ஒரு நாடு விட்டு இன்னொரு நாட்டிற்கு செல்லும்போது விமானத்தில் சென்றிருக்கிறேன், சில நேரத்தில் கப்பலில் சென்றிருக்கிறேன் ஆனால் ஒரு பேருந்து மூலம் இன்னொரு நாட்டிற்கு செல்வது என்பது இதுதான் முதல் முறை, அதுவும் அந்த பேருந்தில் சொகுசோ சொகுசாக பயணம் இருந்தால் ! பொதுவாக சொகுசு பேருந்து என்று நான் முதலில் பயணித்தது என்பது மதுரையில் இருந்து திருச்சி வரை. அந்த பேருந்தில் புஷ் பேக் எனப்படும் சீட் இருந்தது, உள்ளே தண்ணி வைத்திருந்தனர். அதையே வாயை பொளந்து கொண்டு பார்த்த ஆள் நான், ஆனால் ஒரு பேருந்தில் இவ்வளவு சொகுசு வசதிகள் வைக்க முடியுமா என்று மலைக்க வைத்தது எனது சிங்கப்பூர் மலேசியா பயணம் !


முதலில் கோலாலம்பூர் பயணம் சிங்கப்பூரில் இருந்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்தவுடன் நான் விமான பயணம் செய்யலாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் சிலர் பேருந்திலே செல்லலாம் என்று சொன்னவுடன், பல விதமான பஸ் இருந்தது, ஆனால் அதில் ஒரு பேருந்து என்னை மிகவும் கவர்ந்தது ! வெளியே பார்ப்பதற்கு எல்லா வோல்வோ AC பேருந்து போல் இருந்தாலும் இதில் மொத்தமே 18 இருக்கைகள்தான்..... நமது பேருந்துகளில் சுமார் 52 இருக்கைகள் இருக்கும் என்பதை மனதில் கொள்க ! முழுவதும் படுக்கை போன்று ஆக்கி கொள்ளும் இருக்கைகள், படம் பார்க்க திரை அதிலேயே கேம் ஆடலாம், உங்களுக்கு சாப்பிட, குடிக்க ஏதேனும் வேண்டும் என்றால் உங்களது இருக்கையில் இருந்தே பணிப்பெண்ணை கூப்பிட வசதி.... முக்கியமாக உங்களது சீட்டில் மசாஜ் வசதி ! இது சொகுசு பேருந்துதானே !!

முதலில் உள்ளே ஏறியவுடன், இது பஸ்தானா இல்லை ஏதேனும் விமானமா என்று கேள்வி வருகிறது. உங்களது இருக்கையில் அமர்ந்தவுடன், போர்வை, தலைகாணி, காபி என்று உபசாரம். பின்னர் உங்கள் முன்னால் இருக்கும் ஒரு பேப்பர் எடுத்தால் என்ன என்ன வசதி இருக்கிறது என்று தெளிவாக எழுதி இருந்தது. ஒவ்வொன்றாக குழந்தை போல ட்ரை செய்தேன். சிங்கப்பூரில் இருந்து அதன் எல்லை சென்றவுடன் நீங்கள் இறங்கி இம்மிக்ரேசன் முடித்து விட்டு, இதே போல மலேசியா எல்லையில் முடித்து விட்டு எங்களது பயணம் தொடங்கியது !
சூடாக காபி, டீ மற்றும் குளிர்ச்சியான கோலா என்று சிறிது நேரத்தில் வந்தவுடன் சாப்பிட்டுவிட்டு, மசாஜ் சீட்டில் முதுகு, இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் மிதமாக மசாஜ் செட் செய்துவிட்டு என் முன் இருக்கும் திரையில் என்ன படம் இருக்கிறது என்று நோண்ட ஆரம்பித்தேன். தமிழ், இங்கிலீஷ் என்று எல்லாமும் இருந்தது. நன்கு படுத்துக்கொண்டு படம் பார்க்க ஆரம்பித்தேன்.
முதலில் கோலாலம்பூர் பயணம் சிங்கப்பூரில் இருந்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்தவுடன் நான் விமான பயணம் செய்யலாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் சிலர் பேருந்திலே செல்லலாம் என்று சொன்னவுடன், பல விதமான பஸ் இருந்தது, ஆனால் அதில் ஒரு பேருந்து என்னை மிகவும் கவர்ந்தது ! வெளியே பார்ப்பதற்கு எல்லா வோல்வோ AC பேருந்து போல் இருந்தாலும் இதில் மொத்தமே 18 இருக்கைகள்தான்..... நமது பேருந்துகளில் சுமார் 52 இருக்கைகள் இருக்கும் என்பதை மனதில் கொள்க ! முழுவதும் படுக்கை போன்று ஆக்கி கொள்ளும் இருக்கைகள், படம் பார்க்க திரை அதிலேயே கேம் ஆடலாம், உங்களுக்கு சாப்பிட, குடிக்க ஏதேனும் வேண்டும் என்றால் உங்களது இருக்கையில் இருந்தே பணிப்பெண்ணை கூப்பிட வசதி.... முக்கியமாக உங்களது சீட்டில் மசாஜ் வசதி ! இது சொகுசு பேருந்துதானே !!
முதலில் உள்ளே ஏறியவுடன், இது பஸ்தானா இல்லை ஏதேனும் விமானமா என்று கேள்வி வருகிறது. உங்களது இருக்கையில் அமர்ந்தவுடன், போர்வை, தலைகாணி, காபி என்று உபசாரம். பின்னர் உங்கள் முன்னால் இருக்கும் ஒரு பேப்பர் எடுத்தால் என்ன என்ன வசதி இருக்கிறது என்று தெளிவாக எழுதி இருந்தது. ஒவ்வொன்றாக குழந்தை போல ட்ரை செய்தேன். சிங்கப்பூரில் இருந்து அதன் எல்லை சென்றவுடன் நீங்கள் இறங்கி இம்மிக்ரேசன் முடித்து விட்டு, இதே போல மலேசியா எல்லையில் முடித்து விட்டு எங்களது பயணம் தொடங்கியது !
சிங்கப்பூரில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் வரை செல்ல சுமார் நான்கு மணி நேரம் வரை ஆகிறது. இதில் இரண்டு மணி நேரம் சென்று சாப்பிட மலேசியா உணவு வகைகள் வந்தது.... வித்யாசமான சுவை ! கொண்டு வந்து கொடுத்த அந்த பஸ் ஹோஸ்டஸ் ரொம்ப அழகாக இருந்தது இங்கு சொல்ல வேண்டிய தகவலா என்று தெரியவில்லை !!
விமானத்தில் செல்ல வேண்டும் என்றால் சுமார் இரண்டு மணி நேரம் ஏர்போர்டில் இருந்து, முக்கால் மணி நேரம் பயணித்து திரும்பவும் இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். ஆனால் இங்கு அதே நேரத்தில் அருமையான பர்ஸ்ட் கிளாஸ் பயணம் என்பது ஆச்சர்யம்தான். இது போல பஸ் நமது ஊரில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்க பெருமூச்சுடன் கீழே இறங்கினேன்.......!
Labels : Marakka mudiyaa payanam, transtar, comfort bus journey, bus, suresh, kadalpayanangal
Wow ... Amazing ... Fantastic ... Super :-) my future trip.
ReplyDeleteநன்றி கிருஷ்ணா.... உங்களது முதல் கருத்து உங்களது எதிர்கால பயணம் போலவே இனிதாக இருந்தது !
Deleteamava...!????!
Deleteஆமாஅம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் !
Deleteஎனக்கும் பெருமூச்சு வருகிறது எப்போ இந்த பஸ்ஸில் போவோமென்று.தகவலுக்கு நன்றிங்க
ReplyDeleteநன்றி சார் ! உங்களது பதிவின் வாசகன் நான், நீங்கள் இங்கு வந்து எனது பதிவை படித்து கருத்து இட்டது கண்டு மகிழ்ச்சி !
Deleteசெம பயணம் சார்.. ஆமா கடைசி வரைக்கும் டிக்கெட் காசு எம்புட்டுனு சொல்லவே இல்லையே
ReplyDeleteஇன்று அது 58 சிங்கப்பூர் வெள்ளி என்று சொல்லி இருக்கும் அந்த நண்பருக்கு நன்றி ! உங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சீனு !
Deleteஉங்கள் மூலம் நாங்களும் அனுபவிக்கிற சுகத்தை
ReplyDeleteகற்பனையில் அனுபவித்து மகிழ்கிறோம்
படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார் ! எப்போது பெங்களுரு வருவீர்கள் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்....
Deletetha.ma 1
ReplyDeleteதங்கள் ஓட்டுக்கு மிகவும் நன்றி சார் !
Deleteமசாஜ் சீட்டில் முதுகு, இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் மிதமாக மசாஜ் செட் செய்துவிட்டு
ReplyDelete>>
மசாஜ் வசதி இருக்குன்னு சொன்னதும் நம்ம ஆளுங்கள்ல பல பேரு கற்பனைல மிதக்க ஆரம்பிச்சு இருப்பாங்க. இந்த இடம் வந்ததும் ப்ப்பூ இவ்வளாவுதானா?!ன்னு தொபுக்கட்டீர்ன்னு வந்து விழுந்துருப்பாங்க.
ஓஹோ... இது வேற இருக்கா, நான் இதை யோசிக்கவே இல்லையே.....நன்றி !
Deleteஅந்த பஸ் ஹோஸ்டஸ் ரொம்ப அழகாக இருந்தது இங்கு சொல்ல வேண்டிய தகவலா என்று தெரியவில்லை !
ReplyDelete>>
இதை சொன்னதால்தான் இந்த பதிவு முழுமை பெற்றது. இல்லன்னா எதோ மிஸ்ஸிங்க்ன்னு தோணும்
தகவல் நன்கு உங்களை சென்று அடைந்தது கண்டு மகிழ்ச்சி...... நன்றி ! :-)
Delete\\மதுரையில் இருந்து திருச்சி வரை. அந்த பேருந்தில் புஷ் பேக் எனப்படும் சீட் இருந்தது, உள்ளே தண்ணி வைத்திருந்தனர். அதையே வாயை பொளந்து கொண்டு பார்த்த ஆள் நான்\\நம்ப முடியலை சார் !!
ReplyDeleteஅது சரி, அதென்ன பஸ் பின்னாடி 18+ அப்படின்னு போட்டிருக்கு !! பதிவுதான் 18+ ன்னு கேள்வி பட்டிருக்கோம், பஸ்ஸே 18+ -ஆ !!
அட என்னங்க நீங்க.... இப்படி எல்லாமா யோசிக்கிறது ! இந்த பஸ்சில் வெறும் பதினெட்டு சீட்டுதான் அப்படின்னு போட்டு இருக்குதுங்க ! அங்க ராஜி மசாஜ் பத்தி கேக்குறாங்க, இங்க நீங்க இப்படி...... ம்ம்ம்ம் நடத்துங்க ! நன்றி !
Deleteஉலகம் சுற்றும் வாலிபனே தங்கள்.. அனுபவம் அருமை.. அதுவும் இந்த சொகுசு பயணம் இந்தியா வருவதற்குள்... இன்னும் வயசாகிடும் எங்களுக்கு...
ReplyDeleteநன்றி சதீஷ் ! வாலிபனே என்று அழைத்ததற்கு ஸ்பெஷல் நன்றி !
Deleteவிமானத்துல கூட இவ்வளவு சொகுசு இருக்காதுங்க.....!
ReplyDeleteசார், உங்கள் நக்கல் பதிவுகளுக்கு நான் விசிறி. உங்களது வருகையும், கருத்தும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது ! நன்றி !
Deleteசூப்பர் பஸ் போல..நான் ஒரு அழுக்கு ட்ரையினில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் போனேன்.இந்த பஸ்ஸுக்கு எம்முட்டு துட்டுன்னு சொல்லவேயில்லை.
ReplyDeleteநன்றி மேடம் ! அதுவும் ஒரு வகையான அனுபவமே ! சுமார் 58 வெள்ளி ஆகிறது இப்போது.....
Deleteநானும் ஒரு பத்து வருசத்துக்கு முன் சிங்கை கே எல் சிங்கைன்னு போய் வந்தேன்.
ReplyDeleteரெண்டு மணி நேரத்துக்கு ஒரு நிறுத்தம். அங்கே சுத்தமான ஓய்வறைகள். ஷாப்பிங் சென்டர் போல ஒன்னு. நறுக்கி வச்ச பழங்கள் என்று ஜோராக இருந்துச்சு..
ஆனா... உங்க பஸ் பயங்கர சொகுஸா இருக்கு! நம்மது இவ்வளவு அருமை இல்லை.
நீங்க நியூஜியில் கூட இப்படி ஒன்று பார்த்தது இல்லையா ?! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !
DeleteThe one way fare on this bus(Solitaire)?! is Sing$ 58 for travel from Singapor to Kuala Lampur!
ReplyDeleteதகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே, நான் சென்று இருந்தபோது 90 வெள்ளி !!
Deleteமிகவும் அழகாக உள்ளது. ஆச்சர்யமாகவும் உள்ளது. பயணம் செய்ய ஆசையாகவும் உள்ளது.
ReplyDeleteஇப்போது தான் பெங்களூரிலிருந்து திருச்சிக்குப் படுக்கை வசதிகொண்ட பேருந்து புதிதாக விட்டிருக்கிறார்கள். கட்டணம் ரூ. 750.
ரயிலைவிட சுகமாகக் கால் நீட்டி [6 அடி உயரமானவரும் அவஸ்தையில்லாமல்] படுத்துக்கொண்டு பயணிக்க முடிகிறது.
இதுபோலெல்லாம் சொகுசு பஸ்கள் இங்கு வர ஒரு 50 வருஷமாவது ஆகும் என நினைக்கிறேன்.
பகிர்வுக்கு நன்றிகள்.
நன்றி சார் ! இந்தியாவில் ரோடு வசதியும், இது போன்ற பேருந்துகளை பராமரிக்கும் வசதியும் வந்து விட்டால் இது சாத்தியம்தான் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார் !
DeleteFantastic !
ReplyDeleteநன்றி மோகன்-ஜி ! ஒரே வார்த்தையில் இந்த பதிவினை பற்றி அமோகமாக சொல்லி விட்டீர்கள்.... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !
Deleteசிறந்த வலைப்பதிவு, ஒரு முறை செல்ல வேண்டும்
ReplyDeleteநன்றி விக்கி ! தங்கள் வருகையும், கருத்தும் எனக்கு உற்சாகம் அளித்தது !
Deleteபெங்களூரில் இருந்து சென்ற வருடம் கர்நாடக பஸ் மூலம் ஷிர்டி சென்றிருந்தேன் அந்த பஸ் கிளப் கிளாஸ் வகைப் பேருந்து. அதில் நேரடி தொலைக்காட்சி டிஷ் மூலம் ஒவ்வொரு இருக்கையிலும் தனிதனி ரிமோட் வசதியடன் இருந்ததைப் பார்த்தே வியந்து போனேன் .சொகுசு இருக்கைகளுடன் வால்வோ பேருந்து 40 சேனல்களுடன் தமிழ் உள்பட சுமார் 18 மணி நேரம் பயணம். அதுவே இன்னும் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. இந்த பேருந்தைப் பார்த்து பெருமூச்சு விட வேண்டியது தான்
ReplyDeleteதமிழ்நாட்டில் எப்போதும் லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வரும் சேகர் ! நன்றி !
Delete