Tuesday, August 13, 2013

ஊர்ல சொந்தமா ஒரு வீடு....!

சமீபத்தில் எனது நண்பன் ஒருவனது வீட்டிற்க்கு சென்று இருந்தேன், அப்போது எனக்கு மெயில் செக் செய்யலாம் என்று அவனது லேப்டாப் கேட்டேன். அவன் எனக்கு கொடுத்தபோது, அதில் ஓபன் ஆகி இருந்த ஒரு போல்டர் முழுக்க வீடுகள் படம். நான் ஏதோ அவனது பூர்வீக வீடு அல்லது சொந்தகாரர்கள் வீடாக இருக்கும் என்று முதலில் நினைத்தேன், ஆனால் ஒவ்வொரு வீடும் வித்யாசமாக இருந்தது, என்னவென்று விசாரித்தபோது அவன் கண்களில் கனவுடன் "மச்சி..... நல்ல பெரிய பிளாட் வாங்கி, முன்னாடி கொஞ்சம் கார்டன், அதுல ஒரு வேப்ப மரம், அங்க ஒரு ஊஞ்சல், முன்னாடி திண்ணை, வீட்டுக்குள்ள போன உடனே சிறிய முற்றம்....." என்று சொல்லிக்கொண்டே போனான். அவன் கட்டபோகும் கனவு வீட்டிற்க்கு மெருகெற்றுவதர்க்காக அவன் அவ்வப்போது பார்க்கும் அழகிய வீடுகளை இப்படி சேர்த்து வைத்திருக்கிறான். எல்லோருக்கும் சொந்தமாக ஒரு வீடு என்பது ஒரு கனவாக இருந்தாலும், நமது சொந்த ஊரில் இந்த நகரத்து கூண்டு வீடுகள் போல இல்லாமல் பெரிய வீடாக இருக்க வேண்டும் என்ற கனவு கண்டிப்பாக இருக்கிறது இல்லையா ?! யோசித்து பாருங்கள், உங்களுக்கும் அந்த கனவு இருக்கிறதா இல்லையா...... சரி, அந்த வீடு கட்டுவீர்கள் என்று வைத்து கொள்வோம், பின்னர்......எல்லோரும் அந்த வீடு கட்ட வேண்டும் என்று சிந்திக்கிறார்களே தவிர, அந்த வீட்டில் வசிப்பது போல கனவு காண்பதில்லை என்பதுதான் இங்கு சோகமே. நினைத்து பாருங்கள், நீங்கள் கனவில் கட்டும் அந்த வீட்டில் வசிப்பது போல கனவு வருமா, இல்லை அந்த வீட்டை கட்டுவதுபோல் மட்டும் நீங்கள் கனவு காண்கிறீர்களா ?நினைவுகளின் அடுக்குகளில் தேடி பார்த்தால் எனது ஊரில் எந்த வீட்டிற்க்கும் நம்பர் சொல்லி அழைத்ததில்லை, எல்லா வீட்டிற்க்கும் ஒரு பட்ட பெயர் உண்டு, அதை சொல்லித்தான் அந்த வீட்டில் உள்ளவரையும் அழைப்பார்கள். கார வீடு, மச்சு வீடு, பெரிய தூண் வீடு, பச்சை வீடு, கூரை வீடு, பெரிய வீடு, நாதாங்கி வீடு, மண்ணு வீடு, சாயக்காரர் வீடு, ஜன்னல் வீடு, கோவில் வீடு, முட்டு வீடு, தனி வீடு, கிழக்கு பார்த்த வீடு, வேலி போட்ட வீடு, மாடி வீடு, கடை வீடு, தோட்டம் வீடு, வேப்ப மர வீடு, ரோஜா தோட்டம் வீடு என்று பல பல பெயர்கள். உங்களது வீட்டிற்க்கு அன்று என்ன பெயர் இருந்தது என்று யோசித்து பாருங்கள்...... இன்று உங்களது வீட்டை என்னவென்று சொல்கிறார்கள் ? இன்று எல்லோரும் நகரத்தில் அடுக்கு மாடி வீட்டில் வசிக்கிறோம், எல்லோருக்கும் ஒரு நம்பர் இருக்கிறது, எல்லா வீடும் ஒரு மாதிரி அழைப்பதால் இன்று நமது வீடிற்கு பெயர் இல்லை ஆனால் கைதி போல ஒரு நம்பர் உண்டு !
சமீபத்தில் எனது நண்பனின் திருமணம் என்பதால் திருவல்லா (கேரளா) செல்ல வேண்டி இருந்தது, பச்சை பசேல் என்ற கிராமங்கள், பெரிய கலைஅம்சம் உள்ள வீடுகள் என்று பார்ப்பதற்கே இனிமையாக இருந்தது. நாங்கள் அங்கு இருந்த ஒவ்வொரு நிமிடமும் அங்கு இருந்த வீடுகளை மிகவும் ரசித்தோம். ஒவ்வொரு வீடும் வெகு நேர்த்தியாக, அழகாக, அரண்மனைபோல கட்டபட்டிருந்தது ! எல்லார் வீட்டின் முன்னும் ஒரு கார் இருந்தது, சில வீடுகளில் எல்லாம் ஆடி, BMW போன்ற விலை உயர்ந்த கார்கள் நின்றது, ஆனால் ஒன்று மட்டும் இந்த வீடுகளில் குறைந்தது....... மனிதர்கள் ! இங்கு இருக்கும் எல்லோரும் வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் இருக்கிறார்கள், ஊரில் சொந்தமாய் ஒரு வீடு வேண்டும் என்ற கனவினால் நன்கு சம்பாதித்து அதை ஒரு அரண்மனை போல கட்டி வைக்கின்றனர், அதில் காவலுக்கு அவர்களது பெற்றோர்களை வைத்து விட்டு, வாரம் ஒரு முறை வீட்டை பற்றி விசாரிக்கின்றனர். ஊரில் சொந்தமாக அரண்மனை போல வீடு இருந்தும் பலர் வெளிநாடுகளில், பாலைவனங்களில் என்றேனும் நான் எனது சொந்த வீட்டின் முன்பு வைத்த வேப்பமர நிழலில் சேர் போட்டு உட்காருவேன் என்ற அந்த கனவுடன்தான் உறங்க போகிறார்கள், ஆனால் அந்த காலமும் நேரமும் வராமலே சென்று விடுகிறது இல்லையா ?! நகரத்து சுகங்களில் இருந்து வெளியே வருவதற்கு உடம்புக்கு முடியவில்லை, மனம் மட்டும் வெளியேறுவதற்கு தவிக்கிறது !
வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்களை சந்திப்பது, அவர்களுடன் பேசுவது என்பது எப்போதுமே சந்தோசமான விஷயம். சிங்கப்பூரில் இப்படி நிறைய பேர் இருப்பார்கள், நான் சென்ற முறை அங்கு எனது அலுவல் விஷயமாக சென்று இருந்தேன். அங்கு துவாஸ் ஏரியா என்பது சிங்கப்பூரின் கடைசி எனலாம், அங்கு நிறைய கட்டிடங்கள் உருவாகி வருகிறது, இதனால் நிறைய தமிழர்கள் அங்கு தங்கி, உண்டு, உறங்கி வருகிறார்கள். அன்று அலுவலால் நேரமானது, டாக்ஸி கிடைக்கவில்லை..... அங்கு இருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன். அப்போது அந்த பேருந்து நிறுத்தம் அருகில் ஒருவர் போனில் பேசி கொண்டு இருந்தார், வெகு நேரமாக செங்கல், ஜல்லி, டிசைன் என்று வார்த்தைகள் கேட்டு கொண்டு இருந்தன. சிறிது நேரம் சென்று அவர் பேசி முடித்துவிட்டு எனது அருகில் வந்து ஒரு பேப்பரில் ஏதோ எழுதும்போது நான் அவரிடம் என்னங்க தமிழா என்று அந்த பாலைவனமான பேருந்து நிறுத்தத்தில் பொழுதை போக்குவதற்கு கேட்டேன். சட்டென்று கண்ணில் வெளிச்சம் வர என்னை பார்த்த அவர், ஆமாம்ங்க நீங்க எந்த ஊர் என்று பேச ஆரம்பித்தோம். அவர் என்னிடம் இப்போ நம்ம ஊரில் சிமெண்ட் என்ன விலை சார், அங்க பாத் டப் எல்லாம் கிடைக்குதா என்று கேட்க்க ஆரம்பித்தார். சிங்கப்பூரில் அவர் பார்ப்பது உடலை உருக்கும் வேலை, ஆனால் சொந்த ஊரில் ஒரு சிறிய இடம் வாங்கி சிறுக சிறுக சேமித்து, இங்கிருந்து பணம் அனுப்பி வீடு கட்டுகிறார். அவர் 100 வார்த்தை பேசினால் அதில் 80 வார்த்தைகள் அவர் கட்டும் வீடை பற்றிதான் இருந்தது...... நான் எப்போது அந்த வீட்டில் சந்தோசமாக வாழ போகிறீர்கள் என்றபோது, அவர் கண்ணில் சோகத்துடன், முடிஞ்ச மட்டும் உழைக்க வேண்டியதுதான் சார், அப்புறம் அங்க போய் இருக்க வேண்டியதுதான் என்றபோது, அந்த நாள் எப்போது என்பது அவருக்கு நிச்சயமாக தெரியவில்லை என்பது தெரிந்தது. நினைத்து பாருங்கள், நீங்கள் அப்படி ஊரில் சொந்தமாக ஒரு வீடு கட்டினாலும், அதில் நீங்கள் குடியேறும் நாள் தெரியுமா ?!
இது வெளிநாட்டில் வாழும் மக்களுக்கு மட்டும் இல்லை, இங்கே நகரத்திற்கு புலம் பெயர்ந்த எல்லோருக்கும் இந்த ஆசை இருக்கிறது. நகரத்து நெரிசலில் மிதிப்படும்போது, சக மனிதர்களின் துரோகம், எல்லாவற்றுக்கும் பணம் வேண்டும் எனும்போது, யாரையும் சந்தேகமாக பார்க்கும் போது, நேசமாக யாரும் பேசமாட்டார்களா என்று இருக்கும்போது எல்லாம் இந்த சொந்தமா ஊர்ல ஒரு வீடு வாங்கி.... என்ற நினைப்பு வந்து போகும். அந்த வீட்டிற்கு கனவிலேயே ஜன்னல் செய்து, பெயிண்ட் பூசி, உள் அலங்காரம் எல்லாம் செய்து செதுக்கி செதுக்கி பின்னொருநாள் அதை நிஜத்தில் வடித்து வைப்பீர்கள்......அந்த வீட்டில் நிம்மதியாக இருக்க வேண்டும், அங்கு சென்றால் மட்டுமே சந்தோசமாக இருக்கும் என்று ஆணித்தரமாக நம்பிக்கை இருக்கும், ஆனாலும் திரும்பி இந்த நகரத்திற்கு வருவதற்கு ஒரு டிக்கெட் எடுத்துக்கொண்டுதான் அந்த வீட்டிற்க்கே செல்வோம். சில கனவுகள் மிகவும் சுகமானவை, அதை காண்பதற்கு மிகவும் விரும்புவோம்...... ஊருல சொந்தமா ஒரு வீடு என்பதும் ஒரு கனவுதான், ஆனால் அந்த ஊரில் வீடுகள் மட்டுமே இன்று இருக்கிறது என்பதும், மனிதர்கள் வருவதற்கு ஏங்குகிறது அந்த வீடு என்பதும்தான் நிஜம் !


Labels : Ennangal, Thoughts, Own house, Suresh, Kadalpayanangal, dream, house, home

30 comments:

 1. nice article boss

  ReplyDelete
  Replies
  1. முகம் தெரியாத நண்பரே..... தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.....!!

   Delete
 2. அருமையான பதிவு சுரேஷ்...இப்பொழுதெல்லாம் மக்கள் இப்படியான அசையாப் பொருட்களின் மேல் வைக்கும் ஆசையிலேயே தங்கள் வாழ் நாளை முடித்து விடுகிறார்கள்....அங்கே வாழ்தலைப் பற்றி அவர்கள் யோசிப்பதேயில்லை

  ReplyDelete
  Replies
  1. நன்றாக சொன்னீர்கள் சகோதரி...... இந்த அசையா பொருளின் இருக்கும் மோகத்தில் சில நேரங்களில் அருகினில் இருக்கும் அன்பான மனிதர்களை கூட மறந்து விடுகின்றனர் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

   Delete
 3. //
  திரும்பி இந்த நகரத்திற்கு வருவதற்கு ஒரு டிக்கெட் எடுத்துக்கொண்டுதான் அந்த வீட்டிற்க்கே செல்வோம்
  //
  பிடரியில் படார்ன்னு அடித்தார்ப்போல இருந்தது....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி யோகேஷ் ! இந்த பதிவு உங்களின் மனம் கவர்ந்தது கண்டு மகிழ்ச்சி !

   Delete
 4. கடைசியில் முகத்தில அறைந்த மாதிரி முடிச்சுட்டீங்க.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி ! எப்போதும் சில விஷயங்களை முகத்தில் அறைவது போல சொன்னால்தான் அதன் தாக்கம் அதிகம்......!

   Delete
 5. when i went to Wayanad (Kerala)last month, i saw some of the beautiful individual home once in every 1-2 KM. I was melted by their beauty. Actually the front elevation of every home is unique and they concentrate more on elevation and open space at front and most of the home is mid size & not big compare to front elevation. The obivious question will arise immediately in ur mind is that, will you stay in that home? the quick ans will be yes but the next question is what you will be do for your earnings ?!!! :-( . We used to live with crowd (as i do in Trichy)and started to breath human emotions (money, angry, intelligence, food and news) rather than natural emotions (air, water, soilsmell, space, darkness, calmness and animals). What a pharse you coined "we buy return ticket whenever we go to these places", Simply Awesome,Mate

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி பாபு..... நீங்களும் உங்களது வயநாடு பயணத்தில் கவனித்து கண்டு மகிழ்ச்சி, உங்களது மனதில் எழுந்த அதே கேள்விதான் எனது மனதிலும் எழுந்தது, அதன் விடையே இந்த பதிவு.......பாராட்டுக்கு நன்றி !

   Delete
 6. என் எண்ணங்களை இந்த எழுத்தில் படித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நேதாஜி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் !

   Delete
 7. கிளாசிக் பதிவு!! கவிதை போல உள்ளது. உணர்வுப் பூர்வமாக எழுதியிருக்கீங்க, நன்று!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜெயதேவ்....உங்களின் மனதை இந்த பதிவு தொட்டது கண்டு மகிழ்ச்சி !

   Delete
 8. Replies
  1. நன்றி கிருஷ்ணா ! உங்களது கருதும் சோ ச்வீட் !

   Delete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. ரொம்ப நல்லா இருந்தது...என் மனசுலகூட ஒரு (சின்ன) வீடு கட்டி வச்சுஇருக்கன்....

  ReplyDelete
  Replies
  1. அட மனதில் கட்டுகின்ற வீடு கூடவா சின்னதாக இருக்க வேண்டும்.... கனவுக்கு அளவேது நண்பரே ! நன்றி !

   Delete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. .எல்லோரும் அந்த வீடு கட்ட வேண்டும் என்று சிந்திக்கிறார்களே தவிர, அந்த வீட்டில் வசிப்பது போல கனவு காண்பதில்லை என்பதுதான் இங்கு சோகமே.

  நெஞ்சை தொட்ட உண்மையான வரிகள் அண்ணா ...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆனந்த் ! உனது அனைத்து கனவுகளுமே செம்மையாக நிறைவேற வாழ்த்துக்கள் ! அந்த வீட்டில் நீயும், உனது குடும்பமும் எல்லா மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் !

   Delete
 13. நமது சொந்த ஊரில் இந்த நகரத்து கூண்டு வீடுகள் போல இல்லாமல் பெரிய வீடாக இருக்க வேண்டும் என்ற கனவு கண்டிப்பாக இருக்கிறது இல்லையா ?!

  அந்த கனவை நினைவாக்க போராடுபவர்களில் நானும் ஒருவன் அண்ணா.. நெகிழ்ச்சியான பதிவு

  ReplyDelete
 14. "மனிதர்கள் வருவதற்கு ஏங்குகிறது அந்த வீடு என்பதும்தான் நிஜம் !" நன்றாக எடுத்துச்சொன்னீர்கள். இப்பொழுது எமதுவீடும் இந்நிலையில்தான் :(

  ReplyDelete
  Replies
  1. நன்றி மாதேவி, எல்லா வீடுகளுக்கும் மனம் உண்டு என்பதை உணர்ந்தால் அது ஏங்குவதை காணலாம் !

   Delete
 15. மிக்க நன்றி !

  ReplyDelete
 16. Excellent writeup Suresh.

  Regards,
  Vivek

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி விவேக் ! தங்களது கருத்துக்கள் என்னை உற்சாகம் கொள்ள வைத்தது !

   Delete