Thursday, August 29, 2013

டெக்னாலஜி - எக்சோ ஸ்கெலடன்

நாம் வாழ்வில் இதுவரை மனிதன் இவ்வளவுதான் செய்ய முடியும் என்று இருந்ததை எல்லாம் இந்த டெக்னாலஜி உடைத்து வருகிறது. உதாரணமாக, ஒரு மனிதனால் இவ்வளவுதான் எடை தூக்க முடியும் என்று இருந்ததை இன்று ஒரு ஒல்லி பிச்சான் கூட சுமார் நூறு கிலோ வரை சாதரணமாக தூக்க முடியும் என்று வந்து விட்டது, விரைவில் இந்த டெக்னாலஜி கொண்டு நமது பாட்டி இமயமலை கூட ஏறி செல்ல முடியும் ! என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா ? உங்களுக்கு இந்த எக்சோ ஸ்கெலடன் (Exoskeleton) பற்றி தெரிய வந்தால் புரிந்து கொள்வீர்கள்.



2007ம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு புதிய ரோபோட் போன்ற ஒன்றை டெஸ்ட் செய்யும்போது அதை வீடியோ எடுத்து வெளியே விட்டதில்தான் இது உலகத்திற்கு தெரிந்தது. இன்றைய ராணுவ வீரர்கள் எவ்வளவு ஆயுதங்கள் தாங்கி செல்கிறார்களோ, அவ்வளவு அவர்களுக்கு பாதுகாப்பு, அது மட்டும் இல்லாமல் அவர்கள் தொலை தூரத்திற்கு இப்படி தூக்கி சென்றால் அவர்களால் நன்கு போர் செய்ய முடியாமல் போகும், அதனால் ஒரு கருவி, சும்மா மாட்டி கொள்வது போல இருந்தால், அது நீங்கள் சாதரணமாக நடப்பது போல செய்தால் போதும், அந்த கருவி எல்லா எடையையும் எடுத்து கொள்ளும் என்று இருந்தால் எப்படி இருக்கும், அதற்க்கு விடையே இது. இதன் முன்னேற்றமான கற்பனைதான் iron man படம் ! இந்த வீடியோ பாருங்கள், நீங்கள் ஆச்சர்யபடுவது உறுதி !

 
 
Labels : Suresh, Kadalpayanangal, Technology, Exoskeleton
 

16 comments:

  1. ஆச்சரியம் நிரம்பிய தகவல்கள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜி ! அடுத்த முறை ஒரு ஆயிரம் கிலோ தூக்கலாம் !

      Delete
  2. புதிய தொழில் நுட்ப தகவல்கள் ஆச்சர்யப்பட வைக்குது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.....

      Delete
  3. Anna ... I can't see video .. Link kudunga

    ReplyDelete
    Replies
    1. ஆனந்த், இனிமேல் வரும் எல்லா டெக்னாலஜி பகுதியிலும் உனக்காக லிங்க் கொடுக்கறேன் !

      http://www.youtube.com/watch?v=-UpxsrlLbpU

      Delete
  4. ஆச்சரியமான அற்புதத் தகவல்கள்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. சார் உங்களை பதிவர் திருவிழாவில் பார்த்து பேசியது கண்டு மிக்க மகிழ்ச்சி...... நான் அதை நினைத்து கூட பார்க்கவில்லை ! தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete
  5. Replies
    1. தமிழ்மணத்தில் தாங்கள் அளித்த ஓட்டுக்கு மிக்க நன்றி சார் !

      Delete
  6. வணக்கம்
    நல்ல தகவல்.
    Text Alignment செய்யவில்லை. ஒவ்வொரு பதிவிலும் பார்த்திருக்கிறேன். இது உங்களின் ஸடைல் லாக இருக்ககூடும் என்பதால் இதுவரை கேட்காமல் இருந்தேன். தற்பொழுது கேட்டுவிடலாம் என்று கேட்டுவிட்டேன்.
    நன்றியுடன்
    ராஜேஷ்சுப்பு

    ReplyDelete
    Replies
    1. ராஜேஷ்-ஜி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ! நீங்கள் சொன்னதால் அதை திருத்திக்கொண்டேன், எனது பதிவுகளை அழகாக்கியதர்க்கு மிக்க நன்றி !

      Delete
  7. Wonderful innovation..! Way to go!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆவி ! பதிவர் திருவிழாவில் உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ! நானும் நீங்களும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் முடியவில்லை !

      Delete