Friday, August 2, 2013

டெக்னாலஜி - கையளவு மின்சாரம் !

தமிழ்நாட்டில் மின்சாரம் என்றாலே கனவு என்று இருந்த வேளையில், மின்சார செலவுகள் எகிறும்போது, மின்சாரம் என்று சொன்னாலே ஷாக் அடிக்கும் என்று இருந்தபோது, சில கிராமங்களில் எல்லாம் மின்சாரம் எல்லாம் பணக்கார வீட்டில் மட்டும்தான் இருக்கும் என்று நினைக்கும்போது, மின்சார வாரிய ஆட்களிடம் பேசுவதற்கு சும்மா இருக்கலாம் என்று அவர்களின் டார்ச்சரை நினைக்கும்போது உங்களிடம் ஒரு கையளவு பெட்டி போன்ற ஒன்றை கொடுத்து இதில் இருந்து மின்சாரம் கிடைக்கும், இதுதான் இன்றைய டெக்னாலஜி என்று சொன்னால் என்ன நினைப்பீர்கள் ?


இன்னும் சில வருடங்களில் உங்கள் வீட்டிற்க்கு மின்சாரம் என்பதை உங்களின் சமையல் அறையின் மூலையில் தயாரிக்கலாம். இதை கண்டு பிடித்தவர் ஒரு இந்தியர் என்பதில் இன்னும் பெருமை கொள்ளுங்கள் ! பியுவல் செல் (Fuel Cell) என்பதை நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம், அதுதான் மாற்று சக்தி என்று அதை நிறைய பேர் பல வகையில் முயன்று கொண்டிருக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டிற்க்கு மின்சாரம் தயாரிக்க ஒரு ரூம் பெரிய பியுவல் செல் வேண்டும், அதை இன்று கையளவு மின்சாரமாக மாற்றி காட்டி இருக்கின்றனர். கீழே இருக்கும் வீடியோ சுமார் பத்து நிமிடம் வரும், ஆனால் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று !


இன்னமும் பியுவல் செல் பற்றி தெரியாதவர்கள், இங்கே கீழே இருக்கும் வீடியோ கண்டு தெளிந்து கொள்ளலாம் !


Labels : Technology, Suresh, Kadalpayanangal, Fuel cell, Bloom energy, electricity, cube

25 comments:

  1. நன்றி... நல்லதொரு தகவல்....!! எனது வலைத்தளத்திலும் இதை பதிந்துகொள்ளலாமா?

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பரே..... நமது இந்தியரின் பெருமையை பலரும் அறியட்டும் ! நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  2. இதை கண்டு பிடித்தவர் ஒரு இந்தியர் என்பதில் இன்னும் பெருமை கொள்ளுங்கள் !

    பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ! இந்தியர்களது மூளை சிறியது இல்லை என்று உலகுக்கு உணர்த்தும் கண்டுபிடிப்பு ! பாரட்டியதற்கு நன்றி !

      Delete
  3. அறியாத அரிய தகவல்
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. ரமணி சார்.... உங்களது வருகையும், கருத்தும் எனக்கு மகிழ்ச்சி அளித்தது. நன்றி !

      Delete
  4. Replies
    1. தமிழ் மணத்தில் ஓட்டு அளித்தமைக்கு நன்றி !

      Delete
  5. கண்டுபிடித்தது ஒரு இந்தியரா ? பாராட்டுகள் பாராட்டுகள்...!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மனம் திறந்த பாராட்டு அந்த இந்தியருக்கு முழுதாய் போய் சேரட்டும்.... நன்றி !

      Delete
  6. Replies
    1. ஜெய் ஹிந்த்..... நன்றி நண்பரே !

      Delete
  7. இந்தியரா கொக்கா?!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ! தங்கள் வருகைக்கு, கருத்திருக்கும்.....

      Delete
  8. Replies
    1. நன்றி சதீஷ் ! தங்கள் வருகையும், கருத்தும் எனக்கு சந்தோசம் அளித்தது....

      Delete
  9. இந்தியன் என்றால் இந்திக்காரனா? தமிழனா?

    ReplyDelete
    Replies
    1. தெரியவில்லையே நண்பரே.... தமிழன் என்று தெரிந்தால் இன்னும் பெருமையாய் இந்த பதிவை எழுதி இருப்பேனே.....நன்றி தங்கள் வருகைக்கு !

      Delete
  10. price is tooooo much. Note it.

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே, இப்போது பணம் அதிகம்தான், ஆனால் இது குறைந்த அளவில் வருவது வெகு தூரத்தில் இல்லை....நன்றி !

      Delete
  11. பெருமைப்படும் தகவல்... நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் ! உங்களது கருத்து கண்டும் எனக்கு பெருமைதான் !

      Delete