ஒவ்வொரு முறையும் ஸ்பெஷல் எழுதும்போது நமது ஊர்களை பற்றி நெஞ்சம் நிறைய பெருமை ஏற்படுகிறது. இங்கு எழுதும் ஒவ்வொரு பதிவும் கொஞ்சம்தான், ஆனால் நான் தெரிந்து கொண்டது அதிகம் எனலாம் ! இந்த வாரம் வாருங்கள் கும்பகோணம் வெற்றிலையை பற்றி பார்ப்போம்.......கும்பகோணம் வெற்றிலை என்று சொன்னாலும், வெற்றிலை எல்லாம் பயிரிடபடுவது என்பது அதன் சுற்று வட்டார பகுதிகளில்தான், அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு என்று பல ஊர்களில் இருந்து கும்பகோணம் வருகிறது !
வெத்தலை போட்ட ஷோக்குல......நான் கப்புன்னு குத்துனே......!! |
கரும் பச்சை என்பது ஆண் வெற்றிலை...... இளம் பச்சை என்பது பெண் வெற்றிலை ! |
வெற்றிலை என்பது மிளகு வகையை சேர்ந்தது, அது கொடி போல படர்வது, வெற்றிலை கொடிக்கால் என்று சொல்வது இதனால்தான் ! வெற்றிலை என்று நாம் சொன்னாலும் அதன் பெயர் காரணம் என்னவென்று தெரியுமா ? எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும், ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக்கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும், இதனால் வெற்று இலை என்பது சுருங்கி வெற்றிலை ஆகிவிட்டது. இது வளர்வதற்கு தண்ணீர் ஜாஸ்தி தேவை, வெற்றிலையைப் பயிர் செய்ய விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டிப் பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். வெற்றிலையில் கரும்பச்சை நிறத்திலிருப்பது ஆண் வெற்றிலை என்றும், இளம்பச்சை நிறத்திலிருப்பது பெண் வெற்றிலை என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். சிலர் அதில் பின்புறம் இருக்கும் நரம்புகளைப் பார்த்தும் ரகம் பிரிப்பதுண்டு. ஒரு வருடத்தில் நன்கு வளரும், பின்னர் மூன்று வருடங்களுக்கு வெற்றிலையை பறிக்கலாம் !
வெற்றிலை கொடிக்கு பராமரிப்பு மிகவும் தேவை, அது கொடி போல வளர ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு கொடியையும் கட்டிக்கொண்டே வர வேண்டும். அது நன்கு வளர்ந்தவுடன் நீங்கள் வெற்றிலையை கிள்ள ஆரம்பிக்கலாம். சிலர் வெற்றிலையை ஒரு மரத்துடன் கட்டி வளர்த்து வருவார்கள், இதனால் மரம் வளர வளர வெற்றிலைக்கு ஒரு ஊன்றுகாளாய் இருக்கும். ஒரு சிலர் வெற்றிலையை பாத்தி கட்டி வளர்ப்பார்கள், சிலர் திராட்சை கொடி போல படர விடுவார்கள். வெற்றிலை வளர்ப்பது என்பது எளிது, ஆனால் பறிப்பது என்பது மிகவும் கடினம். அது வளர ஆரம்பிக்கும்போது கீழே எளிதாக பறிக்கலாம், ஆனால் மேலே செல்ல செல்ல பறிப்பது என்பது கடினமாக இருக்கும். இந்த வெற்றிலையில் இரண்டு வகை உண்டு..... கறுப்பு நிறத்தில் அதிகக் காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை; கற்பூர வாசனையுடன் சிறிது காரமாக இருப்பது கற்பூர வெற்றிலை; மிகுந்த மணத்துடன் காரம் அவ்வளவாக இல்லாமல் ஓரளவு வெளிர் நிறத்தில் இருப்பது சாதாரண வெற்றிலை. இதையே வேளாண்மை அறிவியல்படி பார்த்தால்..... கற்பூரி மற்றும் அல்லது எஸ்.ஜி.எம் 1, வெள்ளைக் கொடி, பச்சைக் கொடி, சிறுகமணி 1 , அந்தியூர் கொடி, கணியூர் கொடி மற்றும் பங்களா வகைகள்.
வெற்றிலை கொடியை மூங்கிலின் மேல் படர விடுவது ஒரு வகை.... |
வெற்றிலை கொடியை மரத்தின் மீது படர விடுவது ஒரு வகை... |
![]() |
வெற்றிலை கொடியை பந்தல் போட்டு படர விடுவது ஒரு வகை.... |
அது என்ன கும்பகோணம் பகுதியில் மட்டும் வெற்றிலை அவ்வளவு பேமஸ் என்று கேட்பவர்களுக்கு........ வெற்றிலை சாகுபடிக்கு தண்ணீர் தேவை, காவிரி ஆற்றின் கரையிலே இருக்கும் ஊர்களில் எல்லாம் தண்ணீருக்கு பஞ்சம் இல்லை, இதனால் வெற்றிலை பாக்கு எல்லாம் அங்கு நிறைய விளைகிறது என்கிறார்கள் கும்பகோணம் மக்கள்.
வெற்றிலை வியாபாரத்தில் 100 வெற்றிலை என்பது ஒரு கவுளி, இது போல் 104 கவுளி கொண்டது ஒரு கோட்டை. ஒரு கோட்டை வெள்ளை வெற்றிலை 3,500க்கும், கற்பூர வெற்றிலை ஒரு கோட்டை 700க்கும் விற்க்கபடுகிறது....... கூட்டி கழித்து பார்த்தால் ஒரு வெள்ளை வெற்றிலை என்பது முப்பது காசுக்கு விற்க்கபடுகிறது. ஒரு ஏக்கர் வெற்றிலை சாகு படி செய்ய சுமார் ரூ.3 லட்சம் வரை செலவாகிறது.முதல் ஆண்டில் லாபம் கிடைப்பது அரிது.அடுத்த ஆண்டில் தான் லாபம் கிடைக்கும். இந்த வெற்றிலை பயிரில் ஒரு ஆண்டில் வாடல் நோய், சுருட்டு நோய் தாக்கும்.ஆனால் இதை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் இந்த நோய்கள் தாக்காமல் இருந்தால், கொடிகள் 5 மாதங்கள் முடிந்தவுடன் மூன்று வார இடைவெளியில் வெற்றிரலையைக் கிள்ளலாம். 75-100 இலட்சம் இலைகள் / எக்டர் / வருடம். அப்போ நீங்களே கணக்கு போட்டு கொள்ளுங்களேன் !! நீங்கள் கடையில் சென்று இரண்டு ரூபாய்க்கு வெற்றிலை வாங்கினால் உங்களுக்கு கிடைக்கும் வெற்றிலையின் விலையை கணக்கு பார்த்தால் உங்களுக்கு லாபம் தெள்ள தெளிவாக விளங்கும்...... ரொம்ப முக்கியம், அது வெள்ளை வெற்றிலையா, கற்பூரமா என்று பார்த்து லாப கணக்கு போடவும் !
வெற்றிலை சாகுபடி பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...... வெற்றிலை சாகுபடி.

Labels : Oor special, Kumbakonam, Betel leaf, Vetrilai, Suresh, kadalpayanangal, Thamboolam
வெற்றிலைக் கொடி பற்றிய நிறைய விஷயங்கள் அருமையாக தொகுத்திருக்கிறீர்கள்... தங்களது உழைப்புக்கு பாராட்டுக்கள்.... நன்றி...
ReplyDeleteநன்றி நண்பரே..... உங்களது இந்த உற்சாகமான கருத்துக்கள் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது !
Deleteஅனைத்து தகவல்களும் அசத்தல்....
ReplyDeleteமனம் திறந்து பாராட்டும் உங்களது வார்த்தைகள் என்றுமே எனக்கு உற்சாகம் அளிக்கிறது, நன்றி தனபாலன் சார் !
Deleteஅருமையான புகைபடத்துடன் நல்ல தகவல்
ReplyDeleteவெற்றிலைக் கொடிக்கால் கீழே வளரும் கத்திரிக்காய் கொத்தவரைக்காய் முருங்கைக்காய் ஆகியவை வெகு ருசியாக இருக்கும். திருச்சியில் அந்த நாட்களில் (60-70 களில்)
Deleteகிடைத்துக்கொண்டு இருந்தது. இப்போது கிடைக்கிறதா என்பது தெரியாது.
நன்றி நண்பரே.... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !
Deleteநன்றி அருணா..... இன்றும் சில இடங்களில் இதை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் !
Deletearumai suresh anna
ReplyDeleteநன்றி ஷரிப்...... நீங்கள் பதிவர் திருவிழாவிற்கு வந்து இருந்தீர்களா ?
Deleteபடங்கள் + விளக்கங்கள் எல்லாம் மிகவும் அருமையாக உள்ளன. வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துள்ள அருமையான பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteமிக்க நன்றி சார்..... இந்த வெற்றிலை உங்களுக்கு மிகவும் பிடித்தது கண்டு மகிழ்ச்சி !
Deleteகும்பகோணம் வெற்றிலை இப்போ கும்பகோணத்தில் விளைவது இல்லை .. ஹா.. ஹா உண்மை தான் அண்ணா ..
ReplyDeleteவெற்றிலைக்கு உண்மையான பெயர் கரணம் இப்போதான் அண்ணா தெரிஞ்சிகிட்டேன் .
ஆண் , பெண் வெற்றிலைன்னு இருந்துமா பூ பூக்காது ..?
மிளகு செடி கூட இதேமாதிரியே இருக்குதே நு நெனச்சன்..
Sent from http://bit.ly/otv8Ik
நன்றி ஆனந்த்..... நீ இந்த பதிவின் மூலம் நிறைய கற்று கொண்டது கண்டு மகிழ்ச்சி !
Deleteவெற்றிலை குறித்த அறியாத
ReplyDeleteபல தகவல்களைத் தெரிந்து கொண்டேன்
மிகக் குறிப்பாக வெற்று இலை என்பதுவும்
கவுளி கோட்டை என்பதுவும்
படங்களுடன் பகிர்வு அருமை
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்...... இந்த ஊர் ஸ்பெஷல் பகுதி மூலம் உங்களது மனதில் ஒரு இடம் பிடித்து இருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி !
Deletetha.ma 4
ReplyDeleteதமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி சார் !
DeleteI Realy liek all your Articles,It makes me follow you wherever you go .Realy superb
ReplyDeleteமிக்க நன்றி விஷ்ணுகோபன்..... இது போன்ற உற்சாகம் கொள்ள வைக்கும் கருத்துக்கள்தான் என்னை இந்த அளவுக்கு எழுத வைக்கிறது. இன்னும் நிறைய இது போல் உங்களை வியப்பில் ஆழ்த்தும் செய்திகள் இருக்கிறது.....விரைவில் எழுதுகிறேன் !
Deleteசுவாரஸ்யமான பதிவு. இத்தனை விஷயங்கள் வெற்றிலயில் இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.படங்களும் கச்சிதமாக.
ReplyDeleteபல விஷயங்களை எடுத்துவெளியிட்டுள்ளீர்கள்.
பகிர்வுக்கு மிக நன்றி/.
நன்றி வல்லிசிம்ஹன்....... உங்களை இந்த பதிவுகள் கவர்ந்தது கண்டு மகிழ்ச்சி !
Deleteஅழகான படங்களுடன் அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி துபாய் ராஜா..... தங்களது வருகைக்கும், கருத்திற்கும் !
DeleteNice to see blog relating my HomeTown.Good Information Brother. Me too from the Village near Kumbakonam and as of now in Kuwait.
ReplyDeleteThank u so much for collecting these facts and wish to continue.
Also visit My first blog : collectiveinfos.blogspot.com
நன்றி நசீம்.... இன்னும் நிறைய கும்பகோணத்தை பற்றியும், அதை சுற்றிய பகுதிகளையும் நிறைய எழுத வேண்டி இருக்கிறது. தங்களது வருகைக்கும், கருத்திற்கும் !
Deleteநல்ல தகவல் - stay Inform...!
ReplyDeleteநன்றி கிருஷ்ணா !
ReplyDeleteதிருச்சியில் பிரபாத் டாக்கீஸ் முன் உள்ள சர்பத், மார்க்கெட் வளைவுக்கு பக்கம் உள்ள ஜிகர் தண்டா எல்லாம் பல காலம் உள்ள சிறு மகிழ்சிகள் . நேரம் கிடைத்தால் பார்க்கவும் .
ReplyDeleteகண்டிப்பாக முயற்சி செய்கிறேன் நண்பரே.... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !
Deleteவீட்டில் ஒரு தொட்டியில் வெற்றிலை வளர்த்து வருகிறேன், பராமரிப்பு பற்றி தெரிந்துக் கொள்ள கூகிளாண்டவரை கேட்ட போது உங்களின் தளத்தை கைகாட்டியது, வந்துவிட்டேன். :-)
ReplyDeleteஅழகான படங்களுடன் அருமையான தகவல்கள் ! நன்றி.
வெற்றிலை பூக்கும்
ReplyDeletehttp://northcountycurrent.com/wp-content/uploads/2015/04/Piper-betel-600-31.jpg
ReplyDeleteஎனது வீட்டு தோட்டத்தில் வெற்றிலைகளை தொட்டியில் வைத்து வளர்க்க முயற்சித்து கொண்டு இருக்கிருக்கிறேன். அனால் மிக எளிதாக வெள்ளை பூச்சி வந்து விடுகிறது மற்றும் இலைகள் சுருங்கி விடுகிறது. நான் கெமிக்கல் பூசிகொல்லிகளை பயன் படுத்த விரும்பவில்லை. எவ்வாறு பூசிகள் வராமல் காப்பது மற்றும் இலை சுருங்குவதிலிருந்து காப்பது.
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteநான் இரண்டுதலைமுறையாகவே
கொடிக்கால் விவசாயம் செய்கிறேன்.உங்களது கருத்து உண்மையானது.