பொதுவாக உணவகம் செல்லும்போது நாம் ஆர்டர் செய்து சாபிட்டோம் என்றால் நமக்கு எவ்வளவு தேவையோ அது மட்டுமே சாப்பிடுவோம், ஆனால் இந்த புப்பெ (Buffet) முறை உணவகம் சென்றால் நிறைய பதார்த்தங்கள் இருக்கும், ஆனால் உங்களுக்கு என்று பிடித்தமான சில உணவு மட்டுமே அதில் இருக்கும், காரணம் புப்பெ முறை எனும்போது எப்போதும் வட நாட்டு உணவு வகைகள் அதிகம் இருக்கும். தென் இந்தியர்களாகிய நமக்கு அந்த உணவுகள் பல நேரங்களில் பிடிக்காது...... அப்படி எல்லாம் இல்லாமல் வெறும் தென் இந்திய உணவு வகைகள் அதுவும் புப்பெ முறை எனும்போது, எல்லாமே பிடித்தவையாக இருக்கும் என்னும் சமயத்தில்..... திணற திணற சாப்பிடதான் தோன்றும் இல்லையா ?!
Labels : Arusuvai, Amazing buffet, south indian, suresh, kadalpayanangal, buffet
ஒரு நல்ல தென் இந்திய உணவு வகைகள் உணவகம் எங்கு இருக்கிறது என்று தேடியபோது இது கிடைத்தது. இப்போதுதான் ஆரம்பித்து இருக்கின்றனர்..... அதனால் கண்டு பிடிப்பது சிறிது சிரமம் ஆகிவிட்டது. உள்ளே நுழைந்தவுடன் உங்கள் கண்ணில் படுவது இந்த லைவ் உணவு இடம். நீங்கள் உட்கார்ந்தவுடன் சில உணவகங்களில் சுவாசிக்க கூட நேரம் கொடுக்காமல், மெனு கார்டு நீட்டி, தண்ணீர் கூட கொடுக்காமல் இருக்கும் சில உணவகங்களில் இந்த உணவகம் வித்தியாசம் ! நுழைந்து உட்கார்ந்தவுடன், நீங்கள் சௌகர்யமாகும் வரை பக்கத்தில் வரவில்லை, நாங்கள் அழைக்கும் வரை காத்திருந்து, பின்னர் எல்லாவற்றையும் பொறுமையாக செய்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த உணவகத்தில் இரண்டே வகை உணவுதான்..... சைவம், அசைவம். பத்து வகை ஸ்டார்ட்டர் மட்டும் நீங்கள் போதும் போதும் என்னும் அளவு தருகிறார்கள்.
நீங்கள் ரெடி என்று சொன்னவுடன் சர சரவென்று உங்களது தட்டில் வந்து விழும் உணவு என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன் அடுத்த உணவு வரும் ! முதலில் எனக்கு தயிர் வடை வந்தது, பின்னர் மஷ்ரூம் தோசை, பஞ்சதான்ய அடை, பொடி இட்லி, மட்டன் சுக்கா, சிக்கன் ரோஸ்ட், கிரில் பிரான் என்று வந்து கொண்டே இருந்தது. ஏதேனும் ஒன்று நன்றாக இருக்கிறது என்று இன்னொரு முறை
கேட்டால் அதை நீங்கள் வெறுத்து போகும் வரை தருகிறார்கள் :-) ! தயிர் வடையில் புளிக்காத தயிர் விட்டு, மேலே சிறிது காரபொடி தூவி, கொத்தமல்லி இதழை மேலே வைத்து தரும்போது உங்கள் நாக்கு ஊற ஆரம்பிக்கும், அதை பியித்து ஒரு வாய் வைத்தவுடன் கரைந்து போகும் அந்த சுவைக்கு என்ன தரலாம் என்று யோசிக்கும் மனசு ! அதே போல்தான் மற்ற உணவுகளும்.... அதுவும் இந்த பஞ்சதான்ய அடையில் சிறிது மொறு மொருப்புடன் சிறிது காரம் சேர்த்து வரும் அதை சட்னியில் தொட்டு தின்றால் தேவாமிர்தம்தான் போங்கள் !
ஸ்டார்ட்டர் வகைகளையே வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு இருக்கும்போது சார், உங்க மெயின் கோர்ஸ்
ரெடி என்று சொன்னால் சிறிது திகிலாகத்தான் இருக்கிறது ! சிறிது நேரம் கழித்து அடுத்து என்ன என்று புப்பெ முறையில் வைத்து இருந்த மெயின் உணவு என்பதில் சூப், சிக்கன் கறி, நண்டு மசாலா, கேரளா ஸ்டைல் மட்டன் கறி, பிரியாணி, பீட்ரூட் பல்யா, வெண்டைக்காய் கறி...... என்று சொல்லி கொண்டே போகும் அளவுக்கு நிறைய இருந்தது. படிக்கும்போதே எனக்கு வயிறு புல் !இதை எடுத்துக்கொண்டு வரும்போது சார்..... நம்மகிட்ட ஆப்பம், தோசை, பரோட்டா, சப்பாத்தி.... என்று அவர் அடுக்க ஆரம்பிக்க, தலை சுற்றியது !
முடிவில் எல்லாம் சாப்பிட்டுவிட்டு சிறிது ஸ்வீட் எடுக்கலாம் என்று சென்றால் அதில் ஒரு பத்து வகைகள்.... அதை சொல்ல முடியலீங்க, வேண்டாம்.... அழுதுடுவேன் !! முடிவில் இரண்டு நாள் யாரையாவது பட்டினி போட்டு இங்கு கொண்டு வந்தால்தான் அனைத்தையும் சாப்பிட
முடியும் என்று புரிந்தது. எல்லா உணவும் சுவையோ சுவை என்பதற்கு நான் காரண்டி !
பஞ்ச் லைன் :
சுவை - ஏகப்பட்ட வகைகள், எல்லாமே அருமையான சுவை, கண்டிப்பாக நீங்கள் போக வேண்டிய உணவகம் !
அமைப்பு - நல்ல பெரிய உணவகம், வேலேட் பார்கிங் வசதி உண்டு !
பணம் - ஒரு ஆளுக்கு சுமார் 700 ரூபாய் வரை வருகிறது !
சர்வீஸ் - நல்ல சர்விஸ், பொறுமையாக எல்லாம் பார்த்து பார்த்து செய்கின்றனர்.
அட்ரஸ் :
131, 1st Cross, 5th Block, Koramangala. Check our location at http://goo.gl/5H6SM.
Ph: +91 80 2552 6362 / 6363
www.bonsouth.com - a Billionsmiles Brand
மெனு கார்டு :
131, 1st Cross, 5th Block, Koramangala. Check our location at http://goo.gl/5H6SM.
Ph: +91 80 2552 6362 / 6363
www.bonsouth.com - a Billionsmiles Brand
மெனு கார்டு :
Labels : Arusuvai, Amazing buffet, south indian, suresh, kadalpayanangal, buffet
இப்பமே அங்கே போயி சாப்பிடனும் போல இருக்கே...!
ReplyDeleteபுஃப்பெ சாப்பிட வேண்டும் என்றால் வயிற்றை நன்றாக காலியாக வைத்துக் கொண்டு போவது நல்லது.
சரியா சொன்னீங்க மனோ ! புப்பெ முறையில் சாப்பிட ரெண்டு நாள் பட்டினி கிடக்கணும் !! நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்....
Deleteபாஸ், அவிங்க முதல்ல 80 அடி சாலையில் வச்சிருந்தாங்க. அப்பவே பர்ர்ப் ரேட்டிங் கம்மியா (சர்வீஸ் மோசம், ஓவர் ரேட் )இருந்துச்சு. இப்ப வேற ப்ராஞ்சைசியான்னு தெரியலை.
ReplyDeleteநீங்க லோக்கல் பார்ட்டியானு தெரியல. அந்த ஏரியாவே ஹோட்டல்களா இருக்கும். சோனி வேர்ல்டு ஜங்சன்லருந்து நேரா சுக்-சாகர் முக்கு வந்து ஜோதிநிவாஸ் காலேஜ் சாலை வழியா வந்து மசூதியக் கடந்து வலப்புறம் வந்து கனரா வங்கி சாலையில் கீழே இறங்கி திரும்பவும் பல உணவகங்கள் இருக்கு.
1. நாகார்ஜுணா
2. மெயின்லாண்ட் சைனா
3. சுங்வா
4. நந்தினி
5. அஞ்சப்பர்
6. காமத்
7. கிருஷ்ணா கபே
8. ஜீனியர் குப்பண்ணா
முகம் தெரியா நண்பரே, தங்களது அனைத்து தகவல்களும் உண்மைதான்.....நான் கூகிள் மேப் உதவி கொண்டு சென்றபோது முதலில் அங்குதான் காண்பித்தது ! இந்த உணவகம் ஜூன் மாதம் புதிய மேனேஜ்மென்ட் கொண்டு ஆரம்பித்து இருக்கின்றனர். இப்போது அசத்துகின்றனர்.... போக போக தெரியும் !
Deleteஎல்லா உணவக தகவல்களுக்கும் நன்றி, விரைவில் ஒவ்வொன்றாக செல்ல ஆரம்பிப்போம் !
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !
வணக்கம் சார்
ReplyDeleteஉங்க போட்டோ மிஸ்சிங்.
http://astrovanakam.blogspot.in/
நன்றி
ராஜேஷ்-ஜி, பஞ்ச் லைன் மேலே நம்ம போட்டோதான்..... அந்த லைட் வெளிச்சத்திலே அவ்வளவுதான் வருது நம்ம அழகு !!
Deleteஅட.... என்ன நீங்க போட்டோ போடுவது ஒரு குத்தமா ?!
உங்களோட ஜாதக கதம்பம் அபாரம்.......சந்திக்க ஆசை ஜி !
சுவை - ஏகப்பட்ட வகைகள், எல்லாமே அருமையான சுவை, கண்டிப்பாக நீங்கள் போக வேண்டிய உணவகம் !
ReplyDelete>>
போக்குவரத்து செலவுக்கு நீங்க பொறுப்புன்னா வர நாங்க எல்லாம் ரெடி!!
நீங்கள் இந்த பதிவை படித்து முடித்தவுடன் உங்களுக்கு சிறகுகள் முளைத்திருக்கும் என்றல்லவா நம்பினேன்......!! நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !
DeleteThanks for the information uncle!!!
ReplyDelete(ennaya mattum chinna pasanga ellam unclennu solranga)
நன்றி ஜெகதீஷ் ! உங்களுக்கு எனக்கும் சம வயதுதான் இருக்கும் போல் இருக்கிறது, அதனால் நீங்கள் எனது பெயரை சொல்லியே கூப்பிடலாம்.... ! :-)
Deletenalla varnanai. Cable anna pattarayil irunthu vanthavara antha vasam jaasthiya irukku.
ReplyDeleteஅவர் பதிவுலகின் பிதாமகன்....... அவரின் சாயல் இருப்பது எனக்கு பெருமைதானே ! நன்றி !
Deleteஇங்கே இருக்கும் நிறைய Buffet சுமார் தான். கட்டாயம் அங்கே வரும் போது விசிட் செய்யணும்.ஒரு மூணு நாள் பட்டினி இருக்கணும் போலயே..
ReplyDeleteநன்றி மேடம் ! தங்கள் வருகையும், கருத்தும் உற்சாகம் தருகிறது !
Deleteமூன்று நாள் பட்டினி கிடந்து போனால்தான்
ReplyDeleteசரிவரும்போல
சாப்பிட்டபின்னும் மூன்று நாட்கள்
தெம்போடு திரியலாம் போலவும் உள்ளது
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்கு சொன்னீர்கள் சார் ! மூன்று நாள் சாபிட்டால் வரும் பில் இந்த ஒரு வேளை உணவிலேயே வருகிறதே, அதை சொல்ல மறந்துவிட்டீர்கள் சார் !
Deletetha.ma 1
ReplyDeleteதங்களின் தமிழ் மணம் ஓட்டிற்கு நன்றி சார் !
Deleteநானும் இது எங்கேயோ சென்னையில் அல்லது தமிழ்நாட்டில இருக்குது என்று விழுந்து விழுந்து வாசித்தால், கடைசியில் ஏமாற்றம் தான் மிச்சம். :))
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி வியாசன் ! விரைவில் சென்னையிலும் வரும், அல்லது அங்கு தேடி பார்த்தால் இருக்க கூடும்....!
Deletehttp://kalvetu.balloonmama.net/2011/01/blog-post.html?m=1. Please read it then you can call இந்த உணவகத்தில் இரண்டே வகை உணவுதான்..... சைவம், அசைவம். Stay Quit. May be you should know, bcoz u r a genius :-)))
ReplyDeleteஅருமையான பதிவை அறிமுகபடுதியதர்க்கு நன்றி கிருஷ்ணா ! அடுத்து என்னை ஜீனியஸ் என்று கிண்டல் செய்ததற்கும் நன்றி நண்பரே !
Deleteநன்றி நண்பரே...!
Delete