Monday, August 26, 2013

சாகச பயணம் - சொகுசு கப்பல் "ஸ்டார் க்ரூஸ்"

சென்ற முறை சொகுசு பஸ் பற்றி எழுதியதற்கு நிறைய பேர் கமெண்ட் செய்து இருந்தனர், இந்த முறை சொகுசு கப்பலை பார்க்கலாம் வாங்க ! நிறைய முறை கப்பலில் சென்று இருக்கிறேன், ஆனால் சொகுசு கப்பல் என்பது எல்லாம் அமெரிக்காவில் மட்டுமே இருக்கிறது என்று நினைத்திருந்தபோது சிங்கப்பூரில் இப்படி ஒரு கப்பல் இருக்கிறது என்பது தெரிந்தது. சிறிய படகுகளில் சென்று இருந்தாலும் ஒரு கப்பலுக்குள் உலகம் இருப்பது போன்ற தோற்றத்தை இந்த சொகுசு கப்பல்கள் தருகின்றன. இதில் நான்கு நாட்கள் பயணம் செய்ய முடிவெடுத்து ரிசர்வ் செய்துவிட்டு ஆவலுடன்
காத்திருந்தேன், அந்த காத்திருப்பு வீண் போகவில்லை என்றே சொல்ல வேண்டும் !


இந்த பயணத்தில் எனக்கு மிகவும் பிடித்தது என்பது நான் பர்ஸ் மற்றும் இதர பொருட்கள் எதையும் கப்பலுக்குள் நுழைந்ததற்கு பிறகு கொண்டு செல்ல வேண்டாம் என்பது. எப்போதும், எந்த பயணத்திலும் பர்ஸ், கிரெடிட் கார்டு, பணம் என்று என்னிடம் இருக்கும், ஆனால் இங்கு உள்ளே நுழையும்போது ஒரு கார்டு கொடுக்கின்றனர், அதை அந்த கப்பலுக்குள் இருக்கும் எந்த கடையிலும், உணவகத்திலும் பயன்படுத்தலாம், நாம் இறங்கும் முன் செட்டில் செய்தால் போதும், இதனால் எந்த பயமும் இல்லாமல் சுற்றலாம் ! முதலில் உள்ளே நுழைந்தவுடன் உங்களை பிரமிக்க வைப்பது எட்டு மாடி சென்று வரும் லிப்ட் மற்றும் உள் அலங்காரங்கள் ! நாம் கப்பலுக்குள் இருக்கிறோமா இல்லை ஏதாவது ஹோட்டெலா என்று நிச்சயம் வியப்பு வரும் !

 
 
உள்ளே தியேட்டர், நீச்சல் குளம், ஜிம், சிறிய கோல்ப் மைதானம், பல்வேறு உணவகங்கள், பெரிய அரங்கம், மசாஜ், காற்று வாங்க இடம் என்று பலவும் உண்டு. பொழுதுபோக்க உணவு தயார் செய்யும் பயிற்சி, இசை கச்சேரி, இரவானால் பெரிய ஷோ, குழந்தைகளை மகிழ்விக்க பொம்மை மனிதர்கள், டிஸ்கோ டான்ஸ் இடம், நூலகங்கள், கம்ப்யூட்டர் கேம்ஸ், கேசினோ என்று நிறைய உண்டு. நாங்கள் உள்ளே நுழைந்ததில் இருந்து சிறிது நேரம் கூட அட இந்த கப்பலில் எப்படி நான்கு நாட்களை கடத்த போகிறோம் என்று கவலை பட விடவில்லை. ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது இருந்தது !
 
தங்கும் அறைகள் கொடுக்கும் காசுக்கு ஏற்ப பெரிதாக இருக்கின்றன. கடலை பார்த்த ரூம் என்பது கொஞ்சம் காஸ்ட்லி ! தங்குவது, சாப்பிடுவது மற்றும் எல்லா பொழுதுபோக்கும் இலவசம் என்பதுதான் நீங்கள் கொடுக்கும் காசுக்கு ஆறுதல். இந்த நான்கு நாட்கள் பயணத்தில் மலேசியாவும், தாய்லாந்து ஆகிய இரண்டு இடங்களில் காலையில் இருந்து மாலை வரை இந்த கப்பல் நிற்கும், அப்போது நீங்கள் இறங்கி சுற்றி பார்த்துவிட்டு வரலாம், மாலைக்குள் நீங்கள் திரும்ப வில்லை என்றால் அப்புறம் என்ன..... பொடி நடைதான் !!
 


 
எனக்கு இந்த பயணத்தில் மிகவும் பிடித்தது என்பது போன் மற்றும் எந்த தொந்தரவும் இல்லாமல் இருந்த சுதந்திரமும்தான். எப்போதும் பேஸ்புக், மெயில், ஆபீஸ், அழைப்புகள் என்று இருந்த என்னை நான் எனது குடும்பம் மட்டும் என்றும், சிறு குழந்தைபோல ஓடி விளையாடி மகிழவும் வைத்தது இந்த பயணம். காலையில் எழுந்து மேல் தளத்திற்கு சென்று அதிகாலை காற்றை அனுபவித்துக்கொண்டே காபி குடிக்கும் சுகம் இருக்கிறதே.... சொர்க்கம்தான் போங்கள் ! சில நேரங்களில் துணையுடன் கடலில் தோன்றுவதும், மறைவதுமான சூரிய காட்சிகள் உங்களை நிச்சயம் மெய் மறக்க செய்யும் என்பது நிச்சயம்.பொதுவாக பயணம் என்பதில் நாம் எல்லோரும் அந்த ஊரில் இருக்கும் புகழ் பெற்ற இடங்களுக்கு சென்று படம் எடுத்து கொள்வது, அந்த ஊரில் இருக்கும் நல்ல ஹோட்டல் சென்று சாபிடுவது என்று இருக்கும். ஆனால் இந்த பயணத்தில் நீங்கள் அந்த கப்பலை விட்டு எங்கும் செல்ல முடியாது (சில நேரங்கள் தவிர...!), ஆகையால் நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், இயற்கையும் என்று இருக்கும் அந்த பொழுதுகள் உண்மையாகவே  அருமையானவை. நான் சென்றிருந்தபோது "கேலக்சி ஆப் தி ஸ்டார்ஸ்" என்னும் ஒரு பகுதியில் இரவினை அனுபவிக்கும் விதமாக மிதமான ஒலியுடனும், ஒளியுடனும் இருந்த ஒரு உணவகம் அருமையிலும் அருமை. ஏதோ சந்திரனில் சென்று நீங்கள் இந்த அண்டத்தை பார்த்து உணவருந்தும் உணர்வு தரும். அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு இரவும் ஒரு பெரிய அரங்கத்தில் மனதை மயக்கும் சாகச ஷோ நடைபெறும். நான் சென்று இருந்த நேரம் சீன அக்ரோபடிக் ஷோ மிகவும் நன்றாக இருந்தது !


 


ஒரு பயணம் அதுவும் உங்களது மனதை தொட வேண்டும் என்றால் அது இந்த சொகுசு கப்பல் பயணம்தான் என்பேன். நான்கு நாட்கள் சென்று வர எனக்கு சுமார் 75000 ரூபாய் ஆனது. பணம் அதிகம்தான், ஆனால் அனுபவம் அதை விட பெரிதாக இருந்தது, மகிழ்ச்சியோ மிக மிக அதிகம். உங்களை நீங்கள் சார்ஜ் செய்து கொள்ள வாழ்வில் ஒரு முறை கண்டிப்பாக செல்ல வேண்டிய பயணம் இது !
 


Labels : Star cruise, luxury, adventure travel, suresh, kadalpayanangal, best cruise, singapore

23 comments:

 1. அருமையான சொகுசுக் கப்பல்
  சொர்க்கம் என்பதற்கு அர்த்தம் இந்தக் கப்பலாகக்
  கூடக் கொள்ளலாம் போல உள்ளது
  செலவு விவரம் சொன்னது நல்லதாய் போயிற்று
  வீணான கற்பனையை வளர்த்துக் கொள்ளாமல் இருக்க
  இது உதவும். பதிவர்கள் சந்திப்புக்கு வருகிறீர்கள்தானே ?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ரமணி சார் ! உங்களை முதன் முதலில் பதிவர் சந்திப்பில் சந்திக்க போகிறேன் என்ற நினைப்பே சந்தோசமாக உள்ளது. காத்திருக்கிறேன்.... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

   Delete
 2. நியு இயர் க்ரூசில் ஒருமுறை போயிருக்கிறேன்.. அருமையான அனுபவத்தை சுவைபட எழுதியிருக்கீங்க.

  ReplyDelete
  Replies
  1. நீங்க சுத்தாத இடமா......சரி, உடம்பு இப்போ எப்படி இருக்கிறது, தேறி வருகிறீர்களா ? பதிவர் சந்திப்பில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் !

   Delete
 3. அருமையான பயண அனுபவங்கள்..!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே ! எதிர்கால பதிவர் சந்திப்பை ஒரு முறையாவது இங்கே நடத்தனும் :-)

   Delete
 4. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனப்பாலன் சார் ! பதிவர் சந்திப்பில் உங்களை சந்திக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன் !

   Delete
 5. இனி இந்த பக்கம் வர மாட்டேன். இதையெல்லாம் பார்த்து படிச்சு வயிறு பொசுங்கி வயத்துல அல்சர் வந்ததுதான் மிச்சம் :-(

  ReplyDelete
  Replies
  1. அட ஏங்க...... நீங்கள் எழுதும் பதிவுக்கு நான் அடிமை தெரியுமா ! உங்களது பதிவுகள் எனக்கு அல்சர் வரவைக்குது..... பதிவர் சந்திப்பில் சந்திக்க ஆவலாய் இருக்கிறேன் !

   Delete
 6. இந்தியாவில் இது மாதிரி கப்பல் இருக்கிறதா?

  ReplyDelete
  Replies
  1. இருந்தது சார், ஆனா யாருமே போகலை, அதனால மூடிட்டாங்க.....அது சரி, உங்க படத்துல ஒரு பாடல் காட்சியை இங்கே வச்சு எடுங்களேன் !

   Delete
 7. உலகம் சுற்றும் வாலிபரே வருக ..! வருக..!

  அண்ணே .. துப்பாக்கியோட அந்த போஸ் செம டேரர் ..

  உங்கள் கண்களால் நாங்கள் பார்த்த காட்சிகள் அனைத்தும் அருமை

  ReplyDelete
  Replies
  1. தம்பி.....என்னை வாலிபர் என்று சொல்லி உனது குறும்பை காண்பித்து இருக்கிறாய் ! நன்றி,,,,உனது வருகைக்கும், கருத்திற்கும் !

   Delete
 8. ரொம்ப அருமையாக இருந்தது

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜா.....ஒரு முறை சென்று வரலாம் வாருங்கள் !

   Delete
 9. சொகுசு கப்பல் பயணக்கட்டுரை அருமை நீங்கள்தான் எங்கள் பதிவுலக 'உலகம் சுற்றும் வாலிபன்" .

  ReplyDelete
  Replies
  1. ஆகா....நல்ல பட்டம் கொடுத்தீர்கள் ! இதை விட வேறு என்ன பெருமை எனக்கு வேண்டும் ? ஆனாலும்..... கற்றது கைமண் அளவுதான் நண்பரே !

   Delete
 10. தமிழ் மனதில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு நன்றி !

  ReplyDelete
 11. வாழ்க்கைல ஒரு நாலாவது இந்த மாதிரி சொகுசு கப்பல் ல போகணும் நு எனக்கிருந்த வெறிய நீங்க போஸ்ட் போட்டு அதிகமாக்கிடிங்க ஹீ ஹீ.

  அண்ணே அந்த தூப்பாக்கி போஸ் போட்டோ சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆனந்த் ! தாய்லாந்தில் சிறிய சொகுசு படகு வாடகைக்கு கிடைக்கும், அதில் சென்றால் இன்னும் நன்றாக இருக்கும்..... ஒரு ட்ரிப் போடுவோமா ?!

   Delete
 12. கடல் பயணங்கள்
  இந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....

  ReplyDelete
  Replies
  1. என்ன திருபதிக்கே லட்டா ?! நன்றி கிருஷ்ணா !

   Delete