முந்தைய ஒரு பதிவில் திணற திணற தின்போம் என்று ஒன்று வந்தது யாபகம் இருக்கிறதா...... அவருக்கு அண்ணன் அல்லது தாத்தா என்று இந்த "சட்னி சாங்" பற்றி சொல்லலாம் ! பேரை கேட்க்கும்போதே என்ன இது இந்தியன் பெயராக சட்னி இருக்கிறது, சாங் எனும்போது அது சீன பெயராக இருக்கிறதே என்று தோன்றியது, ஆனால் சென்றவுடன்தான் தெரிந்தது அது எல்லா உணவும் கலந்த ஒரு புப்பெட் என்று. ரேடியோ, பேப்பர் என்று எங்கு பார்த்தாலும் இதை பற்றிய விளம்பரம் வரும், பல முறை படித்து படித்து எப்படித்தான் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று தோன்றியது, அதனால் ஒரு சுபயோக சுபதினத்தில் கிளம்பினோம் ! இது பெங்களுரு MG ரோட்டில்.... ட்ரினிட்டி சர்கிள் இருந்து செல்லும்போது செயின்ட் மார்க்ஸ் ரோடுக்கு முன் ஒரு லெப்ட் கட் வருவதில் சிறிது தூரம் சென்றால் இருக்கிறது.


HM Eleganza, 31, Museum Road, MG Road Area, BangaloreIndia

மெனு கார்டு :
Labels : Arusuvai, Amazing buffet, south indian, suresh, kadalpayanangal, buffet
உள்ளே நுழைந்து உட்கார்ந்தவுடன் கண்ணில் படுவது உங்கள் முன்னே இருக்கும் கலர் கலர் சட்னி.....உப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு என்று எல்லா வகையிலும் ஒரு சட்னி ! பின்னர் என்ன செய்வது என்று திரும்பி பார்த்தால் உங்களுக்கு தலை சுத்துவது நிச்சயம் ! முதலில் சாட் கவுன்ட்டர் சென்று என்ன இருக்கிறது என்று பார்த்தால் பானி பூரி, சமோசா சாட், மசாலா பூரி என்று அடுக்கி கொண்டே சென்றார். நான் என்ன சொல்வது என்று யோசித்து கொண்டிருக்கும்போதே இங்க பாருங்க மோமோ கூட இருக்குது என்றபோது தலையை சுற்றியது. முடிவில் சமோசா சாட் வாங்கி வந்து ஒரு வாய் சாப்பிட்டு பார்த்தபோது அருமையாக இருந்தது. எல்லா சாட் வகைகளிலும் பொறுமையாக, நன்றாக, கவனம் எடுத்து சுவை சேர்கின்றனர் !
அதை முடித்துவிட்டு, அடுத்து ஸ்டார்ட்டர் வகை என்னவென்று பார்க்கலாம் என்றபோது அதுவே சுமார் பன்னிரெண்டு வகை இருந்தது. பொதுவாக இது போன்ற பப்பெட் முறை செல்லும்போது ஸ்டார்ட்டர் என்று நான்கோ இல்லை ஐந்தோ வைத்திருப்பார்கள். அதில் ஒன்று இரண்டுதான் நமக்கு பிடிக்கும், ஆனால் இங்கேயோ இத்தனை வகைகளில் சுமார் நான்காவது நமக்கு பிடிக்கும் போல இருந்தது ! அதுவும் வெள்ளரி சாலட் நாக்கில் நீர் ஊற வைத்து மீண்டும் ஒரு முறை என்று பல முறை என்னை ஈர்த்தது !
இதை சாப்பிட்டு முடிக்கும்போதே வயிறு புல் என்று இண்டிகேட்டர் காட்டியது. அதனால் சிறிது ரெஸ்ட் விட்டு, மெயின் கோர்ஸ் என்ன என்று பார்க்க கிளம்பியவுடன் அங்கேயே மயங்கி விழ பார்த்தேன் எனலாம் ! இடது பக்கம் வெஜிடேரியன் உணவுகள் என்று சுமார் பதினைந்து வகைகள், நான் வெஜ் என்று சும்மார் பத்து வகைகள் என்று இரண்டு பக்கமும் பார்த்தவுடன் வயிறு புல், ஆனாலும் படிக்கும் உங்களுக்கு சில தகவல்கள் சேர்க்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் மட்டும் எல்லாவற்றிலும் சிறிது டேஸ்ட் செய்தேன். தந்தூரி சிக்கன், சிக்கன் டிக்கா, பிஷ் மலபார் கறி, மட்டன் ரோஸ்ட் என்று நான் வெஜ் வகைகளில் சிலவும், மலாய் கோப்தா, வெஜ் ரைஸ் என்றும் முதல் ரவுண்டு ஆரம்பம் ஆகியது...... என்ன சூப் மறந்திட்டேனா, அங்க என்னப்பா சத்தம் ?!
இப்படி எழுதி கொண்டிருந்தால் இந்த பதிவே பாகம் - 2 என்று வெளியிடவேண்டி வரும், ஆகையால் அடுத்த ஸ்பெஷல் என்னவென்று பார்ப்போம். அங்கு சாங் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தேடியதில் சில உணவு சீன உணவாக இருந்தாலும், அங்கு வைத்து இருந்த சீன டீ எல்லோரையும் கவர்ந்தது. சீனர்கள் வெந்நீரில் டீ தூள் போட்டு குடிப்பார்கள், அதையே இங்கு அருமையாக வைத்திருந்தனர். ஒரு காட்டு காட்டிவிட்டு, டெசெர்ட் வகைகளை பார்க்க ஜிலேபி, குலப்ஜமூன், ஐஸ் கிரீம், சாக்லேட், கேக் என்று அது ஒரு பத்து வகை இருந்தது. எல்லாவற்றிலும் சில எடுத்து டேஸ்ட் செய்துவிட்டு மலை பாம்பு போல எல்லோரும் உட்கார்ந்திருந்தோம் !
மொத்தம் 54 வகை உணவுகள் இருந்தன, அன்லிமிடெட் உணவு என்பதற்கு அர்த்தம் தெரிய வேண்டும் என்றால் இங்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டும். ஆனால் செல்வதற்கு முன் ஒரு இரண்டு நாட்கள் பச்சை தண்ணி பல்லில் படாமல் உபவாசம் இருந்தால் நலம் !
பஞ்ச் லைன் :
சுவை - ஏகப்பட்ட வகைகள், எல்லாமே நல்ல சுவை......எல்லா சுவையிலும் உணவு இங்கே உண்டு !
அமைப்பு - நல்ல பெரிய உணவகம், வேலேட் பார்கிங் வசதி உண்டு !
பணம் - ஒரு ஆளுக்கு சுமார் 600 ரூபாய் வரை வருகிறது !
சர்வீஸ் - நல்ல சர்விஸ், பப்பெட் முறை என்பதால் நீங்களே எடுத்து கொள்ளலாம். நான், ரோட்டி எல்லாம் கேட்டால் உங்களது டேபிளுக்கு வருகிறது.
அட்ரஸ் :
HM Eleganza, 31, Museum Road, MG Road Area, BangaloreIndia
மெனு கார்டு :
மெனு தினமும் மாறுகிறது, ஆனால் கண்டிப்பாக உங்களது நாவு ஊரும் ஒரு மெனு என்று சொல்லலாம். சுமார் 54 வகை உணவுகள்......
ஹைய்யோ!!!!
ReplyDeleteஎனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது இதுதான்
// எல்லாவற்றிலும் சில எடுத்து டேஸ்ட் செய்துவிட்டு மலை பாம்பு போல எல்லோரும் உட்கார்ந்திருந்தோம் !//
ஹாஹா ஹாஹா :-)))))
நீங்க என்னை மலைப்பாம்பு போல கற்பனை பண்ணி இருந்தீங்களா.... உங்க கற்பனைக்கு அளவே இல்லையா !! :-)
Deleteதனிமடல்.
ReplyDeleteபிரசுரிக்க வேணாம்.
நீங்க தப்பா நினைச்சுகலைன்னா ஒன்னு சொல்லவா? Buffet என்பதைச் சொல்லும்போது கடைசியில் உள்ள t கொயட் லெட்டெர் யூ ஸீ.
பஃபே என்று எழுதினால் சரியாக வரும்.
கண்டிப்பாக மேடம் ! இனிமேல் இந்த தவறை திருத்திக்கொள்கிறேன்....
Deleteநலல தகவல் பகிர்வுகள்...
ReplyDeleteநன்றி நண்பரே....
Deleteவணக்கம் சார்.
ReplyDeleteநீங்கள் சென்று வந்த ஸடார் ஹோட்டல்களை பற்றியும் எழுதுங்கள்.
நன்றி
அட நல்ல ஐடியாவா இருக்கே.... சரி ஆரம்பிச்சிடுவோம் ! நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும், ஐடியாவுக்கும் !
DeletePadichadhukke mayakkam varudhe.. :)
ReplyDeleteஹா ஹா ஹா..... அப்போ சாப்பிட்ட எனக்கு !
Deleteமனப் பதிவேட்டில் பதிந்து கொண்டேன்
ReplyDeleteஅவசியம் செல்ல வேண்டும்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
சென்னையில் சந்திப்போம்
நன்றி ரமணி சார்......சந்திக்க ஆவலாய் இருக்கிறேன் !
Deletetha.ma 1
ReplyDeleteதமிழ் மனதில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி !
Deleteஇந்த பக்கம் வரக்கூடாதுன்னு நானும் எத்தனை முறைதான் எனக்கு நானே சொல்லிக்கிட்டாலும் இந்த ஆசை இருக்கே! அது என்னை இங்க வரவைக்குது!!
ReplyDeleteஅப்படி மட்டும் நினைக்க கூடாது......என்ன இது சின்ன பிள்ளைதனமா இருக்கு :-)
Deleteநோட் பண்ணிக்கறேன் பெங்களூர் வரும் சந்தர்ப்பத்தில் உள்ளே போய் ஒரு கட்டு கட்டிடலாம்..
ReplyDeleteகண்டிப்பாக பெண்களூரு வரும்போது சொல்லவும்..... உங்களது பதிவும், முகப்புத்தகத்தில் பதிக்கும் கருத்துக்களையும் போலவே இனிதான உணவுகள் கிடைக்கும் ! நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்க்கும் !
Deleteநான் சனிக்கிழமை பெங்களூறு வரேன். மகன், மகள்களுடன் இஸ்கான் கோவில் போக ஆசை. அங்க மதியம் சாப்பாடு சாப்பிட நல்ல ஹோட்டல் சொல்லுங்களேன் ப்ளீஸ்
ReplyDeleteசனி கிழமை எப்போ வருகிறீர்கள் ? பெங்களூருவில் உங்களை சந்திக்க இயலுமா ? அப்போ பதிவர் சந்திப்புக்கு எப்போது வருகிறீர்கள் ? பெங்களூரு வந்தால் கண்டிப்பாக போன் செய்யவும். நீங்கள் குடும்பத்துடன் இனிமையாக சாப்பிட வேண்டும் என்றால் எங்கள் வீடே சிறந்தது !! நீங்கள் பிராமீன்ஸ் காஃபீ பார் என்ற புகழ் பெற்ற சைவ உணவாகமும், MTR - லால்பாக் பக்கத்தில் உள்ளதும் மிஸ் செய்யக்கூடாதவை !
Deleteசனிக்கிழமை 11 மனிக்கு பெங்களூரு வரேன். அங்கிருந்து இஸ்கான் டெம்பிள், பக்கத்துல எதோ மால் இருக்காம் அங்க போய்ட்டு என் மகளோடு அவள் ஆஃபீசுக்கு போய்ட்டு நைட் ரூம் வந்து தங்கிட்டு ஞாயித்துக்கிழமை காலைல 5.45க்கு ஃப்ளைட்ல சென்னை ப்யணம். 9 மணிக்கு நிகழ்ச்சி அரங்கத்துல இருப்பேன். நேரம் மிக குறைவு. அதானால, லால் பாக்லாம் போக முடியாதுன்னு நினைக்குறேன்.
Deleteஇந்த சகோதரியை வீட்டுக்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி. இந்த முறை முடியாது. அடுத்த முறை வரும்போது கண்டிப்பாய் வீட்டுக்கு வரேன். ஏன்னா, சனிக்கிழமை நான் நான் வெஜ்லாம் சாப்பிட மாட்டேன். விரதம். அதான். அடுத்த முறை வீட்டுக்கு வந்து ஒரு பிடி பிடிக்குறேன் விருந்தை!!
DeletePHOTOS பாக்கும் போது போகணும் போல இருக்கு ... குடுக்கற காசுக்கு நான் புல் கட்டு கட்டிடுவேன்...மனைவி சாப்டுவது 100 நூறு ரூபாய்க்கு கூட Worth இருக்காது...(Friends கூட தன போகணும்...)
ReplyDeleteசரியா சொனீங்க ராஜா.......நண்பர்கள் கூட சென்றால் அது தனி சந்தோசம்தான் ! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி !
Deleteஅண்ணே .. இன்னைக்கே என் உபவாசத்தை ஆரம்பிச்சிட்டேன் .. உங்களுக்காகதான் waiting
ReplyDeleteஇவ்வளவு நாள் பட்டினி கிடந்தும் உடம்பு எலைசது மாதிரி தெரியலையே....... அப்புறம் கொல்லி ஹில்ல்ஸ் எப்படி இருந்தது !
Deleteஸ் ப்ப்பாஆஆஆஆஆ நீங்க அடங்கவே மாட்டீங்களா??
ReplyDeleteஉங்களுக்காக இது போன்ற உணவகத்திற்கு சென்று கஷ்டப்பட்டு சாப்பிட்டு பதிவு எழுதறேன்......அதுக்காக என் என்னை திட்டறீங்க :-)
DeleteSuper...next vacation time....
ReplyDeleteஅப்போ சீக்கிரம் லீவ் போட்டு வாங்க கிருஷ்ணா ! நன்றி !
Deleteஅப்போ சீக்கிரம் லீவ் போட்டு வாங்க- (அப்படி மட்டும் நினைக்க கூடாது :lol)
Delete