Friday, August 9, 2013

டெக்னாலஜி - மைக்ரோசாப்ட் கேமிங்

கேம் - இது ஒரு தனி உலகம். நாம் எல்லோரும் இதை கம்ப்யூட்டர் கேம் என்று சொன்னதுண்டு, இன்று அதை எல்லாம் தாண்டி உங்களை அந்த கேமின் உள்ளே இருப்பது போல உணர வைக்கிற டெக்னாலஜி வந்து விட்டது தெரியுமா ? முன்பெல்லாம் டிவியில் இருந்து ஒரு வயர் வரும், அதன் முனையில் இருக்கும் கண்ட்ரோலர் கொண்டு கேம் ஆடுவோம், ஆனால் இன்று மோஷன் கேப்சர் டெக்னாலஜி வந்து உங்களுக்கும் டிவியில் விளையாடும் கேமுக்கும் எந்த விதமான வயரும் தேவை இல்லாமல் செய்து விட்டது. இதில் எதிர்கால டெக்னாலஜி என்னவென்று தெரியுமா ?


இப்போது சோனியில் ப்ளே ஸ்டேஷன் என்றும், மைக்ரோசாப்ட்டில் கினெக்ட் என்றும், WII என்பதில் என்றும் பல கேமிங் ஸ்டேஷன் உண்டு. அதில் இன்று மைக்ரோசாப்ட் மோஷன் டெக்னாலஜி கொண்டு இப்போது இருக்கும் அந்த கினெக்ட் என்பது என்ன என்ன செய்யும் என்று நான் சொல்வதை விட நீங்களே பாருங்கள் !


என்னதான் நீங்கள் கேம் விளையாடினாலும், அது சிறிய டிவியில் தெரியும், அதனால் உங்கள் கவனம் சிதறும், இதை தவிர்க்க Illumiroom என்ற கான்செப்ட் ஒன்றை மைக்ரோசாப்ட் கண்டு பிடித்திருக்கிறது. இதில் நீங்கள் இருக்கும் ரூம் அப்படியே கேம் ஏரியா போன்று மாறும். அதிகம் தெரிந்து கொள்ள ஆசைபட்டால், Illumiroom என்று கூகுளில் தேடி பாருங்கள், அசந்து போவீர்கள்.



Labels : Suresh, Kadalpayananga, Technology, Microsoft Kinect, Xbox Kinect, Illumiroom

9 comments:

  1. ஆஹா இதை என் சின்ன மகன் படிக்க கூடாது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அமுதா கிருஷ்ணா ! அப்புறம் உங்க மகனோட மெயில் id கிடைக்குமா ?! :-)

      Delete
  2. தாங்கள் அளித்த தமிழ் மணம் ஓட்டிற்கு நன்றி !

    ReplyDelete