Monday, August 12, 2013

சாகச பயணம் - கோல்ப் கார்ட் ரைட்

கோல்ப் என்னும் ஆட்டம் கேள்வி பட்டு இருக்கிறீர்களா ? சில காலத்திற்கு முன்பு வரை எனக்கும் இந்த ஆட்டத்தை பற்றி தெரியாது. ஆனால் நான் வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும்போது எல்லாம் எனது நண்பர்கள் இதை பற்றி சிலாகித்து பேச ஆரம்பித்தபோது எனக்கும் ஆர்வம் அதிகமானது. பின்னர் அவர்களுடன் சென்று சென்று நானும் ஆரம்ப பாடத்தை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். கோல்ப் விளையாட நல்ல இடம் தேவை, இதற்காக நிறைய பேர் பல இடங்களுக்கு தேடி தேடி செல்வார்கள். நான் சிங்கப்பூரில் இருந்தபோது ஒரு முறை அங்கு இருந்த கிளப்பில் நண்பர்களுடன் சென்றேன், பின்னர் பின்டான் தீவு (இந்தோனேசியா) சென்று இருந்தபோது எனக்கு அங்கு இருந்த ஒரு ரிசொர்டில் தங்கினேன், அங்கு 18 ஹோல் எனப்படும் கோல்ப் இருந்தது ! அங்கு எனக்கு கோல்ப் விளையாடுவதை விட அங்கு இருந்த கோல்ப் கார்ட் என்னும் ஒன்றை ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம்தான் அதிகம் இருந்தது.


கோல்ப் விளையாட்டில் மைதானம் என்பது மிகவும் பெரியதாக இருக்கும். பொதுவாக நாங்கள் விளையாடும்போது ஒவ்வொரு முறை பந்தை அடித்தபின் அதை நோக்கி மெதுவாக நடைபோட்டபடி பேசிக்கொண்டே செல்வோம். அப்படி அதிகாலையில், பச்சை புல்வெளியில், காற்று இதமாக வீசும்போது பேசி கொண்டே போவது என்பது வாக்கிங் உடன் விளையாட்டை மிக்ஸ் செய்த அந்த கோல்ப் என்பது சில நேரங்களில் புதிய யோசனையை தோற்றுவிக்கும், அது மட்டும் இல்லாமல் நிறைய மனிதர்களை பார்க்கலாம். ஆனால் இது நிறைய செலவாகும், நானே இது வரை மெம்பர் ஆக உள்ளவர்களுடன் மட்டுமே சென்றிருக்கிறேன், மெம்பர் ஆவதற்கே நிறைய காசு ! அப்படி 18 ஹோல் கொண்ட கோல்ப் மைதானத்தில் விளையாட சென்றபோது நிறைய நடக்க வேண்டி இருந்தது, அதற்காக நாங்கள் இருவரும் ஒரு கோல்ப் கார்ட் ஒன்று வாங்கி கொண்டோம். இது இரு கோல்ப் விளையாட்டு வீரர்களை, அவர்களின் கோல்ப் உபகரணங்களுடன் தாங்கி செல்லும்.  என்னதான் பெரிய கார் எல்லாம் ஓட்டி இருந்தாலும் சிறு பிள்ளை போல இதை ஓட்டுவதில் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது !


இன்று இதை ரயில்வே ஸ்டேஷனில் நடக்க முடியாதவர்களுக்கு என்று பார்க்கலாம் ! சில நேரங்களில் பெரிய மாளிகைகளில் வாயிலில் இருந்து உள்ளே செல்லவும் பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன். அன்று நாங்கள் இதை வைத்து விளையாடியபோது, விளையாட்டு சீக்கிரமே முடிந்தது, பின்னர் நான் அதை வைத்து பீச் ஓரங்களில் எல்லாம் ஓட்டி கொண்டிருந்தேன். இது பேட்டரியில் இயங்குவதால் சுற்று சூழல் மாசுபடாது. ஒரு அளவிற்கு வேகமாகவும் செல்லும் இதில் பயணம் செய்வது என்பது ஒரு விதமான அனுபவம். என்னதான் பல கார்களை ஒட்டி இருந்தாலும், ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அதை ஓட்டினேன் என்று சொல்லலாம்.


என்ன சின்ன பிள்ளைதனமா இருக்கே.... என்று சொல்பவர்களுக்கு மட்டும்..... இந்த கோல்ப் கார்ட் மேலே நான் சொன்னது போல் மட்டும் இருந்தாலும், இதையும் பணம் படைத்தவர்கள் தங்களது ஸ்டேடஸ் காண்பிப்பதற்கு உபயோக்கின்றனர். கீழே இருக்கும் படங்களை பாருங்கள் புரியும்...... அது மட்டும் இல்லை கீழே இருக்கும் வீடியோ பார்த்தால் ஒரு ஊரே இந்த வண்டிகளை பயன் படுத்துவது தெரியும். சென்னையில் டூ வீலர் பயன்படுத்துவது போல இந்த ஊரில் எல்லோரும் தங்களது ஸ்டேடஸ் பொறுத்து இந்த கோல்ப் கார்ட் பயன்படுத்துகின்றனர்..... இப்போது சொல்லுங்கள் கோல்ப் கார்ட் என்றால் சும்மாவா என்ன ? சும்மா வாங்களேன்.... நாம ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம் !


இந்த வீடியோவை மிஸ் செய்யாதீர்கள்......

Labels : Saagasa payanam, golf cart ride, suresh, Kadalpayanangal, adventure ride

13 comments:

 1. என்னதான் பெரிய கார் எல்லாம் ஓட்டி இருந்தாலும் சிறு பிள்ளை போல இதை ஓட்டுவதில் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது !

  அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே ! ஆம் சில நேரங்களில் நமக்குள் இருக்கும் சிறு குழந்தை முழித்து கொள்கிறது !

   Delete
 2. பார்க்கவே சந்தோசமாகத்தான் இருக்கின்றது.

  சுற்றுச்சூழல் மாசுபடாது என்பது மிகவும் நல்ல செய்தி.

  எத்தனைவிதங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி மாதேவி..... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

   Delete
 3. வாவ்... கலக்கல் சுரேஷ்... சரி கோல்ப்ல சரியா பந்தை அடிச்சீங்களா...

  ReplyDelete
  Replies
  1. அது ஒரு தனி பதிவே வரும் அளவு காமெடி ஆன விஷயம் சதீஷ் ! நன்றி !

   Delete
 4. Replies
  1. சும்மா பேரை கேட்டாலே அதிருதுல்ல..... நன்றி !

   Delete
  2. சும்மா பேரை கேட்டாலே அதிருதுல்ல..... where ? (bangalore ...!)

   Delete
 5. இந்த வடியால் கோல்ப் மைதானம் பாழாயிடாதா சார்?

  ReplyDelete
  Replies
  1. இல்லை சார்..... இது புல் தரையை பாழாக்காது. இது நமது காரை போல வெயிட் அதிகம் இல்லை, அது மட்டும் இல்லாமல் இது போவதற்கு என்று தனி பாதையும் சில நேரங்களில் போட்டு இருப்பார்கள்....நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

   Delete
 6. நான் கூட(grand theft auto)கேம்ல இந்த வண்டிய ஒட்டி இருக்கன்... ஆனா நேர்ல பார்த்தது கூட இல்ல :)

  ReplyDelete
  Replies
  1. அட போங்க ராஜா, அந்த கேமில் ஓட்ட அந்த வண்டிதானா கிடைச்சது..... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

   Delete