Friday, September 20, 2013

டெக்னாலஜி - மெழுகு உணவுகள் !

நான் ஜப்பான் செல்லும்போது எல்லாம் உணவகத்திற்கு சாப்பிட செல்கிறேனோ இல்லையோ, அதை டிஸ்ப்ளே செய்யும் விதத்தை பார்ப்பதற்கே சென்று வருவேன். பொதுவாக இந்தியா, அல்லது எந்த நாடுகளிலும் உணவகம் செல்லும்போது மெனு கொடுப்பார்கள், அதில் உணவை அவ்வளவு அழகாக போட்டோ எடுத்து போட்டு இருப்பார்கள். ஆனால், தட்டில் வரும்போதுதான் போட்டோ வேறு, நிஜம் வேறு என்பது தெரியும் ! கீழே நீங்கள் பார்க்கும் எந்த உணவும் நிஜம் அல்ல....!!









ஜப்பானில் உங்களை உள்ளே ஈர்க்கவும், என்ன உணவு நன்றாக இருக்கும் என்று நீங்கள் பார்க்கவும் என்று, உங்களது உணவுகளை மெழுகினால் செய்து வைத்திருப்பார்கள். நீங்கள் பார்ப்பது உணவா, அல்லது நிஜமா என்று சந்தேகம் வரும் அளவு இருக்கும் அது ! மெழுகினால் செய்யப்பட்டு பின்னர் கலர் செய்யப்படும் இந்த உணவுகளை நீங்கள் பார்க்கும்போது கண்டிப்பாக உங்களுக்கு நாக்கு ஊரும்..... இதை போல் ஏன் நம்ம இட்லி, தோசைக்கு செய்ய கூடாது !! பல நேரங்களில் நான் ஜப்பானில் சாப்பிட போகும்போது என்ன சாப்பிட வேண்டுமோ அதை போட்டோ எடுத்துக்கொள்வேன், பின்னர் அதை காட்டி ஆர்டர் செய்வேன்..... இதை போல இங்கும் செய்தால் நன்றாக இருக்குமோ !


Labels : Technology, Japan fake food, Food display, Real food, Japan, Food technology, Suresh, Kadalpayanangal

22 comments:

  1. Replies
    1. சார், உங்களுக்கு ஒரு பிளேட் பார்சல் சொல்லவா ?!
      தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.... இன்று நான் உங்களது ஆசை-பேராசை பதிவை படித்தேன், ரசித்தேன். அருமையாக இருந்தது.

      Delete
  2. தமிழ்மணம் என்னால் submit செய்ய முடியவில்லை... (நேற்றும்)

    கவனிக்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. சார், நான் இந்த பதிவை தமிழ் மணத்தில் submit செய்த பின்னர்தான் உங்களால் செய்ய முடியும் போல..... நீங்கள் நான் அதை செய்யும் நேரம் உங்களது கருத்துக்களை பதிவு செய்து உள்ளீர்கள்...... நீங்க ரொம்ப பாஸ்ட் சார் !

      Delete
  3. இங்கும் ஐஸ்கிரீம் வகைகளை உருளைக்கிழங்கில் செய்து போட்டோ எடுத்து மெனு தயாரிக்கிறார்கள்..
    உண்மையான ஐஸ்கிரீம் போட்டோ எடுக்கும் போது உருகிவிடுமாம்..

    ReplyDelete
    Replies
    1. அருமையான தகவல் சார்..... இதை நான் யோசித்தே பார்க்கவில்லை. நன்றி !

      Delete
  4. நான் ஜப்பானிய மொழி மொழிபெயர்ப்பாளராக இருப்பதால் உங்கள் கட்டுரையின் அருமை புரிகிறது. ஜப்பானியர்கள் கண்ணால் சாப்பிடுபவர்கள் என்று சொல்வார்கள் . நானும் வீட்டில் இதுமாதிரி செய்தபோது இந்த இட்லி தோசை சப்பாத்திக்கு இப்படி ஒரு பில்டப்பா என்று கிண்டலடித்ததும் விட்டுவிட்டேன் .
    பதிவு நன்றாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அருணா...... நீங்கள் இந்த பதிவை ரசித்தது கண்டு மகிழ்ச்சி !

      Delete
  5. ஜப்பானியர்கள், இந்தியர்களை மிகவும் மதிப்பார்களாமே!...உண்மையா?

    ReplyDelete
    Replies
    1. ஆம், இந்தியர்கள் உலக போரில் ஜப்பானை ஆதரித்ததால் அவர்களுக்கு இந்தியர்களது மேல் மதிப்பு இருக்கிறது சார் ! தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete
  6. ம்ம்...அசத்தல்...போறேன்..ஜப்பான் போறேன்...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்..... உங்களை ஜப்பான் கிளம்ப வைக்க எவ்வளவு போராட வேண்டி இருக்கு, அங்க சகி என்று ஒரு பானம் உள்ளது, அருமையாக இருக்கும் !

      பதிவர் திருவிழாவில் நீங்கள் எடுத்து எனக்கு அனுப்பி வைத்த போடோவிர்க்கு ஸ்பெஷல் நன்றிகள் ஜீவா !

      Delete
  7. அறியாத அருமையான தகவல்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. Replies
    1. தமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி !

      Delete
  9. Replies
    1. நன்றி கிருஷ்ணா.... அப்போ அங்கே எப்படி !

      Delete
    2. antha kodumaiya yean kekkeenga :D

      Delete
  10. பார்த்தாலே இனிக்கும்.படங்கள் பிரமாதம். என்ன ஒரு ஐடியா சார்ஜி:)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிசிம்ஹன்!

      Delete
  11. ஈ மொய்க்காத உணவுகள் ...

    ReplyDelete