Friday, August 30, 2013

சாகச பயணம் - பாம்புகளுடன் ஒரு நாள் !

பாம்பு...... இதை சொன்னாலே படையும் நடுங்கும் ! நான் சிறு வயதில் இருந்து கிராமத்தில் இருந்ததால், அதுவும் காட்டுக்குள் வீட்டை கட்டி இருந்ததால் பாம்பை பார்த்து என்றும் அவ்வளவாக பயந்தது கிடையாது !! ஆனாலும், ஒரு முறையாவது பாம்பை பார்த்துக்கொண்டே இருப்பதை விட, அதை தொட்டு தூக்கி கொஞ்ச வேண்டும் என்ற ஆவல் இருந்து கொண்டே இருந்தது. முதல் முறையாக பாங்காக், தாய்லாந்து சென்று இருந்த போது அங்கு இருந்த ஜூவில் ஒரு பெரிய மலைப்பாம்பை தோளில் போட்டு போட்டே எடுத்தேன், அதற்கே உள்ளுக்குள் உதறல் எடுத்தது. இந்த முறை எனது அனுபவம் வித்யாசம் !பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவை ஆனாலும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நகரவல்லவை. பாம்பு வகையில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு. சில பாம்புகளே நச்சுப்பாம்புகள். நூற்றில் ஒரு விழுக்காடுக்கும் குறைவானவையே நச்சுப்பாம்புகள் (< 1% ). இந்தியாவிலுள்ள நல்ல பாம்பு (நாகப்பாம்பு), கட்டுவிரியன் போன்றவை நச்சுப் பாம்புகள். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள எதிரி விலங்குளைப் பற்களால் கவ்விக் கடிக்கையிலே பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நச்சுப்பொருளை எதிரி விலங்கின் உடலுள்ளே செலுத்துகின்றது. கடிபட்ட விலங்கு விரைவில் இறக்க நேரிடும்.

 
இந்த முறை சிங்கப்பூரில் சென்டோஸா தீவு சென்று இருந்தபோது, அண்டர் வாட்டர் வேர்ல்ட் அருகினில் ஒருவர் பாம்பை வைத்து இருந்தார். சரி, அங்கிருந்த பாம்பை பிடித்துக்கொண்டு இருக்கிறார் போல இருக்கிறது என்று இருந்தபோது, ஒரு சின்ன போர்டில் போட்டோ வித் ஸ்நேக் என்று 20 வெள்ளி எழுதி இருந்தது. நாமதான் "ஸ்நேக்" பாபுவாச்சே..... உள்ளுக்குள் நடுங்கினாலும் ஒரு முறையேனும் இந்த பாம்பை தோளில் போட வேண்டும் என்ற ஆசையினால் சென்றேன். முதலில் ஒரு பாம்பை எனது தோளில் போட்டார், நானும் அது என்னை சுற்றி சுற்றி வர அதன் வழு வழுப்பு மேனி மீது பட பட ஒரு மாதிரி இருந்தது. முடிவில் அது எனது தோளை நன்கு சுற்றியபோது சிவன் போல போஸ் எல்லாம் கொடுத்தேன்..... அப்போதுதான் அந்த பாம்பின் சொந்தக்காரர், நான் ரொம்ப ரசிக்கிறேன் (உள்ளுக்குள் எடுத்த உதறல் எல்லாம் உங்களுக்கு என்ன தெரியும் ?!) என்று இன்னொரு பாம்பையும் எனது தோளில் போட்டு விட்டு "திஸ் இஸ் ப்ரீ.....!" என்று என்னை பார்த்து சிரித்தான் மகா பாவி..!!


 
ஒரு பாம்பிர்க்கே உயிரை கையில் பிடித்துக்கொண்டு நின்று கொண்டு இருந்த என்னை, பாவி இன்னொரு பாம்பையும் தோளில் போட்டு விட்டதாலும், என்னை பலரும் அங்கு நின்று பார்த்துக்கொண்டு இருந்ததாலும், வடிவேலு செய்யும் முக பாவனையில் நின்று கொண்டு இருந்தேன். அது சரி, போட்டதுதான் போட்டான் ஒரு சின்ன பாம்பாக போட கூடாதா, நல்ல பெரிய மலை பாம்பாக போட்டு விட்டு போய் விட்டான்.... கொஞ்ச நேரம் அவன் ஆளையே வேற காணோம், என்னவென்று பார்த்தால், அவன்தான் அங்கு சோடா கடை வேறு போட்டு இருக்கிறான், இது சைடு பிசினஸ் ! மனதில் நொந்துக்கொண்டே அவன் வரும் வரை காத்திருந்து பாம்பை எடுத்து விட்டவுடன்...."ஓ... இட் இஸ் சோ நைஸ் !" என்று சொல்லி விட்டு எஸ்கேப் ஆனேன்.

 
என்ன அதுக்குள்ள முடிஞ்சு போச்சுன்னு கிளம்பரீன்களா.... இருங்க, நம்ம பகுதிக்கு வந்தா புதுசா ஒரு விஷயமாவது உங்களுக்கு சொல்லணுமின்னு நினைச்சிருக்கேன், அப்படியே போனா எப்படி ? "பாம்பு மசாஜ்" பற்றி தெரியுமா ? ரஷ்யாவிலும், இஸ்ரேல் நாடுகளிலும் இது மிகவும் பிரபலம். சின்ன, பெரிய பாம்புகளை உங்களது உடலில் விட்டு மசாஜ் செய்வார்களாம், வாங்களேன் நாமளும் இப்படி ஒரு மசாஜ் செய்துகிட்டு வரலாம் !?
 
 
Labels : Saagasa payanam, adventure, snake, suresh, kadalpayanangal, day with snake

29 comments:

 1. நீங்க சிவபெருமான் மாதிரி போஸ் கொடுத்ததையே பயந்து பாத்தேன், பாம்பு மசாஜ் பாத்ததும் எனக்கு உடம்பெல்லாம் நெளியிற மாதிரி இருக்கு....

  ReplyDelete
  Replies
  1. என்ன-ஜி...... பாம்பெல்லாம் மிதிக்கிற வயசு உங்களுக்கு......ஸ்கூல் பையன் இப்படி பயப்படலாமா ! நன்றி !

   Delete
 2. நச்சு பாம்பை ஏன் நல்ல பாம்புன்னு சொல்றோம்? #டவுட்டு

  ReplyDelete
  Replies
  1. என்னா டவுட்........சன் டிவி "அப்பா எனக்கு ஒரு டவுட்" கேள்வி மாதிரியே இருக்கே ! நன்றி !

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. /வாங்களேன் நாமளும் இப்படி ஒரு மசாஜ் செய்துகிட்டு வரலாம் !?//

  ஒய் திஸ் கொலைவெறி??

  ReplyDelete
  Replies
  1. அட அந்த பாம்பை மேலே போடுவது பொண்ணுங்கதான் பாஸ்.....இப்போவாவது வரீங்களா ?!

   Delete
 5. Replies
  1. யாரை சொல்றீங்க..... பாம்பையா, இல்லை என்னய்யா ?! நன்றி !

   Delete
 6. ஐயோ ... ஸ்நேக் பாபு ...!
  அண்ணே ஏன்னே உங்க முகம் இப்படி வியர்த்திருக்கு .,? ஹி ஹி

  ReplyDelete
  Replies
  1. அட வெயிலுக்கு வேர்க்கதானே செய்யும் ஆனந்த....... அது சரி இந்த பதிவை படிச்சு உனக்கு என் வேர்க்குது.....அண்ணே இருக்கேன் கவலைபடாதே !

   Delete
 7. வணக்கம் சார் எனக்கு என்னவோ ராகுக்கு பரிகாரம் செய்ததுபோல் இருக்கிறது. நமது தொழிலுக்கு தகுந்தமாதிரி தானே நாமளும் யோசிப்போம். நல்ல தகவல். தொடர்ந்து புதிய தகவலை தாருங்கள்.
  நன்றி
  அன்புடன்
  ராஜேஷ்சுப்பு

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜேஷ் சார் ! ஒரு வேளை அது கடவுள் அமைத்து கொடுத்த பரிகாமாக கூட இருக்கலாம் !

   Delete
 8. சிவன் போஸ் நல்லாதான் இருக்கு:-)

  மகள் ஒரு சமயம்பெரிய மலைப்பாம்பைத் தோளில் போட்டு படம் எடுத்துக்கொண்டாள். அங்கே சிங்கப்பூர் Zoo வில். நான் ச்சும்மா பாம்பைத் தொட்டுப் பார்த்தேன். ஜில்லுன்னு இருந்தது. அதே சமயம் கனம் கூடுதல்.

  ReplyDelete
  Replies
  1. உங்களது பாலி பதிவுகளை விரும்பி ரசித்து படித்தேன் நான்...... பாம்பு எல்லாம் உங்களை பார்த்தா மிரளும் மேடம் !

   Delete
 9. எங்க வீட்டுக்கு பாம்பு வழி தவறி வந்தால் அடிச்சு போடும் ஆசாமி நாந்தான். இதுவரை பத்துக்கு குறையாத பாம்புகளை அடிச்சு போட்டிருப்பேன். ஆனா, தொட்டு பார்த்ததில்லை. ஒது உடம்பு வழுவ்ழுனு ஒரு மாதிரி அருவறுப்பா இருக்குமே தவிர பயமில்லைன்னு தான் தோனுது!!

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை இந்த பாம்பு உங்க கையில சிக்கலை......அது சரி என் உங்களுக்கு இவ்வளவு வேர்த்து இருக்கு !

   Delete
  2. அவுங்க பார்கரதுக்கு தான் 'பயமில்லைன்னு" சொல்றாங்க தோள் மேல போட்டு பார்குரதுக்கு இல்லை. அவ்.

   Delete
 10. பாம்பு மசாஜா!ஐயோ!

  ReplyDelete
  Replies
  1. குட்டன் சார்........என்ன இதுக்கே பயந்துடீங்க !

   Delete
 11. பார்க்கவே கை காலெல்லாம் உதருதே.........உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி. நாமெல்லாம் இந்த மாதிரி போட்டுகிட்டா அடுத்த ரெண்டு வருஷத்துக்கு தூங்கவே முடியாது, கனவில பாம்பா வரும்......

  ReplyDelete
  Replies
  1. அட நீங்க வேற சார், நான் ஒரு ஜூவில் சிங்கத்தையே பக்கத்தில பார்த்தேன்.......பாம்பை தூக்கியாவது போடலாம், சிங்கத்தை என்ன பண்றது !

   Delete
 12. Replies
  1. நன்றி கிருஷ்ணா... அது சரி அபு தாபில என்ன மிருகம் ஸ்பெஷல் !

   Delete
  2. i think "camel" let me check first then let u know :)))

   Delete
 13. பாம்பு மசாஜ் பார்பதற்கு ஜோராய்தானிருக்கு. இதிதெல்லாம் நாம (என்னை சொன்னேன்) பில்டிங் ஸ்டாரங்கு பேஸ் மென்ட் தான் வீக்கு. பாம்போடு செம அட்வெஞ்சர்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கலாகுராமன் சார்..... ஜப்பானில் நான் சென்று இருந்தபோது என்னை இப்படி மசாஜ் செய்து கொள்ள சொல்லி நண்பர்கள் என்னை தள்ளி விட்டனர்...... தப்பி பிழைத்து வந்தேன். நானும் உங்க சங்கத்து மெம்பெர்தான......!! நன்றி !

   Delete
 14. சிவ பெருமான் போஸ் மிக மிக அருமை
  அவர் போனஸ் பாம்பு போட்டது சரிதான்
  பாம்பு மசாஜ் காணொளியும் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. என்னதான் போஸ் கொடுத்தாலும், மனதினுள் நடுங்கினேன் என்றுதான் சொல்ல வேண்டும் சார் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

   Delete