சென்ற இரு பகுதிகளில் சிவகாசி வெடி தொழிற்சாலை, வெடி தயாரிப்பு, திரி தயாரிப்பது, வெடி மருந்து என்று பார்த்தீர்கள் இல்லையா ?! இந்த வாரம் வாருங்கள் புது வெடி தயாரிப்பு, பட்டாசு வியாபாரம், தொழில் போட்டிகள் என்று நிறைய பார்க்கலாம். முந்தைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்..... பகுதி - 1, பகுதி - 2 . வானம் பார்த்த கரிசல்காட்டு பூமியான விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் பிரதானம். வேறு தொழில்கள் இன்றி தவிக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரமே இந்த பட்டாசு தொழில்தான். சிவகாசியை சேர்ந்த காகா சண்முகநாடார், அய்யநாடார் ஆகிய இருவர்தான் கடந்த 1923 ஆம் ஆண்டு சிவகாசியில் முதன் முதலில் தீப்பெட்டி தொழிற்சாலையை ஆரம்பித்தவர்கள். அதுவரை இந்தியாவில் பட்டாசு என்றாலே என்னவென்று தெரியாத நிலை. சீனா மட்டும்தான் அப்போது பட்டாசு தொழிலில் கொடி கட்டி பறந்தது. வறண்ட பூமியான சிவகாசியில் இருந்தால் பிழைக்க முடியாது என்று நினைத்த பள்ளி நண்பர்கள் சண்முகநாடார், அய்யநாடார் ஆகிய இருவரும் பிழைப்புக்காக கொல்கத்தா சென்றனர். அங்கு தீப்பெட்டி தொழிலை கற்றுக்கொண்டு சிவகாசி பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலைகளை ஆரம்பித்தனர். பிறகு அவர்களது பார்வை பட்டாசு தயாரிப்பு மீது திரும்பியது.

சீனாவில் பட்டாசு தயாரிப்பை ‘சும்மா’ பார்வையிட சென்ற அவர்கள், குளிர் பிரதேசமான சீனாவில் பட்டாசுகளை காய வைப்பதற்கு நாள் கணக்கில் நேரம் விரயமாவதை கண்டனர். அவர்களுக்கு அப்போதுதான் அந்த ஐடியா பிறந்தது. வறண்ட பூமியான சிவகாசி பகுதியில் பட்டாசை தயாரித்தால், கொளுத்தும் வெயிலில் ரொம்ப சீக்கிரம் பட்டாசு தயாரிக்கலாமே என்ற எண்ணம் வந்தது. உடனே சீனாவில் தங்கி பட்டாசு தொழிலை கற்ற அவர்கள், சிவகாசியில் சின்னதாக பட்டாசு தொழிலை தொடங்கினர். முதன் முதலாக அவர்கள்

சீனாவில் பட்டாசு தயாரிப்பை ‘சும்மா’ பார்வையிட சென்ற அவர்கள், குளிர் பிரதேசமான சீனாவில் பட்டாசுகளை காய வைப்பதற்கு நாள் கணக்கில் நேரம் விரயமாவதை கண்டனர். அவர்களுக்கு அப்போதுதான் அந்த ஐடியா பிறந்தது. வறண்ட பூமியான சிவகாசி பகுதியில் பட்டாசை தயாரித்தால், கொளுத்தும் வெயிலில் ரொம்ப சீக்கிரம் பட்டாசு தயாரிக்கலாமே என்ற எண்ணம் வந்தது. உடனே சீனாவில் தங்கி பட்டாசு தொழிலை கற்ற அவர்கள், சிவகாசியில் சின்னதாக பட்டாசு தொழிலை தொடங்கினர். முதன் முதலாக அவர்கள்
தயாரித்தது சின்ன அளவிலான ‘சீனி’ வெடியைத்தான். பிறகு என்ன சிவகாசி பகுதியில் பட்டாசு தயாரிப்பு தொழில் சக்கை போடு போட ஆரம்பித்தது. அடுத்தடுத்து இவர்களது வாரிசுகளும் இதே பட்டாசு தொழிலில் இறங்க, இப்போது சிவகாசியில் பட்டாசு தொழில் ஆலமரம் போல் பல கிளைகள் பரப்பி விருட்சமாகி நிற்கின்றது. இப்போது சின்னதும், பெரியதுமாக 750க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இங்கு உள்ளன. குட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசியில் இருந்து இந்தியாவுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் பட்டாசுகள் ஏற்றுமதியாகின்றன. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் பட்டாசு தயாரிப்பில் சிவகாசிக்குத்தான் 2வது இடம். ஒவ்வொரு ஆண்டும் 1,200 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அரசின் புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
இப்படி வந்த வெடிகளுக்கும், தீபெட்டிக்கும் பேப்பர் தேவைப்பட்டது..... அது லேபல் ஆக பிரிண்ட் செய்யப்பட்டது, இதனால் சிவகாசி பகுதிகளில் பிரிண்டிங் கொடி கட்டி பறந்தது, இன்றும் பறக்கிறது. (சிவகாசி பிரிண்டிங் பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம் !!). ஒரு பட்டாசு தொழிற்சாலையில் நிரந்தர வேலையில் இருப்பவர்கள் இருந்தாலும், சீசன் டிமாண்ட் பொருத்து காண்ட்ராக்ட் தொழிலாளிகளும் இருக்கிறார்கள். பொதுவாக வெடி செய்யும்போது அந்த ரூமில் நான்கு பேருக்கு அதிகமாக இருக்க கூடாது, செல் போன் வைக்க கூடாது என்றெல்லாம் விதிகள் இருப்பினும், அவர்களின் அறியாமையால் அதை செய்யும்போது வெடி விபத்து நிகழ்கிறது. சிவகாசியில் பெரிய வெடி தொழிற்சாலைகள் பல விபத்து தடுத்தல் சாதனங்கள், ஸ்ட்ரிக்ட் சட்டங்கள் என்று இருந்தாலும், அந்த கம்பெனியில் வேலை பார்த்து வெளியில் வரும் சிலர் சொந்தமாக தொழில் செய்ய ஆசைப்பட்டு சிறிய முறையில் இதை செய்ய ஆரம்பிக்கும்போது இப்படி நிறைய வெடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
பட்டாசு செய்வதற்கும், பேக் செய்வதற்கும் என்று பண்டில் பண்டிலாக வந்து இறங்கும் பேப்பரில் கலர் கலராய் சிரிக்கும் மத்தாப்பு வர்ணத்தில் வேலை செய்யும் இந்த ஆட்கள் எல்லோருக்கும் சம்பாதிக்க இந்த பகுதியில் இதை விட்டால் வேறு தொழில் தெரியாது. பட்டாசு தொழிற்சாலைகள் ஊருக்கு மிகவும் வெளியே (நான் சென்றபோது ஊரில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது !!) இருப்பதனால், காலையிலேயே சாப்பாடு கட்டி கொண்டு வந்து அந்த பொட்டல் வெளியில் மருந்தின் வாடையில் அவர்கள் வயிற்ருக்கு வேலை செய்வதை பார்த்தால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்படி இவர்கள் செய்யும் பட்டாசுகள் இங்கே 100 ரூபாய்க்கு வாங்கி சுமார் 300 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். பொதுவாக இந்த பட்டாசுகளுக்கு எப்போதுமே மார்க்கெட் இருக்கிறது, தீபாவளி சமயங்களில் அதிகம் !
புது பட்டாசு.....பொதுவாக பட்டாசு என்றால் சரம், பூந்தொட்டி, சங்கு சக்கரம், லட்சுமி வெடி என்று சில வகைகள் இருக்கும், ஆனால் இன்று நிறைய புதிய பட்டாசு வகைகள் வருகின்றன கவனிக்கீர்களா ?! இப்படி புதிய பட்டாசுகளை அறிமுகபடுதுவதில் இங்கு போட்டி அதிகம். இங்கு படிக்காத விஞ்ஞானிகள் நிறைய இருக்கின்றனர் என்பதை நான் அங்கு இருந்தபோது நேரிலேயே பார்த்தேன் ! ஒரு புதிய பட்டாசு ஐடியா வந்ததுமே, முதலாளியிடம் சென்று சொல்லி, அதை டெஸ்ட் செய்து பின்னர் அதை விற்ப்பனைக்கு கொண்டு வருகின்றனர். உதாரணமாக நான் அங்கு இருந்தபோது, ஒரு வெடி மேலே போகணும், முதலில் சிகப்பு கலர் மழை, பின்னர் இன்னும் கொஞ்ச தூரம் சென்று பச்சை கலரில் வெடிக்கனும் என்று சொன்னேன். உடனே ஒரு குழல் எடுத்து முதலில் ஒரு மருந்து, அதன் மேலே இன்னொரு சிறிய குழாய் போட்டனர். முதலில் இதை பற்ற வைக்கும்போது கீழே போட்ட மருந்து வெடித்து இந்த சிறிய குழாயினை மேலே போக வைக்கிறது. பின்னர் அந்த சிறிய குழாயில் இரண்டு வகை மருந்தை மிக்ஸ் செய்து ஒரு பக்கம் அடைத்து விட்டு, பின்னர் மண் கொண்டு நடுவில் மூடுகின்றனர். பின்னர் அடுத்த பகுதியில் இன்னொரு விதமான மருந்து கொண்டு அடைத்தனர். இந்த சிறிய குழாய் தூக்கி வீசப்படும்போது, அதில் ஒரு திரி பற்றுகிறது, இதனால் முதலில் ஒரு பகுதி வெடித்து சிவப்பு மழை வரும், அது முடியும்போது மீண்டும் அது வெடித்து அந்த இன்னொரு பகுதியான குழாயை தூக்கி மேலே அடிக்க, அது பச்சை மழையை பொழிகிறது. சுமார் இரண்டு மணி நேரத்தில் புது வெடி ரெடி !! ஆனால் இது விற்பனைக்கு வரும்போது வெடிக்கு பெயர், இன்னும் நிறைய டெஸ்டிங், இன்னும் மெருகெத்துவது, பாக்கிங் என்று நிறைய இருக்கிறது ! என்ன..... நான் அந்த வெடியை வெடித்தேனா என்று கேட்கிறீர்களா ? நான் அங்கு இருந்து வரும்போது எனக்கு பரிசே அதைதான் கொடுத்தார்கள், வீட்டிற்க்கு வந்து வெடித்தேன் !
இவ்வளவு சிறப்பு கொண்ட சிவகாசி வெடிக்கு எதிரி என்பது மழையும், விபத்தும்தான் ! மழை நேரத்தில் வெடி மருந்தை காய வைக்க முடியாது, விபத்து ஏற்படும்போது அந்த பகுதியில் இருக்கும் எல்லா வெடி தொழிற்சாலைக்கும் செக்கிங் நடக்கும், நிறைய புதிய விதிமுறைகள் வரும் என்று சிரமங்கள் வரும். எவ்வளவு இருந்தாலும் இவர்கள் இந்த வெடியின் மூலம் பலரின் முகத்தில் புன்னகையை வரவைக்கின்றனர் என்பது நிச்சயமான உண்மை. இந்த வருட தீபாவளிக்கு புதுசா ஒரு வெடி போடலாம் வாங்க....!!
Labels : Oor special, sivakasi, crackers, fire works, suresh, kadalpayanangal, fire
குட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசியில் இருந்து இந்தியாவுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் பட்டாசுகள் ஏற்றுமதியாகின்றன. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் பட்டாசு தயாரிப்பில் சிவகாசிக்குத்தான் 2வது இடம்.
ReplyDeleteவியக்கவைக்கும் தகவல்கள்..
நீங்கள் இந்த பதிவை ரசித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி நண்பரே.... நமது ஊரில் இது போன்ற ஸ்பெஷல் எல்லாம் இருக்கிறது என்று நான் ஆரம்பித்த இந்த பதிவு அர்த்தம் உள்ளதாகிறது !
Deleteபோன வாரம்கூட சிவகாசில 3 இல்ல 4 ஃபேக்டரில தீ விபத்து ஏற்பட்டது. என்னை இப்போலாம் பட்டாசு ஈர்ப்பதில்லை :-(
ReplyDeleteசகோதரி.... அது என்னையும் கலங்க வைத்த விபத்து ! எனது பயணம் உங்களை போன்றோர்களை சென்று அடைவது கண்டு மிக்க மகிழ்ச்சி !
Deleteகாசு கரியாவதை கண்கூடாக பார்க்கிறோம் என்றாலும் அங்கு பணிபுரியும் தொழிலாளர் நலன் கருதி கொஞ்சம் வெடிக்கலாம்.. புதிய தகவல்கள்..
ReplyDeleteநன்றி ஆவி..... ஆம், கலர் கலர் வண்ணங்களை தரும் மத்தாப்பு வாங்கி இவர்களை மகிழ்விப்போம் !
DeleteStay inform...!
ReplyDeleteநன்றி கிருஷ்ணா !
Delete