Thursday, September 26, 2013

அறுசுவை - "அறுசுவை அரசு - மதுரம்", பெங்களுரு

நேற்று நான் தமிழில் டைப் செய்ய முடியவில்லை என்று சொன்னவுடன் எனக்கு உதவிய அணைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி, இந்த பதிவு எழுத நீங்கள்தான் காரணம் ! முக்கியமாக நண்பர் கோவை ஆவி சொன்ன யோசனையின் படி செய்ததால் இந்த பதிவு எழுத முடிந்தது ! 
*********************************************************************************
உங்களுக்கு அறுசுவை அரசர் நடராஜனை தெரியுமா ? சமையலில் நளபாகம் செய்து பெரிய விருதுகளை எல்லாம் வாங்கி குவித்திருக்கும் இவரது சமையலை ஒரு முறை நான் கல்யாணத்தில் கலந்து கொண்டிருந்தபோது சாப்பிட்டு பார்த்து இன்று வரை அந்த சுவை நினைவில் இருக்கும்படி அப்படி ஒரு அருமையான சமையல். சைவ சாப்பாட்டில் இவ்வளவு ருசியாக சமைக்க முடியுமா என்று நீங்கள் வியக்கும் வண்ணம் அவ்வளவு அருமையான சாப்பாட்டை தலை வாழை விருந்தாக உங்களுக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் ? பெங்களுருவில் சைவ சாப்பாடு எங்கு நன்றாக இருக்கும் என்று தேடி பார்த்தபோது எல்லோரும் இதை பரிந்துரை செய்தனர். எனது வீட்டில் இருந்து தூரம் என்றாலும், இவரது பெயரை பார்த்தவுடன் கண்ணை மூடிக்கொண்டு சரியென்று கிளம்பினேன்..... நான் எடுத்த முடிவு அருமையானது என்று பின்னர் தெரிந்தது.


முதலில் நுழைந்தபோது எல்லோரும் கல்யாண பந்தியில் இலை போட்டு சாப்பிட்டு கொண்டு இருந்ததை போல உட்கார்ந்து இருந்ததை பார்த்து, நான் தப்பாக வந்து விட்டேன் என்று திரும்பினேன். அங்கிருந்த ஒருவர் என்னை கூப்பிட்டு இதுதான் அறுசுவை அரசின் உணவகம் என்று சொல்லியபோதுதான் தெரிந்தது, அங்கு டேபிள் எல்லாம் எடுத்து விட்டு மதிய உணவுக்கு இப்படி கல்யாண பந்தி போல போட்டு இருப்பதை. நாங்கள் நுழைந்தபோது சிறிது காலியாக இருந்த இடம், சிறிது நேரத்தில் ஆட்களால் நிரம்பி, வெளியே வரிசையில் நிற்க ஆரம்பித்தனர் ! ஒரு நல்ல இலையை பார்த்து உட்கார்ந்து தண்ணீர் தெளித்து நிமிர்ந்தால் சூடாக பருப்பு பாயசம் வந்தது. நெய்யில் வருத்த முந்திரி மணம் தூக்க நல்ல கெட்டியாக இருந்ததை ஒரு வாய் போட்டவுடன் மனதை நிரப்பியது.


அடுத்து வந்த காசி அல்வாவை ஒரு வாய் வைத்தவுடன் அடுத்த உணவு வைக்க வந்த ஆள் வருவதற்கு முன் உள்ளே சென்று விட்டு (அவ்வளவு அருமை சார் !) பரோட்டா சூரி போல பார்த்தபடி உட்கார்ந்து இருந்தேன். பின்னர் வந்த வெள்ளரி தயிர் பச்சடி, தக்காளி ஸ்வீட் பச்சடி, வாழைக்காய் கறி, கொத்தவரங்கா பருப்பு உசிலி, கீரை மசியல், சௌ சௌ கூட்டு, வேர்கடலை சுண்டல், சேனை ரோஸ்ட், புளியோதரை, சிப்ஸ் எல்லாம் இலையை நிரப்பியது. ஒவ்வொன்றையும் ஒரு வாய் வைத்தாலே அடுத்து அதை காலி செய்து விடுவேனோ என்ற பயம் இருக்கும் அளவுக்கு வாசனை ஆளை தூக்கியது. பின்னர் சாதம் எடுத்து வந்து ஒரு கரண்டி போட்டு, அதன் மேலே கெட்டியாக நன்கு மசிக்கப்பட்ட பருப்பு ஊற்றி, அதன் மேலே சிறிது நெய்யும் விட்டு சென்றவுடன் என்னதான் காலையில் சாப்பிட்டு இருந்தாலும், பத்து நாள் சோறு பார்க்காதவன் போல எல்லாவற்றையும் ருசி பார்த்து சாப்பிடுவீர்கள். இந்த பருப்பு சாதம் சாப்பிட்டபோது வீட்டில் அம்மா வைத்து கொடுத்தது போல அவ்வளவு ருசியாக இருந்தது.



அதன் பின்னர் வந்த சின்ன வெங்காய சாம்பார், ரசம், வத்தல் குழம்பு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உங்களது பேண்டை லூஸ் ஆக வைப்பது உறுதி. முடிவில் சிறிது புளிப்புடனும், நன்றாக மஞ்சள் போட்டு தாளித்த மோர் குழம்பு சிறிது ஊற்றி ஊறுகாயை தொட்டு சாப்பிட அட அட அட....... இன்னைக்கு அவ்வளவுதான், அப்படியே ஒரு பாய் இருந்தா குடுங்க தூங்கிடறேன் ! இவ்வளவையும் சாப்பிட்டு முடிக்கும்போது முன்பே வந்த காசி அல்வா வர, அதை விட மனசு இல்லாமல் இன்னொரு ரவுண்டு வேற ! எப்படியோ கஷ்டப்பட்டு எழுந்து போய் கையை கழுவி விட்டு வரும்போது சார்..... ஐஸ் கிரீம் என்று பணிவாக நீட்டும்போது வேண்டாம் என்று சொல்ல தோன்றவில்லை, அதை முடித்துவிட்டு நிமிர்ந்தால் நல்ல கும்பகோணம் வெற்றிலையில் பீடா வேற ! ஞாயிறு அன்று நீங்கள் இப்படி சென்று சாப்பிட்டு விட்டு வந்தால் அந்த நாள் மிக இனிய நாளாக இருப்பது நிச்சயம்...... ஆனால், ஒரே ஒரு கஷ்டம் என்பது நீங்கள் திரும்பவும் வண்டியை வீட்டுக்கு ஓட்டி வருவதுதான்......முடியலை, தூக்கம் தூக்கமா வருது !!


பஞ்ச் லைன் :

சுவை - ஏகப்பட்ட வகைகள் இருக்கிறது, எல்லாமே நல்ல சுவை. நான் சாப்பிட்டது தலை வாழை இலை விருந்து ...... நிச்சயமாக நீங்கள் போக வேண்டிய இடம் இது !

அமைப்பு - நல்ல பெரிய உணவகம், பார்கிங் வசதி இருக்கிறது !

பணம் - ஒரு ஆளுக்கு சுமார் இந்த விருந்து சுமார் 200 ரூபாய் வரை வருகிறது ! மற்றதை நீங்கள் கீழே இருக்கும் மெனு கார்டில் பார்க்கலாம்.

சர்வீஸ் - நல்ல சர்விஸ், பார்த்து பார்த்து செய்கிறார்கள்.

அட்ரஸ் :

Arusuvai Arasu Caterers Pvt. Ltd.,
Sri Madhuram Restaurant
K. Srinivasan
L 149A, I Floor, Food Days Complex,
7th Main, 6th Sector,
HSR Layout, Bangalore - 560102

Mobile: +91-99001 61188
Office: 080 - 2572 3543

Email: ksrinivasan@arusuvaiarasu.com


மெனு கார்டு :








Labels : Arusuvai, Arusuvai arasu, Madhuram, best vegetarian food, veg, suresh, kadalpayanangal

28 comments:

  1. சென்னை ஈ.சி.ஆர் சாலையில் மாயாஜால் அருகே இவர்களது உணவகம் இருக்கிறது.அங்கே சாப்பிட்டு உள்ளேன்.பெங்களூரூ வரும் போது இங்கேயும் போக வேண்டும்.இப்பதிவை ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டேன்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்.... இப்போ ஈ.சி.ஆர் சாலையில் இருந்த அந்த உணவகம் மூடி விட்டதாக கேள்வி. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  2. சில வருடங்களுக்கு முன் நான் பெங்களூரு சென்றபோது மதியம் சாப்பிடுவதற்காக இந்த ஹோட்டல் வந்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் திரும்பிவிட்டேன். அடுத்தமுறை செல்லும்போது கண்டிப்பாகப் போகவேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. ஜி..... நீங்கள் கண்டிப்பாக பொறுத்து இருந்து சாப்பிட்டு இருக்கலாம், மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி !

      Delete
  3. எல்லாமே ஒரு வாய் போட்டவுடன் மனதை நிரப்பியது....!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பெங்களுரு வரும்போது வயிற்றையும் நிரப்ப ஆவலாக காத்திருக்கிறேன்....... நன்றி சார் !

      Delete
  4. பதிவு நன்றாக உள்ளது. திரு கோவை ஆவி அவர்கள் சொன்ன யோசனையையும் சொல்லியிருந்தால் என் போன்ற பலருக்கு உபயோகமாக இருந்திருக்கும் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம்.... பதிவர் ஆவி சொன்னதை அப்படியே பேஸ்ட் செய்து உள்ளேன் உங்களது தளத்தில் !

      Delete
  5. அடடடா...... படங்களும் தலைவாழை இலையும் அப்படியே தூக்கிக்கிட்டுப் போகுதே!!!!

    சென்னை ஈசி ஆர் ரோடில் மாயாஜால் அருகே இருந்த அறுசுவையைக் காணோம்:(

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம்..... ஆமாம் நல்லா ருசியா சமைச்சா எப்படி ?!

      Delete
  6. ஓக்கே ஒக்கே! அடுத்த தடவை போயிடவேண்டியது தான்! சாப்பாட்டு ரசிகன் சார் நீங்க! வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி தக்குடு..... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  7. இலையோடு ஐட்டங்களைக் காண்பித்து
    பசியைத் தூண்டிவிட்டீர்கள்
    அடுத்தமுறைப் பட்டியலில் இதையும்
    சேர்த்துக் கொண்டேன்
    பக்ர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார்.... நீங்கள் பெங்களுரு வரும் நாளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் !

      Delete
  8. Replies
    1. தமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி !

      Delete
  9. ஐயாவோட சமையல் நிகழ்ச்சி ஒண்ணு பார்த்துதான் காசி அல்வாவும், காஞ்சிபுர இட்லியும் செய்ய கத்துக்கிட்டேன். அவர் அளவுக்கு ருசி இல்லாவிட்டாலும் சுமாரா இருக்கும் நான் செய்யுறது!!

    ReplyDelete
    Replies
    1. நீங்க போடற சமையல் பதிவு பார்க்கும்போது எல்லாம் நீங்க ஏன் சமையல் நிகழ்ச்சிக்கு போக கூடாதுன்னு எனக்கு அடிக்கடி தோணும்..... ட்ரை பண்ணி பாருங்களேன் !

      Delete
  10. மெனுக்கார்டுல நீங்க போட்டோ எடுப்பது நல்லாவே பதிவா இருக்கு. இது தற்செயலா இல்ல சுய விளம்பரமா?!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா..... நீங்களாவது கண்டு பிடிச்சது எனக்கு சந்தோசம் ! எது நல்லா இருக்கு மெனுவா இல்லை என் முகமா ?! நன்றி !

      Delete
  11. அதே போல் இதை முயற்சி பண்ணுங்கள்....ரொம்பவும் எளிது http://transliteration.yahoo.com/tamil/

    அன்புடன்,
    Stanley, USA

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஸ்டான்லி...... உங்களது உதவி எனக்கு மகிழ்ச்சி அளித்தது. தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் நன்றி !

      Delete
  12. நன்றி தல.. உங்க சிறப்பான பதிவுகள படிக்கறதுக்காக என்ன உதவி வேணும்னாலும் செய்யலாம்.. அப்புறம் வெறும் நன்றி தானா.. அடுத்த முறை நான் பெங்களூரு வரும்போது மதுரம் ரெஸ்டாரென்ட் கூட்டிப் போவீங்கன்னு பார்த்தா.. ;-)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆவி....... கண்டிப்பாக நீங்கள் பெங்களுரு வரும்போது சொல்லுங்கள், காத்திருக்கிறேன் இது போன்ற உணவகத்திற்கு கூட்டி செல்வதற்கு !

      Delete
  13. பாஸ், என் பேரு ஆனந்த்.. அப்பா பேரு தான் விஜய்.. நீங்க 'ஆவி'ன்னே கூப்பிடலாம்.. :-)

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி.... இனி உங்களை ஆனந்த் என்றோ ஆவி என்றோ கூப்பிட்டா போச்சு !

      Delete