எவ்வளவோ சமையல் ப்ரோக்ராம் டிவியில் வந்தாலும் நான் பார்ப்பதில்லை, முதல் காரணம் அதில் உயிர் எதுவும் இருப்பது போல் தெரியாது, இரண்டாவது காரணம் எப்போதும் ஸ்டுடியோவில் எடுப்பதால் அது ஒரே மாதிரி இருப்பது போல தெரிவது. ஆனால், ஒரே ஒரு சமையல் ப்ரோக்ராம் மட்டும் என்னை திரும்பி பார்க்க வைத்தது என்றால் அது சன் டிவியில் வரும் ஆஹா என்ன ருசி, அதை நடத்தும் ஜேக்கப் என்பவர் சில நேரங்களில் செல்லும் இடங்களை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். இந்த முறை சென்னை சென்று இருந்த பொது இந்த செப் ஜேக்கப் அவர்களின் உணவகம் ஒன்று உள்ளதாகவும், அதில் நாம் ஆச்சர்யப்படும் அளவுக்கு உணவுகள் இருக்கிறது என்றபோது அதை முயன்று பார்த்து விடுவது என்று நினைத்திருந்தேன். வாருங்கள் மறைந்த செப் ஜேக்கப் அவர்களின் உணவகத்திற்கு செல்வோம்......
நீங்கள் உணவகத்தின் உள்ளே நுழையும்போதே அவ்வளவு அமைதியாக இருப்பது கண்டு ஆச்சர்யபடுவீர்கள். பொதுவாக உணவகத்தில் உணவு உங்களை ஆச்சர்யபடுதவில்லை, அல்லது சுவையாக இல்லை என்றால் எல்லோரும் பேச ஆரம்பிப்பார்கள், அல்லது இரண்டாவது காரணம் அது ஒரு ஸ்டார் ஹோட்டல் ஆக இருந்தால் உண்ணும்போது பேசுவது என்பது அநாகரீகம் என கருதப்படும். ஆனால், இந்த உணவகத்தில் உணவின் சுவையிலும், அது வித்யாசமாக இருப்பதனால் அது எப்படி செய்யப்பட்டது என்று யோசிப்பதனாலேயும் எல்லோரும் மிகவும் அமைதியாக இருந்தனர் எனலாம்.
நாங்கள் மெனு கார்டு பார்த்தபோது எல்லாமே வித்யாசமாக இருந்தது போல இருந்தது. முதலில் நண்டு ரசமும், சிக்கன் கரண்டியும் ஆர்டர் செய்தோம். நன்கு வெந்த நண்டு மாமிசத்தை கொதிக்க வைத்த நீரில் இஞ்சி, பூண்டு என்று போட்டு மிளகு சேர்த்து கொண்டு வந்தபோது வாசனையே தூக்கியது. ஒரு வாய் எடுத்து வைத்தவுடன் என்னமாய் செய்து இருக்கிறார்கள் என்று தோன்றியது ! அடுத்து வந்த சிக்கன் கரண்டி என்பதில் நம்ம ஊரு கரண்டி ஆம்பலெட்தான் என்றாலும் அதில் சிக்கன் இருப்பதே தெரியாத அளவுக்கு நன்கு நறுக்கி போட்டு பூ போன்ற ஆம்பலேட் கொண்டு வந்தனர், சிறிது நேரத்தில் அது இருந்த இடம் தெரியவில்லை !
அடுத்து ஜவஹர் ஜலூர் பரோட்டாவும், மண்பானை சிக்கன் பிரியாணியும் ஆர்டர் செய்துவிட்டு அதற்க்கு கோழி வறுத்த குழம்பும் கேட்டோம். நன்கு சிறிதாக நறுக்கப்பட்ட மட்டன் பீஸில், வெங்காயம் போட்டு சிறிது தோசை கல்லில் பிரட்டி எடுத்து, அதை சேமியா போன்ற பரோட்டாவில் நடுவில் வைத்து சூடாக எடுத்து வந்த போது கண்ணுக்கும் குளிர்ச்சி, சாப்பிட்டபோது மனதுக்கும் இதம் ! அடுத்து வந்த மண்பானை சிக்கன் பிரியாணியில் வழக்கமான பிரியாணியின் சுவைதான் இருந்தது என்றாலும் அதை ஒரு மண்பானையில் கொடுத்த விதம் அருமை !
ஒவ்வொரு உணவும் வித்தியாசமாகவும், சமயம் சுவையாகவும், இது என்ன என்று குழந்தையின் ஆர்வத்துடன் சுவைபதிலும் இருக்கிறது. இது போன்ற உணவகங்கள் ஒரு சிலதான் இருக்கின்றன. இந்த உணவுகளை சாப்பிடும்போது இப்படி பார்த்து பார்த்து சமைத்த மனிதன் அங்கு இருக்கும் போட்டோவில் மாலையுடன் இருக்கிறார் என்னும்போது மனது என்னவோ செய்கிறது.......ஜேக்கப், நீங்கள் மறைந்தாலும் நீங்கள் அறிமுகபடுத்திய சுவைகள் மறக்காது !
பஞ்ச் லைன் :
சுவை - ஏகப்பட்ட வகைகள், எல்லாமே நல்ல சுவை மற்றும் வித்யாசம் ...... நிச்சயமாக நீங்கள் போக வேண்டிய இடம் இது !
அமைப்பு - நல்ல பெரிய உணவகம், பார்கிங் வசதி உண்டு !
பணம் - ஒரு ஆளுக்கு சுமார் 350 ரூபாய் வரை வருகிறது !
சர்வீஸ் - நல்ல சர்விஸ், பார்த்து பார்த்து செய்கிறார்கள்.
Labels : Arusuvai, Jakob's kitchen, sun tv, amazing food, Suresh, Kadalpayanangal, Different food, tasty
இவருடைய நிகழ்ச்சிகள் எனக்கும் மிகவும் பிடிக்கும் ஒரு நல்ல கலைஞரை நாம் இழந்துவிட்டோம். சென்னை செல்லும்போது இதை ட்ரை பண்ணிடலாம்.
ReplyDeleteநன்றி கோவை ஆவி..... உங்களை போலவே இவரை எனக்கும் பிடிக்கும், அடுத்த முறை சென்னை செல்லும்போது மறக்காதீர்கள் !
Deleteசென்னை செல்லுகையில் ஒரு கைபார்த்துவிட
ReplyDeleteவேண்டியதுதான்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்......விரைவில் பெங்களுரு வாருங்கள் !
Deletetha.ma 1
ReplyDeleteநீங்கள் அளித்த தமிழ் மணம் ஓட்டிற்கு மிக்க நன்றி சார் !
Deleteதொல்லைக்காட்சியை விட்டு பல அடி தூரம் இருக்கும் நான் இஅவருடைய பேச்சு, ஸ்டைல், எளிமைக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பிச்சேன்! அவர் மறைந்தபோது மனசு வலித்தது நெருங்கின சொந்தம் மறைந்த மாதிரி. அடுத்த முறை சென்னை போகும்போது போய் வருகிறென்!!
ReplyDeleteநன்றி சகோதரி....... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !
Deleteவெஜ் இல்லையோன்னு மெனுவைத் தேடுனதில் அகப்பட்டது.
ReplyDeleteசென்னை வரும்போது போகணும்.
நன்றி.
நன்றி மேடம்.... நீங்க சென்னை வரும்போது கண்டிப்பாக சென்று விட்டு உங்களது கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள் !
Deleteநன்றி...
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன் சார் !
Deleteஅவரின் நிகழ்ச்சியை நானும் தொடர்ந்து பார்ப்பேன்...உண்மையாகவே வித்தியாசமான உணவா இல்லை நீங்கள் எழுதிய முறையால் சுவையாக்கப்பட்டதான்னு தெரியலை ஆனா சாப்பிடணும்னு ஆசையைத் தூண்டியது....
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி எழில் மேடம்...... இந்த பதிவுகளில் நிஜமாகவே சுவையாக இருந்தால் மட்டுமே எழுதுகிறேன், அதனால் நீங்கள் தாராளமாக நம்பலாம். ஐந்து உணவகம் சென்றால் ஒன்றுதான் இப்படி எழுதும் படியாக இருக்கிறது !!
Deleteநீங்களும் சாப்பிட்டுவிட்டு உங்களது கருத்தை சொல்லுங்களேன்.....
myself also enjoy seeing his "aha enna rusi" in sun tv(malaysia)
ReplyDeleteஉங்களது பதிவுகளை நீங்கள் எழுத ஆரம்பித்த காலம் முதல் பார்த்து வருகிறேன். அன்றைக்கும் இன்றைக்கும் ஒப்பிடும் போது செம இம்ப்ரூவ்மெண்ட், வாழ்த்துக்கள் சுரேஷ். நானெல்லாம் பின்னூட்டம் போட்டு எனது வருகையை தெரியப்படுத்தும் ஆள் இல்லை. ஆனால் தொடர்ந்து உங்களது பதிவுகளை படித்து வருகிறேன் நான் படிப்பது உங்களுக்கு தெரியாமலேயே. இப்பொழுது நான் செல்ல நினைக்கும் ஹோட்டல்களின் பட்டியலில் தங்களது பரிந்துரை ஹோட்டல்களும் உண்டு.
ReplyDeleteஜெய் போலோநாத். அரே ஓ சாம்பா.
மனதில் மகிழ்ச்சி பொங்க உங்களது கமெண்ட் படித்தேன் ஜி........... இந்த மாதிரி மனம் திறந்த பாராட்டுக்கள்தான் என்னை இது போன்று புது முயற்சிகள் செய்வதற்கு ஊக்கபடுதுகிறது. எனது எழுத்துக்கள் எல்லாம் உங்களை போன்ற பதிவுலக நண்பர்கள் எல்லாம் என்னை சரிபடுதியவையே, இந்த தருணத்தில் அவர்களுக்கு நன்றி !
Deleteநீங்கள் எனது பதிவுகளை எல்லாம் படிக்கிறீர்கள் என்பதே எனக்கு பெருமையாக இருக்கிறது (உண்மையை சொன்னேன், சிரிக்க வேண்டாம்), நான் உங்களின் பதிவாய் முதலில் படித்தது என்பது 12-Oct-2012இல் எழுதிய மாற்றான் சினிமா விமர்சனம். அதில் இருந்து நானும் உங்களை தொடர்ந்து வருகிறேன்.....இதை நீங்கள் சொன்னதிற்காக சொல்லவில்லை.
உங்களுடன் பதிவர் சந்திப்பில் பேசி போட்டோ எடுத்துக்கொண்டதை மகிழ்ச்சியாக நினைக்கிறேன், தங்களின் போன் நம்பர் கொடுத்தால் பேச, பகிர சந்தோசமாக இருக்கும்.
நன்றியுடன்,
சுரேஷ்
அட இதுல என்ன இருக்கு, நோட் பண்ணிக்கங்க, எப்போது வேண்டுமானாலும் பேசலாம்
Delete8883072993
stay Tasty :)
ReplyDeleteநீங்க சொன்னா சரியாதான் இருக்கும்...... உங்க தொழில் ஆச்சே ! நன்றி !
Deleteபரவாயில்லை . மெனு கார்ட் விலை பயமுறுத்துகிற மாதிரி இல்லை .
ReplyDeleteநீங்கள் சொல்வதைப் பார்த்தால் சுவையாக இருக்கும் போல் உள்ளது.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி .
மிக்க நன்றி அருணா......பயமின்றி செல்லலாம் ! நல்ல ருசி......!!
Delete