க் ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தவும் செய்கிறார்கள் ! சிங்கப்பூரில் இது போன்ற ஒன்று திறக்க போகிறார்கள் என்று பேச்சு இருந்ததில் இருந்து இங்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஒரு ஆளுக்கு சுமார் 74 வெள்ளி (இன்றைய மதிப்பில் சுமார் 3600 ரூபாய் ஆகும்) வரை கொடுத்து ஒரு சிறிய டிக்கெட் கொடுக்கிறார்கள் :-) உள்ளே நுழையும்போதே ஏதோ அமெரிக்கா வந்துவிட்டோமா என்று சந்தேகப்படும் அளவிற்கு ஒரு ஹாலிவுட் தெருவை கண்முன்னே நிறுத்துகிறார்கள்.
 

 
 
ஹாலிவுட் ஸ்ட்ரீட் :
 
ஹாலிவுட் என்றால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும் ? படங்கள், மர்லின் மன்றோ, டைனோசர், ஸ்கார்பியன் கிங், கார்ட்டூன் படங்கள் என்று பலவும் நினைவுக்கு வரும். இந்த தெருவில் அமெரிக்கா தெருவில் உள்ளது போல பாப் கார்ன் வண்டிகள், பஞ்சு மிட்டாய், பொம்மைகள், கட்டிடங்கள் என்று எல்லாமே பெரிதாக இருக்கிறது. பளிங்கு போன்ற தரைகள், ஒவ்வொரு கட்டிடத்தின் உள்ளும் கடைகள், பொம்மைகள், உணவகங்ககள் என்று உங்களை அமெரிக்கா அழைத்து செல்கிறது. சில நேரங்களில் திடீரென்று சிலர் ஒரு சிறிய மேடையில் தோன்றி பாப் இசை பாடி ஆடுகின்றனர். அவர்களின் ஒவ்வொரு நடனமும், பாட்டும் எத்தனை நேர்த்தியாய் இருந்தது தெரியுமா ?! கொடுத்த காசு இதற்கே சரியாக போய் விடும் !
 
 

 
மடகாஸ்கர் ரைட் :
 
2005ம் ஆண்டு வெளிவந்த இந்த கார்ட்டூன் படத்தில் ஹீரோ என்பது ஒரு வரிக்குதிரை, சிங்கம், காண்டா மிருகம் மற்றும் ஒட்டக சிவிங்கி ! ஜூவில் இருக்கும் இந்த மிருகங்கள் வெளி உலகத்தை பார்க்க ஆசைபடுகின்றன, இவை தப்பி மடகாஸ்கர் தீவில் ஒதுங்குகின்றன, அங்கு நிகழும் சாகசங்கள்தான் கதை ! ஒரு சிறிய ட்ரைன் போன்ற ஒன்றில் உங்களை உட்கார வைத்து ஒரு குகை போன்ற அமைப்பின் உள்ளே உங்களை கொண்டு செல்கிறார்கள் (டிரைவர் எல்லாம் கிடையாது, எல்லாமே ஆட்டோமாடிக் !), உள்ளே அந்த கதை நிகழ்வதை நீங்கள் பார்க்கலாம்..... பெட்டி உங்கள் மேலே விழுவது போல நகர்வது, மிருகங்கள் ஆடுவது என்று எல்லாமே கலர்புல் !
 



 
 
ஷ்ரெக் அட்வென்ச்சர் :
 
ஷ்ரெக் என்று ஒரு படம் வந்தது யாபகம் இருக்கிறதா ? அந்த படத்தில் வரும் கோட்டையும், ராஜாவும் தான் கதை. இதன் உள்ளே ஒரு தியேட்டர் இருக்கிறது.... இதுவரை 3டி படம் மட்டும் பார்த்தவர்கள், இன்று அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்கிறது இங்கு. 4டி தொழில்நுட்பம் என்பது அந்த படத்தில் நடக்கும் காட்சிகளுக்கு ஏற்ப உங்கள் சீட்டும் அசையும், அங்கு கடலில் தண்ணீர் தெரித்தால் இங்கு உங்கள் மூஞ்சியில் வந்து விழும். உங்களது சீட்டில் எல்லாம் பொருந்தி இருக்கும் ! உதாரணமாக ஷ்ரெக் ராஜா ஒரு ரதத்தில் ஏறி தப்பிக்கிறார், அப்போது ரதம் சாலையில் செல்வதற்கு ஏற்ப உங்களது சீட்டும் மேடு பள்ளத்தில் செல்வது போல குலுங்கும் ! கண்டிப்பாக ஒரு முறை செல்ல வேண்டிய ஒன்று !
 



ஜுராசிக் பார்க் :

இந்த படம் வந்த போது எவ்வளவு உற்சாகத்துடன் பார்த்து இருப்போம், அதை நாம் மீண்டும் அனுபவிக்க இந்த பார்க் செய்து இருக்கிறார்கள். இங்கு நிறைய ரைட் இருந்தாலும் முக்கியமானது தண்ணீரில் படகு போன்ற ஒன்றில் செல்வது. ஒரு வட்ட வடிவ படகில் உங்களை உட்கார வைத்து தண்ணீர் அது செல்லும் வழியெல்லாம் உயிரோடு இருக்கும் டினோசர் போல செட் செய்து அது அசையும் வண்ணம் வைத்து இருக்கின்றனர். காடு போன்ற செட், தண்ணீர் பயணம், ஒரு கட்டிடத்தின் உள்ளே செல்லும்போது அங்கு டினோசர் உங்களை கடிக்க வருவது போல எபக்ட் எல்லாம் வாவ் ரகம் !



 

 
இன்னும் நிறைய நிறைய ரைட் இருக்கிறது, அடுத்த வாரம் வரை பொறுங்கள் ! அதுவரை இந்த ரைட் சென்றதை நினைத்திருங்கள்......
 
Labels : Universal studio, Singapore, Suresh, Kadalpayanangal, ride, adventure, theme park

19 comments:

  1. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் ஒருமுறை சென்றிருக்கிறேன்.. அருமையான பொழுதுபோக்கு. முதல் முதல் 4Dபார்த்த அனுபவமும் இவ்விடமே...

    ReplyDelete
    Replies
    1. அந்த அனுபவத்தை பதிவாக எழுதி இருந்தால் இணைப்பு தரவும்....தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஆவி !

      Delete
  2. எல்லாம் வாவ் ரகம்...! அட்டகாசம்... கூடவே பயணித்தோம்... ரைட் ரைட்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் ! தங்களை பதிவர் சந்திப்பில் சந்திக்க ஆவலோடு இருக்கிறேன்....!

      Delete
  3. நற! நற! இப்படியா என் வயிறை பொசுங்க வைப்பது. இனி இந்த பக்கம் வரவே மாட்டேன். இதெல்லாம் படிச்சு, அங்கெல்லாம் கூட்டி போங்கன்னு வீட்டுக்காரர்கூட செம சண்டை. அவர் கொலை வெறியோடு உங்களை தேடிகிட்டு இருக்கார். தப்பிச்சுக்கோங்க சகோ!

    ReplyDelete
    Replies
    1. மாட்டி விட்டுடீங்கலெ சகோதரி ! அட விடுங்க.....அவர்கிட்ட நான் பேசிக்கிறேன் ! அட ஏன் இந்த கொலை வெறி...... இந்த பக்கத்துக்கு நீங்க வரலன்னா அவ்வளவுதான் :-)

      Delete
  4. ராஜி அடுத்த பதிவர் சந்திப்பு சிங்கப்பூராமே..

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க அமுதா மேடம்......எல்லோருக்கும் ரெண்டு ரெக்கை வாங்கி கொடுக்க சொல்லி இருக்காங்க ராஜி !

      Delete
  5. தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மிக அருமையாக உள்ளன ஆப்ரிக்கா சுரங்கத்திலிருந்து ஆஸ்திரேலியா கடற்கரை வரை பாஸ்போட் விசா இல்லாமல் தங்கள் செலவில் எங்களையும் ஊர்சுற்றி காண்பித்துகொண்டிருப்பது நன்றாகவே உள்ளது இறைவன் தங்களுக்கு ஆயுளையும் பொருளையும் அதிகமாகவே வழங்கட்டும் தொடரட்டும் தங்களது பயணங்கள் வெற்றிகரமாக நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக மிக நன்றி சங்கர் ! இறைவன் கொடுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான் சென்று வந்ததை உங்களை போல நண்பர்களுக்கும் இதை போல் சொல்கிறேன், அதை நீங்கள் ரசித்து இப்படி பாராட்டுவது எனக்கு உற்சாகம் அளிக்கிறது. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete
  6. நீ கலக்கு தலைவா.............

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெயதேவ், பதிவர் சந்திப்பு வருகிறீர்களா ? தங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன் !

      Delete
  7. இன்று எனது தளத்தில்

    கண்ணன் வருவானா?முத்தம் தருவானா?

    http://kaviyazhi.blogspot.com/2013/08/blog-post_28.html

    ReplyDelete
  8. Replies
    1. எச்சில் ஊருதோ.........நன்றி கிருஷ்ணா !

      Delete