Friday, September 27, 2013

ஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)

கரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா ?! இந்த பதிவை எழுத ஆரம்பித்தபோது எந்த தகவலை தருவது, எதை விடுவது என்று தெரியாமல் தவித்தேன்....... ஏனென்றால், பஞ்சில் ஆரம்பித்து திரைசீலை வரை அவ்வளவு விஷயம் இருக்கிறது. இதை சுருக்கி தரலாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் நிறைய பேர் சென்ற வார தஞ்சாவூர் வீணையில் நன்கு விவரமாக எழுதி இருந்ததை ரசித்தால், இதையும் விவரமாக கொடுத்தால் என்ன என்று தோன்றியது, அதனால் இந்த பதிவை பகுதிகளாக தருகிறேன் !!





2000 ஆண்டுக்கும் பழமையான வரலாறு கொண்டது கரூர் தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றாகும்.இந்து மத நம்பிக்கைப்படி இறைவன் பிரம்மா தனது படைப்பு தொழிலை இங்குதான் தொடங்கியதாக கருதப்படுகிறது. அதன் பொறுட்டே இவ்வூர் ’’கரூவூர்’’ என அழைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில் பண்டைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர் தாலுக்கா 1910 ம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டதுடன் இணைக்கப்பட்டது. கொசுவலையில் ஆரம்பித்து இன்று திரைசீலையில் பிரபலமாக விளங்குகிறது ! இந்த பதிவை எழுதும் போது "தேவியர் உள்ளம்" ஜோதிஜி அவர்கள் எழுதிய டாலர் நகரம் என்ற புத்தகத்தை படித்து கொண்டிருந்தேன், அதில் அவர் நான் எழுதியதை விட விரிவாக பின்னலாடை பற்றி எழுதி இருக்கிறார், நீங்கள் இந்த தொழிலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் இந்த புத்தகத்தை வாங்குவது உத்தமம்.


இந்த பகுதியை ஆரம்பிப்பதற்கு முன் ஒரு முக்கிய விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், கரூரில் செய்யும் துணியும், திருப்பூரில் செய்யும் துணியும் ஒன்றா ? இரண்டுமே துணிதான், ஆனால் தயாரிக்கும் முறை முற்றிலும் வேறு..... கரூரில் செய்யும் முறை வீவிங் (weaving), திருப்பூரில் செய்யும் முறை என்பது நிட்டிங் (Knitting). இதனால்தான் திருப்பூர் எனும்போது பின்னலாடை என்பார்கள் ! இது வரை நீங்கள் புரிந்து கொண்டாலே இப்போது போதும்....... உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் இப்போது கரூர் என்பது வீவிங் முறையில் செய்யப்படும் ஆடைகள்.



Knitting
Weaving
Definition
Knitting is a method that is used to produce fabric, by turning yarn into cloth
In weaving, fabrics are produced by interlacing two different sets of yarn or threads horizontally or vertically
Origin
Egypt at the end of the first millennium AD
Paleolithic era
Fabric
jersey, berber, interlock, mesh, toweling, etc
chambray, canvas, gabardine, denim, etc
Elasticity
Are stretchable
Can only be stretchable if lycra, elastic or spandex fibers are woven in the mix
Machinery
Knitting needles
Looms
Benefits
Casual, comfortable, easier to wash, inexpensive
Look crisp, does not shrink or lose shape, rigid fabric composition
Limitations
Shrink, stretch-out, can cling
Not soft, require dry cleaning, can wrinkle , expensive, does not stretch

திரைசீலை செய்வதை நீங்கள் பார்ப்பதற்கு முன் அது எப்படி ஆரம்பிக்கிறது என்று தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் ! பஞ்சு விளைவித்து அதை நூல் ஆக்கி பின்னர் அதை திரைசீலை ஆக்குகின்றனர் என்று சொன்னாலும், பஞ்சை நூல் ஆக்குவதை சிறிது பார்த்தால்தான் நான் அடுத்து சொல்ல வருவது புரியும். கீழே இருக்கும் வீடியோ பார்த்தால் உங்களுக்கு தெளிவாக புரியும் !




ஒரு திரைசீலை செய்வதற்கு பவர் லூம், ஆட்டோ லூம், ஏர் லூம் என்று பல வகைகள் இருந்தாலும், எல்லாவற்றிலும் முதலில் எவ்வளவு நீள திரைசீலை செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வதை பொறுத்தே நூல் எவ்வளவு வேண்டும் என்பது இருக்கும். நூல் வாங்கும்போது கிலோகணக்கில் வாங்கலாம் அல்லது இவ்வளவு மீட்டர் வேண்டும் என்று வாங்கலாம். நூல் எவ்வளவு திக் ஆக இருக்கும் என்பதை "கவுன்ட் (Count)" என்று சொல்கிறார்கள். இதை வேறு மாதிரி சொல்ல வேண்டும் என்றால் GSM (Gram Per Square Meter) என்கிறார்கள். அதாவது 10 கவுன்ட் என்று சொன்னால் அதிக GSM என்று புரிந்து கொண்டால் போதும் ! இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஜமுக்காளம் செய்ய 10 கவுன்ட் கொண்ட நூல் வேண்டும், மிகவும் மெலிதான துணி செய்ய 60 கவுன்ட் கொண்ட துணி வேண்டும். இன்னும் தெரிந்து கொள்ள நீங்கள் இங்கே சொடுக்கவும்....... யார்ன் கவுன்ட்.





பொதுவாக நூலை வாங்கும்போது இரண்டு விதமாக வாங்கலாம்..... ஒன்று கிலோகணக்கில், இதில் நூலை நீங்கள் முழங்கையை கொண்டு சுற்றினால் ரௌண்டாக வருமே, அது போல உங்களுக்கு வரும். நீங்கள்தான் அதை கோனில் சுற்ற வேண்டும். இரண்டாவது வெயிட் போட்டு வாங்கலாம்.... இதில் எல்லாம் கோனில் வந்துவிடும், அது எல்லாமே குறிப்பிட்ட நீளம் இருக்கும். நீங்கள் நூலை வாங்கும்போது எல்லா நூலுமே 4.54 கிலோ இருக்கும். திக்கான நூலாக இருந்தால் உங்களுக்கு நீளம் குறையும். இன்னும் சற்று விரிவாக பார்க்கலாம் என்றால்..... எல்லா நூலுமே 850 கெஜம் வரும், இதை ஹான்க் (hank) என்பார்கள். 1 hank = 3.333 fathoms = 6.667 yards = 20 feet = 6.096 metres. இப்படி வாங்கும் நூலை முதலில் நீங்கள் கோனில் சுற்ற வேண்டும், அதை ஏன் என்பதை பிறகு பார்க்கலாம். இன்னும் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருப்பவர்களுக்கு கீழே இருக்கும் பார்முலா உதவும். நான் ஆர்வமாக விசாரிப்பதை பார்த்து எனக்கு பொறுமையாக ஒவ்வொன்றாக விளக்கி, அவர்கள் அடுத்து செய்ய போகும் திரைசீலைக்கு எவ்வளவு நூல் வேண்டும் என்று என்னையே கணக்கு போட அனுமதித்த அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி !




இந்த நூலை வாங்கும் முன்பு அது எந்த கலர் என்று தெரிய வேண்டுமே, அதை முடிவு செய்வது உங்களுக்கு ஆர்டர் கொடுப்பவர்கள். ஒரு ஆர்டர் வந்தவுடன் அதை தெளிவாக பிரித்து எப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று குறித்துக்கொண்டு, அதற்க்கு எவ்வளவு நூல் வேண்டும் என்பதையும், என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் வைத்துக்கொண்டு இந்த நூல் அளவு, கலர் எல்லாம் முடிவு செய்ய வேண்டும். இதில் சந்தேகம் எதுவும் இருந்தால் இந்த துறையில் வல்லுனராக இருந்த நமது திண்டுக்கல் தனபாலன் சாரை கேட்கவும்.


முடிவில் நீங்கள் நூல் எந்த கலரில் வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று வாங்கி விட்டர்கள், அது வந்து இறங்கியும் விட்டது. அடுத்து அதை சிக்கல் இல்லாமல் ஒரு கோனில் சுற்ற வேண்டும். அதை நீங்கள் வெளியில் கொடுத்ததும் பண்ணலாம், இல்லை உங்களது ஆலையிலேயே செய்யலாம். நமது காந்தி தாத்தா ராட்டையில் சுற்றுவாறே அதே போல் இப்போது மெசின் கோனில் சுற்றி கொடுக்கிறது. ஒவ்வொரு கோனிலும் ஒரே அளவான நூல் சுற்ற வேண்டும் என்பது இங்கு முக்கியம்.





இப்படி சுற்றிய கோனை இப்போது நீங்கள் திரைசீலையாக உருவாக்க வேண்டும், அது நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு சுலபம் இல்லை என்பது நான் பார்த்தபோது தெரிந்தது. கீழே இருக்கும் படத்தை பாருங்கள் ஒரு ஆள் உள்ளே உட்கார்ந்து இருப்பது தெரியும்...... அவர் என்ன செய்கிறார், இதற்க்கு அடுத்த முக்கியமான கட்டம் என்ன, எப்படி திரைசீலை செய்கிறார்கள் என்பது எல்லாம் அடுத்த பகுதியில் பார்ப்போமே !! நீங்கள் இந்த பதிவை ரசித்து இருக்கிறீர்களா என்பதை ஒரு கருத்து மூலம் சொல்லுங்களேன் !


 Labels : Oor special, Karur, Screens, Suresh, Kadalpayanangal, Thiraiseelai, famous

48 comments:

  1. ஹய்யோ, திரைச்சீலை செய்வதில் இவ்வளவு விஷயம் இருக்கா... விரிவான விளக்கமான பதிவு... தொடருங்கள்...

    உங்களது இந்தப் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை, இணைக்கவும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்கூல் பையன் !! உங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி........ தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன்.

      Delete
  2. மாப்பு, லீவ் போட்டு பதிவு எழுதறீங்க போல.. ஹஹஹஹா..

    ReplyDelete
    Replies
    1. லீவு போட்டு பதிவா, வீட்டுல உதை விழும் !

      Delete
  3. நீங்க கொடுத்த டீட்டைல வச்சு புதுசா தொழிலே தொடங்கலாம் போலிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நான் கஷ்டப்பட்டு சேகரித்த தகவல்கள் எல்லாம் இப்படி யாருக்காவது உதவினால் மிகவும் சந்தோசமே, நன்றி !

      Delete
  4. ஒருநாள் ஆப்பிரிக்கா, ஒருநாள் சிங்கப்பூர், திடீர்னு அருப்புக்கோட்டை, கும்பகோணம், கரூர், சென்னை, பெங்களூரு... ம்ம்ம்ம் உலகம் சுற்றும் வாலிபன் நீங்க... கலக்குங்க...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே...... எல்லாம் நீங்கள் தரும் உற்சாகதினால்தான் ! உங்களது ஒவ்வொரு கருத்தும் என்னை இது போல் எழுத வைக்கிறது !

      Delete
  5. அடுத்த பகுதிக்கு ஆவலாய்!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆனந்த்.... விரைவில் அடுத்த பகுதி உங்களுக்காக வரும்.

      Delete
  6. தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்.

    உங்கள் ஆர்வமும் உங்களின் பதிவும் சொல்லும் செய்தி இதுவே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜோதிஜி....... ஆனால் உங்களது புத்தகத்தை படித்த பின்பு நான் பகிர்ந்த செய்தி குறைவே என்ற உணர்வு ஏற்ப்பட்டது.

      Delete
  7. வணக்கம் சார் நன்றாக தெரிந்துக்கொள்ள முடிகிறது. கஷ்டப்பட்டு எங்களுக்காக தேடியுள்ளீர்கள் என்பது பதிவை பார்த்தாலே தெரிகிறது. கடல்பயணங்கள் ஒரு பயணங்கள் என்று தான் நினைத்துக்கொண்டு இருந்தேன். புதிய தொழில் முனைவர்களையும் உருவாக்க போகிறது. கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பொழுதும் கிடைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராஜேஷ்....... உங்களின் வார்த்தைகள் எனக்கு உற்சாகம் கொடுக்கின்றன. புதிய தொழில் முனிவர்கள் இப்படி உருவானால் எனக்கு மகிழ்ச்சிதான்.

      Delete
  8. கல்லூரி ஞாபகமும், பல மில்களில் பணி புரிந்த ஞாபகமும் மீண்டும் வந்தது... விளக்கங்கள் சுருக்கமாக இருந்தாலும் மிகவும் அருமை... அண்ணன் ஜோதிஜி அவர்களையும் என்னையும் குறிப்பிட்டதற்கு நன்றிகள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்......... இந்த பதிவை எழுதும்போது உங்களைதான் நினைத்தேன். ஏதோ எனக்கு தெரிந்தததை சொன்னேன், தவறு இருந்தால் திருத்தவும்.

      Delete
  9. எத்தனை அருமையாக விளக்கிப்போகிறீர்கள்
    உண்மையில் திரைச் சீலை குறித்த
    இத்தனை விவரங்களையும் தங்கள்
    பதிவின் மூலம்தான் அறிந்து கொண்டேன்
    தகவல் சேகரிக்கிற தெளிவும்
    அதைப் பதிவாகக் கொடுக்கும் பாங்கும்
    பிரமிப்பூட்டுகிறது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி சார்...... உங்கள் வார்த்தைகள் எனக்கு உற்சாகம் கொடுக்கின்றன. இந்த பதிவு எழுத நான் கஷ்டப்பட்டு எடுத்த பல முயற்சிகள் எல்லாம் உங்களது வார்த்தைகளில் பூ போன்று ஆகிறது.

      Delete
  10. Replies
    1. தமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி சார் !

      Delete
  11. சூப்பர் சுரேஷ் நிறைய புதிய தகவல்கள் எனக்கு... இந்த பதிவை பகுதிகளாக தொகுத்து வழங்குவது தான் சிறப்பு... அதையே செய்கிறீர்கள் என்பது மிக சந்தோசமான ஒன்று..

    ReplyDelete
    Replies
    1. நன்றி சதீஷ்.... நீங்கள் பூரண குணம் அடைந்து மீண்டும் பதிவு எழுத வாழ்த்துக்கள்.

      Delete
  12. பஞ்சு நூலாவது வரை இன்னிக்குதான் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி.... இன்னும் நிறைய இருக்கிறது. விரைவில் எதிர் பாருங்கள்.....

      Delete
  13. ஆஹா இவ்ளோ விஷயங்கள் இருக்கா.
    நான் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை கரூர் சென்று மொத்தமாக பெட்ஷீட்,தலையணை உறை,க்ளவுஸ்,துண்டு...அது இது என்று அங்கு கண்ணில் படுவதை எல்லம் அள்ளிட்டு வருவேன். இங்கு என் சொந்தங்களுக்குள் பிரித்து கொள்வோம். அங்கிருந்து பார்சல் போட்டு விடுவேன். ஒவ்வொரு கடைக்குள்ளேயும் அவ்ளோ துணிகள் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இதுவரை நீங்கள் இப்படி வாங்கியதை, இன்று தயாராகும் முறை பற்றி தெரிந்து கொண்டீர்கள். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

      Delete
  14. எங்கள் மாவட்டத்தை பெருமைப்படுத்தியதிற்கு நன்றி நண்ப்ரே...வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.......!

      Delete
  15. ஒரு தெரியாத தொழில் நுட்பத்தை உள் வாங்கி அதை மற்றவர்களுக்கு விவரிக்கும் உங்கள் வார்த்தையே ஒரு அழகு, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாபு..... இந்த உலகில் இது போன்று தெரிந்து கொள்ள ஏராளம் இருக்கு என்பதே எனது தலைகனத்தை அடித்து ஒடுக்குகிறது, மனதும் மகிழ்கிறது.

      Delete
  16. அருமையான விரிவான தகவல்கள்...பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம்........தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  17. நீங்கள் செல்லும் இடமெல்லாம், இவ்வளவு குலோசாக போய் அவர்கள் செய்வது அத்தனையும் படமெடுக்க இயல்கிறது என்பது வியப்பாக இருக்கிறது!! எல்லா இடத்திலும் உங்களுக்கு செல்வாக்கு, எப்படி சார் இது?

    ReplyDelete
    Replies
    1. செல்வாக்கு இல்லை சார்..... ஒவ்வொரு இடத்திலும் எனக்கு ஆள் எல்லாம் கிடையாது, தேடி தேடி சென்று அவர்களுடன் பேசி, புரிய வைத்து என்று அது மிக பெரிய வேலை, ஆனால் இப்படி கருத்துக்களை பார்க்கும்போது நான் பட்ட கஷ்டத்திற்கு உற்சாகம் கொள்கிறேன். எல்லா பதிவுகளும் அவர்களின் அனுமதி பெற்றே எடுக்கப்பட்டது....... மனிதர்களில் நல்லவர்கள் இருக்கிறார்கள்.

      Delete
  18. Replies
    1. நன்றி வெங்கடேஷ் !

      Delete
  19. உங்களுடைய ஒவொரு பதிவும் பயனுள்ளதாகவும், புதிய அனுபவங்களும் எங்களுக்கு தருகிறது

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜா..... இந்த வார்த்தை எனக்கு புதிய உற்சாகத்தை தருகிறது.

      Delete
  20. அருமை! ஏனோதானோன்னு எழுதாமல் இப்படி விளக்கமாக பதிவது எனக்குப் பிடிச்சிருக்கு. பிற்காலத்தில் வாசிக்கும் ஒரு நபருக்காவது இது பயன்படும் என்றால் நம் எழுத்துக்கு பலன் கிடைச்சதுன்னு தாராளமாக நம்பலாம்.

    ஆமாம்..... இந்த ஊர் ஒரு குறிப்பிட்ட நபரின் அவதார ஸ்தலம் என்பதை இங்கே குறிப்பிட ஆசை.. ஆனால் பெயரைச் சொல்லமுடியாமல் ஒரு தன்னடக்கம் வருதே:-)))))

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மேடம்....... அது என்ன பெயர் என்று மண்டை குழம்புகிறது ! நம்ம கோபால் சாரா........!!

      Delete
  21. தன்னடக்கம் என்ற பின்னும் கோபால் சாரான்னு என்ன கேள்வி சுரேஷ்:-))))))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா....... அவரை பற்றி கொஞ்சம் பெருமையாக சொல்லலாம் என்று நினைத்தேன் !

      Delete
  22. Hello, Sir,
    What is your Job?

    ReplyDelete
    Replies
    1. முகம் தெரியாத நண்பரே, நான் தகவல் தொழில்நுட்ப துறையில் பணி புரிகிறேன். ஊர் ஸ்பெஷல் பகுதிகள் எல்லாம் எனது தேடல்கள்.....

      Delete
  23. Replies
    1. நன்றி நண்பரே..... உங்களுக்கு புரியும்படியாக எழுதி இருக்கிறேன் என்றே நம்புகிறேன் !

      Delete