Thursday, August 8, 2013

சாகச பயணம் - சிங்கப்பூர் நைட் சபாரி (Night Safari)

எல்லோரும் சிறு வயதில் இருந்து ஜூ சென்று இருப்போம், ஒரு கூண்டிலோ அல்லது ஒரு இடத்திலோ மிருகங்கள் இருக்கும் அதை நாம் நடந்தோ, வண்டியிலோ சென்று பார்ப்போம் இல்லையா, அந்த மிருகங்கள் எல்லாம் பகலில் வேட்டையாடி வாழும் மிருகங்கள்..... அப்போது இரவினில் முழித்து இருக்கும் மிருகங்களை எல்லாம் எப்படி, எங்கே பார்க்க முடியும் ? இந்த கேள்விக்கு விடையாக இருப்பது சிங்கப்பூர் நைட் சபாரி ! மாலை ஆறு மணிக்குதான் இந்த ஜூ ஓபன் ஆகிறது, இரவினில் முழித்து, வேட்டையாடும் மிருகங்களை மட்டுமே இங்கு பார்க்க முடியும் ! வாருங்கள் அந்த புதுமையான அனுபவம் காண.....

வரிக்குதிரையை அடக்கும் மாவீரன், அஞ்சா சிங்கம்.......நமது......!!

1980இல் திரு.ஓங் ஸ்வீ லா என்பவரால் முன் மொழியப்பட்டு, 26 மே 1994இல் இது திறக்கப்பட்டது. இன்று இதில் 1024 உயிரினங்கள் இருக்கிறது, பெரும்பாலான மிருகங்கள் இரவினில் விழித்து வேட்டையாடுபவை. உள்ளே நாங்கள் நுழைந்தபோது உங்களை மகிழ்விக்க நடனம், பாடல்கள் என்று தூள் பறக்கிறது. இந்த முறை காட்டுவாசிகள் போல நெருப்புடன் நடனம் இருந்தது மிகவும் அருமை. இன்று 49 சிங்கப்பூர் டாலர் ஆகிறது !இதுவரை நான் நான்கு முறை இங்கு சென்று இருந்தாலும் எனக்கு ஒவ்வொரு முறையும் சில சிரமங்கள் இருந்தது எனலாம், அதில் முக்கியமானது எந்த மிருகத்தையும் நம் கேமரா கொண்டு போட்டோ பிடிக்க முடியாமல் போவது ! இந்த மிருகங்கள் போட்டோ பிளாஷ் போட்டு எடுத்தால் அதற்க்கு சிரமம் என்று உள்ளே போகும்போதே சொல்லி விடுகிறார்கள், இதன் பின்னர் போட்டோ எடுக்கும்போது வெறும் இருட்டு மட்டும்தான் தெரிகிறது, இதற்கெல்லாம் நல்ல பெரிய கேமரா வேண்டும் ! ஒரு காட்டினுள் உள்ளே சென்று விட்டு திசை தெரியாமல் தெரிவது போல ஒவ்வொரு முறையும் நான் சிரமப்பட்டேன் !


முதலில் ஒரு டிராம் வண்டியில் உங்களை கூட்டி செல்வார்கள், அது உங்களை முதலில் ஒரு இடத்திற்கு கூட்டி செல்லும், அங்கு நீங்கள் இறங்கி நடந்து சென்று பல மிருகங்களை பார்க்க வேண்டும். நீங்கள் அந்த இடத்திற்கு இந்த டிராம் வண்டியில் செல்லும்போதே சிங்கம், புலி என்று மிதமான லைட் வெளிச்சத்தில் பார்க்கலாம். இப்படி பல மிருகங்களை நீங்கள் தேடி தேடி பார்க்க வேண்டும். ஒரு சில சமயத்தில் அங்கே பார் புலி, காட்டெருமை என்றெல்லாம் பலர் சொல்லும்போது நாம் எங்கே எங்கே என்று அந்த இருட்டில் துலாவ வேண்டி இருக்கிறது. என்னதான் இது சிரமமாக இருந்தாலும் இந்த ஜூ ஒரு புதுமையான அனுபவம் என்பதை மறுக்க முடியாது. 

இரவினில் உணவு உண்ண சில உணவகங்கள் இங்கு இருக்கின்றன, அதில் எல்லாம் கலை நயம் மிளிர்கிறது. உட்காரும் சேர் கூட மிருகங்கள் வடிவில் அசத்தல் போங்கள் ! மிதமான வெளிச்சத்துடன் அந்த இரவினில் நீங்கள் உங்கள் துணையுடன் சாபிடுவது நிச்சயம் அருமையான அனுபவம் !நாங்கள் இப்படி டிராம் ஒரு இடத்தில் நின்றபோது இறங்கி நடக்க ஆரம்பித்தோம், ஒரு இடத்தில பறக்கும் அணில் இங்கு இருக்கிறது என்று இருந்தது. நாங்கள் அந்த வெளிச்சத்தில் கூர்ந்து பார்த்துக்கொண்டே இருந்து ஒரு நேரத்தில் அந்த அணில் எங்களை பறந்து கடந்தபோது எல்லோரும் ஒரு சேர கத்தினோம் ! இது போல பல இடத்தில் கூர்ந்து நோக்கி எல்லாவற்றையும் பார்க்க வேண்டி இருந்தது !

அங்கு இதை எல்லாம் பார்த்துவிட்டு நீங்கள் சரியான நேரத்தில் ஒரு இடத்திற்கு வந்துவிட வேண்டும், அது அங்கு நடக்கும் ஒரு ஷோ காண ! பறவைகளை, விலங்குகளை  கொண்டு அவர்கள் நடத்தும் இந்த ஷோ மிகவும் நன்றாக இருக்கிறது. மறக்க முடியா ஷோ என்பது இதுதான் ! ஹாஸ்யம், த்ரில் எல்லாம் நிறைந்தது இது எனலாம். 

எல்லோரும் பகலில் மிருகங்களை ஜூவில் பார்த்து அலுத்து இருந்தீர்கள் என்றால், நீங்கள் கண்டிப்பாக போக வேண்டிய இடம் இது ! மிகவும் புதுமையான அனுபவம் என்று சொல்லலாம் !

நான்கு வருடத்திற்கு முன், நான் அங்கு இருந்த நடன கலைஞன் உடன்.....
Labels : Saagasa payanam, Night safari, Singapore, Unique, zoo, suresh, kadalpayanangal

13 comments:

 1. ஜூ என்றாலே தெறித்து ஓடும் என் போன்ற ஆசாமிகளையும் பார்க்க தூண்டியது உங்க விவரிப்பு.. அடுத்த முறை சிங்கப்பூர் போகும்போது கட்டாயம் பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆனந்த் ! உடம்பு இப்போது குணமாகி வருகிறது என்று நினைக்கிறேன், உங்களது கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்..... பதிவர் சந்திப்பில் சிந்திப்போம் !

   Delete
 2. சிங்கப்பூர் செல்லவேண்டும் என்கிற எண்ணம் உள்ளது
  பார்வையிடவேண்டிய பட்டியலில் இதை இணைத்துக் கொண்டேன்
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார் ! உங்களை விரைவில் சந்திக்க ஆர்வமாக இருக்கிறது !

   Delete
 3. உங்க மேல கொஞ்சம் பொறாமையுடந்தான் இந்த பதிவை படித்தேன். நீங்க பார்த்து ரசித்ததை அழகா தொகுத்து ரசிக்க கூடிய வகையில் பதிவாக்கி தந்தமையால் தப்பீச்சீங்க.

  ReplyDelete
  Replies
  1. உங்க நிறைய பதிவை பார்த்து நான் பொறாமை பட்டிருக்கிறேன், ஆனால் நான் சொன்னதில்லை, நீங்கள் சொல்லி விட்டீர்கள் ! நன்றி !

   Delete
 4. என்னடா அந்த போட்டோல கொஞ்சம் ஒல்லியா இருக்கீங்கன்னு பார்த்தேன்... நாலு வருசத்துக்கு முன்னாடியா ஓகே ஓகே..:-)))))))

  ReplyDelete
  Replies
  1. அட நாங்களும் ஒரு காலத்தில் ஒல்லியாக இருந்தோம் என்று சொல்லவே அதை போட்டேன்..... கண்டுபிடித்ததற்கு மிக்க நன்றி !

   Delete
 5. அண்ணே .. பாவம்ண்ணே அந்த வரிக்குதிரை


  ஓபன் ட்ரேம் வண்டில எப்புடின்னே ..? பாதுகாப்புக்கு ஒண்ணுமே இல்லையே ?

  ReplyDelete
  Replies
  1. ஒரு பொம்மைய கூட அடக்க விட மாட்டுரீன்களே....எனக்கு பரிதாபப்பட ஆள் இல்லை !

   ஜூவில் எல்லா மிருகங்களும் வேலிக்கு உள்ளே இருக்கும் இல்லையா, அது போலதான் இதுவும், ஆனால் ஒரு ஸ்டாப் வந்து இறக்கி விட்டவுடன் நீங்கள் நடந்து போய் இது போல பார்க்கலாம். எல்லாம் வேலிக்கு உள்ளேதான் ஆனந்த் !

   Delete
 6. உங்கள் சிறு புன்னகையே இந்த பதிவை நீங்கள் விரும்புவதை காட்டுகிறது கிருஷ்ணா ! நன்றி !

  ReplyDelete
 7. hahahahhahahahahahahahhahhahahahahahahahahahahahahhahahahahahhehehheheehhehehehahahhahahahahahahahahahahahhahahhehehehehehhhahahhahaahahhaaaa :) :) :) :) :) :) :)

  ReplyDelete
 8. என்னங்க இப்படி சிரிக்கிறீங்க, அப்படி நான் என்ன சொல்லிட்டேன் ?! ஆனாலும் வில்லின் சிரிப்பு போங்க.....

  ReplyDelete