Monday, September 30, 2013

அறுசுவை - வித்யார்தி பவன் தோசை, பெங்களுரு

இந்த பதிவை நீங்கள் படிக்கவில்லை என்றால் ஒரு அருமையான உணவகத்தை மிஸ் செய்கிறீர்கள் என்று பொருள் ! இந்த தோசையை நான் வெகு வருடங்களாக சாப்பிட வேண்டும் என்று யோசித்து, தூரம் அதிகம் என்பதால் பின்னர் என்று தள்ளி போட்டு கொண்டே வந்தேன். சமீபத்தில் எனது வெள்ளைகார பாஸ் அங்கு போய் விட்டு வந்து ஆஹா என்ன சுவையான தோசை என்று சொல்லியதில் இருந்து மனது அதையே நினைத்துக்கொண்டு இருந்தது எனலாம். பெங்களுருவில் காந்தி பஜார் சென்று யாரை கேட்டாலும் வித்யார்தி பவன் எங்கே என்று சொல்வார்கள், அவ்வளவு பிரபலம். மற்ற ஹோடேல்களை போல உள்ளே நீங்கள் நுழைந்து இடம் பிடிக்க முடியாது, அவ்வளவு கூட்டம் அள்ளும் !!
 

 

முதலில் உங்களது பெயரை கொடுத்துவிட்டு வெளியே வெயிட் செய்ய வேண்டும், சீட் ரெடி ஆனவுடன் உங்களை கூப்பிடுவார்கள்..... கூட்டம் அதிகம் இருக்கும் நேரத்தில் சில நேரம் உங்களது முறை வர அரை மணி நேரம் கூட ஆகும் ! இடம் இருக்கிறது உள்ளே போங்கள் என்று சொன்னவுடன் நீங்கள் மகிழ்ச்சியாக ஒரு சீட்டில் உட்கார்ந்தால், பக்கத்திலேயே இன்னொருவர் வந்து உட்காருவார்....... இங்கே பிரைவஷி தேவை என்பவர்கள் போகாமல் இருப்பது உத்தமம் ! ஓகே..... உள்ளே இடம் கிடைத்து விட்டது அப்புறம் என்ன ஆர்டர் செய்யலாம் என்று பார்த்தால் மெனு என்பது மிகவும் சிறுசு, சில நேரங்களில் கும்பல் அதிகமாக இருக்கும்போது தோசை கிடைக்க லேட் ஆகும் என்பதால் கிடைப்பதை சாப்பிட வேண்டியதுதான்.


நான் சென்று இருந்தது மதியம் மூன்று மணிக்கு, அப்போதும் கூட்டம் அலை மோதியது. ஒரு மசாலா தோசை சொல்லி விட்டு சுமார் இருபது நிமிடம் காத்திருந்தேன்...... அதன் பலன் அது வந்தபோது தெரிந்தது. சுமார் மொறு மொறுவென்று வீட்டில் சுடும் தோசை சைசில் தோசை எனக்கு வந்தபோது எனது பக்கத்தில் இருந்தவர் என்னை ஏக்கத்துடன் பார்த்தார் என்றுதான் சொல்ல வேண்டும். தோசைக்கு சட்னியை தாரளமாக வந்து ஊற்றினார், சாம்பார் எல்லாம் கேட்டால் உங்களை பைத்தியம் என்பார்கள் ! ஒரு விள்ளல் தோசையை பியித்து சட்னியில் முக்கி விட்டு வாயில் போட்டால், அட அட அட அருமை போங்கள் ! ஆனால் என்ன, தோசையை பிழிந்து விட மட்டும் கூடாது....... ஒரு கால் லிட்டர் எண்ணை வரும் !! உருளைக்கிழங்கு மசாலை சிறிது விண்டு வாயில் வைத்தால் அது வேறு வழுக்கி கொண்டு போனது.

என்ன பார்க்கிறீர்கள்..... என்னடா தோசையுடன் முடித்து விட்டதா என்றா. அங்கு சென்றது அவர்கள் தோசை கொண்டு வரும் அழகை காண்பதற்கு மட்டுமே சார். தோசை நன்றாக இருந்தது.... ஆனால் அந்த கூட்டத்தில் எல்லோரும் தோசையைதான் கேட்கிறார்கள், அதற்க்கு அந்த சர்வர் எத்தனை தடவை உள்ளே சென்று வருவார். அவர் ஒரு முறை வரும்போது சுமார் இருபது தோசையை கொண்டு வரும் அழகே தனி.


 

 


பஞ்ச் லைன் :

சுவை - மிக சிறிய மெனுவாக இருந்தாலும் இவர்களது காராபாத், இட்லி மற்றும் தோசை சுவை மிகவும் அருமை.

அமைப்பு - ஓரளவு நல்ல பெரிய உணவகம், பார்கிங் வசதி இல்லை.... மிகவும் பிஸியான பஜார் ஏரியா என்பதால் பார்கிங் கிடைப்பது சிரமம்  !
 
பணம் - கீழே இருக்கும் மெனு கார்டு பாருங்களேன்.....

சர்வீஸ் - நல்ல சர்விஸ், ஆனால் நிறைய நேரம் ஆகும்.

அட்ரஸ் :


No-32, Gandhi Bazar Main Road, Basavanagudi, Bangalore, Karnataka 560004, Gandhi Bazar Rd, Gandhi Bazaar, Basavanagudi, Bangalore, KA 560004, India ‎
+91 80 2667 7588
 

 


மெனு கார்டு :


 
Labels : Vidyarthi Bhavan, Dosa, Dosai, Gandhi Bazaar, Suresh, Arusuvai, Kadalpayanangal

Friday, September 27, 2013

ஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)

கரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா ?! இந்த பதிவை எழுத ஆரம்பித்தபோது எந்த தகவலை தருவது, எதை விடுவது என்று தெரியாமல் தவித்தேன்....... ஏனென்றால், பஞ்சில் ஆரம்பித்து திரைசீலை வரை அவ்வளவு விஷயம் இருக்கிறது. இதை சுருக்கி தரலாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் நிறைய பேர் சென்ற வார தஞ்சாவூர் வீணையில் நன்கு விவரமாக எழுதி இருந்ததை ரசித்தால், இதையும் விவரமாக கொடுத்தால் என்ன என்று தோன்றியது, அதனால் இந்த பதிவை பகுதிகளாக தருகிறேன் !!

2000 ஆண்டுக்கும் பழமையான வரலாறு கொண்டது கரூர் தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றாகும்.இந்து மத நம்பிக்கைப்படி இறைவன் பிரம்மா தனது படைப்பு தொழிலை இங்குதான் தொடங்கியதாக கருதப்படுகிறது. அதன் பொறுட்டே இவ்வூர் ’’கரூவூர்’’ என அழைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில் பண்டைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர் தாலுக்கா 1910 ம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டதுடன் இணைக்கப்பட்டது. கொசுவலையில் ஆரம்பித்து இன்று திரைசீலையில் பிரபலமாக விளங்குகிறது ! இந்த பதிவை எழுதும் போது "தேவியர் உள்ளம்" ஜோதிஜி அவர்கள் எழுதிய டாலர் நகரம் என்ற புத்தகத்தை படித்து கொண்டிருந்தேன், அதில் அவர் நான் எழுதியதை விட விரிவாக பின்னலாடை பற்றி எழுதி இருக்கிறார், நீங்கள் இந்த தொழிலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் இந்த புத்தகத்தை வாங்குவது உத்தமம்.


இந்த பகுதியை ஆரம்பிப்பதற்கு முன் ஒரு முக்கிய விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், கரூரில் செய்யும் துணியும், திருப்பூரில் செய்யும் துணியும் ஒன்றா ? இரண்டுமே துணிதான், ஆனால் தயாரிக்கும் முறை முற்றிலும் வேறு..... கரூரில் செய்யும் முறை வீவிங் (weaving), திருப்பூரில் செய்யும் முறை என்பது நிட்டிங் (Knitting). இதனால்தான் திருப்பூர் எனும்போது பின்னலாடை என்பார்கள் ! இது வரை நீங்கள் புரிந்து கொண்டாலே இப்போது போதும்....... உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் இப்போது கரூர் என்பது வீவிங் முறையில் செய்யப்படும் ஆடைகள்.Knitting
Weaving
Definition
Knitting is a method that is used to produce fabric, by turning yarn into cloth
In weaving, fabrics are produced by interlacing two different sets of yarn or threads horizontally or vertically
Origin
Egypt at the end of the first millennium AD
Paleolithic era
Fabric
jersey, berber, interlock, mesh, toweling, etc
chambray, canvas, gabardine, denim, etc
Elasticity
Are stretchable
Can only be stretchable if lycra, elastic or spandex fibers are woven in the mix
Machinery
Knitting needles
Looms
Benefits
Casual, comfortable, easier to wash, inexpensive
Look crisp, does not shrink or lose shape, rigid fabric composition
Limitations
Shrink, stretch-out, can cling
Not soft, require dry cleaning, can wrinkle , expensive, does not stretch

திரைசீலை செய்வதை நீங்கள் பார்ப்பதற்கு முன் அது எப்படி ஆரம்பிக்கிறது என்று தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் ! பஞ்சு விளைவித்து அதை நூல் ஆக்கி பின்னர் அதை திரைசீலை ஆக்குகின்றனர் என்று சொன்னாலும், பஞ்சை நூல் ஆக்குவதை சிறிது பார்த்தால்தான் நான் அடுத்து சொல்ல வருவது புரியும். கீழே இருக்கும் வீடியோ பார்த்தால் உங்களுக்கு தெளிவாக புரியும் !
ஒரு திரைசீலை செய்வதற்கு பவர் லூம், ஆட்டோ லூம், ஏர் லூம் என்று பல வகைகள் இருந்தாலும், எல்லாவற்றிலும் முதலில் எவ்வளவு நீள திரைசீலை செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வதை பொறுத்தே நூல் எவ்வளவு வேண்டும் என்பது இருக்கும். நூல் வாங்கும்போது கிலோகணக்கில் வாங்கலாம் அல்லது இவ்வளவு மீட்டர் வேண்டும் என்று வாங்கலாம். நூல் எவ்வளவு திக் ஆக இருக்கும் என்பதை "கவுன்ட் (Count)" என்று சொல்கிறார்கள். இதை வேறு மாதிரி சொல்ல வேண்டும் என்றால் GSM (Gram Per Square Meter) என்கிறார்கள். அதாவது 10 கவுன்ட் என்று சொன்னால் அதிக GSM என்று புரிந்து கொண்டால் போதும் ! இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஜமுக்காளம் செய்ய 10 கவுன்ட் கொண்ட நூல் வேண்டும், மிகவும் மெலிதான துணி செய்ய 60 கவுன்ட் கொண்ட துணி வேண்டும். இன்னும் தெரிந்து கொள்ள நீங்கள் இங்கே சொடுக்கவும்....... யார்ன் கவுன்ட்.

பொதுவாக நூலை வாங்கும்போது இரண்டு விதமாக வாங்கலாம்..... ஒன்று கிலோகணக்கில், இதில் நூலை நீங்கள் முழங்கையை கொண்டு சுற்றினால் ரௌண்டாக வருமே, அது போல உங்களுக்கு வரும். நீங்கள்தான் அதை கோனில் சுற்ற வேண்டும். இரண்டாவது வெயிட் போட்டு வாங்கலாம்.... இதில் எல்லாம் கோனில் வந்துவிடும், அது எல்லாமே குறிப்பிட்ட நீளம் இருக்கும். நீங்கள் நூலை வாங்கும்போது எல்லா நூலுமே 4.54 கிலோ இருக்கும். திக்கான நூலாக இருந்தால் உங்களுக்கு நீளம் குறையும். இன்னும் சற்று விரிவாக பார்க்கலாம் என்றால்..... எல்லா நூலுமே 850 கெஜம் வரும், இதை ஹான்க் (hank) என்பார்கள். 1 hank = 3.333 fathoms = 6.667 yards = 20 feet = 6.096 metres. இப்படி வாங்கும் நூலை முதலில் நீங்கள் கோனில் சுற்ற வேண்டும், அதை ஏன் என்பதை பிறகு பார்க்கலாம். இன்னும் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருப்பவர்களுக்கு கீழே இருக்கும் பார்முலா உதவும். நான் ஆர்வமாக விசாரிப்பதை பார்த்து எனக்கு பொறுமையாக ஒவ்வொன்றாக விளக்கி, அவர்கள் அடுத்து செய்ய போகும் திரைசீலைக்கு எவ்வளவு நூல் வேண்டும் என்று என்னையே கணக்கு போட அனுமதித்த அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி !
இந்த நூலை வாங்கும் முன்பு அது எந்த கலர் என்று தெரிய வேண்டுமே, அதை முடிவு செய்வது உங்களுக்கு ஆர்டர் கொடுப்பவர்கள். ஒரு ஆர்டர் வந்தவுடன் அதை தெளிவாக பிரித்து எப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று குறித்துக்கொண்டு, அதற்க்கு எவ்வளவு நூல் வேண்டும் என்பதையும், என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் வைத்துக்கொண்டு இந்த நூல் அளவு, கலர் எல்லாம் முடிவு செய்ய வேண்டும். இதில் சந்தேகம் எதுவும் இருந்தால் இந்த துறையில் வல்லுனராக இருந்த நமது திண்டுக்கல் தனபாலன் சாரை கேட்கவும்.


முடிவில் நீங்கள் நூல் எந்த கலரில் வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று வாங்கி விட்டர்கள், அது வந்து இறங்கியும் விட்டது. அடுத்து அதை சிக்கல் இல்லாமல் ஒரு கோனில் சுற்ற வேண்டும். அதை நீங்கள் வெளியில் கொடுத்ததும் பண்ணலாம், இல்லை உங்களது ஆலையிலேயே செய்யலாம். நமது காந்தி தாத்தா ராட்டையில் சுற்றுவாறே அதே போல் இப்போது மெசின் கோனில் சுற்றி கொடுக்கிறது. ஒவ்வொரு கோனிலும் ஒரே அளவான நூல் சுற்ற வேண்டும் என்பது இங்கு முக்கியம்.

இப்படி சுற்றிய கோனை இப்போது நீங்கள் திரைசீலையாக உருவாக்க வேண்டும், அது நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு சுலபம் இல்லை என்பது நான் பார்த்தபோது தெரிந்தது. கீழே இருக்கும் படத்தை பாருங்கள் ஒரு ஆள் உள்ளே உட்கார்ந்து இருப்பது தெரியும்...... அவர் என்ன செய்கிறார், இதற்க்கு அடுத்த முக்கியமான கட்டம் என்ன, எப்படி திரைசீலை செய்கிறார்கள் என்பது எல்லாம் அடுத்த பகுதியில் பார்ப்போமே !! நீங்கள் இந்த பதிவை ரசித்து இருக்கிறீர்களா என்பதை ஒரு கருத்து மூலம் சொல்லுங்களேன் !


 Labels : Oor special, Karur, Screens, Suresh, Kadalpayanangal, Thiraiseelai, famous

Thursday, September 26, 2013

அறுசுவை - "அறுசுவை அரசு - மதுரம்", பெங்களுரு

நேற்று நான் தமிழில் டைப் செய்ய முடியவில்லை என்று சொன்னவுடன் எனக்கு உதவிய அணைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி, இந்த பதிவு எழுத நீங்கள்தான் காரணம் ! முக்கியமாக நண்பர் கோவை ஆவி சொன்ன யோசனையின் படி செய்ததால் இந்த பதிவு எழுத முடிந்தது ! 
*********************************************************************************
உங்களுக்கு அறுசுவை அரசர் நடராஜனை தெரியுமா ? சமையலில் நளபாகம் செய்து பெரிய விருதுகளை எல்லாம் வாங்கி குவித்திருக்கும் இவரது சமையலை ஒரு முறை நான் கல்யாணத்தில் கலந்து கொண்டிருந்தபோது சாப்பிட்டு பார்த்து இன்று வரை அந்த சுவை நினைவில் இருக்கும்படி அப்படி ஒரு அருமையான சமையல். சைவ சாப்பாட்டில் இவ்வளவு ருசியாக சமைக்க முடியுமா என்று நீங்கள் வியக்கும் வண்ணம் அவ்வளவு அருமையான சாப்பாட்டை தலை வாழை விருந்தாக உங்களுக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் ? பெங்களுருவில் சைவ சாப்பாடு எங்கு நன்றாக இருக்கும் என்று தேடி பார்த்தபோது எல்லோரும் இதை பரிந்துரை செய்தனர். எனது வீட்டில் இருந்து தூரம் என்றாலும், இவரது பெயரை பார்த்தவுடன் கண்ணை மூடிக்கொண்டு சரியென்று கிளம்பினேன்..... நான் எடுத்த முடிவு அருமையானது என்று பின்னர் தெரிந்தது.


முதலில் நுழைந்தபோது எல்லோரும் கல்யாண பந்தியில் இலை போட்டு சாப்பிட்டு கொண்டு இருந்ததை போல உட்கார்ந்து இருந்ததை பார்த்து, நான் தப்பாக வந்து விட்டேன் என்று திரும்பினேன். அங்கிருந்த ஒருவர் என்னை கூப்பிட்டு இதுதான் அறுசுவை அரசின் உணவகம் என்று சொல்லியபோதுதான் தெரிந்தது, அங்கு டேபிள் எல்லாம் எடுத்து விட்டு மதிய உணவுக்கு இப்படி கல்யாண பந்தி போல போட்டு இருப்பதை. நாங்கள் நுழைந்தபோது சிறிது காலியாக இருந்த இடம், சிறிது நேரத்தில் ஆட்களால் நிரம்பி, வெளியே வரிசையில் நிற்க ஆரம்பித்தனர் ! ஒரு நல்ல இலையை பார்த்து உட்கார்ந்து தண்ணீர் தெளித்து நிமிர்ந்தால் சூடாக பருப்பு பாயசம் வந்தது. நெய்யில் வருத்த முந்திரி மணம் தூக்க நல்ல கெட்டியாக இருந்ததை ஒரு வாய் போட்டவுடன் மனதை நிரப்பியது.


அடுத்து வந்த காசி அல்வாவை ஒரு வாய் வைத்தவுடன் அடுத்த உணவு வைக்க வந்த ஆள் வருவதற்கு முன் உள்ளே சென்று விட்டு (அவ்வளவு அருமை சார் !) பரோட்டா சூரி போல பார்த்தபடி உட்கார்ந்து இருந்தேன். பின்னர் வந்த வெள்ளரி தயிர் பச்சடி, தக்காளி ஸ்வீட் பச்சடி, வாழைக்காய் கறி, கொத்தவரங்கா பருப்பு உசிலி, கீரை மசியல், சௌ சௌ கூட்டு, வேர்கடலை சுண்டல், சேனை ரோஸ்ட், புளியோதரை, சிப்ஸ் எல்லாம் இலையை நிரப்பியது. ஒவ்வொன்றையும் ஒரு வாய் வைத்தாலே அடுத்து அதை காலி செய்து விடுவேனோ என்ற பயம் இருக்கும் அளவுக்கு வாசனை ஆளை தூக்கியது. பின்னர் சாதம் எடுத்து வந்து ஒரு கரண்டி போட்டு, அதன் மேலே கெட்டியாக நன்கு மசிக்கப்பட்ட பருப்பு ஊற்றி, அதன் மேலே சிறிது நெய்யும் விட்டு சென்றவுடன் என்னதான் காலையில் சாப்பிட்டு இருந்தாலும், பத்து நாள் சோறு பார்க்காதவன் போல எல்லாவற்றையும் ருசி பார்த்து சாப்பிடுவீர்கள். இந்த பருப்பு சாதம் சாப்பிட்டபோது வீட்டில் அம்மா வைத்து கொடுத்தது போல அவ்வளவு ருசியாக இருந்தது.அதன் பின்னர் வந்த சின்ன வெங்காய சாம்பார், ரசம், வத்தல் குழம்பு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உங்களது பேண்டை லூஸ் ஆக வைப்பது உறுதி. முடிவில் சிறிது புளிப்புடனும், நன்றாக மஞ்சள் போட்டு தாளித்த மோர் குழம்பு சிறிது ஊற்றி ஊறுகாயை தொட்டு சாப்பிட அட அட அட....... இன்னைக்கு அவ்வளவுதான், அப்படியே ஒரு பாய் இருந்தா குடுங்க தூங்கிடறேன் ! இவ்வளவையும் சாப்பிட்டு முடிக்கும்போது முன்பே வந்த காசி அல்வா வர, அதை விட மனசு இல்லாமல் இன்னொரு ரவுண்டு வேற ! எப்படியோ கஷ்டப்பட்டு எழுந்து போய் கையை கழுவி விட்டு வரும்போது சார்..... ஐஸ் கிரீம் என்று பணிவாக நீட்டும்போது வேண்டாம் என்று சொல்ல தோன்றவில்லை, அதை முடித்துவிட்டு நிமிர்ந்தால் நல்ல கும்பகோணம் வெற்றிலையில் பீடா வேற ! ஞாயிறு அன்று நீங்கள் இப்படி சென்று சாப்பிட்டு விட்டு வந்தால் அந்த நாள் மிக இனிய நாளாக இருப்பது நிச்சயம்...... ஆனால், ஒரே ஒரு கஷ்டம் என்பது நீங்கள் திரும்பவும் வண்டியை வீட்டுக்கு ஓட்டி வருவதுதான்......முடியலை, தூக்கம் தூக்கமா வருது !!


பஞ்ச் லைன் :

சுவை - ஏகப்பட்ட வகைகள் இருக்கிறது, எல்லாமே நல்ல சுவை. நான் சாப்பிட்டது தலை வாழை இலை விருந்து ...... நிச்சயமாக நீங்கள் போக வேண்டிய இடம் இது !

அமைப்பு - நல்ல பெரிய உணவகம், பார்கிங் வசதி இருக்கிறது !

பணம் - ஒரு ஆளுக்கு சுமார் இந்த விருந்து சுமார் 200 ரூபாய் வரை வருகிறது ! மற்றதை நீங்கள் கீழே இருக்கும் மெனு கார்டில் பார்க்கலாம்.

சர்வீஸ் - நல்ல சர்விஸ், பார்த்து பார்த்து செய்கிறார்கள்.

அட்ரஸ் :

Arusuvai Arasu Caterers Pvt. Ltd.,
Sri Madhuram Restaurant
K. Srinivasan
L 149A, I Floor, Food Days Complex,
7th Main, 6th Sector,
HSR Layout, Bangalore - 560102

Mobile: +91-99001 61188
Office: 080 - 2572 3543

Email: ksrinivasan@arusuvaiarasu.com


மெனு கார்டு :
Labels : Arusuvai, Arusuvai arasu, Madhuram, best vegetarian food, veg, suresh, kadalpayanangal

Wednesday, September 25, 2013

சாகச பயணம் - ஆப்ரிக்கா சபாரி (பகுதி - 1)

கடந்த இரண்டு நாட்களாக தமிழில் பதிவு எழுதும் பிளாக்கர் சரியாக வேலை செய்யாததால், இந்த பதிவை யாஹூ தளத்தில் எழுதி, அதை ப்ளோகரில் பேஸ்ட் செய்ய வேண்டி இருப்பதால், இந்த வாரம் சரியாக எழுத முடியவில்லை.......சரி, மேலே பார்ப்போம் வாருங்கள் ! ஆப்ரிக்கா என்றால் நமக்கு நினைவுக்கு வருவது என்பது இந்த அனிமல் சபாரி ! பொதுவாக நமது ஊரில் இருக்கும் ஜூவில் மிருகங்கள் எல்லாம் கூண்டுக்கு உள்ளே இருக்கும், நாம் வெளியில் இருந்து பார்ப்போம்.... ஆனால், இந்த சபாரியில் மிருகங்கள் சுதந்திரமாக காட்டில் நடமாட நாம் ஒரு கார் எடுத்துக்கொண்டு சுற்றி பார்க்க வேண்டும், கொஞ்சம் ரிஸ்க்தான் ஆனால் அனுபவம் புதுசு ! கடந்த முறை சவுத் ஆப்ரிக்கா சென்று இருந்த பொது இப்படி செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். பக்கத்தில் லைன் அண்ட் ரைனோ நேச்சர் ரிசர்வ் ஒன்று இருக்கிறது என்று கேள்விப்பட்டு ஒரு சுபயோக சுபதினத்தில் எனது பயணத்தை ஆரம்பித்தேன் :-) 


இது ஜோஹன்னஸ்பர்க் நகரத்தில் இருந்து சுமார் அறுபது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, செல்லும் வழியெங்கும் நீங்கள் ஆப்ரிக்கா மக்களையும், அவர்கள் வாழும் முறைகளையும் பார்த்து கொண்டே செல்லலாம். முடிவில் நீங்கள் மலைகளையும், காடுகளையும் பார்த்து கொண்டே சென்றால் நீங்கள் இந்த இடத்தை அடையலாம். உள்ளே செல்ல சுமார் 130 ஜார் (ஆப்ரிக்கன் பணம்) அதாவது 830 ரூபாய் (1 ஜார் என்பது 6.35 ரூபாய்) கொடுத்து விட்டு நீங்கள் நுழையும்போது உங்களது கையில் ஒரு நோட்டீஸ் கொடுக்கின்றனர்....... நீங்கள் ஐந்து மணிக்குள் இந்த காட்டை விட்டு வெளியே வரவில்லை என்றால் அப்புறம் எங்களுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் கிடையாது என்று...... திகிலை கிளப்பியது நிஜம் ! என்னதான் காடாக இருந்தாலும் இங்கு GPS எல்லாம் வொர்க் ஆகாது, அங்கங்கே ஒரு போர்டு போட்டு இதுதான் வலி என்று சொல்கிறார்கள், ஆனால் உங்களுக்கு அதை பார்த்தால்தான் குழப்பம் வரும் ! நாங்கள் நுழைந்து கொண்டு இருந்தபோது முன்னால் ஒரு வண்டி சிறிது தூரத்தில் நின்று கொண்டு இருந்தது, அதற்க்கு முன் ஒரு யானை ஆவேசமாக வருகிறது தூரத்தில் இருக்கும் எங்களுக்கு தெரிந்தது...... சாவு பயத்தை காட்டிட்டாங்கடா பரமா !! 
என்னடா யானை ஒரு மூவ் எதையும் போட மாடேங்குதே என்று பார்த்தல் அது ஒரு பொம்மை ! அதானே, நாங்க எல்லாம் யாரு, எங்க கிட்டயேவா என்று வடிவேல் கணக்காக செல்ல ஆரம்பித்தோம் :-) மிகவும் குண்டும் குழியுமாக மண் ரோடு, பாதை தவறினாலும் மண்டையை சொரிந்துக்கொண்டு நீங்கள் அங்கு இருக்கும் மிருகதிடம்தான் வழி கேட்க வேண்டும் என்ற நிலைமை. ஆடி, அசைந்து.... எல்லா கதவும், ஜன்னலும் மூடி இருக்க வேண்டும் என்ற விதியின்படி சென்று கொண்டிருந்தபோது தூரத்தில் இரண்டு மானின் கொம்புகள் புதருக்கு நடுவே தெரிந்தது. உற்று பார்த்தபின்தான் அது மான் என்று தெரிந்தது. ஒரு இயற்க்கை சூழலில் இப்படி அதை பார்க்க சந்தோசமாக இருந்தது. அப்படியே நாங்கள் கீறி, பல வகை மான்கள் எல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தோம்....... நான் இங்க லயன் எல்லாம் இல்லையா என்று நச்சரித்து கொண்டிருந்தது எங்களது டிரைவர் மாமாவிற்கு பிடிக்கவில்லை போலும், படுபாவி பக்கத்தில் வந்து கொண்டிருந்த நெருப்பு கோழியை பற்றி சொல்லாமல் விட்டு விட்டான், நான் ஜன்னலை திறந்து வைத்து போட்டோ எடுத்துக்கொண்டிருந்தபோது எனது மூக்கை சொரிந்தது அது ! பதறி விலகி, எனது இதயம் பட படவென துடித்தது.... அப்போது எனது முன் தெரிந்தது அந்த போர்டு !இந்த காட்டிற்குள் நுழையும்போது சிங்கம் விளையாடும் மூடில் இருந்தால் நமது கார் பானெட் முன்பு ஏறி உட்கார்ந்து கொள்ளும் அல்லது பின்னால் டயர் இருந்தால் அதை பிடித்து தொங்குமாம். எங்களது முன் கேட் திறந்து நாங்கள் லயன் இருக்கும் இடத்திற்கு நுழைய இருக்கும்போது எங்களை தடுத்து நிறுத்தி அங்கு இரண்டு சிங்கங்கள் ஆவேசமாக சண்டை போடுவதை காட்டி இப்போது போக வேண்டாம் என்று சைகை செய்தனர். அதனால் சிறிது தூரத்தில் தெரிந்த ஹயனா எனப்படும் நாய் வகையை பார்க்க சென்றோம்..... அது எங்களுக்கு முன் இருந்த கார் பக்கத்தில் சென்று மோர்ந்து பார்த்து, பயணிகளை முறைத்து என்று சுதந்திரமாக சுற்றியது. நாங்கள் படம் பிடித்து கொண்டு இருந்தபோது எங்களது வலது பக்கத்தில் இருந்த புதரில் சிறிது தூரத்தில் புற்களுக்கு இடையில் சிறிய அசைவு தெரிந்ததை கவனித்தேன். கூர்ந்து பார்த்தால்..... அது சிறுத்தை ! நாயை கவனித்து கொண்டு இருந்த மற்ற யாரும் இதை கவனிக்க வில்லை, அதை நான் எல்லோருக்கும் சொல்லவும் முடியவில்லை, ஆனாலும் எனது கேமரா கொண்டு ஜூம் செய்து சிறுத்தையை சிறைபிடிதேன் !
முடிவில் வெள்ளை சிங்கம் என்ற போர்டு இருந்த கதவுகள் திறந்தன, சண்டை போட்டு முடித்து இருந்த இரண்டு சிங்கங்களும் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருக்க, அந்த பகுதியில் மயான அமைதி. நான் ஏதோ ஒரு சில சிங்கங்கள்தான் இருந்தது என்று எண்ணி கொண்டு இருந்தபோது காய்ந்த புற்களின் கலரில் இருந்த இந்த வெள்ளை சிங்கம் ஒரு இடத்தில பொய் நின்றது, அங்கு....... ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு...... பத்து, பதினொன்று..... என்று நிறைய சிங்கங்கள்......!!அடுத்த பதிவை எழுதுவதற்கு முன் தமிழ் டைப் செய்யும் எளிய முறையை, எந்த சாப்ட்வேர் எதுவும் இன்ஸ்டால் செய்யாமல் எப்படி செய்வது என்று யாரேனும் சொல்லி தந்தால் சந்தோசமாக இருக்கும்..... அதுவரை பதிவுகள் தாமதமாகலாம் !

Labels : Suresh, Kadalpayanangal, Sagasa payanam, adventure trip, African safari, Safari, Lion park