Tuesday, September 3, 2013

ஊர் ஸ்பெஷல் - ஊத்துக்குளி வெண்ணை !

சிறு வயதில் கற்றது என்று பார்த்தால்.... மாடு பால் கறக்கும், அந்த பாலை காய்ச்சி அதில் தயிர் சிறிது உறை ஊற்றினால் நமக்கு தயிர் கிடைக்கும், அந்த தயிராய் கடைந்தால் வெண்ணை கிடைக்கும், அந்த வெண்ணையை உருக்கினால் நெய் கிடைக்கும், இல்லையா ?! ஒரு வீட்டிற்க்கு வெண்ணை எடுக்க வேண்டும் என்றால் இந்த டெக்னிக் பயன்படும், ஆனால் ஒரு நாட்டிற்க்கே வெண்ணை எடுத்தால் மேலே சொன்னதுபோலவா நடக்கும் ? அப்போ, அதை கடையும் மத்து எவ்வளவு பெரிதாக இருக்கும் ? தயிரை உறைக்கு ஊற்றி வைக்க எதை பயன்படுத்துவார்கள் ? பல மாட்டில் இருந்து பால் எடுக்கின்றார்களே, அதனால் வெண்ணையின் தரம் மாறாதா ? இப்படி என்னில் பல பல கேள்விகள்...... இவை அத்தனைக்கும் எனக்கு விடை கிடைத்தது, அதனை விட எனக்கு ஏற்ப்பட்ட பிரமிப்பு ஏராளம், வாருங்கள் ஊத்துக்குளிக்கு..... வெண்ணையின் வாசம் நிறைத்த ஊர் ! இந்த முறை ஊத்துக்குளி செல்லும்போது என்னுடன் ஆனந்த் என்ற நண்பர் / தம்பி என்னுடன் கூட வந்தார், இந்த ஊர் ஸ்பெஷல் பகுதியை நான் பதிவு செய்யும் முறையை பார்க்க வேண்டும் என்று என்னுடன் வந்தார், முடிவில் ஒரு பதிவுக்கு இவ்வளவு முயற்சியா என்று அவருக்கு வியப்பு ஏற்பட்டது !ஊத்துக்குளி (ஆங்கிலம்:Uthukuli), திருப்பூரிலிருந்து ஈரோடு செல்லும் சாலையில் இருபதாவது கிலோ மீட்டரில் உள்ள பரபரப்பான குட்டி ஊர்தான் ஊத்துக்குளி (பொள்ளாச்சி அருகிலும் ஒரு ஊத்துக்குளி இருக்கிறது). நொய்யலாற்றின் வடகரையில் உள்ள இந்த ஊரின் பிரதான தொழிலே கறவை மாடு வளர்ப்புதான். அதிகளவில் பால் உற்பத்தி இருப்பதால், ஊரின் பொருளாதாரம் பாலைச் சார்ந்தே இருக்கிறது. இந்த ஊரின் உள்ளே நுழையும்போதே வெண்ணையின் வாசனை உங்களது மூக்கை துளைக்கும் ! பொதுவாக இந்த ஊரை சுற்றி மாடுகள் வளர்ப்பது ஜாஸ்தி, இப்படி மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலில் மிச்சமாவதை வைத்து வெண்ணை தயாரித்தனர், அது இன்று பெரிய அளவில் வளர்ந்து இந்த ஊரே இன்று கேரளம், மகாராஷ்டிரம், தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு வெண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஊத்துக்குளி வெண்ணெயில் தரம், சுவை ஆகியவை அதிகம். அதற்கு இப்பகுதியில் உள்ள தட்ப வெப்ப நிலை முதற்காரணம். பெரும்பாலான மாதங்கள் வறண்ட வானிலை கொண்ட பகுதி என்பதால் பசும் புல்வெளி கொண்ட மேய்ச்சல் நிலங்கள் குறைவு. இதனால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கொழுப்பு நிறைந்த தீவனங்களான பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை, தவிடு போன்றவற்றை கால்நடைகளுக்கு வழங்குகின்றனர். இந்த பசு, எருமைகள் கறக்கும் பாலில் கொழுப்புச் சத்து, மற்ற சத்துகளும் அதிகமாக இருப்பதால், இதில் இருந்து எடுக்கப்படும் வெண்ணெயில் சத்து அதிகம் உள்ளது. அதே நேரம் சுவையும் அதிகம் என்பதால் இது பலரால் விரும்பி உண்ணப்படுகிறது.


பெரிய பெரிய கேனில் இருந்து பால் காலையில் வந்து இறங்கும், அதை மத்து போன்ற ஒன்றில் கடைந்து பாலில் இருந்து கிரீமை எடுத்து விடுகின்றனர். இந்த பாலை கடைந்து இந்த கிரீமை எடுப்பதற்கு பெரிய டிரம் போன்ற ஒன்று உள்ளது. இதை கையினில் சுற்றினால் பாலில் இருக்கும் இந்த கிரீம் (இந்த கிரீமை ஜில்லென்று சுவைத்தால் அதுதான் ஐஸ் கிரீம் !) தனியாக பிரிகிறது ! முடிவில் பாலை இதற்கென்றே இருக்கும் ப்ளூ கலர் டிரம் ஒன்றில் ஊற்றுகின்றனர். அதன் பின்னர் அந்த பெரிய டிரம்மில் இருக்கும் கிரீம் வழித்து எடுக்கப்படுகிறது ! பொறுங்கள்.....இன்னும் இந்த கிரீமில் தண்ணீர் இருக்கிறது, அதை தனியே எடுக்காவிட்டால் வெண்ணை கிடைக்காது !இந்த டிரமில்தான் பாலில் இருந்து கிரீமை பிரித்து எடுக்கின்றனர்..... என்ன எது டிரம்மா ?!

இதுவும் கிரீம் பிரித்து எடுக்கும் மெசின்தான் !

இதை பெரிய அண்டாவில் பாலை ஊற்றி, அதன் உள்ளே போட்டு விடுகின்றனர், பின்னர் இதில் கிரீம் ஒட்டி கொண்டு விடுகிறது...

இப்போது அந்த கிரீமை ஒரு பெரிய, சரிவான மர பலகையில் கொட்டி அதன் ஒரு முனையை சுற்றினால், இந்த கிரீமில் இருக்கும் வெண்ணை தனியே மேலே இருக்க, தண்ணீர் மட்டும் கீழே இருக்கும் ஓட்டையில் வந்து விடுகிறது. இப்போது கிரீம் மிக சரியான பதத்தில் இருக்கிறது, வெண்ணை எடுக்க ரெடியா ?! முதலில் வெண்ணை என்றால் என்ன என்று பார்ப்போம் வாருங்கள்......வெண்ணெய் என்பது தயிர் அல்லது நொதிக்கப்பட்ட (புளிக்க வைக்கப்பட்ட) பாலேடு ஆகியவற்றுளொன்றைக் கடைவதன் மூலம் பெறப்படும் பால் பொருளாகும். பொதுவாக பசும்பாலிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் பிற பாலூட்டிகளான வெள்ளாடு, செம்மறி ஆடு, எருமை மற்றும் காட்டெருமை ஆகியவற்றின் பாலிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. குளிர் சாதனப் பெட்டியில் சேமிக்கப்படும் பொழுது கெட்டியான உறை நிலையிலும், அறை வெப்ப நிலையில் சற்று குழைவாகவும் இருக்கும் வெண்ணெய், 35 சென்டிகிரேடிற்கும் கூடுதலான வெப்பத்தில் உருகி நெய்யாகும்.  

இப்போது அந்த கிரீமை மத்து கொண்டு நன்கு கடைந்தால் வெண்ணை திரண்டு வருவதை பார்க்கலாம். எருமை பாலில் இருந்து தயாராகும் வெண்ணை என்பது மஞ்சள் நிறத்தில் இருக்கும், பசும் பால் வெண்ணை என்பது வெள்ளை நிறத்தில் இருக்கும், பொதுவாக எருமை பாலில் இருந்து கிடைக்கும் வெண்ணை டேஸ்ட் நன்றாக இருக்கும், அடர்த்தியும் ஜாஸ்தி !  ஒரு அலுமினியம் டின் நிறைய வெண்ணை என்பது 15 கிலோ ஆகும்.

எருமை பாலில் இருந்து எடுக்கப்பட்ட வெண்ணை.....
பசும்பாலில் இருந்து எடுக்கப்பட்ட வெண்ணை....
 சரி, கிரீம் எடுத்து முடித்த பாலை என்ன செய்கின்றனர் என்ற கேள்வி எழுகிறதா ?! நம்ம வீட்டில் சின்ன சொம்பில் தயிர் ஊற்றி வைப்பதை பார்த்து இருப்பீர்கள்......இங்கே பாருங்கள், இவர்கள் டிரம் டிரமாக தயிர் ஊற்றி வைப்பதை. இது எல்லாம் ஹோட்டல்களுக்கு செல்கிறது, அடுத்த முறை நீங்கள் ஹோடேலில் தயிர் சாதத்தை சாப்பிடும்போது அதில் ருசி இருந்தாலும் எந்த சத்தும் இல்லை என்பதை உணர்க !சரி, இப்படி எடுக்கப்படும் வெண்ணையை எப்படி குவாலிட்டி செக் செய்கிறார்கள், பாலில் தண்ணீர் கலந்தால் அல்லது பால் சரி இல்லாமல் இருந்தால் என்ன செய்வது ?! பொதுவாக, ஒரு கிலோ வெண்ணையை உருக்கினால் உங்களுக்கு சுமார் 750 கிராம் நெய்யும், 250 கிராம் கசடும் கிடைக்கும். இந்த 750 கிராம் நெய்யுக்கு குறைந்தால் அந்த வெண்ணை சரி இல்லை என்று அர்த்தம். அதை கண்டு பிடிக்க இங்கே சிறிய திராசு, உருக்க அடுப்பு என்றெல்லாம் வைத்து இருக்கிறார்கள்.எட்டு லிட்டர் எருமைப்பாலில், ஒரு கிலோ வெண்ணெய் எடுக்க முடியும். மத்த மாடுகளோட பாலில், பத்து, பதினோரு லிட்டர் பால் தேவைப்படும். ஒரு லிட்டர் எருமைப் பாலோட குறைந்தபட்ச விலை 18 ரூபாய். மத்த மாடுகளோட பால், குறைந்தபட்ச விலை ஒரு லிட்டர் 14 ரூபாய். ஒரு கிலோ வெண்ணெய் 180 ரூபாய் வரை விற்பனையாகுது. வெண்ணெய் எடுத்த சக்கைப் பாலைக் காய்ச்சி, லிட்டர் ஏழு ரூபாய் ஐம்பது காசுனு விற்று விடுகிறார்கள், இதை தயிராக்கி ஹோடேல்களுக்கு விற்று அதுவும் காசு ! என்ன வெண்ணெய் வெண்ணையா கண் முன்னே வந்து போகுதா ?!

Labels : Oor special, Uthukkuli, Uthukuli, Butter, Vennai, Suresh, Kadalpayanangal, Ghee, city of butter

34 comments:

 1. எங்க ஊர் பக்கத்துல தான் இருக்கு. இது வரைக்கும் விசிட் அடிச்சது இல்ல.. பதிவு கம கமன்னு இருந்தது..

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி ஆவி....... அப்போ அடுத்த ட்ரிப் அங்கேயா ?!

   Delete
 2. அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜி ! இது போன்ற உற்சாகம் கொள்ள வைக்கும் கருத்துக்கள்தான் என்னை எழுத தூண்டுகிறது !

   Delete
 3. எருமை பாலில் இருந்து தயாராகும் வெண்ணை என்பது மஞ்சள் நிறத்தில் இருக்கும், பசும் பால் வெண்ணை என்பது வெள்ளை நிறத்தில் இருக்கும், /////////////

  பசும்பாலில் கரோட்டின் என்னும் சத்து இருப்பதால் பசும்பாலும் பசு வெண்ணையும் சற்றே மஞ்சள் நிறமாக இருக்கும் ..

  எருமைப்பாலும் , வெண்ணையும் வெள்ளை நிறத்தில் காணப்படும் ..!

  ReplyDelete
  Replies
  1. இல்லை-ஜி....... நான் இரண்டு முறை அவரிடம் கேட்டேன், எருமை பாலில் இருந்து வரும் வெண்ணைதான் மஞ்சள் கலரில் இருக்கும் !

   Delete
  2. இல்லை.... இராஜேஸ்வரி அவர்கள் கூறுவதே சரியான கூற்று. அனுபவம். நன்றி.

   Delete
 4. இந்த வெண்ணைய உருக்கும் போது கொஞ்சம் உப்பும் முருங்கை கீரையும் போட்டால் நெய் மணம் ஊரைத்தூக்கும்..அதுவும் அந்த முருங்கை கீரை நெய்யில் பொறிஞ்சு செம டேஸ்டா இருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. அப்போ அந்த வாசனையான நெய்யை பகார்டி மிக்ஸ் பண்ண வேண்டாமா ?! :-) ஜீவா, பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, போட்டோ அனுப்பியதற்கு நன்றி ! நீங்களும், நானும் ஒரு போட்டோ கூட எடுத்துக்கொள்ளவில்லை :-(

   Delete
 5. எப்படியும் உடம்பில் பத்து கிராம் கொழுப்பு ஏறி விட்டது... ஹிஹி...

  அட்டகாசமான விளக்கம் போங்க...

  ReplyDelete
  Replies
  1. சார், மற்றவர்களை மனம் திறந்து பாராட்டும் உங்களுக்கு கொழுப்பு கொஞ்சம் கூட வராது சார் !!! :-)

   பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி, உங்களுடன் ஒரு முறையாவது போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து நினைத்து மிஸ் ஆகிறது !

   Delete
 6. அட! இப்படியா வெண்ணெய் எடுக்கறாங்க!!!!

  பகிர்வுக்கு நன்றி.

  இங்கே நியூஸியில் பால் பால் பொருட்கள் ஏற்றுமதி அதிகம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசி மேடம்....... கோபால் சார் வெண்ணை சாபிடுவாரா ?!

   Delete
 7. வாவ்..! அண்ணே அப்படியே கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டிங்க ..

  வியப்பா...? நான் மயக்கமே போட்டு விழுந்துட்டேன் .

  500 கிலோமீட்டர் ட்ராவலிங் ....
  எவ்ளோ சேசிங் ..
  எவ்ளோ என்கொயரி
  எவ்ளோ போடோஸ்..

  உங்க கூட வந்தது அருமையான அனுபவம் அண்ணா. நன்றிகள் பல

  ReplyDelete
  Replies
  1. இந்த பதிவின் பாதி வெற்றி உன்னை சேரும் ஆனந்த.... உன்னோடு சென்ற அந்த பயணம் மறக்க முடியாததாக இருந்தது.....மிக்க நன்றி உனக்கு !

   அடுத்த பதிவில் இருந்து உனது போடவும் இடம் பெரும் !

   Delete
 8. அண்ணே .. நான் எடுத்த போட்டோலாம் சூப்பர்ரா வந்துருக்குல்ல...
  ( ஹீ ஹீ ஒரு விளம்பரம் )

  ReplyDelete
  Replies
  1. அப்புறம் என்னோட ட்ரைனிங் ஆச்சே ! :-)

   நன்றி ஆனந்த்...... உன்னோட போட்டோதான் இந்த பதிவுக்கு உயிர் கொடுக்குது !

   Delete
 9. Replies
  1. என்ன இவ்வளவு சாதரணமா சொல்லிடீங்க.....கஷ்டப்பட்டு போய் இவ்வளவு பண்ணி இருக்கேன் ! :-(

   Delete
 10. ”வெண்ணை”ன்னு அடுத்தவங்களை ஈசியா திட்டுடுறோம்! ஆனா, அண்ட்ஜ வெண்ணெய்க்குக்கூட எவ்வளவு உழைப்பு வேண்டி இருக்கு!?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோதரி, ஒவ்வொன்றும் உருவாகும் விதத்தை பார்த்தால் மலைப்பாக இருக்கிறது ! நன்றி !

   Delete
 11. nice post ji.... can u mention authentic shop in uthukuli to buy ghee,,,,,,

  ReplyDelete
  Replies
  1. Dear Friend, in Uthukkuli all shops have the fresh better butter..... if you stop at any shop, you can get it.
   But, I heard the cooperative store has the best one, try it !
   Thanks for visiting and reading my blog !!

   Delete
 12. நன்றி நண்பரே

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

   Delete
 13. My native is Uthukuli.buffalo butter will be white in color and cow butter will be yellow in color

  ReplyDelete
 14. My native is Uthukuli.buffalo butter will be white in color and cow butter will be yellow in color

  ReplyDelete
 15. அருமையான பதிவு நேரில் பேசுவதை பேங் இருந்தது உங்கள் கட்டுரை . நானும் ஒரு நெய் வியாபாரி தான் எனக்கு நிறைய விசயங்கள் பயன்பட்டன. மிக்க நன்றி

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. I need a contact number of butter wholesalers

  ReplyDelete
 18. I want thick butter milk amd butter

  ReplyDelete
 19. I want thick buttermilk and butter

  ReplyDelete