Wednesday, August 14, 2013

அறுசுவை - பெங்களுரு பாபி'ஸ் தாபா

சுமார் ஏழு வருடத்திற்கு முன்பு எங்களது ஆபீசில் மதிய உணவு இடைவேளையின் போது சிறிது தூரத்தில் ஒரு பஞ்சாபி தாபா (சைவம்)இருக்கிறது செல்லலாம் என்று சொன்னார்கள். அது அல்சூர் பக்கத்தில இருக்கும் ஒரு குருத்வாராவின் அருகில் இருந்தது. அது ஒரு சிறிய ஓட்டு வீடு, நெருக்கமா சேர் போட்டு அதில் இடம் பிடிக்க நீங்கள் திருப்பதி சாமி தரிசன லைன் போன்று நாங்கள் எல்லோரும் காத்திருந்து சாபிட்டோம். அருமையான சுவையில் சுட சுட பஞ்சாபி உணவுகள் வந்தது, அன்றிலிருந்து
நான் அந்த உணவகத்திற்கு ரசிகன் ஆகிவிட்டேன். பின்னர் எங்களது கம்பெனி வேறு இடத்திற்கு மாறியவுடன் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே சென்று வந்தேன். சில வருடத்திற்கு முன்பு அந்த ஓட்டு வீடு இடிக்கப்பட்டு இருந்தது கண்டு அங்கு செல்லாமல் இருந்தேன், ஆனால் சுமார் ஆறு
மாதத்திற்கு முன்பு அதன் பக்கத்தில் ஒரு பஞ்சாபி தாபா உணவகம் ஒன்று இருந்ததை கவனித்து அங்கு ஆசை ஆசையாய் உண்ண சென்றேன்..... ஏமாற்றம்தான் மிஞ்சியது, அது நான் சாப்பிட்ட தாபா இல்லை. சமீபத்தில் நான் எனது நண்பருடன் பேசி கொண்டு இருந்தபோது அந்த தாபா பற்றி பேச்சு எழுந்தது, அப்போதுதான் அவர் அதன் பெயர் பாபி'ஸ் தாபா என்றும் அது இருக்கும் புதிய இடம் பற்றியும் தகவல் தந்தார், இதோ அதன் சுவையை பற்றி இங்கே !
ஏழு வருடமாக அந்த சுவை நாக்கினில் இருந்ததினால் அதை இந்த அளவு தேடி பிடித்து சென்று இருந்தேன். முதலில் உள்ளே நுழைந்தவுடன் முன்பு இருந்த அதே பஞ்சாபி ஆள் எங்களை வரவேற்றார், அவருடன் பழைய கதைகளை அளவலாவிட்டு அந்த பரந்து விரிந்த இடத்தில ஒரு டேபிள் தேடி உட்கார்ந்தோம். மெனு என்பது மிகவும் சிறியதாகத்தான் இருந்தது. எனக்கு பிடித்த ஆனியன் மற்றும் ஆலு பரோட்டா ஆர்டர் செய்துவிட்டு, ஷாஹி பன்னீர் ஆர்டர் செய்தேன். முன்பு இருந்ததை விட அந்த இடம் இப்போது மிகவும் பெரியதாக இருந்தது. அன்றைய நாளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சென்றது நினைவுக்கு வந்தது.எனது முன் நான் கேட்ட ஷாஹி பன்னீர் மற்றும் பரோட்டா வந்தபோது அதில் இருந்து வந்த வாசனை என்னை அந்த நாட்களுக்கு அழைத்து சென்றது. மிகவும் மிருதுவாக பொன்னிறமாக செய்யப்பட்ட பரோட்டா, அதன் மேலே கட்டியாக வெண்ணை, ஷாஹி பன்னீரில் அந்த பன்னீரை சிறிது சிறிதாக வெட்டி போட்டு, சிறிது காரத்துடன் செய்யப்பட்ட அந்த மசாலா என்று ஒரு வாய் வைத்தவுடன் அத்தனையும் கரைந்தது. ஒரு பெரிய டம்ப்ளரில் திக்காக மோர் தருவார்கள். இதை எல்லாம் சாப்பிட்டு எழும்போது மனதிற்கும், வயிற்றுக்கும் மிகவும் நிறைவாக இருந்தது !


இதுநாள் வரை நான் பல பல உணவகங்களை பற்றி எழுதி இருக்கிறேன், அதில் எல்லாம் நன்றாக இருந்தாலும் சில உணவங்களுக்கு இன்று வரை நான் திரும்பி சென்றதில்லை. ஒன்று அது தூரமாக இருந்தது ஒரு காரணம், இன்னொன்று அந்த சுவை திரும்பவும் என்னை செல்ல தூண்டியது இல்லை..... சுவையான உணவுதான், ஆனால் திரும்பவும் நம்மை கட்டிபோட்டு இழுக்கும் சுவை இல்லை. ஆனால் சுமார் ஏழு வருடங்களாக இந்த கடையை தேடி அலைந்து இருக்கிறேன், எப்போதும் அதன் சுவை நினைவில் இருக்கிறது, தூரம் அதிகமாக இருந்தாலும் என்னை சொக்கி அழைக்கிறது என்றால் அதுவே இந்த உணவகம் எவ்வளவு தூரம் அருமையான உணவை தருகிறது என்பதற்கு சான்று...... நிச்சயமாக நீங்கள் செல்ல வேண்டிய ஒரு உணவகம்.


பஞ்ச் லைன் :

சுவை - அருமையான பஞ்சாபி சைவ உணவு வகைகள். ஏழு வருடமாக என்னை இழுக்கும் சுவை.......

அமைப்பு - சிறிய இடம், மெயின் ரோட்டில் இருப்பதால் பார்கிங் வசதி கம்மி, கூட்டம் சில நேரங்களில் அதிகம் !

பணம் - இரு பரோட்டா சுமார் 40 முதல் அறுபது ரூபாய் வரை  ! அதற்க்கு ஏற்ற சைடு டிஷ் சுமார் 50இல் இருந்து கிடைக்கிறது. இந்த சுவைக்கு இது கம்மிதான் என்று உங்களுக்கு நிச்சயமாக தோன்றும் !

சர்வீஸ் - நல்ல சர்விஸ், கூட்டம் அதிகமாக இருந்தால் இதையே எதிர் பார்க்க முடியாது.

அட்ரஸ் :

Bobby's Punjabi Dhaba,
St John's Road,
Near Lavanya Theatre,
Near Ulsoor,
Bangaloreமெனு கார்டு :


Labels : Arusuvai, Punjabi veg, best parotta, bengaluru, bangalore, Suresh, Kadalpayanangal, bobby's dhaba, gurudhwara dhaba, ulsoor punjabi dhaba

12 comments:

 1. பெங்களூர் வரேன்...பார்ப்போம்...

  ReplyDelete
  Replies
  1. அப்படியே அக்கா மகளுக்கு ஒரு பார்சல் வாங்கி தந்துட்டு, அக்காக்கும் வாங்கி வரவும்!!

   Delete
  2. பார்சல் ரெடி, அக்கா தம்பி ரெண்டு பெரும் பெங்களுரு வந்து வாங்கிகிட்டு போங்க......:-)

   Delete
 2. Replies
  1. நன்றி கிருஷ்ணா......நீங்கள் இது போல சென்றதுண்டா !

   Delete
 3. We are planning to go there tomorrow, Thanks Boss!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜெயதேவ்..... சென்று வந்தீர்களா ?! பேச்சு மூச்சையே காணோமே....

   Delete
 4. நேரம் கிடைத்தால் கண்டிப்பாக சென்று வருகிரேன்...thanks

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜா.... சென்று வந்து உங்களது கருத்துக்களை மறக்காமல் எழுதுங்கள் !

   Delete
 5. பெண்களூர்ல வேலை பாத்த போது அந்த தாபா ரொம்ப பிரசித்தம்னு என்னோட பஞ்சாபி தோழன் அடிக்கடி பெருமையா சொல்லுவார்

  தாபாவோட முதலாளி சிம்ரனோட ரசிகர் போலருக்கே!! :)

  ReplyDelete
  Replies
  1. அது எப்படி ஸார் உங்களுக்கு தெரியும் ! கில்லாடி நீங்க..... அது சரி, நீங்களும் சிம்ரன் ரசிகரா ?! நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்க்கும் !

   Delete