கடல் பயணங்கள் என்று இந்த தளத்தின் பெயர் இருப்பதால் நிறைய கடல் சார்ந்த மேட்டர் இருக்கும் ! அதில் ஒன்றுதான் இந்த அண்டர் வாட்டர் வேர்ல்ட் ! பொதுவாக கடல் என்பதை கரையில் இருந்து பார்த்தாலே மகிழ்ச்சிதான், அதில் கடலின் அடியில் சென்று பார்க்க முடிவதென்றால் அதன் அழகு ஒரு அற்புதம் ! நீங்கள் வெளியே உலகத்தில் காண்பதெல்லாம் ஒன்றும் இல்லை என்னும் அளவுக்கு இயற்க்கை அவ்வளவு கலர் கொண்டு இந்த உலகத்தை படைத்துள்ளது, அத்தகைய கடலின் அடியில் நீங்கள் நனையாமல் சென்று வர வேண்டும் என்றால் அதற்கு "அண்டர் வாட்டர் வேர்ல்ட்" சென்றால் முடியும் ! பொதுவாக சிங்கப்பூர் செல்லும்போது புதிய நண்பர்கள் உடன் வந்தால் அவர்களுக்கு சென்டோஸா தீவு சுற்றி காண்பிப்பது வழக்கம், இப்படியே சுற்றி காட்டி நான் இதனை பத்து முறைக்கும் மேலே பார்த்துவிட்டேன், சில நேரங்களில் உள்ளே செல்லும்போது சில மீன்கள் என்னை முறைத்து பார்ப்பது போல இருக்கும் "திரும்பவும் நீ வந்துட்டியா" என்று ! அப்போ ஏர்ஹோஸ்டஸ் எல்லாம் பழக்கமா என்றால்........ ஹீ ஹீ ஹீ !
![]()
| ||
அண்டர் வாட்டர் வேர்ல்ட் என்பது நிறைய இடங்களில் இன்று இருக்கிறது, அதில் நான் பல முறை சென்று வந்தது என்பது சென்டோஸா தீவில், சிங்கப்பூரில் இருக்கும் இடத்திற்குதான். அண்டர் வாட்டர் வேர்ல்ட் என்றால் என்னவென்று கேட்பவர்களுக்கு...... பொதுவாக மீன்கள் கண்காட்சி என்று நமது ஊரில் இருக்கும். அங்கு மீன்களை பார்பதற்கு பக்கத்தில் போனாலே டேய் என்று குரல் கேட்கும். அப்படி எல்லாம் இல்லாமல், மீன்களையும், கடலின் மற்ற கடல் ஜீவராசிகளையும் தொட்டு, அல்லது மிக நெருக்கத்தில் பார்ப்பது என்பது இந்த அண்டர் வாட்டர் வேர்ல்ட். இதில் ஹைலைட் என்பது கடலின் அடியில் ஒரு கண்ணாடி டியூப் போன்ற ஒன்றில் நீங்கள் நடந்து போகும்போது பெரிய பெரிய மீன்கள், சுறா எல்லாம் உங்களது தலை மீது போவதுதான் !!
இதுவரை மீன் கடைகளில் சென்று மீன் தொட்டு பார்த்திருப்பீர்கள், சுறா புட்டு என்று சாப்பிட்டு இருப்பீர்கள், ஆனால் என்றாவது அந்த சுறாவை தொட்டு பார்த்து இருக்கிறீர்களா ? இங்கு தொட்டு பார்க்க முடியும், ஆனால் அதை பூ போல தொட வேண்டும், நீங்கள் அதை கிள்ளினால் அதன் பின்னர் உங்களது கை இருக்காது !
சுறா மீன்.......!! |
மீன் கடையில் சென்றால் எல்லா மீன்களும் கருப்பாகவே இருப்பதால் பல வருடங்களுக்கு முன்பு வரை மீன்கள் என்பது கருப்பாகவோ அல்லது சாம்பல் நிறத்தில்தான் இருக்கும் என்று நினைத்திருந்த எனக்கு, இது போன்ற இடங்கள்தான் மீன்கள் என்பது எல்லா கலரிலும் இருக்கும், அது பல பல வடிவங்களுடன் இருக்கும் என்று புரிந்தது. சிங்கப்பூரில் பல அறிய வகை மீன்கள் எல்லாம் வைத்து இருந்தனர், ஒரு இடத்தில ஜெல்லி பிஷ் பார்த்தபோது இறைவன் எவ்வளவு அழகாக இந்த உலகத்தை படைத்தது இருக்கிறான் என்று தோன்றியது. சில இடங்களில் ஒரு கண்ணாடி கூண்டு வைத்து நீங்கள் அதன் உள்ளே சென்று பார்த்தால், அங்கு மீன்கள் உங்கள் கண்கள் அருகில் வருவது போல இருப்பது அழகு !
இப்படி மீன்கள் எல்லாம் பார்த்துவிட்டு எல்லோரும் கேட்பது எங்கே அண்டர் வாட்டர் வேர்ல்ட் என்று. ஒரு சில படிகள் கீழே இறங்கி சென்றால் ஒரு கண்ணாடியால் ஆன டியூப் ஒன்றில் நகரும் தளம் அமைத்து இருப்பார்கள், அதில் நீங்கள் நிற்க அப்படியே உங்களை சுற்றி மீன்கள் நீந்த ஆரம்பிப்பது என்பது கண் கொள்ளா காட்சி ! கடலின் அடியில் நீங்கள் நனையாமல் மீன்களின் அழகை காண வேண்டும் என்றால் அதற்க்கு சரியான இடம் இதுதான் !
அண்டர் வாட்டர் டனல் உள்ளே.....! |
இப்படி எல்லாம் பார்த்து மயங்கி வெளியே வந்தால் அங்கு டால்பின் ஷோ ஒன்று இருக்கிறது. அதில் டால்பின் செய்யும் சாகசங்கள் எல்லாம் பார்க்கலாம். தண்ணீரின் உள்ளே சென்று திரும்பி வரும் உணர்வு தரும் ஒரு நல்ல அனுபவத்தை இந்த அண்டர் வாட்டர் வேர்ல்ட் தரும். நமது ஊரை போல் இல்லாமல் மீன்களோடு நீங்கள் தொட்டு பழக, பல மீன்களை பார்த்து ஆச்சர்யப்பட என்று அது ஒரு தனி உலகம் என்று புரிந்துகொள்ள என்று இங்கே நீங்கள் சென்று வர வேண்டும் !
Labels : Saagasa payanam, Adventure trip, Underwater world, sea world, suresh, kadalpayanangal
அங்கே இருந்த போது பார்க்காமல் தவறவிட்டதில் இதுவும் ஒன்று.
ReplyDeleteஅடுத்த முறை செல்லும்போது நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று ஜோதிஜி..... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி !
Deleteஅருமையான அனுபவமே! நானும் பல ஆண்டுகளுக்குமுன் அனுபவித்தேன்.
ReplyDeleteஃபிஜியில் க்ளாஸ் பாட்டம் போட்டில் போய்ப் பார்த்தால் பவழப்புதர்களையும் ஏராளமான வண்ண மீன்களின் அழகையும் பார்த்து மகிழலாம்.
ஆஹா அருமையான தகவல், அந்த பதிவு எழுதி இருந்தால் கொஞ்சம் இணைப்பு கிடைக்குமா ?!
Deleteஃபிஜி க்ளாஸ் பாட்டம் அனுபவம் பற்றி எழுதலை. அது பதிவராகுமுன் நடந்தது.
Deleteநியூஸியின் அண்டர்வாட்டர் அப்ஸர்வேட்டரி இங்கே. நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.
http://thulasidhalam.blogspot.co.nz/2008/06/blog-post_11.html
http://thulasidhalam.blogspot.co.nz/2008/06/2.html
அருமையான பகிர்வுகள்..
ReplyDeleteமீண்டும் சென்றுவந்த உணர்வை
மலரும் நினைவுகளாக
மலரவைத்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
நன்றி மணிகண்டன்..... உங்களது நினைவை இந்த பதிவு தூண்டியது கண்டு மகிழ்ந்தேன் !
Deleteகிள்ளத் தெரியாதே... ஹிஹி...
ReplyDeleteஅனைத்தும் அபாரம்...
மிக்க நன்றி தனபாலன் சார்.... உங்களது வெற்றிக்கு நாம்தான் காரணம் என்ற அந்த பதிவின் வரிகள் இன்னும் எனது மனதை விட்டு அகலவில்லை.
Deleteஅழகான படங்களுடன் அருமையான தகவல்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteநன்றி சார்.... தங்களது வருகையும், கருத்தும் எனக்கு மகிழ்வு தந்தது...!
Deleteபடங்களுடன் பகிர்வு
ReplyDeleteமிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரமணி சார், இந்த மீன்களை போலவே உங்களது கருத்தும் வண்ணமயமான மகிழ்ச்சியை கொடுத்தது !
Deletetha.ma 3
ReplyDeleteதமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டுக்கு மிகவும் நன்றி சார் !
Deleteசென்னை பதிவர் சந்திப்பில் ஜீவாவுடன் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. சிலிர்ப்பான அனுபவம் அதை அருமையா வெளிப்படுத்தியிருக்கீங்க சுரேஷ். ஜெல்லி மீன்கள் பற்றி நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன்.
ReplyDeleteமீண்டும் பிறப்பாயடா ? ஜெல்லியின் விநோதம்
http://eniyavaikooral.blogspot.com/2013/05/blog-post_29.html
மிக்க நன்றி கலாகுமரன் சார்..... உங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி ! தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.
Deleteபறவைகள், மீன்களின் மேல் எனக்கு ஒரு அலாதி பிரியம் உண்டு...
ReplyDeleteஇந்த பகிர்வு மிக அழகாக உள்ளது...நம்ம ஊர்ல கூட கடல் இருக்கு, ஆனால் அதை கரையில் இருந்து பார்க்க தான் முடியும், இதை ரசிக்க வேண்டும் என்றால் சிங்கபூர் போக வேண்டும், உங்கள் மூலம் இதை ரசிப்பதும் மிக்க மகிழ்ச்சி.
நன்றி ராஜா, கடல் என்பது எனக்கும் மிகவும் பிடிக்கும், இப்படி கடலின் அடியில் இரு அழகிய உலகம் உள்ளது என்பது இப்படி பார்க்கும்போதுதான் தெரிகிறது. தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !
Deleteலைவ் வா தண்ணிக்குள்ள வச்சி பாக்குறதுக்கு சூப்பர் அனுபவம் அண்ணா..
ReplyDeleteடைனிங் டேபிள்ள வச்சி பாக்க இன்னும் சூப்பர் ர இருக்கும் ஹீ ஹீ ஹீ.
என்ன ஆனந்த், ரொம்ப நாளா ஆளை காணலை ?! நீ சொல்றதை வைச்சி பார்த்தா அதை வறுத்து வைக்கணும் போல....... உன்னை அங்கே விட்டா ஒரு கடை போட்டுடுவ போல இருக்கே ?!
Deleteமகிழ்ச்சி :)
ReplyDeleteநன்றி கிருஷ்ணா......
Deletehttp://eankankal.blogspot.in/2013/09/blog-post_16.html
ReplyDeleteஎன் கண்கள் தளத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ஷரீப் !
Deletevery nice suresh anna
ReplyDeletenew post pls
shareef
நீங்கள் எனது தளத்தை தொடர்ந்து படித்து வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன், உங்களது உரிமையான வேண்டுகோள் பிடித்து இருக்கிறது. இனிமேல் இன்னும் புதிதாக, உங்களுக்காக நிறைய வரும் !! நன்றி !
Delete