Wednesday, September 25, 2013

சாகச பயணம் - ஆப்ரிக்கா சபாரி (பகுதி - 1)

கடந்த இரண்டு நாட்களாக தமிழில் பதிவு எழுதும் பிளாக்கர் சரியாக வேலை செய்யாததால், இந்த பதிவை யாஹூ தளத்தில் எழுதி, அதை ப்ளோகரில் பேஸ்ட் செய்ய வேண்டி இருப்பதால், இந்த வாரம் சரியாக எழுத முடியவில்லை.......சரி, மேலே பார்ப்போம் வாருங்கள் ! ஆப்ரிக்கா என்றால் நமக்கு நினைவுக்கு வருவது என்பது இந்த அனிமல் சபாரி ! பொதுவாக நமது ஊரில் இருக்கும் ஜூவில் மிருகங்கள் எல்லாம் கூண்டுக்கு உள்ளே இருக்கும், நாம் வெளியில் இருந்து பார்ப்போம்.... ஆனால், இந்த சபாரியில் மிருகங்கள் சுதந்திரமாக காட்டில் நடமாட நாம் ஒரு கார் எடுத்துக்கொண்டு சுற்றி பார்க்க வேண்டும், கொஞ்சம் ரிஸ்க்தான் ஆனால் அனுபவம் புதுசு ! கடந்த முறை சவுத் ஆப்ரிக்கா சென்று இருந்த பொது இப்படி செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். பக்கத்தில் லைன் அண்ட் ரைனோ நேச்சர் ரிசர்வ் ஒன்று இருக்கிறது என்று கேள்விப்பட்டு ஒரு சுபயோக சுபதினத்தில் எனது பயணத்தை ஆரம்பித்தேன் :-) 


இது ஜோஹன்னஸ்பர்க் நகரத்தில் இருந்து சுமார் அறுபது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, செல்லும் வழியெங்கும் நீங்கள் ஆப்ரிக்கா மக்களையும், அவர்கள் வாழும் முறைகளையும் பார்த்து கொண்டே செல்லலாம். முடிவில் நீங்கள் மலைகளையும், காடுகளையும் பார்த்து கொண்டே சென்றால் நீங்கள் இந்த இடத்தை அடையலாம். உள்ளே செல்ல சுமார் 130 ஜார் (ஆப்ரிக்கன் பணம்) அதாவது 830 ரூபாய் (1 ஜார் என்பது 6.35 ரூபாய்) கொடுத்து விட்டு நீங்கள் நுழையும்போது உங்களது கையில் ஒரு நோட்டீஸ் கொடுக்கின்றனர்....... நீங்கள் ஐந்து மணிக்குள் இந்த காட்டை விட்டு வெளியே வரவில்லை என்றால் அப்புறம் எங்களுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் கிடையாது என்று...... திகிலை கிளப்பியது நிஜம் ! என்னதான் காடாக இருந்தாலும் இங்கு GPS எல்லாம் வொர்க் ஆகாது, அங்கங்கே ஒரு போர்டு போட்டு இதுதான் வலி என்று சொல்கிறார்கள், ஆனால் உங்களுக்கு அதை பார்த்தால்தான் குழப்பம் வரும் ! நாங்கள் நுழைந்து கொண்டு இருந்தபோது முன்னால் ஒரு வண்டி சிறிது தூரத்தில் நின்று கொண்டு இருந்தது, அதற்க்கு முன் ஒரு யானை ஆவேசமாக வருகிறது தூரத்தில் இருக்கும் எங்களுக்கு தெரிந்தது...... சாவு பயத்தை காட்டிட்டாங்கடா பரமா !! 








என்னடா யானை ஒரு மூவ் எதையும் போட மாடேங்குதே என்று பார்த்தல் அது ஒரு பொம்மை ! அதானே, நாங்க எல்லாம் யாரு, எங்க கிட்டயேவா என்று வடிவேல் கணக்காக செல்ல ஆரம்பித்தோம் :-) மிகவும் குண்டும் குழியுமாக மண் ரோடு, பாதை தவறினாலும் மண்டையை சொரிந்துக்கொண்டு நீங்கள் அங்கு இருக்கும் மிருகதிடம்தான் வழி கேட்க வேண்டும் என்ற நிலைமை. ஆடி, அசைந்து.... எல்லா கதவும், ஜன்னலும் மூடி இருக்க வேண்டும் என்ற விதியின்படி சென்று கொண்டிருந்தபோது தூரத்தில் இரண்டு மானின் கொம்புகள் புதருக்கு நடுவே தெரிந்தது. உற்று பார்த்தபின்தான் அது மான் என்று தெரிந்தது. ஒரு இயற்க்கை சூழலில் இப்படி அதை பார்க்க சந்தோசமாக இருந்தது. அப்படியே நாங்கள் கீறி, பல வகை மான்கள் எல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தோம்....... நான் இங்க லயன் எல்லாம் இல்லையா என்று நச்சரித்து கொண்டிருந்தது எங்களது டிரைவர் மாமாவிற்கு பிடிக்கவில்லை போலும், படுபாவி பக்கத்தில் வந்து கொண்டிருந்த நெருப்பு கோழியை பற்றி சொல்லாமல் விட்டு விட்டான், நான் ஜன்னலை திறந்து வைத்து போட்டோ எடுத்துக்கொண்டிருந்தபோது எனது மூக்கை சொரிந்தது அது ! பதறி விலகி, எனது இதயம் பட படவென துடித்தது.... அப்போது எனது முன் தெரிந்தது அந்த போர்டு !



இந்த காட்டிற்குள் நுழையும்போது சிங்கம் விளையாடும் மூடில் இருந்தால் நமது கார் பானெட் முன்பு ஏறி உட்கார்ந்து கொள்ளும் அல்லது பின்னால் டயர் இருந்தால் அதை பிடித்து தொங்குமாம். எங்களது முன் கேட் திறந்து நாங்கள் லயன் இருக்கும் இடத்திற்கு நுழைய இருக்கும்போது எங்களை தடுத்து நிறுத்தி அங்கு இரண்டு சிங்கங்கள் ஆவேசமாக சண்டை போடுவதை காட்டி இப்போது போக வேண்டாம் என்று சைகை செய்தனர். அதனால் சிறிது தூரத்தில் தெரிந்த ஹயனா எனப்படும் நாய் வகையை பார்க்க சென்றோம்..... அது எங்களுக்கு முன் இருந்த கார் பக்கத்தில் சென்று மோர்ந்து பார்த்து, பயணிகளை முறைத்து என்று சுதந்திரமாக சுற்றியது. நாங்கள் படம் பிடித்து கொண்டு இருந்தபோது எங்களது வலது பக்கத்தில் இருந்த புதரில் சிறிது தூரத்தில் புற்களுக்கு இடையில் சிறிய அசைவு தெரிந்ததை கவனித்தேன். கூர்ந்து பார்த்தால்..... அது சிறுத்தை ! நாயை கவனித்து கொண்டு இருந்த மற்ற யாரும் இதை கவனிக்க வில்லை, அதை நான் எல்லோருக்கும் சொல்லவும் முடியவில்லை, ஆனாலும் எனது கேமரா கொண்டு ஜூம் செய்து சிறுத்தையை சிறைபிடிதேன் !




முடிவில் வெள்ளை சிங்கம் என்ற போர்டு இருந்த கதவுகள் திறந்தன, சண்டை போட்டு முடித்து இருந்த இரண்டு சிங்கங்களும் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருக்க, அந்த பகுதியில் மயான அமைதி. நான் ஏதோ ஒரு சில சிங்கங்கள்தான் இருந்தது என்று எண்ணி கொண்டு இருந்தபோது காய்ந்த புற்களின் கலரில் இருந்த இந்த வெள்ளை சிங்கம் ஒரு இடத்தில பொய் நின்றது, அங்கு....... ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு...... பத்து, பதினொன்று..... என்று நிறைய சிங்கங்கள்......!!



அடுத்த பதிவை எழுதுவதற்கு முன் தமிழ் டைப் செய்யும் எளிய முறையை, எந்த சாப்ட்வேர் எதுவும் இன்ஸ்டால் செய்யாமல் எப்படி செய்வது என்று யாரேனும் சொல்லி தந்தால் சந்தோசமாக இருக்கும்..... அதுவரை பதிவுகள் தாமதமாகலாம் !

Labels : Suresh, Kadalpayanangal, Sagasa payanam, adventure trip, African safari, Safari, Lion park

37 comments:

  1. உண்மையிலேயே இது ஒரு சாகசப் பயணம்தான்... அருமையான பதிவு... nhm writer அல்லது google input tools பயன்படுத்துங்கள். எதுவும் சரிவரவில்லை என்றால் www.tamileditor.org சென்று தமிழில் டைப் செய்யலாம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..... இந்த பயணத்தில் அடுத்து வருவது இன்னும் சாகசமாக இருக்கும் பாருங்கள் ! தாங்கள் கொடுத்த தமிழ் டைபிங் உதவிக்கு மிக்க நன்றி, இப்போது சரியாகி விட்டது !

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. வணக்கம் நல்ல பதிவு அருமையாக இருக்கின்றது. தொடர்ந்து தாருங்கள்.

    http://www.bibleuncle.com/p/tamileditor.html

    http://www.branah.com/tamil

    http://kandupidi.com/editor/

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜேஷ்..... நீங்கள் அளித்த தகவல்களுக்கு மிக்க நன்றி. இப்போது கூகிள் உபயோக்கிறேன்..... நீங்கள் விரைவாக அளித்த தகவல்களுக்கு நன்றி.

      Delete
  4. padikka nalla irunthichu... thodarungal..

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேஷ்..... அடுத்த பதிவில் இன்னும் ஆச்சர்யமான விஷயம் இருக்கிறது !

      Delete
  5. நீங்கள் ஐந்து மணிக்குள் இந்த காட்டை விட்டு வெளியே வரவில்லை என்றால் அப்புறம் எங்களுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் கிடையாது என்று...... திகிலை கிளப்பியது நிஜம்

    திகிலான சாகசப்பயணம் ..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணிகண்டன்...... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  6. உண்மையான சாகஸப்பயணம் என்பது இதுதான்
    படங்களூம் பதிவு நாங்களும் உங்களுடன் பயணிக்கிற
    அனுபவத்தைத் தந்து போகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார்.... நீங்கள் தொடரும் மாய மோகினி தொடர் அற்புதம். அதில் நீங்கள் சிறு வயதில் செய்த சாகசம்தான் உண்மை !

      Delete
  7. Replies
    1. தமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி ரமணி சார் !

      Delete
  8. நாங்க ‘யா யா’ போன்ற அசிங்கங்களை பார்த்து பேதிலித்து கிடந்தால்...
    நீங்கள் சிங்கங்களை தரிசித்து பதிவெழுதுகிறீர்கள்...கொடுத்து வச்ச ஆளு!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்..... உங்க அடுத்த படத்திற்கு லொகேஷன் பார்க்கத்தான் போய் இருந்தேன் !

      Delete
  9. உங்களால் எதுவும் முடியும் எனது எனக்குத் தெரியும்... வாழ்த்துக்கள்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Desire-Greedy.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்...... உங்களது கருத்துக்கள் எல்லாம் உற்சாகம் அளிக்கிறது !

      Delete
  10. கேக்கும்போதே டெர்ரரா இருக்கே.. ஆனா ஜாலியா இருக்கும் அங்கே போனா, இல்லையா சுரேஷ்..

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் திகிலாகவும் இருக்கும் விஜய்...... அடுத்த பகுதியில் ஓபன் ஜீப் கொண்டு சுற்றி பார்த்ததும் இருக்கிறது, அப்போது சொல்லுங்கள் இதை ! நன்றி !

      Delete
  11. சுரேஷ், கூகிள் ட்ரான்ஸ்லிட்டரேஷன் சேர்த்து விட்டால் பிற சாப்ட்வேர் ஏதும் அவசியமில்லை.

    இந்த சுட்டியை பார்க்கவும் http://www.youtube.com/watch?v=gpWCb8vBPz8

    இவ்விடம் டவுன்லோட் செய்யலாம்- http://www.google.co.in/inputtools/windows/ (தமிழை தேர்வு செய்க)

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஜய்..... உங்களது யோசனையை செயல்படுத்தி இப்போது பதிவு எல்லாம் எழுதுகிறேன். இன்றைய பதிவை உங்களுக்குத்தான் சமர்ப்பணம் செய்து இருக்கிறேன்.... கவனித்தீர்களா !

      Delete
  12. படங்கள் அருமை! இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா.... தங்களது வருகையும், கருத்தும் எனக்கு மகிழ்ச்சி அளித்தது !

      Delete
  13. // இதுதான் வலி ? // வழி :0)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார்.... ஆனால் முதல் வரியை படியுங்கள், இந்த பதிவு சில போராட்டங்களுக்கு பிறகு எழுதப்பட்டது, ஆதலால் வலி என்பதுதான் சரி ! நன்றி !

      Delete
  14. படங்கள் மிகவும் அருமையாக உள்ளன. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார், நீங்கள் எனது பதிவை தொடர்ந்து படித்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது !

      Delete
  15. மிகவும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜா, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.....

      Delete
  16. சிறுத்தை, சிங்கம், படங்கள் அருமை.

    திகிலான பயணம் பார்ககிடைத்தது எங்களுக்கு விருந்து.

    எமது நாட்டு சிறிய பயணம் பார்க்க விரும்பினால் http://ramyeam.blogspot.com/2010/10/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி.... உங்களது பயணத்தை பார்த்தபோது மிகவும் திகிலாக இருந்தது. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் !

      Delete
  17. அருமையான பதிவு !!!! நேரில் சென்று பார்ப்பது போல இருந்தது உங்கள் வர்ணனை....படங்களும் அருமை !!!
    நான் சமீபத்தில் வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் "லையன் சவாரி " பார்த்ததை நினைவு படுத்தி விட்டீர்கள் !!!!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி விமல்ராஜ்...... வண்டலூரில் லைன் சபாரி என்பதும் ஒரு தனி அனுபவம் !

      Delete
  18. Replies
    1. நன்றி சார்...... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  19. Replies
    1. நன்றி கிருஷ்ணா.... உங்களை இது ஆச்சர்யபடுதியது கண்டு மகிழ்ச்சி !

      Delete